Friday, 4 November 2016

பகுதி 10 'வேளிர் என்போர் உண்மையில் யார்?' என்பது பற்றிய வரலாற்றுத் தேடல் - Pandyan Mallar




சங்ககாலத்தில் சோழ வேந்தன் கரிகாலன் அருவா நாட்டை (தொண்டை நாட்டை) க் கைப்பற்ற எண்ணி வடக்கே சென்றான்; அந்நாட்டில் ஓரிடத்தினின்றிக் கண்டவாறு அலைந்து திரிந்த குறும்பரை அடக்கி, அருவாளரை வென்று, தொண்டை நாட்டு 24 கோட்டங்களிலும் அவர்களை நிலைபெறச் செய்தான்; 24 கோட்டங்களிலும் வேளாளர் பலரைக் குடியேற்றினான் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுவர். மேலும் "இருங்கோவேள்" என்னும் வேளிர் மன்னன் "பிடவூரை" தனது தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். இவ் வேளிர் மன்னனான "இருங்கோவேளை" வேந்தன் கரிகாலச் வென்றதாகச் சான்றுகள் கூறுகின்றன.  இந்த பிடவூரில் ஆட்சி செய்த இருங்கோவேளை வேளாளர் என நச்சினார்கினியர் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.


மன்னர் பின்னோரென்ற பன்மையான முடியுடையோரும், முடியில்லாததோரும், உழுவித்து உண்டோரும், உழுது உண்போருமென மன்னரும் வேளாளரும் பலரென்றார். அவருள் உழுவித்துண்போர் மண்டலமாக்களும், தண்டத்தலைவருமாய்ச் சோழ நாட்டுப்பிடவூரும், அழுந்துரும், நாங்கூரும், நாவூரும், ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும், வல்லமுங்கிழாரும் முதலிய பதியிற்றோன்றி வேளெனவும், அரசெனவும் உரிமையெய்தினோரும், பாண்டிநாட்டு காவிதிப் பட்டமெய்தினோருங் குறுமுடிக் குடிப்பிறந்தோர் முதலியோருமாய், முடியுடை வேந்தர்க்கு மகட் கொடைக்கு உரிய வேளாளராகும். இருங்கோவேள் மானங்கடிப்பிடவூர் எனவும், ஆலஞ்சேரி மாயிந்த லூருண்கேணி, நீரோப்பொன் எனவும் சான்றோர் செய்யுள் செய்தார்: உருவப்பஃதோர் இளஞ்சேட்சென்னி அழுந்துர் வேளிடை மகட்கோடலும், அவன் மகனாகி கரிகாற்பெருவளத்தான் நாங்கூர் வேளிடை மகட்கோடலுங் கூறுவார்.
(நச்சினார்க்கினியர்  - தொல்காப்பிய உரை)


வேளிர்குடி என்பது பண்டைநாள் தமிழகத்திற் சிறந்து திகழ்ந்த பெருங்குடிகளில் ஒன்று. வேளிர் என்பதன் பொருள் வேளாண் மரபினர் என்பதாம். இம்மரபினர் முடியரசர்க்கு மகட்கொடைக்குரியராகவும் குறுநில மன்னராகவும் இருந்து கோலோச்சி வந்தனர் என்றும் அறிகின்றோம். அழுந்தூர் வேள், நாங்கூர்வேள், இருங்கோவேள் என்பாரும் இவ் வேளிர் குடித்தோன்றல்களே. இவ்வேளிர்குடி நாட்டினைப் பற்றிப் பதினெண் வகைப்படும் என்பர். அப்பதினெண் வகையுள் ஒன்றாகிய கொங்குவேளிர் குடியிற் பிறந்தமையால் இவர் குடிப் பெயராலேயே வழங்கப்பட்டனர்.

(சோமசுந்தரனார் - கொங்கு வேள் பெருங்கதைக்கு உரை)



90. வேளிர் களமர் சதுர்த்த ருழவர் விளைப்பவர்வே
      ளாளர் கொடையினரே வாழ்நர் வார்த்தையாடலில் வல்லோர்
      காள நெடுங்கடற் பார்மைந்தர் கங்கை குலத்தரயன்
      றாளினில் வந்தவர் காராளர் பேரெனச் சாற்றுவரே -   17

 (பாரதி தீபம் நிகண்டு  - காராளர்)

பாரதி தீபம் நிகண்டு  காராளர் என்பதற்க்கு வேளிர், களமர், சதுர்த்தர், ழவர், என்று பொருள் கூறுகிறது.


கொங்கு வேளிர்

களப்பிரர் தமிழகத்தை ஆட்சி செய்த காலத்தை கி.பி. 3 முதல் கி.பி. 6 - ஆம் நூற்றாண்டு எனக் கணித்துள்ளனர். அந்நியரான களப்பிரர் அந்நிய சமயங்களான சமனத்தையும் பெளத்தத்தையும் ஆதரித்ததால் நிறைய சமண, பெளத்த நூல்கள் இக்காலத்தில் தோன்றின. தமிழகத்தில் களப்பிரர்களின் ஆட்சி கொடுங்கோலாட்சியாக இருந்தமையால் நிறைய நீதி நூல்களும் இக்காலத்தில் தோன்றின. இக்கால கட்டத்தில் தமிழகத்தின் கொங்குப் பகுதியை ஆண்டவர்கள் கங்கர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் சமண சமயத்தவர்களாக இருந்தனர்.

பெருங்கதையில் மள்ளர் குலத்தினர்

பெருங்கதையை இயற்றிய ஆசிரியர் கொங்கு நாட்டைச் சேர்ந்தவராகவும் வேளிர் வம்சத்தில் வந்தவராகவும் இருந்தமையால் கொங்கு வேளிர் எனப்பட்டார். இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. தமிழ் மரபுகளை அறிந்த சிறந்த தமிழ்ப் புலவர். இப்பெறும் புலவர் தமது பெருங்கதையில் உதயணனையும் அவனது மாமனாரும் உச்சயினியின் மன்னனுமான பிரசோதன மன்னனையும் மள்ளர் / மல்லர் குலத்தினராகக் காட்டுகிறார். மள்ளர்களைப் போர் மறவர்களாகவும் பெருந்திறல் உழவராகவும் காட்டுகிறார்.  பிரசோதன மல்லருடைய உச்சயினியையும் அதன் மக்களையும் பற்றிக் கூறும் போது அரண்மனை அதிகாரிகளாக மடையர், மள்ளர், கடையர், கணக்கர், அமைச்சர் என குறிப்பிடுகிறார்.


(248) பண்டம்புதைத்தவண்டுபடு வளநகர்……80
          மடையரு மகளிரு ள்ளரு மைச்சரும்
          கடையருங் கணக்கருங் காப்பரு முளப்பட
          இறைவினை திரியாப் பழவினை யாளரை
          வழிமுறை மரபிற்றந் தொழின்முறை நிறீஇ……84

(கொங்கு வேளிர் - பெருங்கதை உஞ்சைக் காண்டம் - 32 கரடு பெயர்த்தது, வரி, 80 – 84)


மடையர் சமையல் பணியாளர், வயல்களில் மடை திருத்தி நீர் பாய்ச்சுவோர்; மள்ளர் -_படை வீரர், உழவர்; கடையர் வாயில் காக்கும் வீரர்கள், மள்ளர் குலத்தினரில் ஒரு பிரிவு.


ஆணைப்படி படை மறவர்களான மள்ளர் குலத்தினர் காற்றென விரைந்து சிலம்புகளுடன் வந்து தோணியை திருப்பிக் கொண்டு வந்தது பற்றிக் கூறும் போது கொங்கு வேளிர் இவ்வாறு விவரிக்கிறார்.
           
 (250)  முந்தை யுணர்ந்தோர் வந்துநினக்குக் குரைப்ப…169
 யாமுங் காண்கங் கூமின் சென்றெனக்
 கோல்கொண் மள்ளர் காலினோடி
 நம்பி வேஎண்ம் அம்பி வருகென
 ஆணையிற் றிரீஇய ஞ்சன்மி னீரெனத்
 தோணி யிழிப்புழித் துடுப்புநனி தீண்டி
 நெற்றி யுற்ற குற்ற மதுவென…………………….175

(கொங்கு வேளிர் - பெருங்கதை உஞ்சைக் காண்டம் – 36)
    
  பிரசோதன மல்லரின் தலைநகராகிய உச்சயினியை மல்லன் மூதூரெனக் குறிப்பிடுகிறார்.


(251) விரைந்தனர் கொண்ட விரிநீ ராத்திரை……….1
           புரிந்துட னயரும் பொலிவின தாகி
           மல்லன் மூதூ ரெல்லாச் சேரியும்
           பயிர்வளை யரவமொடு வயிரெடுத்தூதி
           இடிமுர செறிந்த வெழுச்சித் தாகி………………..5
           யாழுங குழலு மியம்பிய மறுகின்

(கொங்கு வேளிர் - பெருங்கதை உஞ்சைக் காண்டம் – 38)


நீராட்டு விழாவிற்கு செல்லும் மல்லருடைய பெரும் சுற்றத்தார்கள் மாடச் சிவிகையில் சென்றதை ஆசிரியர் (கொங்கு வேளிர்) கூறுகிறார்.

          
 (252) கோதை புனைந்த மேதகு வனப்பின்
           மல்லர் பூண்ட மாடச் சிவிகை………………………….255
           பல்வளை யாயத்துப் பைந்தொடி யேறலும்
           செய்யோ ளமர்ந்த செம்பொற் றாமரை
           வள்ளிதழ் பொதிந்த கொட்டை போல
           மெல்லியன் மாதரை உள்ளகம் புகுத்தி
           மல்லற் பெருங்கிளை செல்வழிப் படற………………260

(கொங்கு வேளிர் - பெருங்கதை உஞ்சைக் காண்டம் – 38)


உச்சயினி நாட்டை வருணிக்கும் கொங்கு வேளிர் தமிழ்நாட்டை மனதில் கொண்டே மக்களையும் வளங்களையும் விவரிக்கிறார். உழவர் ஒலி, களமர் கம்பல், களைகளையும் கடைசியர் மடைவாய் திருத்தும் மள்ளர் கம்மை, மருதநிலம் வழிச் செல்லும் மல்லலம் பெருவழி, கோட்டையைக் காக்கும் மள்ளர் முதலி யவற்றைக் கூறுகிறார்.

   


  (254) உழவ ரொலியுங் களமர் கம்பலும்
           வளவய விடையிடைக் களைகளை கடைசியர்
            பதலை ரியல் பாசிலைப் பருகிய
 மதலைக் கிளியின் மழலைப் பாடலும்
 தண்ணுமை யொலியுந் தடாரிக் கம்பலும்……………….165
 மண்மை முழவின் வயவ ரார்ப்பும்
 மடைவாய் திருத்து மள்ளர் சும்மையும்
 இடையற வின்றி யிரையாறு தழீஇ
 வயற்புலச் சீறூ ரயற்புலத்து ணுகி
 மருதந் தழீஇய மல்லலம் பெருவழி…………………………….170
 ஒருநூற் றிருபத் தோரைந் தெல்லையுள்
 வலப்பா லெல்லை வயல்பரந்து கிடந்த
 அளற்றுநிலைச் செறுவி னகனிங் கெழீஇ
 இடப்பான் மருங்கிற் பரற்றலை முரம்பிற்
 புன்புலந் தழீய புகற்சித் தாகி………………………………………175
 வன்றொழில் வயவர் வலிகெட வகுத்த
 படைப்புறக் கிடங்குந் தொடைப்பெரு வாயிலும்
 வாயிற் கமைந்த ஞாயிற் புரிசையும்
 இட்டமைத் தியற்றிய கட்டளைக் காப்பின்
 மட்டுமகிழ் நெஞ்சின் மள்ளர் குழீஇய……………………………180


(கொங்கு வேளிர் - பெருங்கதை உஞ்சைக் காண்டம் – 48)

வன்கண் மள்ளர்

 (260) வடுநீங் கமைச்சர் வலித்தனர் ராகிப்………………………….55
            பிணைமலர்ப் படலைப் பிரச்சோ தனன்ன்
            இணைமலர்ப் பாவையை இயைந்ததற் கொண்டும்
            ஊக்கம் இலனிவன் வேட்கையின் வீழ்ந்தென
            வீக்கங் காணார் வேட்டுவர் எள்ளிக்
            கலக்கம் எய்தக் கட்டழல் உறீஇய……………………………….60
            தலைக்கொண் டனரெனத் தமர்க்கும் பிறர்க்கும்
            அறியக் கூறிய செறிவுடைச் செய்கை
            வெஞ்சொன் மாற்றம் வந்துகை கூட
            வன்கண் மள்ளர் வந்தழல் உறீஇப்
            போர்ப்பறை அரவமொ டார்ப்பனர் வளைஇக்……………65
            கோப்பெருந் தேவி  போக்கற மூடிக்
            கையிகந்து பெருகிய செய்கைச் சூழ்ச்சியர்

(கொங்கு வேளிர் - பெருங்கதை இலாவாண காண்டம் – 17)

மாய மள்ளர்
   
(261) ....... ....... ....... ....... ....  வல்லே…………………………..59
            மாய மள்ளரை ஆயமொ டோட்டி
            உருமண் ணுவாவும் வயந்தக குமரனும்
            பொருமுரண் அண்ணல் புகுதரும் வாயிலுள்
            பொச்சாப் போம்புதல் புரிந்தனர் நிற்ப……………63

(கொங்கு வேளிர் - பெருங்கதை இலாவாண காண்டம் – 18)


அருதிறன் மள்ளர்
     
  (262) குதிரையும் களிறும் கொடுஞ்சித் தேரும்
            அடுதிறன் மள்ளரும் வடுவின்று காப்ப
            நெடுமுடி மன்னருண் மன்னன் நேரார்
            கடுமுரண் அழித்த காய்சின நெடுவேல் …………………120

(கொங்கு வேளிர் - பெருங்கதை இலாவாண காண்டம் – 20)

மேலான் மல்லன் - தண்ட மள்ளர்

   (264)  பொற்புடைப் புரவி பொலிய வேறி…………………….225
              நற்படை நலியா நன்மை யொடு பொலிந்த
              சாலிகைக் கவயங் கோல மாகப்
              புக்க மெய்யினர் பூந்தார் மார்பிற்
              சூறாளான் கடுந்திறல் விரிசிகன் வாழ்கென
               மேலான் மல்லன் பாடி காத்த……………………………………230

              நீலக் கச்சை நிரைகழன் மறவரை
              வேலிற் சாய்த்துங் கோல மான்றோர்
              அடவி வாழ்கென வார்த்தன ருரா அய்த்
              தடவரை மார்பிற் றளராச் செங்கோல்
              மிலைச்சன் வாழ்கெனத் தலைக்காப்பு இருந்த…………235
              தண்ட மள்ளரைத் தபுத்துயி ருண்டும்

(கொங்கு வேளிர் - பெருங்கதை மகத காண்டம் – 17)


அறுபதி னாயிர ரெரிபடை மள்ளர்

            இருநூ றானையு மிராயிரங் குதிரையும்…………  30
            அறுநூற் றிரட்டி யடன்மணித் தேரும்
            அறுபதி னாயிர ரெரிபடை மள்ளரும்
            திருமணிச் சிவிகையும் பொருவினைப் படாகையும்
            செங்காற் பாண்டிய நன்று பூண்ட
            பைம்பொ னூர்தியும் பவழக் கட்டிலும்………………35
            படாஅக் கொட்டிலும் பண்டிபண் டாரமும்
            கடாஅக் களியானைக் காவலற் கியைந்த
             பணைத்தோட் சிலசொற் பதுமா நங்கைக்
            கமைக்குப் பட்ட வன்வகபரி யாளமும்
            அன்னவை யெல்லா மந்நிலை நல்கி……………………40

(கொங்கு வேளிர் - பெருங்கதை மகத காண்டம் – 23)

என மள்ளர் குலத்தாரின் பல பணிகளையும் வீரச் செயல்களையும் குறிப்பிடுவார்.

கொங்கு வேளிர் மள்ளர் குலத்தாரைப் பெருந்திறல் உழவர்களாகவும் பெரும் படைத் தளபதிகளாகவும், வீரர்களாகவும் மன்னர்களாகவும் பெருமைபடக் குறிப்பிடுகிறார். தமிழ் மரபில் மள்ளர் குலத்தினரின் பண்பாடுகளையும் பணிகளையும், கம்பரைப் போல, தமது நூலில் சிறப்பாகச் சித்தரிக்கிறார்.

K.K பிள்ளை இருக்குவேள் பற்றி கூறுவதாவது.

 இருக்குவேள், இருங்கோவேள் என்பன ஒரு பொருட் பெயர்கள். சோழர் ஆட்சி காலத்தில் கல்வெட்டுகள் சிலவற்றில் மும்முடிச் சோழன் இருக்குவேள் என்ற பெயரும் வழங்கியதாகக் குறிப்புகள் உள்ளன. மூவேந்த வேளான் என்ற பெயர்களும் இருக்குவேளாரைக் குறிக்கின்றன. இவர்கள் சோழர் அரசமைப்பில் செயலாளர்களாகவும், நாட்டுக் கண்காணிப்பாளர்களாகவும் கோயில் நிருவாகிகளாகவும் பணிபுரிந்து வந்தனர். சோழேந்திர சிங்க மூவேந்த வேளான், நெரியுடைச் சோழ மூவேந்த வேளான்உதயமார்த்தாண்ட மூவேந்த வேளான், வீர சோழ இருங்கோ வேளிர்கள், குலோத்துங்க மூவேந்த வேளான், பர கேசரி மூவேந்த வேளான், சோழன் மூவேந்த வேளான், இராசேந்திர சிங்க மூவேந்த வேளான், எனற பெயர்கள் படைத்த இருக்கு வேளிர்கள் பெரிய ஆட்சிப் பொறுப்புகளில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

(தமிழக வரவரறு மக்களும் பண்பாடும். பக்கம் 217) 


இருக்குவேள் மற்றும் இருங்கோவேள் சமூகத்தவர்கள் தங்களை வேளான் என்று சிறப்பாக அழைத்துக்கொண்டதால், அவர்கள் வேளாண் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பது உறுதியாகிறது. 

                                                                                            (தொடரும்)

No comments:

Post a Comment