Tuesday, 15 November 2016

பகுதி 11 'வேளிர் என்போர் உண்மையில் யார்?' என்பது பற்றிய வரலாற்றுத் தேடல் - Pandyan Mallar

சங்க இலக்கியங்களான ஜங்குறு நூறு, அகநானுறு மற்றும் திவாகரம், பிங்கலம் போன்ற நிகண்டுகள் மருதநில தலைமக்களை ஊரன், கிழவன், மகிழ்நன் என குறிப்பிடுகிறது. ஊரன் எனில் ஊர்த் தலைவன்; கிழவன் எனில் உரிமை உடையவன்; எல்லாம் உடையவன் எனப் பொருள்படும். ஊர் மன்றங்களின் தலைவர்தான் ஊரன், மகிழ்நன், கிழவன் எனப்பட்டனர்.


பிங்கல நிகண்டில் இந்திரன் என்பதற்கு தேவர்வேந்தன், புரந்தரன், மருதக்கிழவன், வேந்தன், கரியவன் என்று பொருள் கண்டுள்ளது. நம்பி அகப்பொருள் அகத்திணையில் “இந்திரன் ஊரன் பைந்தார் மகிழ்நன், கிழவன், கிழத்தி, உழவர், உழத்தியர், கடைஞர், கடைசியர் மருதநிலமக்களாகப் பேசப்படுகின்றனர்.


குடும்பன் என்ற குலப்பட்டம் வழக்கில் உள்ள பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊர்தலைவரையும் ஊர்க்குடும்பன் என்று வழங்குவர். ஊர்க்குடும்பன் எனில் ஊரில் குடும்பு பார்க்கிறவன் ஊர்சபை, ஊர்மன்றம் இவற்றிற்குத் தலைவராக இருப்பவர் என்று பொருள்படும். சங்க இலக்கியங்களில் வரும் ஊரன், மகிழ்நன், கிழவன் என்பவை அன்று இருந்த ஊர்த் தலைவர்களைச் சுட்டும்.

அக்காலத்தில் காட்டுவாணர் நிரந்தரக் குடியிருப்புகளை அடிக்கடி தாக்கியதால், ஒவ்வொரு குடியிருப்பும் தனித்தனியாய் அவர்களை எதிர்க்க முடியாது போயிற்று. எனவே, பல ஊர்களும் ஒன்று சேர்ந்து கூட்டாட்சி முறையை ஏற்படுத்தினர். ஊர்களில் உள்ள தலைவர்களில் வலிமையும், ஆற்றலுமுடையவர் கூட்டாட்சிக்குத் தலைவரானர். இவர் வேள், வேளிர் என வழங்கினர். பின்னர் பல வேளிர்களிலும் சிறந்தவர் முடியுடை மன்னரானர். அதாவது, ஊர் வளர்ச்சியுற்றுப் பேரூரானது. பேரூர் நாகரிகம் பெற்று நகரமானது. ஊர், நகரங்கள் தோன்றத் தோன்ற ஆட்சிமுறை விரிவடைந்தது. ஊர்க்கிழவரிலிருந்து சிறுகுடி மன்னர், சிற்றூர் மன்னன், வேள், வேளிர் தோன்றி அதன்பின் வேந்தர் அதாவது முடியுடை மன்னர் தோன்றினர். அவர்தான் சேர, சோழ, பாண்டியர் ஆவர். (இரா.தேவஆசிர்வாதம் – மூவேந்தர் யார்?)

தஞ்சை மாவட்டம் தலைஞாயிறு கிராமம் கைலாசநாதர் கோயில் வடக்குக் கருவறை அதிட்டானத்தில் உள்ள சுந்தரபாண்டியன் கால கல்வெட்டில் தென்கால நாட்டவர்கள் ஒன்று சேர்ந்து, திருமறைக்காடுடைய நாயனர்க்கு பத்தே எழுமாவரை வேளாண் நிலம் கொடுப்பதென முடிவு செய்த செய்தியும், அவர்கள் அனைவரும் இட்ட கையொப்பங்களும் காணப்படுகின்றன. இதில் வேளூர்கிழவன் அரையன் இருங்கோளர், வேளூர் கிழவன் அரையன் குலசேகர காரானை விழுப்பரையன், சீகாருடையான் சோழகோன், வேளூர் கிழவன் அரையன் காரானை மூப்பரையன் என்பர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இக்கல்வெட்டில் மள்ளர் சமூகத்தின் உட்பிரிவான மூப்பன் என்பவருக்கு அரையர் என்ற பட்டம் இருந்துள்ளது தெரியவருகிறது.

இவர்கள் அனைவரும் கிழவன் என்ற அடைமொழியை கொண்டுள்ளதால் இவர்கள் மருதநிலத்து வேளாண் சமூகத்தவர்கள் என்பது கூடுதல் செய்தியாகும்.


கல்வெட்டு  வாசகம்:
l.ஸ்வஸ்திஸ்ரீ கோச(டை)பன்மர் திரிபுவனசக்ரவத்திகள் ஸ்ரீசுந்த
பாண்டிய தேவ(ர்க்கு) யாண்(டு) .
2. ஜேந்திரசோழ வளநாட்டுத் தென்க(ா)லநாட்டாராம் வ..வலை..
பண்ணி(ன) படி . . . . ப . . .
3. ழுதுமுடைய வளநாட்டு குன்றுார் (நா)ட்டு உடைய திருமறைக்
காடுடைய நாயனர் . . .
4. தலைஞாரான ஸ்ரீமதுராந்தகிச்ச(துர்)வேதி மங்கலத்து திருநாமத்துக்
காணிய்(யாக)வும் . . . . . .
5 . . . . வகை நாட்டு பூதிகுடி கிழவர் . . . . . . திருமரான அம் . . கானார் உ . . 6.  . ……………………..
7. ஆற்றுக்கு கிழக்கும் தெற்கும் இன்னான்கெல்லையுள் சா . . . . . று இநிலம் பத்தே எழுமாவரைக்கும் . . . . . டான் நிலத்துக்கு கார்நாட்டு கடைப்ப . . . . மான நிலத்துக்கு ஊர் வ(யில்)
8 . . .வ. வஹைய்  பண்ணிக் குடுத்தோம் . இந்த வழிவஹையப் படி(யே) கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளக்கடவர்களாகவும் இப்படி சம்மதித்து .ே . . . . . .
9.இன்னானார்க்கு இந்நாள்முதல் முதலடங்க இறையிலியாக சந்திரா.திய வரையும் இ . . . தோம் உடையார் தி(ரும)றைக் காடுடைய நாயனார் கா …
10. ம வ இப்படிக்கு இவை வேளூர்கிழவன் அரையன் காரானை . . . மூப்பரையன் எழுத்து . . . . . . . எழுத்து கோமடத்து ஸ்ரீ க… உருத்திரபட்டன் எழுத்து . . . யூர் . . . . ஸ்ரீ க… உருத்திரபட் . . . . .
11. ப் பெருமாள் எழுத்து  .ஹாதே . . . (மன்)றுளாடும் பெருமாள் எழுத்து இப்(படிக்கு) இவை வேளூர்கிழவன் அரையன் இருங்கொள்ள எழுத்து.
12. கு இவை வேளூர்கிழவன் அரைய உடை . . . . . பிள்ளை எழுத்து இப்படிக்கு இவை . . . . ரை வீற்றிருந்தான் ஹட் ……….. யுளாவோன் எழுத்து சீகாருடையான் சோழ கோன் எழுத்து
13. வேளூர்கிழவன் அரையன் குலசேகரகாரானைவிழுப்பரையன் . . . நியமங்கிழான் திருவன . . . . . எழுத்து இப்படிக் . . . . . . . தாமோதரபட்டன் எழுத்து நாட்டுக்கணக்கு . . . ஆளுடையான் எழு . . . . .
14. எழுத்து பெரிஞார்கிழவன் வ. . . . . அழகியமணவாளப் பெருமாள் எ(ழுத்து) . . . . காதேவன் எழுத்து மணற்குடை(யா)ன் அருளாளப்பெருமாள் எழுத்து சிங்கப்பெருமாள் எழுத்(து) . . . . . .
15. மடத்து சூர்யதேவபட்டன் எழுத்து இராயூர் சோட . . . . . எழுத்து ஆய்மூருடையான் செல்வப்பிள்ளையான் எழுத்து ஆய்மூருடையான் . . . . . . . . . டை இ (எ..) பட்டன் …… ன் பண்டிதப்பிரியன் எழுத்து.
(திருத்துரை பூண்டி கல்வெட்டு - த. நா. தொ. ஆய்வுத்துறை தொடர் எண் : 1976/ 116)

பழம்பல் நெல்லின் வேளூர் வாயில்
………………………………………………………………………..
புனை இருங்கதுப்பின் நீ கடுத்தோள்வயின்
அனையேன் ஆயின் அணங்குக என் என
மனை யோட் தேற்றும் மகிழ்நன் ஆயின்”             (அகம் 166 – 4 -11)

வேளூரில் ஆட்சி செய்த ஒரு குறுநில தலைவனை அகநானுறு (166 – 4 -11) மகிழ்நன் என குறிப்பிடுகிறது.


தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் விற்குடி ஸ்ரீமயானேஸ்வரர் கோயில் வடக்குப் புற குமுதத்தில் உள்ள ஒரு கல்வெட்டு சுந்தரபாண்டியனின் பதினாறாவது ஆட்சியாண்டைச் சேர்ந்தது. சில வரிகள் மட்டுமே இப்பொழுது கிடைத்துள்ளன. ஆனால் திருவாரூர் உடையார் கோயில் தேவதான நிலம், மனைகள் ஆகியவற்றை அரசு திருநாட்டப் பெருமாள் என்பவரின் மகனான மலையப் பெருமாள் பராக்கிரம பாண்டிய இருங்கோளருக்கு விற்றுக்கொடுத்த செய்தி இந்தியக் கல்வெட்டு ஆண்டிறிக்கை (79 of 1922 ) மூலம் தெரியவருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
On the South wall of the central shrine in the Virattanesvara temple at Virkudi-Pandya-Tribhuvanachakravartin Sundara Pandya [deva] - [16th year, Simha, ba, tritiya-··[A] yilyam-Tamil-damaged. Registers the sale, to Malaiyaperumal Parakrama Pandya Irungolar, son of Arasu Tirunattap-perumal of some lands and house - sites in the devadana of Tiruvarur - udaiyar in Narikkudi in Panaiyur-nadu.
தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையின் தொடர் எண் 162 / 1977 (நன்னிலம் கல்வெட்டுகள் - முதல் தொகுதி) .


தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் விற்குடி ஸ்ரீமயானேஸ்வரர் கோயில் கருவறையின் கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் பதினாறாவது ஆட்சியாண்டைச் சேர்ந்தது இக்கல்வெட்டு. கெயமணிக்க சதுர்வேதி மங்கலத்தை சேர்ந்த அந்தணன் ஒருவன் கல்வெட்டு எண் ஒன்றில் கூறப்பட்ட அதே மலையப் பெருமாள் பராக்கிரம பாண்டிய இருங்கோளருக்கு விற்றுக்கொடுத்த செய்தி இந்தியக் கல்வெட்டு ஆண்டிறிக்கை (80 of 1922 ) மூலம் தெரியவருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
On the south wall of the central shrine in the Virattanesvara temple at Virkudi-Pandya-Jatavarman alias Tribhuvanachakravartin Sundara - Pandyadeva, - 16th  year, Simha, ba, ekadasi, Monday, Punarpusam.
Much damaged. Registers the sale of some lands to the individual mentioned in No.79 above - by a brahman of Irayur ­ a hamlet of Gangeyaraya Chaturvedimangalam in Valkkudi - parru, a subdivision of Panaiyur - Nadu.

தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையின் தொடர் எண் 163 / 1977 (நன்னிலம் கல்வெட்டுகள் - முதல் தொகுதி)


இரண்டு கல்வெட்டுகளும் திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீசுந்தரபாண்டிய தேவரின் 16 - ஆவது ஆட்சியாண்டில் சிம்ம நாயற்று ஏகாதசியும் திங்கட்கிழமையும் பெற்ற புனர் பூசத்து நாளில் வெட்டப்பட்டது ஆகும். இப்பாண்டியன் ஜடாவர்மன் என்ற பட்டப் பெயரைக் கொண்டவன்.  இந்த பாண்டுய மன்னனிடம் மலையப் பெருமாள் பராக்கிரம பாண்டிய இருங்கோளர் என்பர் உயர் அதிகாரிய பணிபுரிதுள்ளார் என தெரியவருகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டு சான்றுகளுடன் இருங்கோவேளார் குடும்பர் குலத்தைச் சேர்ந்தவர் என்று நேரிடையாக குறிப்பிடக்கூடிய கல்வெட்டுச் சான்று உண்டு அவற்றை கீழே காண்போம்.


தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை முன்னால் தலைவர் மற்றும் ஈரோடு கொங்கு ஆய்வு மைய அமைப்பாளருமான பேராசிரியர், முனைவர் புலவர் செ. இராசு அவர்கள் கொடுத்த குடும்பர், குடுமிச்சி பற்றிய கி.பி, 13 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு வாசகங்கள். அவை இந்தியத் தொல்லியல்துறை ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டவைகள் ஆகும். இம்மூன்று கல்வெட்டுகளும், ஈரோடு மாவட்டம், தாராபுரம் வட்டம் குண்டடத்தில் உள்ள வடுகநாத சாமி கோயிலில் உள்ளன. இதில் முதல் கல்வெட்டான (ARE 119 / 1920) குண்டோடத்தில் குடுமிச்சிகளில் சிங்கன் கோவியான சிரு அங்கராயர் மனைக்கிழத்தி என்று குறிப்பிடுகிறது.  இரண்டாவது கல்வெட்டு (ARE 124 / 1920)  பொங்கலூர்க்கா நாட்டிற் குண்டோ முதலிகளில் குடும்பரில் காவன் என்றும் மூன்றாவது கல்வெட்டு (ARE 130 / 1920)  குண்டோடத்தி குடும்பரில் இருங்கோளன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  
I. தாராபுரம் வட்டம், குண்டடத்தில் உள்ள வடுகநாத சாமி கோயிலில் கருவறை வடக்குச்சுவரில் உள்ள கல்வெட்டு பொங்கலூர்க்க நாட்டு குண்டோடத்திலுள்ள குடுமிச்சிகளில் அங்கராயன் மனைவி வடுகப் பிள்ளையார்க்கு சந்தி விளக்கு வைக்க அச்சு பழஞ்சலாகை ஒன்று தானமளித்துள்ளச் செய்தி கூறப்பட்டுள்ளது.   

கல்வெட்டு  வாசகம்:

1. ஸ்வஸ்திஸ்ரீ வீரராஜேந்திரதேவற்கு யாண்டு பதிநொந்றாவதுக் கெதிராவது பொங்கலூ
2.ர்க்கா நாட்டிற் குண்டோடத்திற் குடுமிச்சிகளில் சிங்கந்கோவியார் சிறு அங்கராயந் மனை
3.க்கிழத்தி குண்டோடத்தில் வடுகம்பிள்ளையார் கோயிலுக்கு சந்தியா தீபமொந்றுக்கு ஒடுக்கின
4.அச்சு பழஞ்சலாகை ஒந்றுங் கொண்டோம் இக்கோயில் சிவப்பிராமணரில் காப்பிய கோத்திரத்
5.தில் உத்தமந் சொக்கநும் விடங்கந் ஆளவந்தாநாந சித்திரமேழிபட்டநும் இவ்விருவோம் கைக்
6. கொண்டோம் இச்சந்தியாதீபமொந்றும் குடங்(கொண்டு கோ)யில் புகுவார் சந்திராதித்தவரை செல்வதாக இது
7. (பந்)மாஹேஸ் வர ரக்ஷை

(திருப்பூர் மாவட்ட கல்வெட்டுகள் – த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் – 107 / 2010, மற்றும் ARE 117 / 1920 )

கொங்குச் சோழரான வீரராசேந்திர தேவ குடும்பரின் ஆட்சிக் காலம் கி.பி. 1206 முதல் கி.பி. 1255 வரையாகும். மேலே கொடுக்கப்பட்ட கல்வெட்டு அவரின் 11 + 1 ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டது ஆகும், அதாவது கி.பி. 1228 ஆகும். இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள குடுமிச்சி அரசன் குடுமி குல சிங்கன் சிறு அங்கராயரின் மனைவி ஆகும். கோவி என்ற சொல் அரசரைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.  குடுமிச்சி என்பது குடுமி, குடும்பர் என்பதின் பெண்பாற் பெயராகும். இது தேவேந்திர குல வேளாளர் வம்சத்தாரில் ஒரு பிரிவினரின் பெயராகும். இந்தக் குடுமிச்சி குண்டடம் வடுகநாதர் கோயிலில் சந்தியா விளக்கு வைப்பதற்காகக் கோயில் பிராமணர்களிடம் ஒரு அச்சு பொன் கொடுத்தது இக்கல்வெட்டு மூலம் ஆவணமாக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டில் இரண்டு சொற்கள் கொங்குநாட்டின் வரலாற்றுக்கு மிக முக்கியமானதாகும். அவை 1. குடுமிச்சி 2. கோவி என்பதாகும். குடுமிச்சி என்கிற சொல் கொங்கு அரசர்களின் குலத்தையும் கோவி என்ற சொல் அரசர்கள் என்பதையும் உறுதி செய்யும்.

II. மேற்படி கோயில் கருவறைத் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு வடுகப்பிள்ளையார்க்கு சந்திவிளக்கு வைக்க குண்டோடத்தி குடுமரில் பிள்ளை ஓர் அச்சு கொடை அளித்தச் செய்தி கூறப்பட்டுள்ளது.  

கல்வெட்டு  வாசகம்:

1. ஸ்வஸ்திஸ்ரீ (ா) . . . . . ஆவது பொங்கலூற்கா நாட்டில் குண்டோடத்தி (கு)டுமரில் பிள்ளை பிள்ளளா
2. ன பிறைசூடியே . . . . . . சுரமுடையாற்கும் வடுகப்பிள்ளையாற்கும் புதனெண்ணைக் . . . . . ல் ஒரு பிடிக்கு ஒடுக்கின பணம் பத்துங் கைக்
3. கொண்டோம் . . . . . காப்பியக் கோத்திரத்தில் வடுகந் அன்னதாந்நம்பி .
…….ட்டாரும் சொக்கப்பட்டன் ஆளுடையானுள்ளி
4. ட்டாரும் ஆவுடை . . . . . ட்டாரும் கைக்கொண்டோம் இக்கோயிற்
குடங்கொடு . . . . . . . சந்திராதித்தவரை செலுத் . . . . .
5. மாஹேஸ்வர க்ஷை
(திருப்பூர் மாவட்ட கல்வெட்டுகள் – த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் – 109 / 2010, மற்றும் ARE 125 / 1920 )

III. மேற்படி கோயில் கருவறைத் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு வடுகப்பிள்ளையார்க்கு குண்டோடத்து முதலி குடுமரில் காடன் உலகை வலம்வந்தான் என்பவன் சந்தி விளக்குக்கு ஒர் அச்சு கொடை அளித்தச் செய்தி கூறப்பட்டுள்ளது.  

கல்வெட்டு  வாசகம்:

1. வீரராசேந்திர தேவற்கு யாண்டு
2. பொங்கலூற்கா நாட்டு குண்டோட
3.முதலிகள் குடுமரில் காடந் உலகை வலம்வந்தா
4. நேந் திருநிலை அழகிய பிள்ளையாற்கு சந்தியாதீபம் ஒந் . . . கு
5. நேந் நாய . . . .
6. ந் பழஞ்சலாகை ஒந்றுங் கைக்கொண்டோம் இக்கோயிற் காணியு
7. டைய சிவப்பிராமணரில் காப்பிய கோத்திரத்தில் உத்த
8. மந் சொக்கபட்டநுள்ளிட்டாரும்…… னபட்டந் ஆளுடையாநு
9.ள்ளிட்டாரும் இவச்சு கைக்கொண்டோம் குடங்கை கொண்டு கோயிற்பு
10.குவார் சந்திராதித்தவரை செலுத்துவதாக இது பஹேஸ்வர க்ஷை

(திருப்பூர் மாவட்ட கல்வெட்டுகள் – த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் – 110 / 2010, மற்றும் ARE 124 / 1920 )

IV. தாராபுரம் வட்டம், குண்டடத்தில் உள்ள அமிர்தகடேசுவரர் கோயில் இடது நிலையில் உள்ள கல்வெட்டு குண்டோடத்து குடும்மரில் இருங்கோளன் என்பவன் குறிக்கப் பெறுகின்றார்.

கல்வெட்டு  வாசகம்:

1. ஸ்வஸ்திஸ்ரீ கு
2. லோத்து
3. ங்க சோழ
4. தேவர்க்கு
5. இயாண்
6. டு பத்தா
7. வது குண்
8. டோடத்தி
9. ல் குடும்பரில்
10. இருங்கோள
11. ன் …… காவன்
12. நா ……..யா………கொ
13. ங்க ………………..
14. வார் மற்றுந்
15. ருவந் இத்தி
16. ருவாசல் திரு
17. மண்டபத்
18. துக்கு சந்தி
19. யாதீபம் உன்றும்
20. விடாமல் சந்திராதித்தவரை
21. செலுத்தக்கட
22. வோமாகவும்
23. இது பந்(மாயே)சுர
24. ரர் இரச்சை.


(திருப்பூர் மாவட்ட கல்வெட்டுகள் – த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் – 119 /2010, மற்றும் ARE 130 / 1920 )
என்று குறிப்பிடுகிறது.

இது போன்று வேளிரை அடையாளம் காட்டக்கூடிய நேரிடையான கல்வெட்டு மற்றும் இலக்கிய சான்றுகள் வேறு எந்த சமூகத்திற்கும் இல்லை என்பது வரலாறு சொல்லும் உண்மையாகும். 


                                                                                           (தொடரும்)

Friday, 4 November 2016

பகுதி 10 'வேளிர் என்போர் உண்மையில் யார்?' என்பது பற்றிய வரலாற்றுத் தேடல் - Pandyan Mallar




சங்ககாலத்தில் சோழ வேந்தன் கரிகாலன் அருவா நாட்டை (தொண்டை நாட்டை) க் கைப்பற்ற எண்ணி வடக்கே சென்றான்; அந்நாட்டில் ஓரிடத்தினின்றிக் கண்டவாறு அலைந்து திரிந்த குறும்பரை அடக்கி, அருவாளரை வென்று, தொண்டை நாட்டு 24 கோட்டங்களிலும் அவர்களை நிலைபெறச் செய்தான்; 24 கோட்டங்களிலும் வேளாளர் பலரைக் குடியேற்றினான் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுவர். மேலும் "இருங்கோவேள்" என்னும் வேளிர் மன்னன் "பிடவூரை" தனது தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். இவ் வேளிர் மன்னனான "இருங்கோவேளை" வேந்தன் கரிகாலச் வென்றதாகச் சான்றுகள் கூறுகின்றன.  இந்த பிடவூரில் ஆட்சி செய்த இருங்கோவேளை வேளாளர் என நச்சினார்கினியர் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.


மன்னர் பின்னோரென்ற பன்மையான முடியுடையோரும், முடியில்லாததோரும், உழுவித்து உண்டோரும், உழுது உண்போருமென மன்னரும் வேளாளரும் பலரென்றார். அவருள் உழுவித்துண்போர் மண்டலமாக்களும், தண்டத்தலைவருமாய்ச் சோழ நாட்டுப்பிடவூரும், அழுந்துரும், நாங்கூரும், நாவூரும், ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமுங்கிழாரும் முதலிய பதியிற்றோன்றி வேளெனவும், அரசெனவும் உரிமையெய்தினோரும், பாண்டிநாட்டு காவிதிப் பட்டமெய்தினோருங் குறுமுடிக் குடிப்பிறந்தோர் முதலியோருமாய், முடியுடை வேந்தர்க்கு மகட் கொடைக்கு உரிய வேளாளராகும். இருங்கோவேள் மானங்கடிப்பிடவூர் எனவும், ஆலஞ்சேரி மாயிந்த லூருண்கேணி, நீரோப்பொன் எனவும் சான்றோர் செய்யுள் செய்தார்: உருவப்பஃதோர் இளஞ்சேட்சென்னி அழுந்துர் வேளிடை மகட்கோடலும், அவன் மகனாகி கரிகாற்பெருவளத்தான் நாங்கூர் வேளிடை மகட்கோடலுங் கூறுவார்.
(நச்சினார்க்கினியர்  - தொல்காப்பிய உரை)


வேளிர்குடி என்பது பண்டைநாள் தமிழகத்திற் சிறந்து திகழ்ந்த பெருங்குடிகளில் ஒன்று. வேளிர் என்பதன் பொருள் வேளாண் மரபினர் என்பதாம். இம்மரபினர் முடியரசர்க்கு மகட்கொடைக்குரியராகவும் குறுநில மன்னராகவும் இருந்து கோலோச்சி வந்தனர் என்றும் அறிகின்றோம். அழுந்தூர் வேள், நாங்கூர்வேள், இருங்கோவேள் என்பாரும் இவ் வேளிர் குடித்தோன்றல்களே. இவ்வேளிர்குடி நாட்டினைப் பற்றிப் பதினெண் வகைப்படும் என்பர். அப்பதினெண் வகையுள் ஒன்றாகிய கொங்குவேளிர் குடியிற் பிறந்தமையால் இவர் குடிப் பெயராலேயே வழங்கப்பட்டனர்.

(சோமசுந்தரனார் - கொங்கு வேள் பெருங்கதைக்கு உரை)



90. வேளிர் களமர் சதுர்த்த ருழவர் விளைப்பவர்வே
      ளாளர் கொடையினரே வாழ்நர் வார்த்தையாடலில் வல்லோர்
      காள நெடுங்கடற் பார்மைந்தர் கங்கை குலத்தரயன்
      றாளினில் வந்தவர் காராளர் பேரெனச் சாற்றுவரே -   17

 (பாரதி தீபம் நிகண்டு  - காராளர்)

பாரதி தீபம் நிகண்டு  காராளர் என்பதற்க்கு வேளிர், களமர், சதுர்த்தர், ழவர், என்று பொருள் கூறுகிறது.


கொங்கு வேளிர்

களப்பிரர் தமிழகத்தை ஆட்சி செய்த காலத்தை கி.பி. 3 முதல் கி.பி. 6 - ஆம் நூற்றாண்டு எனக் கணித்துள்ளனர். அந்நியரான களப்பிரர் அந்நிய சமயங்களான சமனத்தையும் பெளத்தத்தையும் ஆதரித்ததால் நிறைய சமண, பெளத்த நூல்கள் இக்காலத்தில் தோன்றின. தமிழகத்தில் களப்பிரர்களின் ஆட்சி கொடுங்கோலாட்சியாக இருந்தமையால் நிறைய நீதி நூல்களும் இக்காலத்தில் தோன்றின. இக்கால கட்டத்தில் தமிழகத்தின் கொங்குப் பகுதியை ஆண்டவர்கள் கங்கர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் சமண சமயத்தவர்களாக இருந்தனர்.

பெருங்கதையில் மள்ளர் குலத்தினர்

பெருங்கதையை இயற்றிய ஆசிரியர் கொங்கு நாட்டைச் சேர்ந்தவராகவும் வேளிர் வம்சத்தில் வந்தவராகவும் இருந்தமையால் கொங்கு வேளிர் எனப்பட்டார். இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. தமிழ் மரபுகளை அறிந்த சிறந்த தமிழ்ப் புலவர். இப்பெறும் புலவர் தமது பெருங்கதையில் உதயணனையும் அவனது மாமனாரும் உச்சயினியின் மன்னனுமான பிரசோதன மன்னனையும் மள்ளர் / மல்லர் குலத்தினராகக் காட்டுகிறார். மள்ளர்களைப் போர் மறவர்களாகவும் பெருந்திறல் உழவராகவும் காட்டுகிறார்.  பிரசோதன மல்லருடைய உச்சயினியையும் அதன் மக்களையும் பற்றிக் கூறும் போது அரண்மனை அதிகாரிகளாக மடையர், மள்ளர், கடையர், கணக்கர், அமைச்சர் என குறிப்பிடுகிறார்.


(248) பண்டம்புதைத்தவண்டுபடு வளநகர்……80
          மடையரு மகளிரு ள்ளரு மைச்சரும்
          கடையருங் கணக்கருங் காப்பரு முளப்பட
          இறைவினை திரியாப் பழவினை யாளரை
          வழிமுறை மரபிற்றந் தொழின்முறை நிறீஇ……84

(கொங்கு வேளிர் - பெருங்கதை உஞ்சைக் காண்டம் - 32 கரடு பெயர்த்தது, வரி, 80 – 84)


மடையர் சமையல் பணியாளர், வயல்களில் மடை திருத்தி நீர் பாய்ச்சுவோர்; மள்ளர் -_படை வீரர், உழவர்; கடையர் வாயில் காக்கும் வீரர்கள், மள்ளர் குலத்தினரில் ஒரு பிரிவு.


ஆணைப்படி படை மறவர்களான மள்ளர் குலத்தினர் காற்றென விரைந்து சிலம்புகளுடன் வந்து தோணியை திருப்பிக் கொண்டு வந்தது பற்றிக் கூறும் போது கொங்கு வேளிர் இவ்வாறு விவரிக்கிறார்.
           
 (250)  முந்தை யுணர்ந்தோர் வந்துநினக்குக் குரைப்ப…169
 யாமுங் காண்கங் கூமின் சென்றெனக்
 கோல்கொண் மள்ளர் காலினோடி
 நம்பி வேஎண்ம் அம்பி வருகென
 ஆணையிற் றிரீஇய ஞ்சன்மி னீரெனத்
 தோணி யிழிப்புழித் துடுப்புநனி தீண்டி
 நெற்றி யுற்ற குற்ற மதுவென…………………….175

(கொங்கு வேளிர் - பெருங்கதை உஞ்சைக் காண்டம் – 36)
    
  பிரசோதன மல்லரின் தலைநகராகிய உச்சயினியை மல்லன் மூதூரெனக் குறிப்பிடுகிறார்.


(251) விரைந்தனர் கொண்ட விரிநீ ராத்திரை……….1
           புரிந்துட னயரும் பொலிவின தாகி
           மல்லன் மூதூ ரெல்லாச் சேரியும்
           பயிர்வளை யரவமொடு வயிரெடுத்தூதி
           இடிமுர செறிந்த வெழுச்சித் தாகி………………..5
           யாழுங குழலு மியம்பிய மறுகின்

(கொங்கு வேளிர் - பெருங்கதை உஞ்சைக் காண்டம் – 38)


நீராட்டு விழாவிற்கு செல்லும் மல்லருடைய பெரும் சுற்றத்தார்கள் மாடச் சிவிகையில் சென்றதை ஆசிரியர் (கொங்கு வேளிர்) கூறுகிறார்.

          
 (252) கோதை புனைந்த மேதகு வனப்பின்
           மல்லர் பூண்ட மாடச் சிவிகை………………………….255
           பல்வளை யாயத்துப் பைந்தொடி யேறலும்
           செய்யோ ளமர்ந்த செம்பொற் றாமரை
           வள்ளிதழ் பொதிந்த கொட்டை போல
           மெல்லியன் மாதரை உள்ளகம் புகுத்தி
           மல்லற் பெருங்கிளை செல்வழிப் படற………………260

(கொங்கு வேளிர் - பெருங்கதை உஞ்சைக் காண்டம் – 38)


உச்சயினி நாட்டை வருணிக்கும் கொங்கு வேளிர் தமிழ்நாட்டை மனதில் கொண்டே மக்களையும் வளங்களையும் விவரிக்கிறார். உழவர் ஒலி, களமர் கம்பல், களைகளையும் கடைசியர் மடைவாய் திருத்தும் மள்ளர் கம்மை, மருதநிலம் வழிச் செல்லும் மல்லலம் பெருவழி, கோட்டையைக் காக்கும் மள்ளர் முதலி யவற்றைக் கூறுகிறார்.

   


  (254) உழவ ரொலியுங் களமர் கம்பலும்
           வளவய விடையிடைக் களைகளை கடைசியர்
            பதலை ரியல் பாசிலைப் பருகிய
 மதலைக் கிளியின் மழலைப் பாடலும்
 தண்ணுமை யொலியுந் தடாரிக் கம்பலும்……………….165
 மண்மை முழவின் வயவ ரார்ப்பும்
 மடைவாய் திருத்து மள்ளர் சும்மையும்
 இடையற வின்றி யிரையாறு தழீஇ
 வயற்புலச் சீறூ ரயற்புலத்து ணுகி
 மருதந் தழீஇய மல்லலம் பெருவழி…………………………….170
 ஒருநூற் றிருபத் தோரைந் தெல்லையுள்
 வலப்பா லெல்லை வயல்பரந்து கிடந்த
 அளற்றுநிலைச் செறுவி னகனிங் கெழீஇ
 இடப்பான் மருங்கிற் பரற்றலை முரம்பிற்
 புன்புலந் தழீய புகற்சித் தாகி………………………………………175
 வன்றொழில் வயவர் வலிகெட வகுத்த
 படைப்புறக் கிடங்குந் தொடைப்பெரு வாயிலும்
 வாயிற் கமைந்த ஞாயிற் புரிசையும்
 இட்டமைத் தியற்றிய கட்டளைக் காப்பின்
 மட்டுமகிழ் நெஞ்சின் மள்ளர் குழீஇய……………………………180


(கொங்கு வேளிர் - பெருங்கதை உஞ்சைக் காண்டம் – 48)

வன்கண் மள்ளர்

 (260) வடுநீங் கமைச்சர் வலித்தனர் ராகிப்………………………….55
            பிணைமலர்ப் படலைப் பிரச்சோ தனன்ன்
            இணைமலர்ப் பாவையை இயைந்ததற் கொண்டும்
            ஊக்கம் இலனிவன் வேட்கையின் வீழ்ந்தென
            வீக்கங் காணார் வேட்டுவர் எள்ளிக்
            கலக்கம் எய்தக் கட்டழல் உறீஇய……………………………….60
            தலைக்கொண் டனரெனத் தமர்க்கும் பிறர்க்கும்
            அறியக் கூறிய செறிவுடைச் செய்கை
            வெஞ்சொன் மாற்றம் வந்துகை கூட
            வன்கண் மள்ளர் வந்தழல் உறீஇப்
            போர்ப்பறை அரவமொ டார்ப்பனர் வளைஇக்……………65
            கோப்பெருந் தேவி  போக்கற மூடிக்
            கையிகந்து பெருகிய செய்கைச் சூழ்ச்சியர்

(கொங்கு வேளிர் - பெருங்கதை இலாவாண காண்டம் – 17)

மாய மள்ளர்
   
(261) ....... ....... ....... ....... ....  வல்லே…………………………..59
            மாய மள்ளரை ஆயமொ டோட்டி
            உருமண் ணுவாவும் வயந்தக குமரனும்
            பொருமுரண் அண்ணல் புகுதரும் வாயிலுள்
            பொச்சாப் போம்புதல் புரிந்தனர் நிற்ப……………63

(கொங்கு வேளிர் - பெருங்கதை இலாவாண காண்டம் – 18)


அருதிறன் மள்ளர்
     
  (262) குதிரையும் களிறும் கொடுஞ்சித் தேரும்
            அடுதிறன் மள்ளரும் வடுவின்று காப்ப
            நெடுமுடி மன்னருண் மன்னன் நேரார்
            கடுமுரண் அழித்த காய்சின நெடுவேல் …………………120

(கொங்கு வேளிர் - பெருங்கதை இலாவாண காண்டம் – 20)

மேலான் மல்லன் - தண்ட மள்ளர்

   (264)  பொற்புடைப் புரவி பொலிய வேறி…………………….225
              நற்படை நலியா நன்மை யொடு பொலிந்த
              சாலிகைக் கவயங் கோல மாகப்
              புக்க மெய்யினர் பூந்தார் மார்பிற்
              சூறாளான் கடுந்திறல் விரிசிகன் வாழ்கென
               மேலான் மல்லன் பாடி காத்த……………………………………230

              நீலக் கச்சை நிரைகழன் மறவரை
              வேலிற் சாய்த்துங் கோல மான்றோர்
              அடவி வாழ்கென வார்த்தன ருரா அய்த்
              தடவரை மார்பிற் றளராச் செங்கோல்
              மிலைச்சன் வாழ்கெனத் தலைக்காப்பு இருந்த…………235
              தண்ட மள்ளரைத் தபுத்துயி ருண்டும்

(கொங்கு வேளிர் - பெருங்கதை மகத காண்டம் – 17)


அறுபதி னாயிர ரெரிபடை மள்ளர்

            இருநூ றானையு மிராயிரங் குதிரையும்…………  30
            அறுநூற் றிரட்டி யடன்மணித் தேரும்
            அறுபதி னாயிர ரெரிபடை மள்ளரும்
            திருமணிச் சிவிகையும் பொருவினைப் படாகையும்
            செங்காற் பாண்டிய நன்று பூண்ட
            பைம்பொ னூர்தியும் பவழக் கட்டிலும்………………35
            படாஅக் கொட்டிலும் பண்டிபண் டாரமும்
            கடாஅக் களியானைக் காவலற் கியைந்த
             பணைத்தோட் சிலசொற் பதுமா நங்கைக்
            கமைக்குப் பட்ட வன்வகபரி யாளமும்
            அன்னவை யெல்லா மந்நிலை நல்கி……………………40

(கொங்கு வேளிர் - பெருங்கதை மகத காண்டம் – 23)

என மள்ளர் குலத்தாரின் பல பணிகளையும் வீரச் செயல்களையும் குறிப்பிடுவார்.

கொங்கு வேளிர் மள்ளர் குலத்தாரைப் பெருந்திறல் உழவர்களாகவும் பெரும் படைத் தளபதிகளாகவும், வீரர்களாகவும் மன்னர்களாகவும் பெருமைபடக் குறிப்பிடுகிறார். தமிழ் மரபில் மள்ளர் குலத்தினரின் பண்பாடுகளையும் பணிகளையும், கம்பரைப் போல, தமது நூலில் சிறப்பாகச் சித்தரிக்கிறார்.

K.K பிள்ளை இருக்குவேள் பற்றி கூறுவதாவது.

 இருக்குவேள், இருங்கோவேள் என்பன ஒரு பொருட் பெயர்கள். சோழர் ஆட்சி காலத்தில் கல்வெட்டுகள் சிலவற்றில் மும்முடிச் சோழன் இருக்குவேள் என்ற பெயரும் வழங்கியதாகக் குறிப்புகள் உள்ளன. மூவேந்த வேளான் என்ற பெயர்களும் இருக்குவேளாரைக் குறிக்கின்றன. இவர்கள் சோழர் அரசமைப்பில் செயலாளர்களாகவும், நாட்டுக் கண்காணிப்பாளர்களாகவும் கோயில் நிருவாகிகளாகவும் பணிபுரிந்து வந்தனர். சோழேந்திர சிங்க மூவேந்த வேளான், நெரியுடைச் சோழ மூவேந்த வேளான்உதயமார்த்தாண்ட மூவேந்த வேளான், வீர சோழ இருங்கோ வேளிர்கள், குலோத்துங்க மூவேந்த வேளான், பர கேசரி மூவேந்த வேளான், சோழன் மூவேந்த வேளான், இராசேந்திர சிங்க மூவேந்த வேளான், எனற பெயர்கள் படைத்த இருக்கு வேளிர்கள் பெரிய ஆட்சிப் பொறுப்புகளில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

(தமிழக வரவரறு மக்களும் பண்பாடும். பக்கம் 217) 


இருக்குவேள் மற்றும் இருங்கோவேள் சமூகத்தவர்கள் தங்களை வேளான் என்று சிறப்பாக அழைத்துக்கொண்டதால், அவர்கள் வேளாண் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பது உறுதியாகிறது. 

                                                                                            (தொடரும்)