Tuesday, 2 May 2017

க்ஷத்திரியர் என்பது ஒரு ஜாதியா? பகுதி - 4 - Pandyan Mallar

"பிராமணர்", "க்ஷத்திரியர்", "வைசியர்", "சூத்திரர்" என்ற சொல் தொல்காப்பியத்தில் எங்குமே குறிப்பிடவில்லை. அதற்க்குமாறாக “அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்” என்றுதான் குறிப்பிடப்படுகிறது. இங்கு குறிப்பிடக்கூடிய அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற மள்ளர் குடிகளை வட மாநிலத்தைச் சேர்ந்த “பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர்" போன்ற குடிகளுடன் பொருத்திப்பார்ப்பது தவறு என பல வரலாற்று அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


ஆதியில் உழவர் குடியினர் வேளாண்மைப் பண்பினால் வேளாளர் எனவும், பின்னர் இடைக்காலச் சோழர் ஆட்சியில் பஞ்சாயத்துப் போன்ற குடும்புகளில் (ஊர்ச் சபைகளில்) அங்கம் வகித்து அவற்றை நடத்தி வந்ததால் வெள்ளாளர் எனவும் வழங்கலாயினர். ஆற்று வெள்ளத்தை அடக்கி ஆளும் தன்மையினால் வெள்ளாளர் என்றும் அழைத்துக்கொண்டார்கள். அவர்களை கல்வெட்டுகளில் வேளான் / வேளாண், வேளார், வேளாளர், வேளாளன், வேளீர், மூவேந்த வேளான், தென்னவன் மூவேந்த வேளான் என்று சிறப்பாக கூறப்பட்டுள்ளது.


அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் அனைவரும் மள்ளர் குடியிலிருந்து தோண்றியவர்கள் என்பது தெளிவு. இங்கு குறிப்பிடகூடிய அந்தணர் என்பவர் இன்றைய பிராமணர் இல்லை என்பதை கீழ்கண்டவாறு தெளிவுபடுத்தலாம்.

திருக்குறள் நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்துள்

அந்தணரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுகலான்

ன அந்தணரென்னும் பெயர் நீத்தாருக்குரித்தாகக் திருவள்ளுவ நாயனர் கூறியிருக்கின்றார்.

இதற்குப் பரிமேழகரின் விளக்க உரையில்,

அந்தரென்பது அழகிய ட்பத்தினையுடையாரென துப் பெயராகலின் அஃது அவ்ருளுடையார் மேலன்றிச் செல்லாதென்பது கருத்து” என்று கூறினர்.

நூலேகரக முக்கோன் மணையே
ஆயுங் காலை யந்தணர்க் குரிய

ன்னும் தொல்காப்பிய மரபிற் சூத்திரத்தானும் அந்தணரென்போர் துறவிகளே யென்பது இனிது புலனாகின்றது.

அந்தணர் தமிழ் மக்களல்லா பிறரெனச் சிலர் கருதுவது பிழையான கோட்பாடாகும்.

எறித்தரு கதிர்தாங்கி யெய்திய குடை நீழ
 லுறித் தாழ்ந்த ககமுமுரைசான்ற முக்கோலு
 நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக்
  குறிப் பேவல்செய்மாலைக் கொளைநடை யந்தணீர்.
                                                                              (கலி-பாலை, 9 - 1 - 4)

இதன் பொருள் – குடையினால் வெயிலைத் தாங்கி உறியிலே வைத்த தண்ணீர்க் கரகத்தையும், முக்கோலையும் தோளிடத்தே சுமந்து செல்லும் இயல்புடைய அந்தணீர் என்பதாகும்.  ( ந.சி. கந்தையா பிள்ளை - தமிழர் சரித்திரம், பக். 72)

கபிலர் பாடிய புறநானூறு செயுள் அந்தணர் ஊன் புசிக்கும் இயல்பினர் என காட்டப்பட்டுள்ளது.

பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன் துவை
கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது
பிறிது தொழில் அறியா ஆகலின் நன்றும் -  (புறம் – 14)

நின்னை பாடும் யாமோ, ஊனும் கறியும், துவையும் சோறும் எடுத்து உண்பதை தவிர, எம் கைகளால் வேறெதுவும் செய்தறியோம் – என்றும்

அட்டு ஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன் சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி
நட்டனை மன்னோ முன்னே         -  (புறம் – 113)

ஆட்டுக் கிடாவை வெட்டிச் சமைத்து ஊனும் சோறும் வேண்டி வேண்டி அளிப்பவர் சிலர். அத்தகைய வளத்துடன் முன்னர் நீ எமக்கு நட்புடைமையாக விளங்கினையன்றோ. – என்றும் குறிப்பிடுகிறார்.

இச்சான்றுகளால் அந்தனர் என்பது ஒரு சாதி அல்ல என்பதும், அவர்கள் அந்தந்த நாட்டைச்சேர்ந்த முற்றும் துறந்த துறவிகள் என்பதும் தெளிவு.


அதேபோல் வேளாளர் என்பவர் சூத்திரர் இல்லை என்பதை கீழ்கண்ட கல்வெட்டு சான்று கூறுகிறது.

"வேட்டைக்குப் போன ஒரு சூத்திரன் குறி தவறி ஒரு வேளாளன் மீது அம்பை எய்து விட்டான். எழுபத்தொன்பது நாட்டு விவசாயிகளும் ஒன்று கூடி சூத்திரனை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தனர்". இதில் சூத்திரன் என்பவன் வேறு , வேளாளன் என்பவர் வேறு எனத் தெளிவுபெறுகிறது. (இரா. தேவஆசீர்வாதம் - வேளாளர் யார்)


அதோபோல் வேளாளர் என்பவருக்கு க்ஷத்திரியர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை கீழ்கண்ட கல்வெட்டு சான்று கூறுகிறது.

க்ஷத்ரிய சிங்க மூவேந்த வேளாரும், (A.R.E. 1916 Intro P.119), E.I – Vol.XXI. No:38
செங்கள்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுக, திருமுக்கூடலில் உள்ள கி.பி. 1068 ஆண்டைச்சேர்ந்த வீரராஜேந்திர சோழனின்   5 – ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று

“……க்ஷத்திரிய சிங்க மூவேந்த வேளாரும் உத்தமசோழ மூவெந்தவேளாரும் பார்மன்னு குலதீப மூவேந்த வேளாரும் இரட்ட குலகால மூவேந்த வேளாரும் உத்தம பாண்டிய மூவேந்த வேளாரும் வீரசோழப் பல்லவரையருந்..............ரி…. மூவேந்த வேளாரும் முடிகொண்ட சோழ மூவேந்த வேளாரும் வளவராதித்த மூவேந்த வேளாருங் ……………”
என்று குறிப்பிடுகிறது.

 (Selected Inscriptions of Tamil Nadu, Serial No. V : 3, page - 143).


சோழர் பெருவேந்தர் காலத்தில் வேளாண்குடிமக்கள் 'சித்திரமேழி நாட்டார்' என்ற வேளாளர் அமைப்பை ஏற்படுத்தி, தங்களது தனித்துவத்தை நிலைநிறுத்தும் வகையில் ஒரு மெய்கீர்த்தியையும் உருவாக்கிக் கொண்டனர். அதைப்பற்றிய வடமொழி சுலோத்துடன் கூடிய கல்வெட்டு கி.பி. 1057 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் வட்டம்தாமரைப்பாக்கம் அக்னீசுவரர் கோயில் முன் மண்டபக் கிழக்குக் குமுதத்தில் உள்ளது. வாய்ச்சண்டையில் அண்ணனைக் கொன்ற தம்பிக்கு மரணதண்டனை வழங்குவதற்க்கு பதிலாகவயதடைந்த பெற்றோரைக் காப்பாற்றுவதற்காக மரண தண்டனையை ரத்து செய்து அரை நந்தாவிளக்கு வைக்க அவ்வூர் சபையால் ஆணையிடப்படுகிறது. அதில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் வேளாண்குடி மக்கள். இந்த தீர்ப்பில் கையேழுத்திட்ட பத்துப் பேர்களில் இலத்தூர் சேக்கிழான் அத்திமல்லன் சிராளனும்பாடா நாட்டு கங்கநல்லூர் மாதெட்டன் இருங்கோளன் என்பவறும் குறிப்பிடத்தக்கவர் ஆவார். மேலும் அக்காலத்தில் வேளாளர்கள் "கொலை குற்றமே புரிந்தாலும் மரண தண்டனையில்லிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது" என்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும் அக்கல்வெட்டு இந்த பூமியில் நான்கு வர்ணங்களையும் தோற்றுவித்து சர்வ உலகத்தையும் காபாற்றி செங்கோலை முன் நிறுத்தி மனு நெறி தழைக்க சித்திர மேழி தம்மம் இனிது நடத்துகின்ற ஸ்ரீராஜேந்திர சித்ரமேளிப் பெருக்காளரோம்  என்று மிக தெளிவாக  குறிப்பிடுகிறது.


 கல்வெட்டுச் செய்தி:

ஸ்வஸ்திஸ்ரீ இலங்கையும் யிரட்டபாடியுங் கொண்டு பேராற்றங்கரைக் கொப்பத்தாஹவல்லனை புறங்கண்டவன் ஆனையுங் குதிரையும் பெண்டிர் பண்டாரமுங் கொண்டு விஜையாபிஷேகஞ் செய்து ஸிம்ஹாஸனத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பன்மரான உடையார் ஸ்ரீராஜேந்திர தேவர்க்கு யாண்டு அஞ்சாவது

ஸ்ரீமத் பூதேவி புத்ராநாம் சாதுர்வண்ண ஸநோத்பவ ஸர்வலோக ஹிதார்த்தாய சித்ரமேளஸ்ய ஸாஸநம்

ஸ்ரீபூமிதேவிக்கு மக்கள்ளாகி யறம்(வ)ளர புகழ்க்(க)கலிமெலியச் செங்கோலே தெய்வமாகத் திசையனைத்துஞ் செவிடு படாமைச் சித்திர மேழி தம்மம் இனிது நடாத்துகின்ற ஸ்ரீராஜேந்திர சித்ரமேளிப் பெருக்காளரோம்

பங்களநாட்டுத் தெற்கில் வகை செளுறூர் நாடான புதநலப்பாடி நாட்டுக் கங்கபுரத்திருக்கும் வெள்ளா(ள)*ன்(ன்)

தருப்பேறுடையான் தாழிகோனன் வந்து, “என் மகன் சங்கரத்தடியளும் என் மகன் பெரியானும் சூடுபடு(க்)கிறடத்துத்,தம்பியை தமையன் அரிசப்பட்டு அடித்தான்அடிக்கதம்பியும் தமையனை யெதிரேயடித்தான்தம்பிய(டி)பிச்ச அடியிலே தமையன் பட்டான்,” என்று வந்து சொல்லஉனக்கு இவ்விரு வருமல்லாது மக்களுள்ளரோ வென்று கேட்கமற்று மக்களாருமில்லை இவர்கள் தாயுநானுமேயுள்ளோ மென்று சொன்னான். சொல்லஅர்த்தந்தானுண்டோ வென்று கேட்க, 'அர்த்தமுமில்லை என்றான்என்ன,

ஒரு குடிக்கேடானமையிலும் இவர்களை ரஷிப்பாரிலாமையிலும் அர்த்தம் இலாமை(யி)லுந் திருத்தாமரைப்பாக்கத்துத் திருவக்நீஸ்வரமுடைய மஹாதேவர்க்குத் திருனந்தாவிளக்காக அரைவிளக்கு வைத்து வயஸ்பரிணதை சென்ற தாயையுந் தமப்பனையும் ரஷிப்பானாகதம்ம நோக்க இவனிதற்குப்பட வேண்டா” வெந்று பெருக்காளர் விதித்தமையில்,

இது சுத்தப(ட்)டிகையாகவும்இது நோக்கிநிவனுக்கு தேவை புகுந்தாத தாக(க)வும் விதித்தோம் பெருக்காளரோம். இதினை அன்றெ(ன்)று எடுத்துக் காட்டுவான்பெரிய நாட்டுக்குப் பிழைத்தான்.
  
மேழிநாட்டுப் பட்டனே(ன்) என்னெழுத்து. இப்படியறிவேன் மண்டை குளநாட்டுக் குராப்பாக்கத்து வெள்ளாளன் பிரம்பலூர் கிழவன் கேசவபடியன்னேன்இப்படியறிவேன் இலத்தூர்ச் சேக்கிழான் அத்திமல்லன் சீராளன்னேன்; இப்படி அறிவேன் தாமரைப் பாக்கிழான் சூற்றி ஆடவல்லான்னேன்இப்படியறிவேன்வயல்லாமூர் வெள்ளாளன் இலங்காடு உடையான் குட்டேறன் பொற்காளியேன்; இப்படி அறிவேன் கீரனூர்ச் சாவல் காடாடி மணிகண்டனேன்இப்படி அறிவேன் பாடாநாட்டு கங்க(க) நல்லூர் மாதெட்டன் இருங்கோளனேன்; இப்படி அறிவேன் தச்சூழான்பாடி வெள்ளாளன் பாரந்துளர் உடையான் நக்கன் பெரியானேன்; இப்படி அறிவேன் களிக்கொற்றப்பாடி சாத்தமுழான் குந்றேறனேன்இப்படி அறிவேன் சோமாசிபாடி வெள்ளாள(ன்) தந்தை பிருதிவலி கருமானிக்கனேன்; இப்படி அறிவேன் பரமண்டலத்து பள்ளிகள் நாடுசெ(ய்)வான் சித்திரமேழினாடு உடையானேன்இவ்வகை பட்டாங்கு சொல்ல எழுதினேன்தச்சுஊர் ப்ராஹ்மணன் பாரத்வாஜி திருவழுதி நாடனேன் இவை என்னெழுத்து.


(தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை தொடர் எண் 29 / 1998 தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள்பதிப்பாசிரியர்கள் –          முனைவர்      சு. இராசகோபால்முனைவர் ஆ. பத்மாவதிஆர். வசந்த கல்யாணிதமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுதுறை வெளியீடு எண் 141 –பக்கம் 53 – 54, 1999. மற்றும்   Select  Inscriptions  Serial No:  IV :6. )


மேலும் மூவேந்தர் ஆட்சி காலத்தில் வேளாண் குடியில் பலர் உயர் அதிகாரிய இருந்துள்ளனர் என்பதை கீழ்கண்ட சான்றுகள் உறுதிசெய்கிறது.

1. வேளாளர்களில் பலர் உயர் அதிகாரிகளாக அரசில் பணிபுரிந்தனர். பாண்டிய மன்னன் சடையன் மாறன் கீழ் பராந்தகப் பள்ளி வேளானாயின நக்கன் புள்ளன் என்பவன் உயர் அதிகாரியாகத் திகழ்ந்தான். ராஜசிம்ம பாண்டியனுக்கு பெருங்காகூர் கோன் வேளான் கணக்கனாக இருந்தான். (பெரிய சின்னமனூர் சாஸனம்). சோழர்களது கல்வெட்டுகளில் பெருமளவு உயர் அதிகாரிகளாக மூவேந்த வேளாளன் என்னும் பட்டம் பெற்றவர்கள் பணிபுரிந்து இருக்கிறார்கள். இவர்கள் வேளாளர்கள் என்பதில் ஐயமில்லை. இராஜராஜனின் கீழ் பொய்கை நாட்டு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளாளன் என்பவன் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்தான். அவனது திறமையைப் போற்றி அவனை தஞ்சைப் பெரிய கோயிலில் ஸ்ரீகாரியமாக அரசன் நியமித்தான். உத்தரங்குடையான் கோன் வீதவிடங்கனான வில்லவ மூவேந்த வேளான் என்பவன் இராஜராஜனுக்கு பெருந்தரமாகப் பணிபுரிந்தான். இராஜாதிராஜன் கீழ் வேளாளக் கூத்தனான செம்பியன் மூவேந்த வேளான் என்பவன் உயர் அதிகாரியாக பணிபுரந்தான். சோழர் காலத்தில் பணிபுரிந்த நூற்றுக் கணக்கான அரசங்க அதிகாரிகள் மூவேந்த வேளார் எனப்பட்டம் பெற்றதிலிருந்து வேளாளர் உயர் அதிகாரிகளாகப் பெரும்பாலாக இருந்தனர் என்பதில் ஐயமில்லை.

(யாவரும் கேளிர் – நாகசாமி)

2. இரண்டாம் குலோத்துங்கன் பட்டங்களில் முக்கியமானதுஅனபாயன்என்பது. இது, கல்வெட்டுகளிலும் இவனைப்பற்றிய உலாவிலும் வருகிறது. அரசனுடைய அத்தாட்சிக் கையெழுத்திடும் அனபாய மூவேந்த வேளாளன் என்ற அவனுடைய செயலாளரின் பெயரிலும் இந்தத் தொடர் சேர்ந்து வழங்கப்பட்டுள்ளது. அரசன் மானியமாகக் கொடுத்த பல ஊர்களுக்கு அனபாய நல்லூர் என்று பெயர் இடப்பட்டது.  ( 271 / 1915; 533 / 1921; 531 / 1912)

(K.A. நீலகண்ட சாஸ்திரிசோழர்கள் பக்.476)


3. பல்லவ மன்னர்கள் தங்கள் அரசாட்சியை இழந்த பின்பு சோழர் மற்றும் பாண்டியருக்கு கட்டுப்பட்ட குறுநிலத்தலைவராகவும் இருந்துள்ளனர். மேலும் ஒருசிலர் சோழர் படையில் முக்கியமான தலைமை பதவியிலும் இருந்துள்ளனர் இவர்கள் தொண்டைமான் என்றும் பல்லவராயன் என்றும் அழைத்துக்கொண்டனர். அவ்வாறு சோழர்படையில் இருந்த ஒரு பல்லவ மன்னன்தான் கருணகரத் தொண்டைமான் என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த கருணகரத் தொண்டைமானை கல்வெட்டு வேளான் என மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.  வேளான் என்பது வேளாண்குடிகளுக்கு கொடுக்கப்படும் சிறப்பு பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

" ஸ்வஸ்திஸ்ரீ கோ இராசகேசரி வன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு நாற்பத்து மூன்று - ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற்கோட்டத்து எயில்நாட்டுத் திருவத்தி யூராழ்வார்க்குச் சோழ மண்டலத்துக் குலோத்துங்கசோழ வளநாட்டுத் திருநறையூர் நாட்டு வண்டாழஞ்சேரி யுடையான் வேளான் கருணாகரனான, தொண்டைமானார் தேவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் வைத்த திருதுந்தா விளக்கு ' (SII Vol. IV No 862, and A.R.No. 49 of 1893 ).


இதை உறுதிசெய்யும்விதமாக முதற் குலோத்துங்க சோழனின் 33 - ஆம் ஆட்சியாண்டிற்குரிய கோதாவரி மாவட்டம் திராட்சாராமத்தில் காணப் பெறும் கல்வெட்டொன்று கருணாகரனின் தருதை பெயர் சீரிளங்கோ என்றும், திருநறையூர் நாட்டு மண்டலஞ்சேரி என்ற ஊரவன் என்றும், கருணாகரனின் இயற் பெயர் 'திருவரங்கன்’ என்றும், இவன் வண்டுவராஜன்’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இவனை சத்வைஷ்ணவன் என்றும் தெளிவாக குறிப்பிடுகிறது.  (SII Vol. IV No.1239 and A.R.No. 349 of 1893).




4.இது போல் பல பல்லவராயர்கள் வெள்ளாளன் என்று அழைக்கபெற்றதாக சான்றுகள் கூறுகிறது.  

மதுரை மாவட்டம் கீரனூர் கல்வெட்டில் வீரராஜேந்திரன் காலத்தில் ஒரு வெள்ளாளன்  பல்லவரையன் என்று ஆழைக்கபெற்றதாக கூறுகிறது.

1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவநச்சக்கரவத்தி
   கள் ஸ்ரீவீரரா
2. செந்திர தெவற்கு யாண்டு பதிந்முன்
    றாவது
3. பொங்கலூக்காநாட்டு கீரநூ
4. ராந கொழுமங்கொண்ட சொ
5. ழநல்லூர் வெள்ளாழந் துட்டந்
6. செல்லா பியங்கநான அமரபுயங்
7. கப் பல்லவ(ரை)யநென்

(A.R. No. 586 of 1893)


5. அதேபோல் கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் கடத்தூர் மருதீசர் கோயிலுக்கு வெள்ளாளன் குமரதனஞ்சிய பல்லவரையன் என்பவர் கொடுத்த கொடை பற்றி பல கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

  1. படைவளவன் வெள்ளப்பநாடு பாலைக்காட்டுச்சேரி "வெள்ளாளந் குறிச்சியரில் குமரந் குமரநாந குமரதனஞ்சிய  பல்லவரையன் கொடை வழங்கியது பற்றி கூறுகிறது. (கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொடர் எண்: 25 / 2004), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு),

  1. பாலைக் காட்டுச்சேரியில் வெளாழந் குமரந் குமரநாந குமரதநஞ்சிய பல்லவரையன் திருவெம்பாவைத் திருகூட்டத்துக்கு கொடை வழங்கியது பற்றி கூறுகிறது. (கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொடர் எண்: 43 / 2004), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு).

  1. கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் கடத்தூர் மருதீசர் கோயிலுக்கு முன்பு தன்மம் செய்த குமரன் குமரனான குமரதனஞ்சிய பல்லவரையனேன் இறைவனுக்கு அப்ப அமுது செய்ய காசு, நெல், அரிசி கொடை வழங்கியது பற்றி கூறுகிறது (இக்கோயிலுக்கு முன்பு தன்மம் செய்தவர் வெளாழந் குமரந் குமரநாந குமரதநஞ்சிய பல்லவரையன் அழைக்கப் பட்டுள்ளார்)
(கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொடர் எண்: 46 / 2004), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு).

  1. பாலைக்காட்டுச்சேரியிலிருக்கும் வெள்ளாளன் குமரன் குமரனான குமரதனஞ்சிய பல்லவரையனேன் வழங்கிய கொடை பற்றி கூறுகிறது. (கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொடர் எண்: 47 / 2004), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு),

இதில் குமரதனஞ்சிய பல்வரையன் என்பவர் தன்னை வெள்ளாளன் என தெளிவாக குறிப்பிடுகிறது.

6.திருப்பூர் மாவட்டம் பிரம்மியத்தில் உள்ள திருவலஞ்சுழிநாதர் கோயிலுக்குவீரசங்காத சதுவேதிமங்கலத்தில் விபியத்திருந்து வாழும் வெள்ளாளன் செம் (பள்ளி விக்) கிரமசோழபல்லவரையன் மணவாட்டி” கொடுத்த கொடை பற்றி கூறுகிறது. (திருப்பூர் மாவட்ட கல்வெட்டுகள் -  த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண். 135/ 2010).

7. "இவ்வூர் இருக்கும் வெள்ளாளன் ஸ்ரீ ராஜராஜ தேவர் படை ஜநநாத தெரிஞ்ச வலங்கை வேளைக்காரரில் வண்ணக்கன் ஐய்யாறானாகிய சித்திரை யாளி” என்று கல்வெட்டுக் கூறுவதால் ஸ்ரீ ராஜராஜ தேவர் வெள்ளாளன் என தன்னை அழைத்துக்கொண்டதை அறியலாம்.  (தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 17 எண். 238 மற்றும் A.R.No. 216 of 1904). 

8.கோயமுத்தூர் மாவட்டம், கோபிச்செட்டி தாலுக நம்பிபேரூர் தான்தோன்றிஸ்வரமுடையார் கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டு வெள்ளாள சோழரில் தேவன் இராசராசன் என குறிப்பிடுகிறது.

கல்வெட்டு வாசகம்:

  1. ஸ்வஸ்திஶ்ரீ வீரபாண்டிய தெ-
  2. வற்கு யாண்டு யக வது ஐப்-
  3. பசி மாதம் வடபரிசாரநாட்-
  4. டு நம்பிபெருர் வெள்ளாள சொ-
  5. ழரில் தேவன் இராசராசனெ-
  6. ன் ஆளுடையார் தாந்தொன்றி
  7. ………………
  8. ரமுடையர்க்கு சந்தியா தீபமொ(ன்று)
  9. இக்கொயில் காணியுடைய சிவபிமாணரி
  10. ல் காசிவாக கொத்ரத்து ஆண்டந்
  11. செல்லப்பட்டனான திருச்சிற்றம்பல நமிம்.ஆ….

( தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 26 எண். 217 மற்றும் A.R.No. 205 of 1909 )




9.கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் கடத்தூர் கொங்கவிடங்கீஸ்வரர் கோயிலுக்கு கடற்றூர் வெள்ளாளன் நம்பி கரியானான அபிமான சோழன் சந்தியா தீபத்துக்கு ஸ்ரீ பண்டாரத்தில் ஒடுக்கின அச்சு இரண்டுக்கும் காரைத் தொழுவில் நிலம் வழங்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.

(கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொடர் எண்: 73 / 2004), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு),


10.திரிபுவனச் சக்ரவத்திகள் ஸ்ரீ வீரராஜேந்திர தேவறின் எட்டாவது ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று பொங்கலூற்கால் நாட்டுக் கீரனூர் வெள்ளாளன் கழஞ்சிய தேவனான கொங்கு இளங்கோனேன் என்று இருங்கோவேள் வம்சத்தவரை (வெள்ளாளர்) வேளாண் சமூகம் என குறிப்பிடுகிறது.

கல்வெட்டு வாசகம்:

1. ஸ்வத்ஸிஸ்ரீ கொவிராசகெசரிபந்மரான திரிபுவனச் சக்ரவத்திகள் ஸ்ரீவீர ராஜேந்திர தெவற்கு யாண்டு எட்டாவது பொங்கலூற்கால் நாட்டுக் கிரநூர் வெள்ளாளன் கழஞ்சிய

2.தெவநான கொங்கிளங்கொநெந் ஆளுடையார் திருவாகிஸ்வரமுடைய நாயநாற்கு சந்தியாதிப மொந்றுக்கு நாந் ஒடுக்கிந பொந் நகரக் கற்றளை

(தென்னிந்தியக் கல்வெட்டுகள் (S.I.I) தொகுதி 5, எண் 280, மற்றும் A.R.No. 604 of 1893)


11. சோழ மன்னர் ஸ்ரீராஜராஜ தேவர் – I ம் காலத்தைச் சேர்ந்த வடஆர்க்காடு மாவட்டம் வந்தவாசி தாலூகா சியமங்கலம் ஸ்தம்பீஸ்வரர் கோயில் பக்கத்திலுள்ள ஒரு பாறையில் உள்ள கல்வெட்டு வெள்ளாளன் கடம்பன் வெண்காடன் என கூறுகிறது. மேலும் விற்றுக் கொடுத்த நிலங்களின் எல்லைகள் கூறுமிடத்து, பள்ள வாய்க்கால், மல்லன் செருவூன்றி நாற்றாங்கால் ஆகியவைகள் குறிப்பிடப்படுகின்றன. இங்கு மல்லன் வேளாண் தொழில் செய்தான் என மிக தெளிவாக தெரிகிறது.

கல்வெட்டு வாசகம் (பகுதி) வரி 4 - 14

"………………………ராஜராஜதேற்கு யாண்டு 19 - ஆவது பலகுன்ற கோட்டத்து தென்னாற்றூர் நாட்டுத் சியமங்கலத்தூரோம் எங்களுர்த் திருக்கற்றளி மகாதேவற்கு சோழநாட்டுத் தென்கரைத் திருவிழுந்தூர் நாட்டு நல்லூர் புதுக்குடி வெள்ளாளன் கடம்பன் வெண்காடன் வைத்த திருநந்தா விளக்கிரண்டினுக்கு………………………….
இவ்வாய்க்காலுக்கு கிழக்கும் வடபாற்கெல்லை மல்லன் செருவூன்றி நாற்றுக்காற், குண்டில்களுக்குத் தெற்கும் இவ்விசைந்த பெருநான்கெல்லையுள் ளகப்பட்ட குழி 187 - ம் ஆக இறையிலி விற்ற குழி 1602……………… “

(தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 7, எண். 440)


12. மதுரை மாவட்டம் மேலூர் வட்டம்   அழகர் கோயிலில் உள்ள கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தரபாண்டியனின் கல்வெட்டு ஸ்ரீ திருமாலிஞ்சோலை திருப்பதியில் இருக்கும் வெள்ளாளரில் கூத்தன் அத்தியூரான் சுந்தரபாண்டிய விழுப்பரையன் செய்வித்த நாட்டியக் கல் என குறிப்பிடுகிறது.
கல்வெட்டு :

1.ஸ்வஸ்திஸ்ரீ திருமாலிஞ்
2.சோலை திருப்ப
3.தியில் இருக்கும் வெள்ளா
4.ளரில் கூத்தன் அத்தி
5.யூரான் சுந்தரபாண்டி
6.ய விழுப்பரையன்
7.செய்வித்த நாட்டியக்
8.கல்.

(த. நா. அ. தொல்லியல் துறை தொடர் எண். 310 / 2003)


13.திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டம் திருவெள்ளாரையில் சம்புநாதசாமி கோயில் முன்னுள்ள ஒரு பாறையில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு செல்லிக்கோன் மல்லாவானைப் புகழ்ந்து கூறுகிறது. இந்தச் செல்லிக்கோன் மல்லாவான் பரசிராமனின் மருமகன் என்றும் கூறுகிறது. இக்கல்வெட்டு சிதைந்துள்ளது, எனினும் மல்லாவானின் புகழ்பாடும் பாடலாக இது குறிப்பிடப்படுவது தெரிகிறது. பன்னிரண்டு வரிகள் கொண்ட இதைப்பாடியது பெருங்காவிதி சடையன் பள்ளி எனக் கூறுகிறது. மேலும் இக்கல்வெட்டில் செல்லிக்கோன் மல்லனை வெள்ளாள அரையர் என்று குறிப்பிடுகிறது. அந்த வெள்ளாளன் செல்லிக்கோன் மல்லனை ஒரு பள்ளி புகழ்ந்து பாடுகிறார்

கல்வெட்டு வாசகம் ( 1 - 2)

1. ஸ்வஸ்தி ஸ்ரீ. பாரத்வ ............லக ப்ரந்மாக்ஷத்ர குலோத்பவ
2. ல்லவ மஹாராஜ ..............ரமேஸ்வரநாயகி ஸ்ரீ உதிந
3. ந்திவர்ம(ற்)குய ..............3 றாவது திருவெள்ளறைப
4. ரிடையார் பிரம.............ல்ல(வ) மாம(றை)த் தொன்றி
5. வ(னி)வேந்தன்.............ள் மாற்பிடுகிளங்கோவே(ளா)
6. ன் சாத்தன் செ.........தன் மாமன் பரசிராமன்
7. திருமருமான் பெரு(b).........செல்லிக் கோமான் மல்ல
8. வா(ந்) (தொ)ண்மறவ..........தசூடி (ரா)டி சூடி (மா)மணி
9. வெளாளரையர்தங்...........லை நிரவ(யனந்தந்தி) மங்கை
10. க்கான் உறுதியான் புகழ்வளர்க மண்ணி மெலெய்
11. பிரம தெயத்துக்கு (உ)றுதியாந் விழுப்(பெரரையன்சா)
12. த்தன் மற்றவன்(ப்) புகழ்நி(ற்)க்க. இது பாடித்தந்தோந்.
13. பெருங்காவிதி சடையன் பள்ளி.

(தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி 12, எண். 48)



மூவேந்தர் ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்ட பல வெள்ளாளர்கள் அரசால் பட்டமளித்து கௌரவிக்கப்பட்டனர். இதை பல கல்வெட்டுச் சான்றுகள் உறுதிசெய்கின்றன.


 1. கி.பி. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குலோத்துங்க சோழனின் கல்வெட்டு “இவ்வூர் வெள்ளாளன் நெய்த வாயில் உடையான் வேளார் தேவர் கண்டான்" எனக் கூறுவது வெள்ளாளர், வேளார் என்று அழைக்கப்பட்டதன் எடுத்துக்காட்டு.

(தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8 எண். 23 மற்றும் A.R.No. 437 of 1902). (யாவரும் கேளிர்நாகசாமி)


2.  ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரம சோழ தேவற்கு யாண்டு 3-வது
         
      இடிகரையிலிருக்கும் வெள்ளாழன் பைய்யரில் மள்ளன்

       சிறியனான ஆளுடையார் வில்லிஸ்வரமுடையார்

       கோயிற் துவார வாசலிற் திருநிலை காலிரண்டுமென் தந்மம்"

என்று கல்வெட்டு கூறுவதால் மள்ளர் சமூகத்தவர்களும் தங்களை          வெள்ளாளர்  என அழைத்துக்கொண்டனர் என கருதலாம்.

(கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், தொகுதி-1, தொடர் எண் : 138 / 2004), (தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு).


3.திருப்பூர் மாவட்டம் மாந்தளீஸ்வரமுடையார் கோயில் அர்த்தமண்டபம் தூணில் உள்ள கல்வெட்டுஸ்வஸ்திஸ்ரீ முத்தூரிலிருக்கும் வெள்ளாளன் மணியர்களில் வன்றன் மாராயனான தென்னவன் மூவேந்த வேளான் இட்ட கால்என குறிப்பிடுவதால் ஒரு வெள்ளாளன் தன்னை தென்னவன் மூவேந்த வேளான் என அழைத்துக்கொண்டதை தெரிவிக்கிறது.

( திருப்பூர் மாவட்ட கல்வெட்டுகள்.நா.. தொல்லியல் துறை தொடர் எண். 45 / 2010)


4.நிர்மணியில் வசிக்கும் வெள்ளாளந் செவ்வாயரில் காவலஞ் செம்பள்ளி என்பவன் நிர்மணியில் மேலை வசலில் அமைந்துள்ள பிள்ளையாருக்கு சந்தியா தீபம் ஒன்று வைக்க ஓர் அச்சு பணம் இக்கோயில் சிவப்பிராமணரிடம் கொடுத்து தீபமெரிய வழிவகைச் செய்துள்ளான்.

( திருப்பூர் மாவட்ட கல்வெட்டுகள்.நா.. தொல்லியல் துறை தொடர் எண். 105 / 2010)


5.ஸ்வஸ்திஸ்ரீ சிற்றிலோட்டில்லிருக்கும் வெள்ளாளன் காடகளில் ஆடன் புலியனான  உத்தமசோழ மும்முடிச் சோழ மாராயன் இட்ட கல் .

(.நா.. தொல்லியல் துறை தொடர் எண். 51 / 2010)


6. வெள்ளாழந் கொச்சகளில் சோழன் கோவநேந் .

(.நா.. தொல்லியல் துறை தொடர் எண். 72 / 2010)


7.ஸ்வஸ்திஸ்ரீ சிற்றிலோட்டில்லிருக்கும் வெள்ளாளன் காடகளில் ஆடன் புலியனான உத்தமசோழத் தமிழ் வேளாந் இட்ட கல் .

(.நா.. தொல்லியல் துறை தொடர் எண். 46 / 2010)


8. கரைவழி நாட்டுக் கடற்றூர் ஆன ராசராச நல்லூர் வெள்ளாளன் கோவன் அரையனாந அரைசுக்கட்டி என்பவன் மருதுடையார்க்கு நிலம் கொடை வழங்கியது பற்றி கூறுகிறது.

(.நா.. தொல்லியல் துறை தொடர் எண். 17/ 2004)

9.வழலையூர் நாட்டுக் கருவலூரிலிருக்கும் வெள்ளாழன் மாடைகளில்               அரையன் காவன் என்பவன் காலகாலதேவர் கோயிலில் பெரிய                         திருமண்டபத்தில் நாயக்கத்தூண் ஒன்று கொடை அளித்த செய்தி                       கூறப்பட்டுள்ளது.

(.நா.. தொல்லியல் துறை தொடர் எண். 164/ 2004)


10.வெள்ளாளன் பயிரியரில் வீரசோழகங்கன் என்பான் சந்தியா தீபம்   எரிக்க அச்சுக்காசு கொடை வழங்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது

(.நா.. தொல்லியல் துறை தொடர் எண். 93/ 2004)


11.பொங்கலூக்காநாட்டு கீரனூரான கொழுமங்கொண்ட சோழநல்லூரில் உள்ள கல்வெட்டுக்களில், கீழ்மணியர், மேல்மணியர் என இரு பிரிவுகள் வெளாளர்களில் குறிக்கப்படுகின்றன. வெள்ளாளன் கீழ்மணியரில் நீலன் புலியன் (தெ..தொ. 5 எண்.277) என்றும், வெள்ளாளன் மேல்மணியரில் காவன் உடையன் (தெ..தொ. 5 எண்.279) என்பவனும் குறிக்கப்பெறுகின்றனர்.


12.மதுரை மாவட்டம் கீரனூர் கல்வெட்டில் வீரராஜேந்திரன் காலத்தில்          "இவ்வூர் வெள்ளாளன் பூசகளில் அரையன் சிறியனான வேந்த சூளாமணி பல்லவரையன்" என்று கல்வெட்டு குறிக்கிறது.

(A.R.No. 588 of 1893)


13.வடபரிசார நாட்டு கவையன்புத்தூரிலிருக்கும் வெள்ளாழன் மலையரில் கேசன் கோநாந தமிழ் வேளான் என்பவன் காலகாலதேவர் கோயிலில் பெரிய திருமண்டபம் நாயகத்தூண் ஒன்று கொடை அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.

(.நா.. தொல்லியல் துறை தொடர் எண். 165/ 2004)


14.உத்தரங்குடையான் கோன் வீதிவிடங்கனான வில்லவ மூவேந்த வேளாளன் என்பவன் முதல் இராஜராஜனுக்காக கோழிப் போரில் பங்கு கொண்டான் என்று தஞ்சைக் கல்வெட்டு கூறுகிறது.

(யாவரும் கேளிர்நாகசாமி)



மேலே கொடுக்கப்பட்ட பல கல்வெட்டுகள் மள்ளன், மல்லன், பல்லவராயர், பள்ளி, செம்பள்ளி, கடம்பன், காடன், வெண்காடன்,  வில்லவன், அரையன், உடையார், வேளான், மூவேந்த வேளான், வேளார் போன்றவர்களை வேளாளன் / வெள்ளாளன் என்றும் தொண்டைமானை சத்வைஷ்ணவன்என்றும்  தெளிவாக குறிப்பிடுவதால் க்ஷத்திரியர், சூத்திரர் என்ற சமூகம் மூவேந்தர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் இல்லை என உறுதியாக கூறலாம்.

                                                                                                       (தொடரும்)