Friday, 17 March 2017

க்ஷத்திரியர் என்பது ஒரு ஜாதியா? பகுதி - 1 - Pandyan Mallar



சில வருடங்களுக்கு முன் ஒரு சில சமூகத்தவர் தேவர் என்பது எங்களுடைய ஜாதியின் பெயர், அப்பெயரை மூவேந்தர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். ஆதலால் நாங்கள்தான் மூவேந்தர்களின் வாரிசுகள் என உரிமை கோரி வந்தனர். அது தவறு என்றும், அப்பட்டம் இந்தியாவில் பல சமூகத்தவர்கள் மூவேந்தர் ஆட்சிக்காலதிலேயே பயன்படுத்தியுள்ளனர் என்பதற்கான சான்றுகள் நிறுபிக்கப்பட்டன. அதன்பின் தாங்கள் எதை காட்டுவது என தெரியாமல் தங்களுடைய உண்மையான வரலாற்றை தேடிக்கொண்டுள்ளனர்.

அதேபோல் இன்று ஒரு சமூகத்தவர் க்ஷத்திரியர் என்ற ஜாதி எங்களுக்கு உண்டு. ஆதலால், மூவேந்தர்களுக்கு நாங்கள் மட்டுமே உரிமைகோரமுடியும் என கூறி வருகின்றனர். இது தவறான புரிதல் என்றும், மூவேந்தர் ஆட்சிக்காலத்தில் சத்திரியர் என்பது ஒரு ஜாதியாகப் கருதப்படவில்லை என்பதை நாம் பல முறை நிரூபித்துள்ளோம். இதை மறுப்பவர்கள் அதற்கான சான்றுகளை கொடுக்கவேண்டும். அதைவிடுத்து பழைய பல்லவியை திரும்ப, திரும்ப பாடக்கூடாது.


க்ஷத்திரியர் என்பது ஒரு பட்டமே! அது ஒரு குலமாக தமிழகத்தில் அக்காலத்தில் வழக்கில் இல்லை. அப்பட்டத்தை பல சமூதாயத்தவர்களும் பயன்படுத்தியுள்ளனர் என்பதற்க்கு பல சான்றுகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் சிறு பிள்ளைத்தனமாக சோழர்கள் க்ஷத்திரிய குலத்தவர் என மீண்டும், மீண்டும் கூறுவது வேடிக்கையாக உள்ளது. சோழர்கள் மட்டும் அல்ல இந்தியாவில் உள்ள பல மன்னர்கள் தங்களை க்ஷத்திரியர் (போர் வீரன்) என்று கூறிக்கொண்டனர். அவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தவர்கள் இல்லை என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.  சோழர் சமுதாயம் என்ற நூலை வெளியிட்ட தொல்லியல் துறை க்ஷத்திரியர் என்ற குலத்தில்தான் சோழர்கள் பிறந்தார்கள் என்று குறிப்பிடவில்லை. மேலும், அக்காலத்தில் வேளாண் சமுதாயம்தான் மிக உயர்ந்த நிலையில் இருந்தது என்று மிக தெளிவாக குறிப்பிடுகிறது.

“இவ்வூர் ஊர்த் தண்டல் நெற்குன்றமுடையார் திரு நட்டப்பெருமானான தென்னவன் மூவேந்த வேளார்” என்பதால் வேளாளரே நிர்வாகத்தின் சிறிய பெரிய பதவிகள் அனைத்திலும் இடம் பெற்றிருந்தனர் எனத் தெரிகிறது.

(சொ. சாந்தலிங்கம் – சோழர் சமுதாயம் பக். 28 - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,)


மூவேந்தர் ஆட்சி காலத்தில் க்ஷத்திரியர் என்ற சொல் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளதற்கு கீழ்கண்டவாறு வரலாற்று அறிஞர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.


சோழர்கள் வரலாற்றை நன்கு ஆய்வு செய்து “சோழர்கள்” என்ற தலைப்பில் இரு பெரும் நூல்களை எழுதியுள்ள K.A. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் தமிழகத்தில் அக்காலத்தில் க்ஷத்திரியர்  குலம் ஒன்று இல்லை என்பதை மிக தெளிவாக குறிப்பிடுகிறார். அதாவது, பண்டைய நான்கு வருணங்களின் அடிப்படையிலேயே தென்னிந்தியச் சமுதாயம் இயங்கியது என்று நம்புவது சிறிது கடினமேயாகும். (சோழர்கள் பக். 722) 


ஆரிய சமுதாயத்தில் வருணாசிரம நெறிப்படி உருவான நான்கு வகைச் சமுதாயப் பிரிவுகளில் நாடாளும் மன்னர்கள் க்ஷத்திரியர் இனத்தவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். அச்க்ஷத்திரிய மரபுக்கெனப் பல நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அவர்கள் முறைப்படி காயத்ரி மந்திரம் உபதேசிக்கப்பட்டனர். உபநயனச் சடங்குகளின்படி பூணூல் அணிவிக்கப்பட்டு துவிஜர் அல்லது இரு பிறப்பாளர் என அழைக்கப்பட்டனர். ஆனால், அந்நெறிமுறைகளின் அடிப்படையில் அமைந்த க்ஷத்திரியப் பிரிவு சோழப் பெருவேந்தர் காலத்தில் இல்லை (629 of 1916, 640 of 1905, 519 of 1922).

முதலாம் இராசராசனுக்கு இருந்த பல்வகையான சிறப்புப் பெயர்களுள் "சத்திரிய சிகாமணி" என்பதுவும் ஒன்று. இத்தொடருக்கு 'அரசர்களின் முடிமணி" என்பதுதான் பொருள் (தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் - 'பிற்காலச் சோழர் வரலாறு'. அண்ணாமலை நகர், 1975.பக்.561). அச்சிறப்புப் பெயரால் சத்திரிய சிகாமணிபுரம், சத்திரிய சிகாமணி நல்லூர் மற்றும் சத்திரிய சிகாமணி சதுர்வேதிமங்கலம் என்ற ஊர்கள் விளங்கின (க.த. திருநாவுக்கரசு, 'முதலாம் இராசராசன்', சென்னை 1977. பக்.209, மெய்க்கீர்த்திகள் - தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், மேலது நூல், 1975, க. பரணி, பா 245).


க்ஷத்திரியர் என்பது ஒரு சிறப்பு பட்டமே.  அது சங்க கால இலக்கியங்கள், இலக்கண நூல்கள், நிகண்டுகள் போன்றவற்றில் ஒரு ஜாதியாக அல்லது குடிகளாகக்கூட கூறவில்லை. சத்திரியர் என்ற தமிழ் சொல் எவ்வாறு க்ஷத்திரியர் என திரிந்தது என்பதை புரிந்துகொண்டால், அச்சொல்லுக்கான உண்மையான பொருளையும், அது ஒரு ஜாதியின் அடையாளம் இல்லை என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

சத்திரியர் – க்ஷத்திரியர் என்பதற்க்கான விளக்கம்
----------x-----------x-----------x--------------x----------x-------
சத்து – சத் = அங்கங்களின் உள்பிரயோக ஊக்கிகள்

இவைகள் அனிச்சை செயல்களாக நடைபெறுகின்றன                                   
(அணு+இச்சை+செயல் = அணுச்சை செயல் – அனிச்சை செயல்)

பசி, தாகம், வறச்சி, காமம், வலி, அரிப்பு, தூக்கம் போன்றவை உணர்ச்சிகள் எனப்படுகின்றன. உணர்ச்சிகள் யாவும் உள் நிகழ்வுகள்தான். இவைகளை இயக்குவது அணுஇச்சை செயல்களாகும். தானே இயங்கும் உள்முயக்கம் ஒவ்வொன்றிற்க்கும் காரணமும் காரியமும் உண்டு. அணுக்களின் இச்சை செயல்களாலேயே காமும், மோகமும், கோபமும், பசியும் தூண்டப்படுகிறது.
அந்த அணுஇச்சை செயல்களை; உடலில் ஊறும் உயிர் சத்துகளின் ஆற்றல்களைத் தன் மனத்தால்; மனவலிமையால் வெற்றி கொண்டவனை “சத்திரியன்” என்று தமிழர் அழைத்தனர்.

இரிதல் = முறிதல், முறியடித்தல், இல்லாமல் செய்தல்

சத்(து)+இரியன் = சத்திரியன்

தமிழ் நிலப்பரப்பின் தலைவர்களாக இருந்த தமிழ் மன்னர்கள் அனைவரும் தங்களின் ஐம்புலங்களையும், அனிச்சை செயல்களையும் வென்றவர்களாவும், மனதைக் கட்டுப்படுத்தி நன்நெறியுடன் வாழ்பவர்களாவும் இருந்ததால் அவர்களை “சத்திரியன்” என்று தமிழர்கள் அழைத்தனர்.

சத்திரியன் = தன்னைத்தானே வென்றவன்

“சத்திரியன்” என்ற தமிழ் சொல் “க்ஷத்திரியன்” என்று சமஸ்கிருதத்தில் பெயர்த்துக் கொள்ளப்பட்டது.

(இரா. வீரமணி - சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே - ஆய்வு நூல் பக்.191)


ஆட்சி புரிவதும், போரிடுவதும் க்ஷத்திரிய மரபின் கடமைகள் என்று மனு தருமம் உரைக்கிறது. அதையொட்டியே படைத்தலைவர்களும், குறுநில மன்னர்களும் க்ஷத்திரியர் என்று தம்மை அழைத்துக் கொள்வதைப் பெருமையாகக் கொண்டனர். ஆனால், வைதீகப் பிராமணர்கள் அதை ஏற்றுக்கொண்டு முறைப்படி உபநயனம் செய்வித்தார்கள் என்பதற்குப் போதிய சான்றுகள் இல்லை. தங்களைத் தவிர ஏனைய சாதியினர் அனைவரையும் சூத்திரர்களாகவே அவர்கள் கருதினர். இவற்றைக் கருத்தில் கொள்ளும் போது, இடைக்கால சமுதாய அமைப்பில் சோழர்கள் வழிவழியாக வரும் க்ஷத்திரியர் மரபினர் என்பதை உறுதி செய்ய சான்றுகள் இல்லை. இதன்மூலம் தம்மை க்ஷத்திரியர் என்று அழைத்துக் கொண்டவர்கள் மனுதர்மம் கூறும் க்ஷத்திரிய மரபிலிருந்து வேறுபட்டவர்கள் என்பதே வரலாறு கூறும் உண்மையாகும்.


இதற்க்கு சான்றாக மராட்டிய மன்னர் சிவாஜி தன்னை க்ஷத்திரியர் என்று அங்கிகரித்து முடிசூட்டும்படி வைதீக பார்ப்பனர்களிடம் அவர் கேட்டுக்கொண்டதை குறிப்பிடலாம். முதலில் வைதீக பார்ப்பனர்கள் சிவாஜியை க்ஷத்திரியர் என ஏற்றுகொள்ள மறுக்கின்றனர். இதனால் சிவாஜி பார்ப்பனர்களுக்கு வேண்டிய வெகுமதிகள் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட பார்ப்பனர்கள் சிவாஜியை க்ஷத்திரியர் என ஏற்றுகொண்டு முடிசூட்டி வைத்ததாக வரலாறு கூறுகிறது.

சிவாஜி பார்ப்பனர்களுக்கு கொடுத்த வெகுமதிகளில் சிலவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. 50000 வைதீக பார்ப்பனர்களுக்கு விருந்து.                                                                        
  2. ஆயிரக்கணக்கான யோகிகள், துறவிகள் கூடியிருத்தல்

  1. சிவாஜியின் எடைக்கு நிகரான நாணயங்கள் 17000 ஹான்கள்( ஒரு ஹான் என்பது மூன்று ரூபாய்.) பார்ப்பர்களுக்கு வழங்கப்பட்டது.

  1. வெள்ளி, செம்பு, இரும்பு, ஆகிய உலோகங்களும் கற்பூரம், உப்பு, சர்க்கரை, வெண்ணை, பழவகைகள், பாக்கு ஆகியவற்றில் துலாபாரம் நடத்தினர். இவற்றின் மொத்த மதிப்பும் பார்ப்பவர்களுக்கு வழங்கப்பட்டது.

  1. முடுசூட்டு விழாவிற்கு மறுநாள் பார்ப்பனர்களுக்கு தலைக்கு 5 ரூபாய், பெண்களுக்கு 3 ரூபாய், குழந்தைகளுக்கு 1 ரூபாய் என்ற விகிதத்தில் தட்சணை கொடுக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 150000 ஹான்கள்.

  1. ஒருவாரம் கழித்து சிவாஜி தங்கத்தால் எடையிடப்பட்டாட்டார். அந்த தங்கத்தின் மதிப்பான 16000 ஹான்களுடன் மேலும் 100000 ஹான்கள் சேர்த்து பார்ப்பனர்களுக்கு தட்சணையாக வழங்கப்பட்டது.

  1. விராட்ய சடங்குக்காக காகபட்டருக்கு 7000 ஹான்களும், மற்ற பார்ப்பனர்களுக்கு 17000 ஹான்களும் கொடுக்கப்பட்டது.

  1. இதையடுத்து சிவாஜி புனித கங்கை நீரில் நீராடினார். பார்ப்பனர்களுக்கு தலைக்கு 100 ஹான்கள் கொடுக்கப்பட்டது.

  1. சிவாஜியின் அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ஹான்களும், ஒடு யானை, ஒரு குதிரை இவற்றோடு ஆடை அணிகலன்களும் கொடுக்கப்பட்டன.

  1. முடிசூட்டு விழாவை முழுமையாக நடத்திக் கொடுப்பதற்காக காகபட்டருக்கு 100000 ரூபாய் கொடுக்கப்பட்டது.

இவ்வாறு மராட்டிய மன்னன் வீரசிவாஜி “க்ஷத்திரியர்” என்ற பட்டத்தை விலைகொடுத்து வாங்கினார் என்பது வரலாற்றில் நடந்த யாரும் மருக்கமுடியாத உண்மையாகும். அதை தொடர்ந்து அவர் சந்ததிகளில் சிலர் தங்களை க்ஷத்திரியர் என்றும் அழைத்துக்கொண்டர் என்று கல்வெட்டு சான்று கூறுகிறது (த.நா.அ. தொல்லியல் துறை, தொடர் எண். 33 / 1979). 

மராட்டிய மன்னர்களின் முன்னோர் யார்? அவர் என்ன தொழில் செய்தார் என்பதை டஃப் தம்முடைய நூலில் பக்கம் 43- ல் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

பாப்ஜி (பாவாஜி) போன்ஸ்லே முன்னோர்கள் வெரோல் (Verole) என்ற இடத்தில் இருந்தனர். வெரோல் என்பது எல்லோராதவுலதாபாது(Doulatabad) மலையடிவாரத்திலுள்ளது (சர்க்கார் (1) பக்கம் 15). பாபாஜி போன்ஸ்லே என்பது இவர் பெயர் என்றும், வேளாண்மைத் தொழிலில் இவர் ஈடுபட்டிருந்தார் என்றும், இவர்   படேல் (Patel – ஊர்த்தலைவர்) ஆகப் இருந்தவர் என்றும் அறியப்பெறும் (சர்க்கார் (1) பக்கம் 15). பாப்ஜி ( Babjee) போன்ஸ்லேக்கு இருவர் மக்கள்: மூத்தவர் மல்லோஜி; இளையவர் விட்டோஜி என்றும் இவ்வமிசத்தைப் பற்றிக் கூறியுள்ளார்.


படேல்(Patel) என்பது தமிழகத்தில் பட்டக்காரர் அல்லது ஊர் குடும்பர் அல்லது ஊர் கிழவர் என்ற பொருளை உணர்த்தும். மேலும் படேல் (Patel) என்ற சமூகம் அகில இந்திய க்ஷத்திரிய குர்மி(குடும்பர்) களின் உட்பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.



இவ்வாறு “க்ஷத்திரியர்” பட்டத்தை வேளாண்குடியை சேர்ந்த மன்னர் ஒருவர் விலைகொடுத்து வாங்கமுடியும் என்றால் பின்பு எப்படி “க்ஷத்திரியர்” என்பது ஒரு தனிப்பட்ட குலத்தை குறிக்கும் என்று கூறமுடியும் என வரலாற்று அறிஞர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்


(தொடரும்)

No comments:

Post a Comment