தேவேந்திர குல மள்ளர் வம்சத்தை சேர்ந்த கோதமங்கலத்து அரசக் குடும்பன் மகன்
சின்னப்பாப்பான் குடும்பனின் திருமண
நாளான விரோதிகிருது வருசம் தை மாதம் 23 – ம் தேதி
ஞாயிற்றுக்கிழமை ( 20.1.1650) அன்று
எழுதப்பட்ட திருமண வாழ்த்துப்பாடல் 42 ஏடுகளை கொண்டது. முதல் பதிவில் ஏடு 1 முதல் 10 வரை கொடுக்கப்பட்டுள்ளது. இப்பதிவில் ஏடு 11
முதல் 20 வரை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஓலைச்சுவடிகளை சேகரித்த தாராபுரம் வீராட்சிமங்கலத்தைச்
சேர்ந்த தமிழ்நாடு மள்ளர் இலக்கியப் பேரவையின் தலைவர் இன்ஜினியர் திரு. கணபதிக்
குடும்பனார் அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
ஒலைச்சுவடி
ஏடு – 11
காரிய்யகாரர் தனந்தலர் பலர் கூடி
வநீதவந்த பால்க்குட் தளர்வாவதிவரைதெரிந்து
மன்னவனூர் பால்குடங்கள் வந்தது தானென்று சொல்
சேர்ந்து சேர்ந்து குவலயத்தோர் தானறிய
மண்ணுலகு தின்புயர்கள் வரவிட்டாதாமெனவே
விண்ணப்பஞ் செய்தார்கள் வேந்தரவர் முன்பாக
வேந்தர் மொழியால் விடை வாங்கி மாந்தயனும்
கோந்துலவு திண்டியனே குவலயங்களாண்டவனே
சென்று பார் மன்னவனே தென்னவற்கு நாயகமே
சேற்ற நலரை வெல்லவிந்த சேனை படையத்தனையும்
மாற்ற நலரை வெல்லவகை யேதுமன்னவனே
ஏடு - 12
வெற்றியுள்ள கோமான் விரையவ காத்து
உற்றகரும முறையாயுரையு மென்றார்
தொழுது நின்ற மாந்தயனே துய்ய கோமான்
பழுதுபடா அன்னமிது பண்புடைய மாந்தயனே
எழுதறியக்கால் மண காலிப் பொதுவேணுமென்று
தழுத வொன்னுக் கால் மனது கொண்டுவாருமென்று
சேர்ந்த புகழ் தன் மந்திரி வினாயைத்தான் கேட்டு
ஆர்க்குமுள்ள மாந்தயனு மப்போது தான் தொழுது
வாச்சியுலி யெடுத்து வலதோள் மீதில் வைத்து
தண்டா சாமி தெரிக்கமலை நடந்து
ஏடு - 13
பந்தக்கால்களுக்கு மரம்
அண்டாதபேய்களும் ஓம் மலை கடந்து
அண்ணாமலை கடந்து அரனே துணையெனவே
அண்டரீகப்பூ முளையும் யெரசமலை கடந்து
அண்டரீகப்பூ முளையும் பொதிகைகளும் தான் கடந்து
விண்ணவர்கள் கொண்டாடும் வெள்ளிமலைதனிலே
சென்றவர்கள்யேறித் தெரிந்த மகாரம் பார்த்து
நாகத்தாலாகமுடன் நல்லமரந்தனையும்
வேசக்கோட்டான் வன்னிமின்னான வேம்புகளும்
ஆடகத்தி தோடகத்தி அனபனத்தி மஞ்சனத்தி
காடகத்தி வன்னிக்கு நவ வால தேக்குப்புன்னை
ஏடு - 14
வாச்சி பனிச்சி பனைதாவகி வாகையுடன்
காட்சி கிளாயுங்கனி சிறந்த மாதுளையும்
பூவரசு பூங்குடி விளமுருங்கை போய்யாடை
நாவரட்சி தாவரட்சி நல்லமலையிரட்சி
அத்தியோடு பருத்தி அய்யனி வண்டானைக்ளும்
பத்தியுடன் பூத்த பலாமரமும் (பாசிரையும்) பாகிரையும்
அத்துடனே புங்கும் அய்யணக்குருத்துப்புளி,
வேதுடனேயாலும் விளாத்தி மலையாத்திகளும்
பச்ச மருது பாலக்கடுக்காய் பல நெல்லி ,
உச்ச மரவே ஓங்கி உயிர் சிரந்தர்
ஏடு -15.
மூங்கிலுட னுங்கு முருக்கு கடம்புடனே
கூகை குருக்ககத்தி கொங்குபுன்னை வேங்கையுடன்
வாகாயவளந் தெழுந்த வலுந்திரத்திலுடன் புகுந்து
ஆகாமரங்களெல்லா மாகாதெனக் கழித்து
தேக்கு மகிலும் சேந்த நல்ல சந்தனமும்
வாக்குடனே வெட்டி வண்டி தனிலேற்றி
தாக்குடனே கொண்டு வந்து சாந்தினுந் வாசலிலே
சேதகி செதுக்கி நல்ல சித்திரங்கள் தானெழுதி
வண்ண வண்ணத் தூண்களெல்லாம் வகை வகையாய்தானறிந்து
மின்னல் ஒளிபோலே விசுபலகை தான் சேர்த்தி
சந்தனக் கால் தன்னை தீக்குருந்த தூண்நிறுத்தி
ஏடு – 16
பந்தலுக்குப் பட்டுக் கட்டுதல்
சிந்தையுடன் நன்றாக செப்பமுள்ள பந்தலுக்கு
மேவக்கட்டி கட்டி விதினுள்ளதைப் பாடுமென்பர்
சாந்ததப்பூ சேலையும் கடுவாய் நிறமுடனே
நீல நிறக்கம்பி நீறம்பல சித்தாடை - -
சுயமதோன்னினமாலை யருமணிச் சட்ட முதல்
பஞ்சவர்ணப்பட்டு பகைத்த பருவி சிம்பன்
பஞ்சவர்ண குனருத மாத்தூர் மருதவல்லி
கிளி வண்ணச் சேலை கேருடன் பட்டு மிளகு மணி
ஒளி வண்ண குனருத ஒவ
குமுகத்துப் பழியன்
அருகே யிருக்குமந்த ஆன உதயருமன்
ஏடு - 7
ஓங்கு புகழ் விந்திரவண்ண
உத்திரநிலமுடன்
சூரிய காந்தப்பட்டு துலங்குவுயர் பணியும்
குங்குமப்பூ பட்டுடனே கோலப்பரிசையுடன்
பந்தயங்கள் சேர்ந்த நல்ல பாவுநிறப்பட்டுடனே
சேந்தமலையன் சண்டாரசி செனபரிவட்டமுடன்
சுவரங்குமாணிக்கமழித்தியதே தார் சல்லாரி
சீனக்கருப்பு சிகப்பு சீரோடு தேவாங்கி
தேவாங்கிப்பட்டுடனே சேனை வகை பரிவட்டம்
முத்துக்குடை விரித்து முக்காத பந்தலிட்டு
சுத்தமுமாகவே இல்லங்கள் அலங்களித்து
ஏடு - 18
தட்டானிடம் நகை செய்யப் பணிதல்
தட்டானை அங்கே தானழைத்து வாருமென்றார்
இஷ்டமுடன் தர்ம ரியன்றன்மொழி கேட்டு
ஓடினானோடி யொரு நொடியிலப்போது
இனஞ்சேர்ந்த மாந்தை யநேகர் எல்லோருங் கைகுவித்து
தனஞ்செயனார் தேவி அழகு தாலி பண்ணிவாருமென்றார்
வாளத் திதியிது சரத்தால் மதிசேனையைத் தான் தொழுதாள்
பால் பொன் வெட்டி படியெடுத்துத் தான் கொடுத்தார்
கொடுத்த தொருபொன் தனை கொண்டோடி தட்டானும்
எடுத்துக் கால் நீட்டி யினிதான தட்டானும்
தட்டானு மன்னனை யவன்மைந்தனை தொழுதான்.
ஏடு - 19
நகை வகைகள்
வெட்டென தான் நடந்து மீண்டவனுந்தான் போனான்
போனவொருதட்டானும் புகுந்துபோன கூடத்துள் புகுந்து
மன்னவனார் தங்கையருக்கு மேய்பாக பொன் சமைத்து
காலுக் கிசைந்த தண்டை கைகளுக்கு மோதிரமும்
மேலுக்கிடும் பதக்கம் மிக்க வெள்ளித் தண்டையுடன்
காரை பலதுடனே கல் பதித்த கொப்பு முத்து
குறைவில்லா நவமணிகள் சேர்த்து சங்கிலியும்
பாரமுடன் நல்ல பதைக்கமுஞ் சவுடிகளும்
வீரமுள்ள பொற்சிலம்பு மிக்க வெள்ளித் தண்டையுடன்
உச்சந்திரு முகந்த திருத்தாலிகளும்
ஏடு - 20
வச்சிரமணி சகல பதித்த வாகான மோதிரமும்
நவரத்தினம் பதித்த நல்லதிருத் தாலிகளும்
பொன்னாலேயுள்ள பொற் பணிகள் உள்ளதெல்லாம்
வண்ண வண்ணப் பணிகளெல்லாம் வகைவகையாய் தன் சமைத்து
கொண்டு வந்து தட்டானும் கோலச் சிறப்புடனே
மண்டலத் தோருமே வியக்க வரிசையுமே கொடுத்தார்
உண்டிருக்கச் சோறு முதல் உள்ள கூலியும் கொடுத்தார்
கைகோளரிடம் கூரைச் சேலை
நெய்யப் பணித்தல்
மாங்கிலியக் கூரை மதிப்புடனே வேணுமென்று
இந்த நல்ல லோகத்திலிருக்குஞ் சபை தனிலே
கைக்கோளன் கூரை அளந்து காணிக்கை அட்சாரம்
(தொடரும்)
No comments:
Post a Comment