Sunday, 29 January 2017

தேவேந்திர குல மள்ளர் வம்சத்து திருமண வாழ்த்துப் பாடல் (ஓலைச்சுவடி) - பகுதி - 3 - Pandyan Mallar

தேவேந்திர குல மள்ளர் வம்சத்தை சேர்ந்த கோதமங்கலத்து அரசக் குடும்பன் மகன் சின்னப்பாப்பான் குடும்பனின் திருமண நாளான விரோதிகிருது வருசம் தை மாதம் 23 – ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ( 20.1.1650)  அன்று எழுதப்பட்ட திருமண வாழ்த்துப்பாடல் 42 ஏடுகளை கொண்டது. முந்தைய பதிவில் ஏடு 1 முதல் 20  வரை கொடுக்கப்பட்டுள்ளது. இப்பதிவில் ஏடு 21 முதல் 30  வரை கொடுக்கப்பட்டுள்ளது.   இந்த ஓலைச்சுவடிகளை சேகரித்த தாராபுரம் வீராட்சிமங்கலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு மள்ளர் இலக்கியப் பேரவையின் தலைவர் இன்ஜினியர் திரு. கணபதிக் குடும்பனார் அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.


                                ஒலைச்சுவடி

                                           ஏடு - 21 

மெய்ப்பா ஆயிரம் பொன் விரக கொடுத்தருசீர்
இஸ்டமுடனே முகூர்த்த  ஈசபந்துக்காகுமென்று
அளவில்லா நற்புடவை அகலமுள்ள கோடி பணம்
முள ஆயிரம் போன்ற பொன் முன்னூறு கொண்டோடி வந்தான்
என்று அவள் கசிவக் கணமாய் சொன்னபின்பு
ஓடியதோர் கைக்கோளன் ஊற்றதெரு தனிலே
நாடியதோர் நற்புடவை நல்ல பணி சேலை தன்னை
அய்யாயிரம் பேர் கலந்துமே விலை மதிக்க
மங்கிலியக் கூரை மதிப்புடனே கொண்டு வந்தார்
வந்து நின்ற கைகோளன் மன்னவனைத் தான்தொழுது

                                        ஏடு - 22
                                  புடவை வகை

கோந்து செறி மார்பா குவலயத்தை ஆண்டவனே
விண்ணப்பமென நளவிரைய அடிபணிந்து
எண்ணப்படாத இசைந்ததொரு மாதிரி பார்
கூரை கொண்டு வந்தேன் நான் குவலயத்தை யாண்டவனே

சூடியதோர் கொற்றவனும் நெஞ்சக்களி கூர்ந்து
நாடியதோர் நற்புடவை நல்ல பணிசேலை தன்னை 
நனை ஓட்டிலே யொசித்த நற்புடவை யானாலும்
இன்னாளிலப் புடவை லட்சத்தில் கண்டதில்லை
மன்னர் பெருமாள் மனம் கிளந்து கொண்டாடி
என்னயிவர்க்கு குயினுக்கல் கொடுப்போமென்று
நல்லோர் பெரியோர் நல்குந்தகர் எல்லாம்.


                                    ஏடு - 23
                                   விருந்து

எல்லோருங்கூடியிருந்து அந்தக் நதக்காலமனத்தே
அன்னமதுவாக அமுது கரிசமைத்து வைத்து
மின்னுபுகழ் வேந்தன் வேண்டிக்கோள் வேண்டியதே
கைக்கோலன்கையிற் அக்கணந் தான் கொடுத்தான்
ஆடறுத்து சோறிடுவர் சுவசெயமுதுசெய்வர்.
கூட வந்த பேர்களுக்கு கூப்பிட்டுச் சோறிடுவார்
நல்லோரைத்தான் காத்து நல்முகூர்த்த வேலையிலே
எல்லோருந்தான் கூடி இருந்தார்கள் பந்தலின் கீழ்
அன்னமுதாக அன்பாக சாப்பிட்ட பின்
ஏழுதிரிய போசத் வர்க்கங்கள் கொண்டு வந்து
முளுகுவார் நீரிடுவார் முகந்தமது போகுமுன்னே .

                                ஏடு - 24
                           தாய்மாமன்

கடுசாய பிரமனுட கற்பித்தாரப்பொழுது
நேரிட்ட பந்தலின் கீழ் நேரிட்ட நாற்காலி
வேதாவுமுன்னே விதித்தபடி தப்பது
மாதாவுடன் பிறந்த மாமனார் வந்திருந்து
மாமனார் அப்போது மணிப்புடவையும் போற்றி
மாமன் திருக்கையால் மணிப் புடவையுங் கொடுத்தார்
அரச குமாரனையும் அழகுபோல் ஒப்பி வைத்தார்
விரையவே கொண்டு வந்து வேணுமென்று சொல்லியபின்
அப்போதே சென்று அர்ச்சுனரைத் தானழைத்து


                                 ஏடு - 25
                     மணமகன் அலங்காரம்

செப்பமுடதினிருத்தி சிறக்கவே ஒப்பி வைத்தார்
காதுக்கிசைந்த கவச குண்டலம் பூட்டி
மார்புக் கிசைந்த வயிர மணி மாலையிட்டு
சாந்து சவ்வாதுடனே சந்தனமும் கஸ்தூரி
சீருற்ற மேனி சிறக்கவே ஒப்பி வைத்தார்
குவலயமே சிறந்த சோகாந்தன வாலமுகத்தில்
தவலையோசி சிறந்த சந்தனமும் தான் பூசி
அன்பாலுகம் பூண்டு ஆபரணமுந்தரித்து
முத்து வண்ண சேநந்த முழு வயிர்தாவடமும்
சுந்தமரவே துலங்க அலங்கரித்தார்.


                              ஏடு - 26
                 மணமகன் மாலைகள்

தேவாங்குப் பட்டுடனே சிறக்க அலங்கரித்தார்
நாவாத வாலத்தி நன் முகத்தில் நாமமிட்டு
காலத்திலேயுதித்த கதிரொளி போலே சிறந்த
மாலைதனை வாங்கி வாள்வேந்தனென்ன சொல்வான்
வானவர்கள் கோமான் வரத்தில் வந்த மாலையிதோ
ஞானங்கலை சிறந்த நன் முனிவர் மாலையிதோ
கனறாலக்கினியெரிந்த ராவண்றான் தரித்த
நன்றாகவே புனைந்த நல்ல படமாலை யிதோ
பாலபோய மொழி பயின்ற பாவை வள்ளிமாலாக
நால்வேதனா நன்னருன் நல்கின்றமொழிபடியே


                                ஏடு - 27

சென்ற தினைப்புனத்தி சிற்றிடையாளை மணந்து
குன்றுருக வேல் விடுத்த குமரற்கு மாலையிதோ
வேதக்கின நேசன் விரும்புகின்ற மாலையிதோ
அன்னநாட்டிலுள்ள சுய வளசேர் தன்னாட்டில்
 மன்ன னருச்சுணர்க்கு வந்த திருமாலையிதோ
செந்தாமரை மார்பில் சேர்ந்த திருமாலையிதோ
கோந்தார குலமாது கொடுக்கின்ற மாலையிதோ
நன்றாய் அர்ச்சுனருக்கு நலமுந்த மாலையிட்டு
மீன் போல பிராணப் பையுள்ள மன்னருக்கு
மணக்கோலமெல்லாம் வகையாய் அலங்கரித்து


                                ஏடு - 28

இனக்கமான தோழிமாரெல்லோரும் பின்னேவர
இட்டபலகையின் மேல் எங்கோ இனிதிருக்க
சட்டமுடன் மணக்காலுக்கு தழுசை நிமித்தியங்கள்
ஆவின்பால் வார்த்து அந்தணர்கள் செய்த பின்பு
முன்கையில் நீர் வார்த்து மூவரடி தொழுது
கொட்டி குலவையிட்டு குரிப்பாய முகந்த மிட்டு
முளமோனது வீருக்கு நன்றாய் முடிப்பித்த நற்புடவை
சாஸ்த்திர விதிப்படியாய் சாலியங்கள் நெய்யெடுத்து
மாங்கிலியக் கூரை மாமனார் கொண்டு வந்தார்
மாமனார் கொண்டு வந்த மாங்கிலியக் கூரை தன்னை


                               ஏடு -29
            மாப்பிள்ளை பெண் வீடு செல்லுதல்.

வாங்கி மணவாளன் மாளிகையுள் புகுந்தான்
மாப்பிள்ளைக்குச் சகோதரியாள் மாங்கிலியங் கொண்டு வந்து
மங்கையர்க்கு பொன் பூட்ட மச்சியர்கள் வேணுமென்று
சீதனங்கள் வேனுதல் வாங்கிசைத்து நின்ற வேதியர்கள்
பட்டுப்புடவை பனிப்புடவையுங் கொடுத்து
உழவேறு பால் பசுவு ஓட்டி கொடுத்தனுப்பி
பொன் – பூட்டி போய் புதுமைதனைப் பாருமென்றான்

                             குடைகள்

முத்துக்குடையும் முழுவயிரத்தால் குடையும்
பச்சக் குடையும் பவளத்தால் வெண் குடையும்
வெள்ளக்குடையும்
வெற்றியுள்ள நற்குடமும்
இஷ்டமுனே இருபக்கஞ் சூழ்ந்து வர


                             ஏடு – 30
        டால்கள் குதிரைக் கொம்பு மேளம்

வண்ண டால் மகர டால் வளமாக சூழ்ந்து வர
சிங்கார டால் குடைகளை
சென்றே யிருபுறமும்
குதிரையணி வகுத்து கொம்புடனே சங்கூதி
சரிபல முன்னடக்க கனகநகர் தான் முழங்க
தாளமணியோசை தவுல் முரசதிர
கொம்பெட்டுத் திக்குமங்கு முருமென
இஸ்டதவிலோசை யெத்திசையும் நின்றதிர 
நன்றெனவே கூடி நல்லவர்களெல்லோரும்
சென்றுபுகுந்தார்கள் தேன்மொழியாள் வாசலிலே
காணிக்கை வைத்தொரு கன்னியரைக் காண்பதென்று
ஆணிக் கனகமப்போது வேணுமென்று


                                    (தொடரும்)

Thursday, 5 January 2017

தேவேந்திர குல மள்ளர் வம்சத்து திருமண வாழ்த்துப் பாடல் (ஓலைச்சுவடி) - பகுதி - 2 - Pandyan Mallar



தேவேந்திர குல மள்ளர் வம்சத்தை சேர்ந்த கோதமங்கலத்து அரசக் குடும்பன் மகன் சின்னப்பாப்பான் குடும்பனின் திருமண நாளான விரோதிகிருது வருசம் தை மாதம் 23 – ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ( 20.1.1650)  அன்று எழுதப்பட்ட திருமண வாழ்த்துப்பாடல் 42 ஏடுகளை கொண்டது. முதல் பதிவில் ஏடு 1 முதல் 10 வரை கொடுக்கப்பட்டுள்ளது. இப்பதிவில் ஏடு 11 முதல் 20 வரை கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த ஓலைச்சுவடிகளை சேகரித்த தாராபுரம் வீராட்சிமங்கலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு மள்ளர் இலக்கியப் பேரவையின் தலைவர் இன்ஜினியர் திரு. கணபதிக் குடும்பனார் அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.




                                ஒலைச்சுவடி



                                       ஏடு – 11

காரிய்யகாரர் தனந்தலர் பலர் கூடி
வநீதவந்த பால்க்குட் தளர்வாவதிவரைதெரிந்து 
மன்னவனூர் பால்குடங்கள் வந்தது தானென்று சொல்
சேர்ந்து சேர்ந்து குவலயத்தோர் தானறிய
மண்ணுலகு தின்புயர்கள் வரவிட்டாதாமெனவே
விண்ணப்பஞ் செய்தார்கள் வேந்தரவர் முன்பாக
வேந்தர் மொழியால் விடை வாங்கி மாந்தயனும்
கோந்துலவு திண்டியனே குவலயங்களாண்டவனே
சென்று பார் மன்னவனே தென்னவற்கு நாயகமே
சேற்ற நலரை வெல்லவிந்த சேனை படையத்தனையும்
மாற்ற நலரை வெல்லவகை யேதுமன்னவனே


                                      ஏடு - 12

வெற்றியுள்ள கோமான் விரையவ காத்து
உற்றகரும முறையாயுரையு மென்றார்
தொழுது நின்ற மாந்தயனே துய்ய கோமான்
பழுதுபடா அன்னமிது பண்புடைய மாந்தயனே
எழுதறியக்கால் மண காலிப் பொதுவேணுமென்று
தழுத வொன்னுக் கால் மனது கொண்டுவாருமென்று
சேர்ந்த புகழ் தன் மந்திரி வினாயைத்தான் கேட்டு
ஆர்க்குமுள்ள மாந்தயனு மப்போது தான் தொழுது
வாச்சியுலி யெடுத்து வலதோள் மீதில் வைத்து
தண்டா சாமி தெரிக்கமலை நடந்து


                              ஏடு - 13

            பந்தக்கால்களுக்கு மரம்

அண்டாதபேய்களும் ஓம் மலை கடந்து
அண்ணாமலை கடந்து அரனே துணையெனவே
அண்டரீகப்பூ முளையும் யெரசமலை கடந்து
அண்டரீகப்பூ முளையும் பொதிகைகளும் தான் கடந்து
விண்ணவர்கள் கொண்டாடும் வெள்ளிமலைதனிலே
சென்றவர்கள்யேறித் தெரிந்த மகாரம் பார்த்து
நாகத்தாலாகமுடன் நல்லமரந்தனையும்
வேசக்கோட்டான் வன்னிமின்னான வேம்புகளும்
ஆடகத்தி தோடகத்தி அனபனத்தி மஞ்சனத்தி
காடகத்தி வன்னிக்கு நவ வால தேக்குப்புன்னை


                                ஏடு - 14

வாச்சி பனிச்சி பனைதாவகி வாகையுடன்
காட்சி கிளாயுங்கனி சிறந்த மாதுளையும்
பூவரசு பூங்குடி விளமுருங்கை போய்யாடை
நாவரட்சி தாவரட்சி நல்லமலையிரட்சி
அத்தியோடு பருத்தி அய்யனி வண்டானைக்ளும்
பத்தியுடன் பூத்த பலாமரமும் (பாசிரையும்) பாகிரையும்
அத்துடனே புங்கும் அய்யணக்குருத்துப்புளி,
வேதுடனேயாலும் விளாத்தி மலையாத்திகளும்
பச்ச மருது பாலக்கடுக்காய் பல நெல்லி ,
உச்ச மரவே ஓங்கி உயிர் சிரந்தர்


                           ஏடு -15.

மூங்கிலுட னுங்கு முருக்கு கடம்புடனே
கூகை குருக்ககத்தி கொங்குபுன்னை வேங்கையுடன்
வாகாயவளந் தெழுந்த வலுந்திரத்திலுடன் புகுந்து
ஆகாமரங்களெல்லா மாகாதெனக் கழித்து
தேக்கு மகிலும் சேந்த நல்ல சந்தனமும்
வாக்குடனே வெட்டி வண்டி தனிலேற்றி 
தாக்குடனே கொண்டு வந்து சாந்தினுந் வாசலிலே
சேதகி செதுக்கி நல்ல சித்திரங்கள் தானெழுதி
வண்ண வண்ணத் தூண்களெல்லாம் வகை வகையாய்தானறிந்து
மின்னல் ஒளிபோலே விசுபலகை தான் சேர்த்தி
சந்தனக் கால் தன்னை தீக்குருந்த தூண்நிறுத்தி


                                 ஏடு – 16

           பந்தலுக்குப் பட்டுக் கட்டுதல்

சிந்தையுடன் நன்றாக செப்பமுள்ள பந்தலுக்கு
மேவக்கட்டி கட்டி விதினுள்ளதைப் பாடுமென்பர்
சாந்ததப்பூ சேலையும் கடுவாய் நிறமுடனே
நீல நிறக்கம்பி நீறம்பல சித்தாடை - -
சுயமதோன்னினமாலை யருமணிச் சட்ட முதல்
பஞ்சவர்ணப்பட்டு பகைத்த பருவி சிம்பன்
பஞ்சவர்ண குனருத மாத்தூர் மருதவல்லி
கிளி வண்ணச் சேலை கேருடன் பட்டு மிளகு மணி
ஒளி வண்ண குனருத ஒவ  குமுகத்துப் பழியன்
அருகே யிருக்குமந்த ஆன உதயருமன்


                                      ஏடு - 7

ஓங்கு புகழ் விந்திரவண்ண  உத்திரநிலமுடன்
சூரிய காந்தப்பட்டு துலங்குவுயர் பணியும்
குங்குமப்பூ பட்டுடனே கோலப்பரிசையுடன்
பந்தயங்கள் சேர்ந்த நல்ல பாவுநிறப்பட்டுடனே
சேந்தமலையன் சண்டாரசி செனபரிவட்டமுடன்
சுவரங்குமாணிக்கமழித்தியதே தார் சல்லாரி
சீனக்கருப்பு சிகப்பு சீரோடு தேவாங்கி
தேவாங்கிப்பட்டுடனே சேனை வகை பரிவட்டம்
முத்துக்குடை விரித்து முக்காத பந்தலிட்டு
சுத்தமுமாகவே இல்லங்கள் அலங்களித்து


                            ஏடு - 18

தட்டானிடம் நகை செய்யப் பணிதல்

தட்டானை அங்கே தானழைத்து வாருமென்றார்
இஷ்டமுடன் தர்ம ரியன்றன்மொழி கேட்டு
ஓடினானோடி யொரு நொடியிலப்போது
இனஞ்சேர்ந்த மாந்தை யநேகர் எல்லோருங் கைகுவித்து
தனஞ்செயனார் தேவி அழகு தாலி பண்ணிவாருமென்றார்
வாளத் திதியிது சரத்தால் மதிசேனையைத் தான் தொழுதாள்
பால் பொன் வெட்டி படியெடுத்துத் தான் கொடுத்தார்
கொடுத்த தொருபொன் தனை கொண்டோடி தட்டானும்
எடுத்துக் கால் நீட்டி யினிதான தட்டானும்
தட்டானு மன்னனை யவன்மைந்தனை தொழுதான்.


                                   ஏடு - 19
                            நகை வகைகள்

வெட்டென தான் நடந்து மீண்டவனுந்தான் போனான்
போனவொருதட்டானும் புகுந்துபோன கூடத்துள் புகுந்து
மன்னவனார் தங்கையருக்கு மேய்பாக பொன் சமைத்து
காலுக் கிசைந்த தண்டை கைகளுக்கு மோதிரமும்
மேலுக்கிடும் பதக்கம் மிக்க வெள்ளித் தண்டையுடன்
காரை பலதுடனே கல் பதித்த கொப்பு முத்து
குறைவில்லா நவமணிகள் சேர்த்து சங்கிலியும்
பாரமுடன் நல்ல பதைக்கமுஞ் சவுடிகளும்
வீரமுள்ள பொற்சிலம்பு மிக்க வெள்ளித் தண்டையுடன்
உச்சந்திரு முகந்த திருத்தாலிகளும்


                                    ஏடு - 20

வச்சிரமணி சகல பதித்த வாகான மோதிரமும்
நவரத்தினம் பதித்த நல்லதிருத் தாலிகளும்
பொன்னாலேயுள்ள பொற் பணிகள் உள்ளதெல்லாம்
வண்ண வண்ணப் பணிகளெல்லாம் வகைவகையாய் தன் சமைத்து
கொண்டு வந்து தட்டானும் கோலச் சிறப்புடனே
மண்டலத் தோருமே வியக்க வரிசையுமே கொடுத்தார்
உண்டிருக்கச் சோறு முதல் உள்ள கூலியும் கொடுத்தார்


கைகோளரிடம் கூரைச் சேலை நெய்யப் பணித்தல்

மாங்கிலியக் கூரை மதிப்புடனே வேணுமென்று
இந்த நல்ல லோகத்திலிருக்குஞ் சபை தனிலே
கைக்கோளன் கூரை அளந்து காணிக்கை அட்சாரம்

                                                         (தொடரும்)


Sunday, 1 January 2017

தேவேந்திர குல மள்ளர் வம்சத்து திருமண வாழ்த்துப் பாடல் (ஓலைச்சுவடி) - பகுதி - 1 - Pandyan Mallar




தமிழகத்தில் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குடும்பர் எனும் தேவேந்திர குல மள்ளர் சமூகத்தில் நடந்த ஒரு திருமண விழா பற்றிய சான்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சிறப்புடன் வாழ்ந்த வேந்தர் மரபினரை இன்று சிலர் தலித் என்றும் தாழ்த்தப்பட்டவர் என்றும் கூறியும், எழுதியும் வருவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இச் சான்றுகளை பார்த்த பின்பாவது தங்களுடை நிலைப்பாட்டை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  குறிப்பாக தேவேந்திர குல மள்ளர் சமூகத்தவர்கள் தன் முன்னோர்கள் இந்நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய  வேந்தர் மரபினர் என்பதை மணதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அரசியல் பிழைப்புக்காக மள்ளர் சமூகத்தவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்றும், தலித் என்றும் யார் கூறினாலும் நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். நம் சமூக அடையாளங்களை மறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள், நம் சமூகத்தின் முன்னேற்றத்திற்க்கு தடையான சொற்களை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள், குலத்தொழில், உணவு பலக்கவழக்கங்கள் போன்றவற்றில் நம் சமூகத்துடன் முற்றிலும் வேறுபட்ட சமூகங்களை நம் சமூகத்துடன் இனைத்து பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஒதுக்கிவைப்போம் என ஆங்கில வறுட புத்தாண்டு தின தீர்மாணமாக வேந்தர் மரபினரான  தேவேந்திர குல மள்ளர்  சமூகத்தவர்கள் சூழுரைப்போம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தேவேந்திர குல மள்ளர் வம்சத்து திருமண வாழ்த்துப் பாடல் (ஓலைச்சுவடி) - பகுதி - 1

மணமகன் கோதமங்கலத்து அரசக்குடும்பன் மகன் சின்னபாப்பான் குடும்பன்

பனை ஓலையில் எழுதப்பட்டுள்ள இந்த தேவேந்திர வம்சத்தார் மங்கல திருமண வாழ்த்து 300 – 350 ஆண்டுகளுக்கு முன் கோதமங்கலத்து அரசக் குடும்பன் மகன் சின்னப்பாப்பான் குடும்பனின் திருமண நாளான விரோதிகிருது வருசம் தை மாதம் 23 –ம் தேதி ஞாயிற்றுக்கிழமை புணர்பூச நட்சத்திரத்தில் கோதமங்கலத்தில் இருக்கும் அரச குடும்பன் மகன் சின்னப்பாப்பான் கல்யாண வாழ்த்தில் பாடப்பட்டது என்று குறிக்கப்பட்டுள்ளது. இந்தப் பஞ்சாங்கக் குறிப்பை வைத்துக் கொண்டு இதன் சரியான ஆங்கில ஆண்டைக் கண்டுபிடிக்க முடியும் (கி.பி. 20.1.1650)

இந்த ஓலைச் சுவடி மூல ஓலைச்சுவடியிலிருந்து பழனியைச் சேர்ந்த கருப்பண சாம்பான் மகன் தவசிமுத்து வாத்தியாரால் படி எடுக்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாழ்த்தைப் பாடியது தாராபுரம் தாலுகா பொன்னிவாடியில் இருக்கும் சின்ன வீரக்குடும்பன் மகன் உடச்சிக் குடும்பன் என்றும் இந்த ஏடு அவருக்குச் சொந்தமானது என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது இந்த ஓலைச்சுவடியைப் பெற்று பெயர்த்து எழுதி அனுப்பியவர் தாராபுரம் வீராட்சிமங்கலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு மள்ளர் இலக்கியப் பேரவையின் தலைவர் இன்ஜினியர் திரு. கணபதிக் குடும்பனார் ஆகும்.

தேவேந்திரக் குடும்பனார்கள் திருமண விழாவில் பாடப்படும் இப்பாடல் அவர்களின் சிறப்புகளையும் விருதுகளையும் கொடிகளையும் கூறுகிறது.

பதினெட்டாயுதம் தரித்தல், பதினாறு மேளங்களை முழங்குதல், யானை மற்றும் குதிரைமேல் மண ஊர்வலம் வருதல் முதலியனவும், விருந்துக்கு பயன்படுத்தப்படும் நெல்லு வகைகளும் கூறப்பட்டுள்ளன.

பழனிச் செப்புப்பட்டையம், காமாட்சியம்மன் கோயில் செப்புப்பட்டயம், சிவகங்கை குடும்பர்கள் செப்பேடு, நல்லூர்ச் செப்புப்பட்டயம் ஆகிய செப்புப்பட்டயங்களும், சங்கர நயினார் கோயில் கல்வெட்டுகள் இந்த சிறப்புகளையும் விருதுகளையும் தேவேந்திரக் குடும்பர்களுக்கு உரியதாகக் கூறுகிறது.

இந்த ஓலைச் சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ள திருமணச் சடங்குகள் வருமாறு:

1. கடவுள் வாழ்த்து
2. திருமண வீட்டாரை வாழ்த்துதல்
3. வேதியர் பல சோதிட நூல்களையும் படித்து முகூர்த்தம் பார்த்தல்,
4. திருமண பொருத்தம் பார்த்தல்
5. திருமணவிருந்துக்கு நெல்வகைகளைக் கூறி அத்தனை அரிசையும் கொண்டு வருதல்
6. பால், தயிர்,காய்கறி,பழம்,சர்க்கரை முதலியன கொண்டு வருதல்
7. மந்திரி பிரதானிகள் திருமண நிகழ்வுகளை பார்வையிடுதல்
8. பந்தல்கால்களுக்கு மரம் கொண்டு வருதல்
9. பந்தல்கால்களுக்கு பட்டுச் சுற்றுதல்
10. தட்டானிடம் நகை செய்யப் பொன் கொடுத்தல்
11. நகை வகைகள்
12. கைக்கோளனிடம் கூரைச்சேலை மற்றும் இதர சேலைகள் கொண்டு வரப் பணித்தல்,
13. சேலை வகைகள்
14. தாய்மாமன் மணமகனுக்குப் பட்டுக் கொடுத்தல்
15. மணமகன் அலங்காரம், மாலைகள், மணமகள் அலங்காரம்,
16. குடைகள், டால்கள், குதிரை அணி, கொம்பு மேளங்கள் முழங்க மணமகன் மணமகள் இல்லத்திற்கு ஊர்வலமாகச் செல்லுதல்
17. மணம்கன் வரவேற்பு
18. மலர்தூவி ஆலாத்தி எடுத்தல்,
19. திருமணம், மஞ்சல் நீராடுதல்
20. மணமக்கள் ஊர்வலச் சிறப்பு, சீதனங்கள்
முதலியன கூறி இறுதியில் தமிழ் மொழி மற்றும் இந்திரன் முதலிய தெய்வங்களை வாழ்த்தி வாழி கூறப்படுகிறது.



                                   ஒலைச்சுவடி



                                            ஏடு – 1

தேவேந்திர சாதியார் தேவேந்திர குடும்பர்கள் 
கல்யாண மங்கல, மங்கள் வாழ்த்து எழுதத்துடங்கியது 
பாலதெண்டாயுதபாணி துணை குமரகுருபரன்
முன்னின்று லெட்சிக்கவும்.



                             கடவுள் வாழ்த்து

ஹரி ஓம் நன்றாள்க குருவாழ்க குருவேதுணை
ஓம் சமேதரராக எழுந்திருந்து ஓம் நமச்சிவாயவென்று
உன்னை நினைந்திடுவேன், அம்மா உனக்கு மகன்
அய்யாவு னக்கடிமை என் மேல் வினையும் இனிவார்
காலனையும் முன்னோடி வந்து முழுதுமெனைக் காத்தருளாய்
கடலை பாசிப்பயிறு கற்கண்டு எள் பெரியும் விடலை
கரும்பு இளநி வேண்டியது நான் தருவேன்
குடவயிறே இக்கதையை எழுத நின்று காத்தருள்வாய்
கொம்பெரடிந்து பாரதத்தை குடைந்துமீதெழுந்து
கம்பமத கரியே கற்பகமே காத்தருள்வாய்
சம்போ நற்செஞ்சடையன் பெற்ற மதகளிரே
நம்பித் துணையே தனியான கற்பகமே


                                    ஏடு - 2

நம்பித் தொழுதிடுவேன் நாள்தோறும் உன் பாதம்
தும்பிக்கையானே துவனமொன்றும் வாராமல்
மங்கள வாழ்த்து மனை வாழ்த்து வாழ்த்துகிறேன்
சேவகமலைமாது சீர் மாதுந்தான்வழி
அங்கையர்கண் மாது அருள் மாதுந்தான் வாழி
பார் மாது வாழி பன்னுல கோ தான் வழி,

   திருமண வீட்டாரை வாழ்த்துதல்

பூ மாதுபோலே, புவிதலிலே வாழ்ந்திருப்பீர்
நான் வாழ்த்தும் நல்வாழ்த்தும் நன்மை பல உண்டாவீர்
செல்வந்தழைத்திடுவீர், சீதேவிநல்கிடுவீர்
நன்மை பவுசு பெற்று நாள்தோறும் உன் பாதம்
அத்தமும் பொன்னும் ஆடைகளுமுண்டாவீர்.


                                    ஏடு - 3

புத்திராதி பெற்றெடுத்து புண்ணிய முண்டாவீர்
கல்யாணங் கல்யாணம் காரிக்கைக்கு கல்யாணம்
கல்யாணம் செய்கிற மைந்தனையும் பாருமென்றார்
அல்லி யரசியரை அர்ச்சுணர்க்குக் கொள்ளவென்று
மங்கையருக்கு நல்முகூர்த்தம் வந்து காணென்று சொல்லி




      வேதியர் முகூர்த்தம் பார்த்தல்

வாசிக்கும் வேதியரை வரவழைக்க வேணுமென்றார்
சொல்லிவிட்ட நாளிகையில் தூதர் போய் வேதியர் முன்
அருளிப்பாடென்று சொல்லி அன்பதுந்தான் கூடி
நல்ல நல்ல மாமறை நூல் நால்மறையோன் எடுத்து
சுகவல திருமறையும் மார்க்கமுள்ள சாஸ்திரமும்

                                   ஏடு -4

சரநூல் மரண கண்டிதப் பாத பஞ்சப்பட்சி
உரைநூல் உரைத்த கதை யோக நூல் தன்னுடனே
ஏடும் எழுத்தாணியுடன் இசைந்த நூல் தன்னுடனே
தேடி எடுத்து தெரிந்து சிவநூலை
ஆதிமறையோர்கள் அருள் சாதகம் புரிய
பூமிமெழுகி புரந்தரர்கள் சூழ்ந்து வர
சரநூல் வேதியர்கள் சாணம் பிடித்து வைத்து
தாளுந்த செஞ்சடையன் தன் மகனை முன் நிறுத்தி
வாளவித்து யாக விநாயகனைத்தான் தொழுது
வள்ளரால் மகளை மகன் முன்னே வைத்தவர்கள்

(வள்ளல் மகன் என்பது தேவேந்திரரைக் குறிக்கும் - பார்க்க பழனிப் பட்டயம் )

                              ஏடு - 5

எள்ளும் பொரியும் இன்பக் கடலையும்
தெள்ளு தினைமாவும் தேன்பாகுஞ் சர்க்கரையும்
வெற்றிலையும் பாக்கும் மிகவே எடுத்து வைத்து
அப்பம் இளநீர் திராட்சை பலாச்சுலையும்
ஒப்பிரவு செய்து உபசரித்து நினைந்த பின்
அஸ்டாச்சரமுமான முறைமையினால்
விஷ்ணுவைப்போலே விளங்கிடு சாத்திரங்கள்
பேறும் பேறு நான்கும் பெண் பிறந்த மென்நூலும்
வாழும் படியாக வகை வகையாய் தானுரைத்தார்
சுலகு அரைத்தான் அதின் பிர்மம் தானுரைத்தான்


                               ஏடு 6
           திருமணப் பொருத்தம்

சென்று பொருத்தங்கள் லக்கினப் பொருத்தம் கன்னியருக்கு
வாக்குப் பொருத்தம் மனப்பொருத்தம் கன்னியற்கு
குடும்பப் பொருத்தம் குணப்பொருத்தம் கன்னியருக்கு
நாலு பொருத்தம் வேணுமிந்த கன்னியருக்கு
சேலைப் பொருத்தம் மந்திர மிந்தக் கன்னியற்கு
தாலிப் பொருத்தம் தாழைக்குமிந்த கன்னியருக்கு
இந்தப் பொருத்தமெல்லாமே இருக்குமிந்த கன்னியருக்கு
கும்ப முகூர்த்தங்கூடின நாளையிலே
ஏழாங்கிழமையிலே யினிநாங்குத் திங்களிலே

 நாளாகுமென்று சொல்லி நான் மறையோன் கூறியதை

                                    ஏடு - 7

   திருமண விருந்துக்கு - நெல் வகைகள்

கோடாமலேயுழுது கூறிய மிதைத்தான் - பூ
வாடாமலே விளையு மங்காமலே தாத்தானும்
படசைப் பெருமாளவன். மூங்கிநெல்லரிசி
சம்பாளை செம்பாளை ஆன குலவாளை
செம்பாளை செந்தாளை சிறுவேளை நெல்லுடனே
குங்கும சம்பா குணமாரி தன்னுடனே
மோட்டச்ச குருவை முங்கமுள்ள மட்ட வெள்ளை,
வளந்தரத் தனக்கு மல்லிகைச் சம்பாவுடனே
பாலே விறுத்தந் தனக்கு பாலக் கடுங்காய் நெல்லுடனே


                                         ஏடு - 8

சுகந்தால விதுந்த (9க்கு) சொக்கன சம்பா நெல்லுடனே
மீனவர்களுண்ணும் மிகுந்த தோருச வெள்ளை
ஆதிகுல வாளை ஆனமணவாநி
காடை கழுத்தான் கனத்த மிளகுச் சம்பா
ஒடைதனிலே விளையும் உயர்ந்த குல வாளை
சத்தூலிச் சம்பா கனத்தகுருவைக் கிணையாக
நச்சரத் தூரமான தொருநல நல்ல மனவாகி
உரை நெல்லுச் சம்பா (21த செ) மூக்கனுடன்
வஞ்சமில்லாமல் பிரித்து வாலரிசிக் கிருவியுடன்
(குறிப்பு: 21 த செ. என்பது அடிக்கப்பட்டுள்ளது அது தேவையில்லை )

                                  ஏடு - 9

கல்லுப்பெரு வாரியுடன் சைலச் சிவதாரியுடன்
பேருசொல்லா முண்டான் பெருமூக்கன் நெல்லுடனே
பெரிய நெடுங்காலி பெருவெள்ளை நெல்லுடனே
சூதுமரியாத சுருனைவேறு வெள்ளையுடன்
சாதிக்கருங்காலி சம பண சால் நெல்லரிசி
பேரும் பெருந்தாளை பின்னரில மூக்கனுடன்
சுந்தமலையிலுள்ள ஆன தினையரிசி
வந்தவங்க ளுண்ணும் வரக்கரிசி தன்னுடனே
நெல்லரிசி அத்தனையும் நெருமூச்சிந்த பின்பு
அரிசிப் பொதிகளை வரவர கொடுவார்கள்.

                                    ஏடு - 10
                              காய் கனிகள்

நல்லாவின் பால் தயிறும் நலமுடனே கொடுவார்
ஒடிமரையும் முழுக் கலையும் புலிவாயும்
வெத்திலை கற்பூரம் விரையக்கொடுவார்
ஆடை கொடுவார் ஆடைசீர் கொடுவர்
சாடுவிர் சுற்றிதாரங்கள் கொண்டு வருவரும்
தேங்காய் விளாங்காய் தேர்ந்ததொரு மாதுளங்காய்
தென்னை கதளிகளும் தேன் கரும்புச் சக்கரையும்
ஆவின் பால் தயிர் நெய் அவதவரே கொண்டு வர
தேசத்துள்ள சிரமடி வந்து தென்று சொல்லி
வாசப் பிரதானியர்களும் மந்திரியார் தான் கூடி

                                                                                               (தொடரும்)