தேவேந்திர குல மள்ளர் வம்சத்தை சேர்ந்த கோதமங்கலத்து அரசக் குடும்பன் மகன் சின்னப்பாப்பான் குடும்பனின் திருமண நாளான விரோதிகிருது வருசம் தை மாதம் 23 – ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (20.1.1650) அன்று எழுதப்பட்ட திருமண வாழ்த்துப்பாடல் 42 ஏடுகளை கொண்டது. முந்தைய பதிவில் ஏடு 1 முதல் 30 வரை கொடுக்கப்பட்டுள்ளது. இப்பதிவில் ஏடு 31 முதல் 42 வரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஓலைச்சுவடிகளை சேகரித்த தாராபுரம் வீராட்சிமங்கலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு மள்ளர் இலக்கியப் பேரவையின் தலைவர் இன்ஜினியர் திரு. கணபதிக் குடும்பனார் அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
ஒலைச்சுவடி
ஏடு
– 31
சீர்கள்
அழகு
பவளமணி அன்பாக வேணுமென்று
நித்திலங்கள் வேணும் நிறைகோமேதகம் வேணும்
வாகான ரத்தினத்தால் வாங்கி ராசானிக்கள்
காணிகரைதான் கொடுத்து கன்னியரைச் சென்று கண்டு
சேலைதனை எடுத்து சிறந்த நல்ல பொன் பூட்டி
பொன் பூட்டி யலங்கரிக்க போனவர்கள் மீண்டுவர
அத்தியிலை மேலே அர்ச்சுணரை யேற்றிடுவார்
மாவிலை மேலேறி வைய்யாளி வைத்திடுவார்
மாரிமுழக்கம் போல் மண்டலமெல்லா நின்றதிர
அந்தமுள்ள பாதம் அடியார்கள் தான் பணிந்து
விந்தை மிகு கும்ப அணி வெற்றிமன்னர் வரவுகண்டு
நித்திலங்கள் வேணும் நிறைகோமேதகம் வேணும்
வாகான ரத்தினத்தால் வாங்கி ராசானிக்கள்
காணிகரைதான் கொடுத்து கன்னியரைச் சென்று கண்டு
சேலைதனை எடுத்து சிறந்த நல்ல பொன் பூட்டி
பொன் பூட்டி யலங்கரிக்க போனவர்கள் மீண்டுவர
அத்தியிலை மேலே அர்ச்சுணரை யேற்றிடுவார்
மாவிலை மேலேறி வைய்யாளி வைத்திடுவார்
மாரிமுழக்கம் போல் மண்டலமெல்லா நின்றதிர
அந்தமுள்ள பாதம் அடியார்கள் தான் பணிந்து
விந்தை மிகு கும்ப அணி வெற்றிமன்னர் வரவுகண்டு
ஏடு - 32
ஊர்வலத்தில்
தெருவிலச் சுருள் வைப்பார்
செங்கழுநீர் விட்டெரிவார்
ஊர்வசி
போல் ரம்பையர்கள் ஒழுங்காய் மலர்வீச
புருவச்சிலையாகப்
பூவிழியகழன்பாக
உருவக்கணை விடுவார் ஒன்று
படாதென்றிடுவார்
முன்னோடிச் சென்று முதல்
சுருள் தனை வைப்பாரும்
கொற்றவன் பார்த்து கோகிலம்
போல மொழி பயின்று
உத்திரங்கள் சொல்லி
உதையத்திலெழுந்திருந்து
சித்திரங்கள் போலே சிகைத்து
நெடு மூச்செரிந்து
தெள்ளுதமிழ் மணிபோல
சுகிப்பாய் ருச்சுணர்க்கு
வள்ளிலிருக்கும் வடிவுதனைப்
பாருமென்றார்
இந்திரனோ வென்பாரும்
இறைவனோவென்பாரும்
ஏடு - 33
கண்டோர் புகழுதல்
சந்திரனேயாமாகில்ச் சல்லா
பத்துண்டெனவே
பண்டை யசுர்களைப் படையறுத்த
வேலவனோ
வேத்தி யனுமக்கொடி விரையவே
தோனுது காண்
கருணருக்கிளையன் காண்
காலிநிரை மீண்டவன்காண்
தருமருக்கிளைய தனஞ்செயன்காண்
யென்பாரும்
வீமர்க்கிளைய விசையன்காண்
னென்பாரும்
அரனைத் தொழுது வந்த
அங்கதன்காண் னென்பாரும்
ஆண்டவனை விலக கொண்டடித்தவன்
காண்னென்பாரும்
பாசு பதம் பெற்ற பார்த்தன்
காண்னென்பாரும்
பேர் பத்துடைய பெருமாள்
காண்னென்பாரும்
ஏடு - 34
மணமகள் வரவேற்பு
வந்து நுழைந்தார் மாமனுமே
வாசலிலே
வந்த மணவாளனுக்கு வருசை
பலதான் கொடுத்தார்
சாந்துடனே பன்னீரு சந்தனங்
குங்குமமும்
அள்ளித்தெளித்திடுவார்
அவரவரே பூசிடுவார்
பாவாடை மேல்கட்டி பவளமலர்
தூவி
ஆலாத்தி சுற்றி அதி சோபனம்
பாடி
காலைக்கழுவினாள் கன்னி
மணவாளனுக்கு
முத்திலங்கு மணவறையை முன்னமே
சுற்றி வந்து
சித்திரம் போல்
மாப்பிள்ளையைச் சிறப்பாகத்தானிருத்தி
தையல் மின்னால் பெண்ணை
தானமது செய்து வைத்து
ஏடு - 35
திருமணம்
- நீர்வார்த்துக் கொடுத்தல்
மெய்யில் பணி துகில் வேண்டிய
தெல்லாமணிந்து
சித்திரங்கள் தீட்டி
சிறப்பாய் அலங்கரித்து
சந்திரன் உதயம்,போல தன்ம
மலர்மாலையிட
மணவாளன் தமையனையும்
வாருமென்று தான் அழைத்து
வீமன், எழுந்திருந்து
மெல்லியரைத்தான்னெடுத்து
கோமானிடமாக குறிபார்க்க
வைத்தார்கள்
பிர்மன் நடுவாக பேதரசன்
முன்பாக
கைபிடித்து நீர் வார்த்துக்
கூட்டிக் கொடுத்த பின்பு
அத்திமுகனை அரனே
சிவாயமென்று
பொன்பதித்த ஊன்சலு மேல்
போற்கொடியு மன்னவனே
ஏடு - 36
மீன்போல காந்தி மின்ன
வேடிக்கை பார்த்திருந்தார்
வெஞ்சாமரை வீச வேசியர்கள்
நடனமிட
சங்கீதம் பாட சகல
கேளிக்கையுடன்
பட்டுவங்கள் கூடி பாசாகக்
கட்டியங்கள்
திட்டமுடன் எச்சரிக்கை சேரவே
பக்க நிற்க
பாவாணர் பாட பார்மன்னர்
போற்றி செய்ய
நாவாணர் போற்றி நமஸ்கரித்து
சுற்றி நிற்க
பாடும் புலவனுக்கு
பரிமளங்கள் தாம்பூலம்
சோறு சால்வை சோபனம் சொன்ன
பணி ஈந்தார்
மாப்பிள்ளையும் பொண்ணும்
மஞ்ச நீர் தானாட
தலைக்கடையில் சென்று சரிபலகை
தானுமிட்டு
ஏடு - 37
மஞ்சள் நீராடுதல்
வலது பக்கமாக மங்கையரைத்
தானிறுத்தி
தோழிமார் சூழ சோனங்கள்
சொல்லி நிற்க
வாள் வேந்த மங்கையருக்கு
மன்னனுக்கு நலுங்கிட்டு
ஒரு சேலை கட்டி உசந்து
மஞ்சள் நீராடி
வரிசையுடன் எல்லோரும் மஞ்சள்
நீராடி பின்
நீராடி துகிலுடுத்தி
நேரிளையும் மன்னவனும்
வேடிக்கையாக விதவிதமாய் பவனி
வர
ஊர் பவனி வருதல்
பகவத்தி மத்தாப்பு
வானவேடிக்கையுடன்
தம்புராவோசை
சத்தங்கிடுகிடுடென
கொம்பு தொனிக்க கோல சின்ன
வாத்தியமும்
எக்காளம் பேரிக்கை எங்கும்
முரசொலிக்க
ஏடு - 38
பதினெட்டு
வகை மேளம் பாங்காய் முழங்கி வர
சந்திரடால் சூரிய டால் தார் வேந்தர் பக்கம் வர
கெருடக் கொடி மகரக் கொடி கூடவே சூழ்ந்து வர
பரத நடனமுடன் பாடல் கேளிக்கையுமாய்
விந்தையுடன் நாலு தெரு வேடிக்கையாக வந்து
ஆசார வாசல் முன்னே ஆனை விட்டுக் கீழிறங்கி
ஆசாரமாக அரண்மனையில் தான் நடந்தார்
நவரங்க மாளிகையில் நன்றாய் கொலுவிருந்தார்
தவநெறி சேர் மன்னவனுந்தான் கொலுவிருந்தார்
மாமனார் முன்னே வந்து வரிசை பல தான் கொடுத்தார்
தாம மணி மங்கையருக்கு தகுந்த மரியாதி
சந்திரடால் சூரிய டால் தார் வேந்தர் பக்கம் வர
கெருடக் கொடி மகரக் கொடி கூடவே சூழ்ந்து வர
பரத நடனமுடன் பாடல் கேளிக்கையுமாய்
விந்தையுடன் நாலு தெரு வேடிக்கையாக வந்து
ஆசார வாசல் முன்னே ஆனை விட்டுக் கீழிறங்கி
ஆசாரமாக அரண்மனையில் தான் நடந்தார்
நவரங்க மாளிகையில் நன்றாய் கொலுவிருந்தார்
தவநெறி சேர் மன்னவனுந்தான் கொலுவிருந்தார்
மாமனார் முன்னே வந்து வரிசை பல தான் கொடுத்தார்
தாம மணி மங்கையருக்கு தகுந்த மரியாதி
ஏடு - 39
மணமகளுக்கு தந்தையின் சீர்வரிசை
என்னென்ன சீதனங்கள்
ஏந்திளைக்குத் தந்தார் காண்
வண்ணமணி சேந்த மாணிக்கத்
தாவடமும்
காதுக்கிசைந்த கணத்த
நகைகளெல்லாம்
மாதுக்கும் மாப்பிள்ளைக்கும்
வகையாக வேனதெல்லாம்
பால் பசுக்கள் தானும் பண்பாக
அவர் குடுத்து
வேல் போலுந் தாதியரை
மெய்யிளைக்கு ஏவல் செய்ய
நாடுகள் யெல்லா மங்களமாய்
அவர் கொடுத்து
பாடும் புலவர் தனை பாங்காய்
வரிசை செய்து
வெள்ளாமை பயிறு
அதிலிருக்கும் பண்ணைக்காரனையும்
தருகிறோமென்று தகப்பனார்
நீர் வார்த்தார்.
ஏடு - 40
பூங்காவனமும் புதிய வனச்
சோலைகளும்
அரசகாரியஞ் சொல்ல அவதான
மந்திரியும்
தருகின்ரோமென்று தகப்பனார்
தாரை செய்தார்
பொன்னினங் கரையும் பொங்குவடி
பட்டணமும்
செந்நெல்விளையும் தழைத்த
சோழமண்டலும்
மா பழுக்கும் சோலை வைகை
வளநாடும்
பேசக்கிளியும் பிடித்தாட்ட
ஊஞ்சல்களும்
தூண்டா மணிவிளக்கும் தூய
சரவிளக்கும்
காண்டாமணி விளக்கும் கார்மேக
வண்ணனுக்கு
ஏடு - 41
காண்டாடி எரிந்த
காண்டீபனர்ச்சுணர்க்கு
தருகிறோமென்று தகப்பனார்
நீர் வார்த்தர்
இத்தனையும் தான் கொடுத்து
தாயே நதிலச்சீர் வரிசை
நன்குடிக்கு நீறு நாயகனார்
போலிருப்பீர்.
பைங்கொடியும் மாப்பிள்ளையும்
பாலகனைப் பெற்றிருப்பீர்
மன்னவனும் தேவியும்
வாழ்ந்திருப்பீ
ரென்னாளும்
பன்னுதமிழ் தெரிந்து
பாரமிருதுள வாழ்ந்திருப்பீர்
மின்னல் போலவே மேதினியில்
வாழ்ந்திருப்பீர்
சொன்னேன் அதிகச்
சோபணமுண்டாகியிருப்பீர்
வாழி
உலகளர்ந்த மாலவனு
உரைபிரம்மன் தாள் வாழி
ஏடு - 42
பலகலைகளோதும் பைந்தமிழே வாழி
சந்திரனும் சூரியனும்
தவமுனிவர் தான் வாழி ,
இந்திரனும் இறைவனும்
இஷ்டபந்து தான் வாழி
ஐந்துகரத்தோன் அடியிணைகள்
தான் வாழி
தொந்திவயிற்றோர்க்
கிளையசுப்பிரமணியர்தான் வாழி
ஆல்போல் தழைத்து அருகது போல்
வேறுன்றி
மூவரசி போல சொந்தமெல்லாம்
முழுசாக வாழியவே
கல்யாண வாழ்த்து முனைந்து
முற்றுமே குருவே துணை
(முற்றும்)