க்ஷத்திரியர் என்ற பட்டம் இந்தியாவில்
பல சமூகத்தவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என நாம் முன்பு குறிப்பிடப்பட்டிடுந்தோம்.
அவைகள் தவிர இன்னும் சிலவற்றை கீழே கொடுத்துள்ளோம்.
மராட்டிய மன்னர்:
தஞ்சாவூர் மாவட்டம், பள்ளி அக்ரஹாரம் என்ற ஊரில் உள்ள கல்வெட்டு மராட்டிய மன்னர் சிவாஜி ராஜா சத்ரபதி என்பவரை ஷத்திரியர் என குறிப்பிடுகிறது. இவர் ஒரு வேளாண்குடியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டம், பள்ளி அக்ரஹாரம் என்ற ஊரில் உள்ள கல்வெட்டு மராட்டிய மன்னர் சிவாஜி ராஜா சத்ரபதி என்பவரை ஷத்திரியர் என குறிப்பிடுகிறது. இவர் ஒரு வேளாண்குடியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வெட்டு வாசகம்:
1.
வீரசிம்ம வரத்தில் சோழ தேசத்தின் சிம்மா
2.
சனத்தில் ஸ்தாபிக்கப்பட்டருக்கிற ஷ்த்திரிய பூ
3.
பாலராகிய இஸ் அயினேஸ் ஸ்ரீ மந்தராஜ ஸ்ரீசிவா
4.
ஜி இராஜச் சத்ரபதி சாயபவர்களிந்தப் பா
5.
லத்தை ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாகன தஎளருயஅ துன்
6.
முகி வருஷத்தில் லெப்டினான்று கறனல் மக்கிளீன்
7.
இரெசிடென்றாயிருக்கையில் கல்டி வைத்தார்கள்.
(த.நா.அ.
தொல்லியல் துறை, தொடர் எண். 33 / 1979 - தஞ்சாவூர்
வட்ட கல்வெட்டுகள்)
கி.பி. 1233 முதல் 1266 வரை
முதல் நரசிம்மவர்மன் என்ற மன்னன் கங்க நாட்டை ஆட்சி புரிந்திருக்கிறான். கொனாராக்கில் உள்ள சிறப்புக்குரிய
சூரியன் கோயிலை எடுத்தவன் இவனே. இவன் காலத்தில் (சகம்: 1172), விசாகப்பட்டினமான குலோத்துங்க
சோழப்பட்டினத்தில் உள்ள கருமாணிக்காழ்வார் கோயிலில் கண்டன் சந்திரிய செட்டி என்ற வணிகன்
சனிவார மண்டபம் எடுத்ததை அங்குள்ள ஒரு தமிழ்க் கல்வெட்டு சுட்டுகிறது.
(தொல்லியல் கருத்தரங்கு –
2. பக். 103, தமிழ் நாடு தொல்லியல் துறை)
இக்கல்வெட்டில் கண்டன் செட்டி
என்பவற்க்கு க்ஷத்திரியர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளதை தொல்லியல் துறை உறுதி செய்துள்ளது.
செட்டி எனப்தற்க்கு நிகண்டுகள் உழவர், நகரத்தார் என பொருள் கண்டுள்ளது. இங்கு க்ஷத்திரியர்
என்பது ஒரு குலத்தை குறிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
கிருஷ்ண செட்டி எனப்படும் கிருஷ்ணம நாயக்கரை ஸ்ரீவேதாந்த சுவாமிகள் முன்பாக
கவறை 354
குலத்துச்செட்டிகளும் மிதுனம்,
மேஷம் பல ராசி சாதி செட்டிகளும் கூடி சாதிக்கு
அதிபதியாக்கிக் கொடுத்த செய்தி ஆழ்வார்பேட்டை செப்பேடு
– 2ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கவறை கிஷ்ணசெட்டி என்ற கிர்ஷ்ணம
நாயக்கர் சத்திரிய ஜாதி என்று குறிப்பிடுகிறது. இது 20 ஆம்
நூற்றாண்டில் பலரும் தங்களை சத்திரியர் என்று பெறுமையாக கூறிக்கொண்டதின் வெளிப்பாடாகும்.
செப்பேட்டு
வாசகம்:
1. ஸ்ரீ கிர்ஷ்ணராயப்பதம் சாலியவாகன சகார்ப்பதம்
கலியுக
௵ ௪ லட்
2. லட்சத்து ௩௰க௬.௪ க்கு மேல்
செல்லா நின்ற ஸ்ரீமுக
௵து லா மாதம் சோம
3. வாரம் றோகணி பூர்வபட்ச்சப் தினத்தில் சத்திரிய
ஜாதி
கவறைச
4. ந்திரகுலம் கலைக்கோட்டு மகாரிசி வம்முஷம் ஆரீ கஞ்சிபுத்
5. தூர் மாற்கட கோத்திரம் கிஷ்ணசெட்டி என்றளைக் (கிற)
கிர்ஷ்ண
6. ம நாயக்கறுக்கு கொடுத்த தாம்பற சாசனம்……………
(ஆழ்வார்பேட்டை செப்பேடு – 2 - தமிழக செப்பேடுகள் – தொல்லியல்துறை)
கி.பி. 1654 – ல் திருமலை
நாயக்கர் மதுரையை ஆட்சி செய்த காலத்தில் தனது இராச்சியத்திற்க்கு உட்பட்ட பகுதியில்
ஒரு புலி அப்பாவி மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்ததையரிந்து அப்புலியைக் கொள்வதற்கு
ஆணையிட்டார். அப்புலியைக் கொல்ல மூவரையத் தேவன் என்னும் வீரன் முன்வந்தான். அவனும்
அவனது உறவினர் ஆறுபேரும் சீரங்கநாயக்கனுடன் சென்று புலியைத் தேடிக் கொன்றார்கள். அவனுக்குத்
“திருமலை மூவரையத்தேவன்“ என்று திருமலை நாயக்கர் பட்டமளிதார். வத்திராயிருப்பை ஒட்டிய
கிராமத்தைத் தந்து செம்புப் பட்டயம் வழங்கினார். மேலும் அந்த செப்பு பட்டயத்தில் தன்னை
ஷத்திரி திருமலை ராயர் என அழைத்துக்கொள்கிறார்.
செப்பேட்டு வாசகம்:
உ ஸ்ரீ ராமஜெயம்
1. அதிகமான மதுராபுரித்தல பாண்டி மண்
2. டலம் பதிநாலு முடிபொருத்த கர்த்தறாகிய
3. றாயெ ஷத்திரி திருமலைராயக்கறவற்கள்
சிரி
4. வில்லிபுத்தூர் நாச்சியாரைச் சேவிக்க வே
5. ண்டி ரத கெச துரக பதாதி சேனையுடனே சமுத்திர
6. கோசம் போலே மாக ஆடம்பறத்துடனே வந்து
7. திருவண்ணாமலையில் யிரங்கி யிருக்கும்போது
..............................
(இளந்தை குளம் செப்பேடு)
காமாட்சியம்மன் பக்தர்களாகிய “யாகசத்திரிய தெலுங்க தேசாதிபதிகள்“ வம்சத்தில் வந்த புல்லன் செட்டி வழியினர் வடக்கில் உள்ள கண்ணனூரிலிருந்து கௌமாரியம்மனை தங்களுடன் மதுரைக்குக் கொண்டு வந்து, பின்னர் வீரபாண்டியில் புல்லை நல்லூர் என்ற ஊரினை ஏற்படுத்தி அங்கு கோயில் கட்டி மாரியம்மனை வைத்து வழிபடத் தொடங்கினர் என்று வீரபாண்டிச் செப்பேடு குறிப்பிடுகிறது.
கல்வெட்டு வாசகம்:
11………….புல்ல
12.நல்லூரான வழநாட்டில் குடியிருக்கிர காமாக்ஷியம்மன் பக்த்த
ராகிய யாகச் சத்ரிய தெ
13.லுங்க தேசாதிபதிகள் வம்மிசத்தார்கள் தலமை புல்லன் செட்டிக்கி
வுங்கள் முன்னோ
14.ர்கள் காலந்தொட்டு வுங்களுக்குள் கட்டுப்பட்டு சத்தியங் காப்
பாற்றும் வண்ணா
15.ன் அம்பட்டன் சாம்பான் வகை கீழ் குலத்தார்கள் வேலைகளுக்
குள்ளாக்க கட்டு
16.ப்பட்ட ஜாதியர்களுக்கும் ஜாதி
(வீரபாண்டிச் செப்பேடு)
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலை கட்டியவர்களில் தேவேந்திர குல பள்ளர் சமூகத்தவர்கள் முக்கியமானவர்கள் என்பதை காஞ்சி காமாட்சியம்மன் கோவில் செப்பு பட்டயம் உறுதி செய்யும்.
The Sena Dynasty
The
Sena Dynasty of Bengal belonged to the Brahmana-Kshatriya clan of Karnata in
South India. After the palas, Senas became the ruler of Bengal.
The
remote ancestor of the Sena Dynasty was one Virsena whose name we have found in
the Puranas. The Senas were known as the Brahma-Kshatriya as because they were
at first Brahmin but became Kshatriya afterwards.
Kakatiyas
No.
395.
(A.
R. No. 94 of 1917.)
On
the huge Nandi pillar lying near the ruined temple in Malkapuram,
Guntur
Taluk, Guntur District. (Published in the Journal of the Andhra
Historical
Research Society, Vol. IV, pp. 147-64.) S. 1183.
(Durmati)
Gives a detailed account of the
Kakatiya family and of the foundation and pontifical succession of the
Golaki-matha of the Saivas and states that king Ganapatideva
promised the village of Mandara in the Velanadu-Kandravati country to his
guru Visvesvara Sivacharya and that Ganapati’s daughter Rudramadevi made a
formal gift of that village along with the village of Velangapundi, that
Visvesvara Siva established a new village with the name of Visvesvara-Golaki
and peopled it with person of different castes brought from various parts
of the country, that he also established the temple of Visvesvara, a Sanskrit
college, a matha for Saivas, a choultry for feeding people without distinction
of caste and creed, a general land a maternity hospital, besides some other
things and that he made grants of land for the maintenance of all these
institutions. Gives a detailed description of the administration of the
trust and of the village affairs. Incidentally, it mentions a large
number of other religious and charitable institutions established by Visvesvara
Siva in several other places. Kakatiyas are
described as belonging to the Solar race of Kshatriyas.
(South Indian Inscriptions -
Volume 10 - Kakatiya Dynasty )
Banavasi Katamber
In 954 A. D. the Banavasi Twelve Thousand was made over to one
Machiyarasa or Narakki-arasa, who ruled over the province for a period of six
years. He was born in the Brahma-Kshatriya
Matur-vamsa and was entitled to the band of five chief instruments. He had the
titles of Mahasamantadhipati and the boon lord of Trikunda-pura. He had the
horse for his crest and the mirror flag. The record providing all these details
says that he was acting as king of (Banavasi) Twelve Thousand from Ede-nad,
which was evidently the seat of his government.
(E. C.. VIII, Sb, 474, 476 and 70.)
The
Kadambas of Nagarkhanda
Bammarasa’s wife was Kalala-devi whom the inscriptions
describe as “an abode of learning” and "to her dependents a cow of
plenty”. The information that he was so possessed of the Kshatriya qualities, that he overcame all the
Kshatriyas,
(George M. Moraes, M.A - A
History of Ancient and M ediaeval Karnataka. Page.No. 236)
மேலும்
தமிழகத்தில் க்ஷத்திரியர் குலம் என்று இன்றுவரை சாதி சான்றிதல் யாருக்கும் கொடுக்கவில்லை
மாறாக வன்னியகுல சத்திரியர் என்றுதான் சாதி சான்றிதல் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது
வன்னிய குலத்தில் தோன்றிய போர்வீரர்கள் என்று பொருள்படும்படி சாதி சான்றிதல் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய வன்னியர்களின் தோற்றம் மிகவும் பிற்காலத்தியது, அதாவது கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் வதாபியை கொல்வதற்க்காக ஜம்பு முனிவரின்
வேள்வியிலிருந்து தோன்றியவர்கள் வன்னியர்கள் என வன்னியபுராணம் குறிப்பிடுகிறது. ஆனால் மூவேந்தர்கள் இராமாயண காலத்திற்க்கு
முன்பே தோண்றியவர்கள் என்பதற்க்கு பல சான்றுகள் உண்டு. மேலும் மனு நூல் குறிப்பிடும் க்ஷத்திரியர்
என்பவர்கள் பிரம்மாவிலிருந்து தோண்றியவர்கள் என்பது தெளிவு. அனால் சோழர்கள் வம்சாவழியை கூறும் திருவாலங்காடு
செப்பேடு மிக தெளிவாக சோழர்களின் முன்னோர் சூரியன் என்று குறிப்பிடுகின்றது.
திருவாலங்காடு
செப்பேடுகளில் கொடுக்கப்பட்டுள்ள வம்சாவளியைப் பார்க்கலாம்.
சூரியன்
மனு
இக்ஷ்வாகு
விகுக்ஷி
புரஞ்சயன்
இக்ஷ்வாகு
ககுஸ்தன்
அர்யமன்
அனலப்ரதாபன்
வேணன்
ப்ரித்து
துந்துமாரன்
யுவனாச்வன்
மாந்தாதா
முசுகுந்தன்
(இவனே நாளங்காடிப் பூதத்தைஇந்திரனிடமிருந்து பெற்றவன்)
வல்லபன்
……..
…..
கரிகாலன்
கோச்செங்கானன்
(திருவாலங்காடு செப்பேடு)
(திருவாலங்காடு செப்பேடு)
சோழர்கள் தங்கள் முன்னோர் பிரம்மா என எங்குமே குறிப்பிடவில்லை. மேலும்
திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் தாழ்ந்த ஜாதிகள் பட்டியலில் சாணான் என்ற நாடார் இனம்
குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 19 - 20 ம்
நூற்றாண்டில் மாவட்டவாரியாக மேனுவல் தொகுத்தனர். அதில் திவான் ஆர். நாகமையா
என்பவரால் தொகுக்கப்பட்ட திருவாங்கூர் 'மாவட்ட
மேனுவல்' சாணார்கள்
பற்றிக் குறிப்பிடுகையில் மிகத் தெளிவாக,
‘வலங்கை உய்யக்கொண்ட இரவி குல
க்ஷத்திரியர்கள்' என்று பதிவு
செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மன்னர் பரம்பரை
கிடையாது ஆனால் இவர்கள் சமூகத்தைச்சார்ந்த ஏனாதி என்பவர் படை பயிற்றுவிப்பவராக
இருந்துள்ளார். ஆதலால் இவர்களுக்கும் க்ஷத்திரியர்கள் என்ற பட்டம்
கொடுக்கப்பட்டுள்ளது.
(தொடரும்)