மூவேந்தர்கள் தாங்கள் எழுதிய
மெய்க்கீர்த்திகளில் எங்குமே தங்களை க்ஷத்திரியர் என்று குறிப்பிட்டுக்கொண்டது கிடையாது,
மாறாக திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்றுதான் தங்களை பெருமையாக கூறிக்கொண்டனர். இதற்க்குப்
பல சான்றுகள் உள்ளன அவற்றை கீழே காண்போம்.
சேர, சோழ, பாண்டிய வேந்தர்களின்
மெய்க்கீர்த்திகள் (தேவேந்தர சக்கரவர்த்தி, திரிபுவச் சக்கரவர்த்தி)
பராந்தக நெடுஞ்சடையன்
(768-815)
1. வேள்விக்குடிச் செப்பேட்டுப் பகுதி.
1.1.1 (01)
"கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர்க் குழாந்தவிர்த்த
பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியென்னும் பாண்டியாதிராசனால்"
1.4. வீர பாண்டியன்
(946-966)
சிவகாசிச் செப்பேட்டுப் பகுதி
1.4.1 (06)
"ஸ்வஸ்திஸரீ
சந்திரனது வழித்தோன்றிஇத் தராமண்டல முழுதாண்டுபண்டு
இந்திரன்முடி வளையுடைத்தும் இமயத்துக் கயலெழுதியும்
ஆனையாயிர மையமிட்டும் அகத்தியனொடு தமிழ்தெரிந்தும்
வானவர்க்குத் தூதுசென்றும் மால்கடலின் வரவுமாற்றியும்
ஈண்டியவக் கடல்கடைந்தும் இன்னனபல திறல்செய்த 5
பாண்டியபர மேச்வரராள் பரம்பரையில் வந்துதோன்றினன்
மன்னவர்க்கோன் இராசமல்லன்"
1.5 சீவல்லபன் (1120
-1146)
1.5.1 (07)
"கோச்சடைய பன்மரான திரிபுவனச்
சக்கரவர்த்திகள்
சீ வல்லப தேவர்க்கு"
1.6. மாறவர்மன் பராக்கிரம பாண்டியன்
(1130 - ....)
1.6.1 (09)
"கோமாற பன்ம ரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீ பராக்கிரம
பாண்டிய தேவர்க்கு"
1.7. சடையவர்மன் பராந்தக பாண்டியன்
(1130 - .... )
1.7.1 (10)
"ஸ்வஸ்திஸரீ
திருவளரச் செயம்வளரத் தென்னவர்தம் குலம்வளர
அருமறைநான் கலைவளர அனைத்துலகும் துயர்நீங்கத்
தென்மதுரா புரித்தோன்றித் தேவேந்தி(ர)னோ டினிதிருந்த
மன்னர்பிரான் வழுதியர்கோன் வடிம்பலம்ப நின்றருளி"
1.8. சடையவர்மன் வீரபாண்டியன்
(1175 - 1180)
1.8.1 (11)
"திரிபுவன சக்கரவர்த்திகள் சிரீ வீரபாண்டிய தேவர்"
1.9. சடையவர்மன் குலசேகர பாண்டியன்
(1190 - 1218)
1.9.1 (12)
"திரிபுவனச் சக்கர வர்த்திகள் ஸரீ குலசேகர தேவர்க்கு"
1.9. சடையவர்மன் குலசேகர பாண்டியன்
(1190 - 1218) -2
1.9.2 (13)
"திரிபுவனச் சக்கரவர்த்திகள்
ஸரீகுலசேகர தேவர்
மாடக்குளக் கீழ் மதுரைக் கோயிலுள்ளாலை
ஸரீவல்லவன் பீடத்துப் பள்ளிப் பீடம்"
1.9 சடையவர்மன் குலசேகர பாண்டியன்
(1190 - 1218) - 3
1.9.3 (14)
"கோச்சாடய பன்மரான திரிபுனச்
சக்கரவர்த்திகள் ஸரீகுலசேகர தேவர்க்கு"
1.10. மாறவர்மன் சுந்தர பாண்டியன்
(1215 - 1239)
1.10.1 (15)
" கோமாற வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீசுந்தர
பாண்டிய தேவர்க்கு"
1.10. மாறவர்மன் சுந்தர பாண்டியன்
(1215 - 1239) - 2
1.10.2 (16)
"திரிபுவனச் சக்கரவர்த்திகள்
ஸரீசோணாடு
கொண்டு முடிகொண்ட சோழபரத்து வீராபிக்ஷேகம்
பண்ணி அருளிய
ஸரீசுந்தர பாண்டியதேவர்கு"
1.11. சடையவர்மன் சுந்தர பாண்டியன்
(1252 - 1271)
1.11.1 (17)
"சிரீகோச் சடைய வன்மரான
திரிபுவன சக்கர வர்த்திகள்சிரீ சுந்தர பாண்டிய
தேவர்க்கு"
1.12. சடையவர்மன் வீரபாண்டியன்
(1253 - 1268)
1.12.1 (18)
"கோச்சடைய பன்மரான
திரிபுவன சக்கரவர்த்திகள் சிரீ வீரபாண்டிய தேவர்க்கு"
1.12. சடையவர்மன் வீரபாண்டியன்
(1253 - 1268) - 2
1.12.2 (19)
"கோச்சடைய வன்மரான திரிபுவனச்
- 5
சக்கரவர்த்திகள் சிரீவீரபாண்டிய தேவர்க்கு"
1.13 மாறவர்மன் குலசேகர பாண்டியன்
(1268 - 1285)
1.13.1 (20)
"கோமாற வன்ம ரான
திரிபுவனச் சக்கர வர்த்திகள் ஸரீகுலசேகர தேவர்க்கு"
1.14. மாற வர்மன் விக்கிரம
பாண்டியன் (1283 - 1296)
1.14.1 (21)
"ஸரீ கோமாற பன்மரான
திரிபுவன சக்கர வர்த்திகள் ஸரீ விக்கிரம பாண்டிய
தேவர்க்"
2.1 முதலாம் இராசராசன் (கி.
பி 985 - 1014) - 2
2.1.2 (25)
" ஸரீராச ராசன்
இந்திர சேனன் ராஜசர் வஞ்ஞ னெனும்
புலியைப் பயந்த பொன்மான் கலியைக் - - - - - - 40"
2.2 முதலாம் இராசேந்திரன்
(கி. பி 1012 - 1044)
2.2.1 (26)
"முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த
- - - - - - - -10
சுி(இ)ந்தர முடியும் இந்திரன் ஆரமும்"
2.4 இரண்டாம் இராசேந்திரன்
(கி. பி 1051 - 1063) - 1
2.4.1 (30)
"ஸ்வஸ்திஸரீ
இரட்டபாடி ஏழரை இலக்கமும் கொண்டு
கொல்லா புரத்து ஜயஸ்தம்பம் நாட்டிப்
பேராற்றங்கரை கொப்பத்து
ஆகவ மல்லனை அஞ்சு வித்தவன்"
2.4 இரண்டாம் இராசேந்திரன்
(கி. பி 1051 - 1063) - 5
2.4.5 (34)
"ஆகவ மல்லனொடு போர்ச்செயம் புரியுங் காலை - - - -
- - - - -5
அரிநிகர் தன்திருத் தமய னாகிய
...............னில் ராசாதி ராசன்முன்
நேராம் அரசரை நெடும்விசும் பேற்றி
அந்தர வாளத்து அரம்பையர் எதிர்கொள
இந்திர லோகம் எய்திய பின்பு - - - - - - - - - -
- - - - - 10"
2.6. வீரஇராஜேந்திரன் (கி.
பி 1063 - 1070) - 3
2.6.3 (39)
"கோப்பர கேசரி வன்மரான
திரிபுவனச் சக்கர வர்த்திகள் ஸரீவீரராசேந்திர தேவர்க்கு
-10"
2.8. குலோத்துங்கன் I (கி.
பி 1070 - 1120 ) - 3
2.8.3 (43)
"கோவிராச கேசரி வன்ம ரான
திரிபுவன சக்கரவர்த்திகள் ஸரீகுலோத்துங்க
சோழ தேவர்க்கு"
2.8. குலோத்துங்கன் I (கி.
பி 1070 - 1120 ) -4
2.8.4 (44)
"கோவிராச கேசரி பன்மரான
சக்கரவர்த்திகள் ஸரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு"
2.8. குலோத்துங்கன் I (கி.
பி 1070 - 1120 ) - 6
2.8.6 (46)
"கோவிராச கேசரி வன்மரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீகுலோத்துங்க சோழ
தேவர்க்கு"
1.12. சடையவர்மன் வீரபாண்டியன்
(1253 - 1268)
1.12.1 (18)
"கோச்சடைய பன்மரான
திரிபுவன சக்கரவர்த்திகள் சிரீ வீரபாண்டிய தேவர்க்கு"
1.12. சடையவர்மன் வீரபாண்டியன்
(1253 - 1268) - 2
1.12.2 (19)
"கோச்சடைய வன்மரான திரிபுவனச்
- 5
சக்கரவர்த்திகள் சிரீவீரபாண்டிய தேவர்க்கு"
1.13 மாறவர்மன் குலசேகர பாண்டியன்
(1268 - 1285)
1.13.1 (20)
"கோமாற வன்ம ரான
திரிபுவனச் சக்கர வர்த்திகள் ஸரீகுலசேகர தேவர்க்கு"
1.14. மாற வர்மன் விக்கிரம
பாண்டியன் (1283 - 1296)
1.14.1 (21)
"ஸரீ கோமாற பன்மரான
திரிபுவன சக்கர வர்த்திகள் ஸரீ விக்கிரம பாண்டிய
தேவர்க்"
2.1 முதலாம் இராசராசன் (கி.
பி 985 - 1014) - 2
2.1.2 (25)
"ஸரீராச ராசன்
இந்திர சேனன் ராஜசர் வஞ்ஞ னெனும்
புலியைப் பயந்த பொன்மான் கலியைக் - - - - - - 40"
2.2 முதலாம் இராசேந்திரன்
(கி. பி 1012 - 1044)
2.2.1 (26)
"முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த
- - - - - - - -10
சுி(இ)ந்தர முடியும் இந்திரன் ஆரமும்"
2.4 இரண்டாம் இராசேந்திரன்
(கி. பி 1051 - 1063) - 1
2.4.1 (30)
"ஸ்வஸ்திஸரீ
இரட்டபாடி ஏழரை இலக்கமும் கொண்டு
கொல்லா புரத்து ஜயஸ்தம்பம் நாட்டிப்
பேராற்றங்கரை கொப்பத்து
ஆகவ மல்லனை அஞ்சு வித்தவன்"
2.4 இரண்டாம் இராசேந்திரன்
(கி. பி 1051 - 1063) - 5
2.4.5 (34)
"ஆகவ மல்லனொடு போர்ச்செயம் புரியுங் காலை - - - -
- - - - -5
அரிநிகர் தன்திருத் தமய னாகிய
...............னில் ராசாதி ராசன்முன்
நேராம் அரசரை நெடும்விசும் பேற்றி
அந்தர வாளத்து அரம்பையர் எதிர்கொள
இந்திர லோகம் எய்திய பின்பு - - - - - - - - - -
- - - - - 10"
2.6. வீரஇராஜேந்திரன் (கி.
பி 1063 - 1070) - 3
2.6.3 (39)
"கோப்பர கேசரி வன்மரான
திரிபுவனச் சக்கர வர்த்திகள் ஸரீவீரராசேந்திர தேவர்க்கு
-10"
2.8. குலோத்துங்கன் I (கி.
பி 1070 - 1120 ) - 3
2.8.3 (43)
"கோவிராச கேசரி வன்ம ரான
திரிபுவன சக்கரவர்த்திகள் ஸரீகுலோத்துங்க
சோழ தேவர்க்கு"
2.8. குலோத்துங்கன் I (கி.
பி 1070 - 1120 ) -4
2.8.4 (44)
"கோவிராச கேசரி பன்மரான
சக்கரவர்த்திகள் ஸரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு"
2.8. குலோத்துங்கன் I (கி.
பி 1070 - 1120 ) - 6
2.8.6 (46)
"கோவிராச கேசரி வன்மரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீகுலோத்துங்க சோழ
தேவர்க்கு"
2.9. விக்கிரம சோழன் (கி. பி
1018 - 1135 ) - 1
2.9.1 (47)
"கோப்பர கேசரி வன்ம ரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீவிக்கிரம சோழ -
80
தேவர்க்கு"
2.9. விக்கிரம சோழன் (கி. பி
1018 - 1135 ) - 2
2.9.2 (48)
"கோப்பர கேசரி பன்ம ரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் உடையார் ஸரீ விக்கிரம
சோழ தேவர்க்கு"
2.10. குலோத்துங்கன் II. (கி.
பி 1133 - 1150 ) - 1
2.10.1 (50)
"கோவிராச கேசரி பன்ம ரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீ குலோத்துங்க சோழ
- 40
தேவர்க்கு"
2.10. குலோத்துங்கன் II. (கி.
பி 1133 - 1150 ) - 2
2.10.2 (51)
"கோவிராச கேசரி பன்ம ரான - 50
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீ குலோத்துங்க
சோழ தேவர்க்கு"
2.10. குலோத்துங்கன் II. (கி.
பி 1133 - 1150 ) - 3
2.10.3 (52)
"கோவிராசகேசரி வன்ம ரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீ குலோத்துங்க -
15
சோழ தேவர்க்கு"
2.11. இராசராசன் II (கி. பி
1146 - 1163 ) - 1
2.11.1 (53)
"கோப்பர கேசரி
வன்மரான திரிபுவன சக்கர வர்த்திகள் - 15
ஸரீ இராச ராச தேவர்க்கு"
2.11. இராசராசன் II (கி. பி
1146 - 1163 ) -2
2.11.2 (54)
"வருபகைய கத்தின்றி விழைந்துகாத லுடன்சேர
இந்தி ரன்முதற் திசாபாலர் எண்மரும்ஓரு வடிவாகி"
2.12. இராசாதிராசன் II. (கி.
பி 1163 - 1178) - 1
2.12.1 (55)
"கோவிராசகேசரி பன்மரான
திரிபுவன சக்கரவர்த்திகள்
மதுரையும் ஈழமும் கொண்டருளின - 15
ஸரீ ராசாதி ராச தேவர்க்கு"
2.12. இராசாதிராசன் II. (கி.
பி 1163 - 1178) - 2
2.12.2 (56)
"கோவிராச கேசரி வன்மரான -
10
திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீ இராசாதிராச
தேவர்க்கு"
2.12. இராசாதிராசன் II. (கி.
பி 1163 - 1178) -3
2.12.3 (57)
"கோவிராச கேசரி
வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸரீராசாதிராச
தேவர்க்கு"
2.13. குலோத்துங்கன் III.
(கி. பி 1178 - 1218 ) - 2
2.13.2 (59)
"கோப்பர கேசரி வன்மரான
திரிபுவன சக்கரவர்த்திகள் மதுரையும் பாண்டியன்
முடித்தலையுங் கொண்டருளிய ஸரீ குலோத்துங்க"
சோழ தேவர்க்கு
2.13. குலோத்துங்கன் III.
(கி. பி 1178 - 1218 ) -3
2.13.3 (60)
" கோப்பர கேசரி வன்மரான
திருபுவனச் சக்கரவர்த்திகள் மதுரைகொண்டு பாண்டி
யன் முடித்தலை கொண்டருளிய ஸரீ குலோத்துங்க சோழ -
25"
தேவர்க்கு
2.14. வீரதேவன் - 1
2.14.1 (58)
"கோப்பர கேசரி வன்மரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள்
மதுரையும் ஈழமும் கருவூரும் பாண்டியன்
முடித்தலை யுங்கொண்டு வீராபி ஷேகமும்
விஜயாபி ஷேகமும் பண்ணி யருளின - 20
ஸரீ திரிபுவன வீரதேவர்க்கு"
2.14. வீரதேவன் - 2
2.14.2 (63)
"ஸ்வஸ்திஸரீ
திருவாய்க் கேழ்வி முன்னாகத்
திரிபுவனச் சக்கர வர்த்திகள்
மதுரையும் ஈழமும் கருவூரும்
பாண்டியன் முடித்தலையுங் கொண்டு
வீராபி ஷேகமும் விஜயாபி ஷேகமும் - 5
பண்ணியருளிய திரிபுவன வீரதேவர்க்குயாண்டு 33"
2.15. இராசராசன் III.
(1216 - 1256) - 1
2.15.1 (64)
"விராசகேசரி வன்மரான
திரிபுவனச் சக்கரவர்த்திகள் இராசராச தேவர்க்கு –
15"
இவ்வாறு
மூவேந்தர்கள் தாங்கள் எழுதிய மெய்க்கீர்த்திகளில் சக்கரவர்த்திகள் என்று தங்களை
பெருமையாக கூறிக்கொண்டனர் என்பதற்க்கு
சான்றுகள் மிக தெளிவாக உள்ளன.
(தொடரும்)
