மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் திருவாதவூர் திருமறைநாதசுவாமி
திருக்கோயில், திருச்சுற்று
மாளிகையின் வடசுவரில் உள்ள பராக்கிரமபாண்டியன் 7-ஆம்
ஆட்சி ஆண்டு கல்வெட்டு தென்பறப்பு
நாட்டுத் திருவாதவூரில் நடுவீதியில் இருந்த சீவல்லவபுரத்து “வியாபாரி” திருப்பூவணமுடையானான அரசன் சக்கரவர்த்தி உள்ளிட்டவர்கள் திருவாதவூர் கோயிலுக்கு
இறையிலியாக இருமா அரையே அரைக்காணி நிலம் அளித்ததை தெரிவிக்கிறது. இதில் அரசன் ஒருவனை வியாபாரி எனவும் குறிப்பிடுகிறது.
கல்வெட்டு :
1.
………………… நம்பிள்ளை பராக்கிரம பாண்டிய தேவற்கு யாண்டு ஏ
2.
ழாவது கார்த்திகை மாஸம் தென்பறப்பு நாட்டு திருவாதவூரில் நடுவில்
வீதியான சீவலபுரத்தில் வியாபாரிகளில்
திருப்பூவணமுடைய அரசானான சக்கரவத்தி
3.
உள்ளிட்டார் …………….
(மதுரை மாவட்டக் கல்வெட்டுகள்
- த. நா. அ. தொல்லியல் தறை தொடர் எண் : 4 / 2003)
கி.பி. 768 – 815 ஆட்சி செய்த பராந்தக நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னனின் சீவரமங்கலச்
செப்பேட்டு அவனை “பரம வைஷ்ணவன்” எனவும்
குறிப்பிடுகிறது.
கண்டக சோதனை தான்செய்து கடன்ஞாலம் முழுதளிக்கும்
பாண்டிய நாதன் பண்டித வத்சலன்
வீர புரோகன் விக்ரம பாரகன்
பராந்தகன் பரம வைஷ்ணவன் றானாகி
நின்றிலங்கும் மணிநீண்முடி நிலமன்னவனெடுஞ் சடையற்கு 45
ராஜ்யவர்ஷம் பதினேழாவது பாற்பட்டு செல்லாநிற்க . . . . . .
(பாண்டிய மன்னர் மெய்க்கீர்த்திகள் - பராந்தக நெடுஞ்சடையன் - சீவரமங்கலச் செப்பேட்டு)
கி.பி.
1613 இல் முடிசூடிக்கொண்ட பாண்டிய மன்னன் வேதவிதிப்படி வேள்வி புரிந்தான் ஆதலால் இவன்
தன்னை குலசேகர சோமாசியார் என்று அழைத்துக்கொண்டான். ( Travancore Archaeological
Series, Vol. 1, Page. 418)
கி.பி.1748
இல் இருந்த மற்றொரு பாண்டிய மன்னன் இவனைப்போலவே வரகுணராம பண்டிய குலசேகர தேவ தீட்சிதர் என்று தன்னைச் சிறபித்துக்கொண்டான். பிற்காலப்
பாண்டியர்களுள் சிலர் சோமாசி யார், தீட்சிதர் என்ற பட்டங்கள் புனைந்து கொண்டு அவற்றால்
தம்மை பெருமை படுத்திக்கொள்ள விரும்பினர். ( T.V. சதாசிவ பண்டாரத்தார் – பாண்டியர்
வரலாறு பக். 128)
சேலம்
மாவட்டம், ஆத்தூர் தாலூக, அரகலூரில் உள்ள மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்திய கல்வெட்டு
ஐய்யர் பொன்பரப்பின வாணகோவரையன் என்றும்,
ஐய்யர் குலோத்துங்க சோழ வாணகோவரையன் என்றும் சிறப்பாக அழைக்கப்பட்டுள்ளனர்.
கல்வெட்டு
வாசகம்
1.ஸ்வஸ்திஸ்ரீ
திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க
சொழதெவற்கு
யாண்டு ௩௰௫ வது ஐய்யர்
2.பொன்பரப்பின வாணகொவரையர்க்கும் ஐய்யர் குலொத்துங்க
சொழ வாணகோவரையர்க்கும்
(A.R.No. 435 of 1913)
இவ்வாறு
அக்காலத்தில் மன்னர்கள் வைஷ்ணவன் என்றும், வியாபாரி
என்றும், தீட்சிதர், என்றும், சோமாசியார்
என்றும் ஐயர் என்றும் அழைத்துக்கொண்டதாக கல்வெட்டுகள் சான்று கூறுகின்றன.
க்ஷத்திரியர்
என்பது ஒரு குலம் அல்ல என்பதும், வேளாண் குடியில் பிறந்தவர்களும் தங்களை க்ஷத்திரியர்
என அழைத்துக்கொண்டார்கள் என்பதற்க்கு சாக்கிய வம்சத்தில் தோன்றிய சித்தார்த்தர் என்ற
கவுத புத்தரே ஒரு சிறந்த சான்றாகும்.
கபிலவஸ்துவை
தலைநகரமாக கொண்டு சுத்தோதனர் என்ற சாக்கியர் ஆண்டுவந்தார் (13). அவர் ஆதித்ய கோத்திரத்தை
சேர்ந்தவர். அவர் போர் வீரமிக்கவர், வீர விளையாட்டுகளில் தன் மிகுந்த ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியவர்.
(17)
சுத்தோதனர்
மிகப் பெருஞ்செல்வராய் இருந்தார். ஏராளமான நில புலன்களும், பெரும் பண்ணைகளும் அவர்
வசம் இருந்தன. தன் நிலங்களை உழுவதற்க்கு ஆயிரம் ஏர்களை அவர் வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது
(18). அவர் மிக வளமான வாழ்க்கை வாழ்ந்தார். அவருக்கு பல அரண்மனைகள் சொந்தம். (19)
கி.மு.
563 -ம் ஆண்டு, வைசாக பவுர்ணமி நாளில் சித்தார்த்த கவுதமர் பிறந்தார் (44). சித்தார்த்தர் என்பது அவருடைய பெயர் என்றும்
கவுதமர் என்பது அவரது குலப்பெயர் என்றும் கூறப்படுகிறது.
(730
சாக்கியர்கள்
“வப்ரமங்களம்” என்னும் ஒரு பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். விதைதெளிப்பு நாளில் கொண்டாடப்படும்
ஒரு எளிய கிராமியப் பண்டிகையாகும். அந்நாளில் ஒவ்வொரு சாக்கியரும் தாமே ஏருழுவது வழக்கம்.
(99)
சித்தார்த்தர் எப்பொழுதும் இந்த வழக்கத்தைப்
பின்பற்றித் தாமே அன்று ஏருழுவதில் ஈடுபடுவார். அவர் கல்வியில் சிறந்தவராயினும், உடலுழைப்பை
உதாசீனப்படுத்தமாட்டார் (101).
அவர் சத்திரிய வகுப்பைச் சேர்ந்தவரானபடியால்,
வில்வித்தைகளும் மற்ற போர்கருவிகளைப் பயன்படுத்தும் முறைகளையும் நன்கு கற்றிருந்தார். (102)
சாக்கியர்கள்
தமக்கென ஒரு சங்கம் வைத்திருந்தனர். இருபது வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு சாக்கிய இளைஞரும்
சங்கத்தில் இணைக்கப்பட்டு உறுப்பினராயிருக்க வேண்டியிருந்தது. (236)
சாக்கியர்களின்
சேனாதிபதி தம் இருக்கையை விட்டு எழுந்து, சங்கத்தினரிடம் கீழ்கண்டவாறு உரைத்தார்.
“சாக்கியக் குலத்து சுத்தோதனரின் குடும்பத்தில் தோன்றிய சித்தார்த்த கவுதமர் சங்கத்தின்
உறுப்பினராக விழைகிறார். அவருக்கு இருபது வயதாவதுடன் சங்கத்தின் உறுப்பினராவதற்கான
அனைத்துத் தகுதிகளும் அவருக்குள்ளன. எனவே அவரை நான் சாக்கிய சங்க
உறுப்பினராக்க வேண்டும் என்ற தீர்மானத்தை வழிமொழிகிறேன். இத்தீர்மானத்திற்க்கு எதிராக
யாரேனும் ஏதேனும் கூற விழைந்தால், கூறும்படி வேண்டுகிறேன். (242)
இத்தீர்மானத்திற்க்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால்
சித்தார்த்த கவுதமர் சாக்கிய சங்கத்தின் உறுப்பினராக
ஏற்றுக்கொள்ளப்பட்டார். (247)
சாக்கிய
சங்கத்தின் விதிமுறைகள்
- தாங்கள் கற்பழிப்பில் ஈடுபட்டால் சங்க உறுப்பினராய் நீடித்திருக்க
இயலாது.
- கொலைச் செயலில் தாங்கள் ஈடுபட்டால் சங்க உறுப்பினராய் நீடித்திருக்க
இயலாது.
- தாங்கள் களவில் ஈடுபட்டால் சங்க உறுப்பினராய் இருக்க இயலாது.
- தாங்கள் பொய் சாட்சி கூறிய குற்றத்திற்குட்பட்டால் சங்க உறுப்பினராய்
இருக்க இயலாது.(252)
(இங்கு
கூறப்பட்ட விதிமுறைகள் மூவேந்தர் ஆட்சி காலத்தில் நிலவிய கிராம சபையின் விதிமுறைகளான உத்திரமேரூர் கல்வெட்டு கூறும் செய்திகளுடன் ஒத்துப்போகிறது. )
ரோகினியின் நீர், தங்கள் வயல்களின் பாசனத்திற்காக
சாக்கியர்கள், கோலியர்கள் ஆகிய இரு தரப்பராலுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஒவ்வொரு
பருவத்திலும், அவ்விரு தரப்பாருக்கிடையிலும், யார் முதலில் ரோகினியாற்றின் நீரையெடுப்பது
– எவ்வளவு எடுப்பது என்பது குறித்து வாக்கு வாதங்கள் நடைபெறுவதுண்டு. இந்த வாக்கு வாதங்கள்
முற்றிச் சண்டையிலும், சில சமயம் பெரும் கைகலப்பிலும் முடிவதுண்டு.(259)
இவ்வாறு
நடந்த ஒரு நிகழ்வை தொடர்ந்து சங்க உறுப்பினர்களிடம் சேனாதிபதி கூறியதாவது “ நம் மக்களை
கோலியர்கள் தாக்கியுள்ளனர் – அவர்களும் திருப்பி தாக்க நேர்ந்துள்ளது. கோலியர்கள் இத்தகைய அராஜகச் செயல்களில் நடைபெறுவது இதுவே முதல் முறை
அல்ல. இதுவரை அவர்களை நாம் பொறுத்துக்கொண்டிருந்தோம். இது இப்படியே நீடிக்க முடியாது.
இது நிறுத்தப்பட வேண்டும். அதற்கான ஒரே வழி கோலியர்கள் மேல் போர் அறிவிப்பு செய்வதுதான்.
சங்கம் கோலியர்கள் மேல் போர் அறிவிப்பு செய்ய வேண்டும் என நான் முன்மொழிகிறேன். இதை
எதிர்க்க விரும்புகிறவர்கள் பேசலாம்” என கூறினார்.(263)
இந்த
தீர்மானத்தை நான் எதிர்க்கிறேன். எந்தப் பிரச்னையையும் போர் தீர்ப்பதில்லை. போர் தொடுப்பது
நம் நோக்கத்திற்கு எவ்வகையிலும் உதவப்போவதில்லை. அது மற்றொரு போருக்குத்தான் விதைதெளிக்கும்.
ஒரு கொளைஞன் மற்றொரு கொளைஞனாலேயே கொல்லப்படுவான். ஆக்கிரமிப்பாளன்
மற்றொருவனால் ஆக்கிரமிக்கப்படுவான். அழிக்கிறவன் அழிக்கப்படுவான்” என சித்தார்த்த கவுதமர் கூறினார் (264).
சித்தார்த்த
கவுதமரின் வற்புறுத்தலை சேனாதிபதி மறுத்தளித்தார். மேலும் இப்போது
முக்கியம் ஓட்டெடுப்பு நடத்தி, இதைப்பற்றி சங்கம் என்ன சொல்ல விறும்புகிறது என்பதை
நாம் உறுதிப் படுத்திக்கொள்ளலாம் என சேனாதிபதி கூறினார்
(274).
அதன்படி சேனாதிபதி தன் தீர்மானத்தை ஓட்டுக்கு விட்டார்.
பெருவாரியான வாக்குகளால் அது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது (275).
அடுத்த
நாள் சங்கம் கூடிய போது, கோலியர் மீது போர்தொடுக்க இருபதுக்கும் அய்பதுக்கும் இடைப்பட்ட
வயதுடைய எல்லா சாக்கியர்களும் ஆயுதமேந்த வேண்டுமெனத் தாம் அழைப்பு விடுக்கச் சங்கம்
தன்னை அனுமதிக்க வேண்டுமென முன்மொழிந்தார் (277).
நண்பர்களே!
நீங்கள் விரும்பியதை நீங்கள் செய்யலாம். உங்கள் பக்கம் பெரும்பான்மை உள்ளது. போருக்கான
ஆயத்தங்களை மேற்கொள்ளும் உங்கள் முடிவை நான் எதிர்த்தாக வேண்டியிருப்பதற்காக வருந்துகிறேன்.
நான் உங்கள் படையில் சேர மாட்டேன். நான் போரில் பங்கேற்க மாட்டேன். (282)
சங்கத்தின்
உறுப்பினராகச் சேர்க்கப்பட்டபோது நீங்கள் எடுத்துக்கொண்ட
உறுதிமொழிகளை நினைத்துப் பாருங்கள். அவற்றில் எதையேனும் நீங்கள் மீறினால் பொது
அவமானத்திக்கு ஆளாவீர்கள் என சேனாதிபதி கூறினார். (283)
கோலியர்க்கு
எதிராகப் போர் தொடுக்கும் சங்கத்தின் திட்டத்தைத் தொடர்ந்து தாம் எதிர்ப்பதால் ஏற்ப்படக்கூடிய
விளைவுகளை கருதினார் சித்தார்த்தர். அவர் முன் பரிசீலனைக்கு மூன்று வழிகளே இருந்தன.
படையில் சேர்ந்து போர் புரிவது ஒன்று; தூக்கிலடப்படவோ, நாடுகடத்தப் படவோ சம்மதிப்பது
மற்றொன்று; அவருடைய குடும்பத்தினர் சமூகபகிஷ்காரத்தால் தண்டிக்கப்படவும், சொத்துக்கள்
பறிமுதல் செய்யப்படவும் அனுமதிப்பது. (288)
முதலாவதை
ஏற்பதில்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். மூன்றாவதை அவரால் நினைத்துப் பார்க்கவே
முடியவில்லை. இந்த சூழ்நிலையில் இரண்டாவது வழியே சிறந்தது என்று அவர் கருதினார்.
(289)
(டாக்டர்.
பாபாசாகேப் அம்பேத்கர் – புத்தரும் அவர் தம்மமும்)
புத்தர்
சாக்கிய குலத்தை சேர்ந்த ஒரு வேளாண் குடியில் பிறந்த இளவரசர் ஆவார். விதைதெளிப்பு நாளில் கொண்டாடப்படும் ஒரு எளிய கிராமியப் பண்டிகையில் தாமே ஏருழுவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது. அவர் வில் மற்றும் போர்கருவிகளைப் பயன்படுத்தும் முறைகளையும்
நன்கு கற்றிருந்தார் ஆதலால் அவர் க்ஷத்திரியர் என அழைக்கப்பட்டார்.
வேளாண்குடிகள் மட்டுமே பங்குகொள்ளக்குடிய கிராம சபையில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
புத்தருக்கும், கிராம சபையில் உள்ள மற்ற அங்கத்தினருக்குமிடையே
ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் நாடு கடத்தப்பட்டார் என புத்தருடைய
வாழ்க்கை வரலாறு மேலே குறிப்பிடப்பட்டுள்ள நூலில் மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு
வேளாண் குடியில் பிறந்தவர்களும் தங்களை க்ஷத்திரியர் என அழைத்துக்கொண்டார்கள் என சான்றுகள்
மிக தெளிவாக இருக்கும் பொழுது பின்பு எப்படி நாம் க்ஷத்திரியர் என்பது
ஒரு தனிப்பட்ட குலத்தை குறிப்பிடுகிறது என கூறமுடியும்.
(தொடரும்)