க்ஷத்திரியர் என்ற சொல் சங்க இலக்கியத்தில் எங்குமே
குறிப்பிடப்படவில்லை. க்ஷத்திரியர் என்ற சொல்லாடல் மிகவும் பிற்க்காலத்தில் வட
இந்திய ஸ்மிருதி பிராமணர்கள் தமிழகத்தில் குடியேறிய காலத்திற்க்குப் பின்பு தான்
கல்வெட்டுகளில் பயன்படுத்தப் பட்டுள்ளன. அவர்கள் தங்கள் இருப்பிடத்தை உறுதி செய்துகொள்ள,
அரசரிடமிருந்து மக்களையும் தமிழ் புலவர்களையும்
பிரிக்கவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. அதன் விளைவு க்ஷத்திரியர் என்ற பட்டத்தை அரசருக்கு சூடினர்.
மன்னனை மட்டும் வயப்படுத்தினால் போதாது, நாட்டில் வசிக்கும் மக்களையும் தம் வயப்படுத்தினால்தான்
மனுஸ்மிருதியின் விதிகளை தமிழகத்தில் புகுத்தமுடியும் என்று உணர்ந்த ஸ்மிருதி
பிராமணர்கள், உழவர்களாகிய
தமிழர்கள், நிலத்தைச்
சார்ந்து வாழ்கிறார்கள், அந்த நிலத்தை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால்,
நிலத்தில் வாழும் மக்கள் அனைவரும் தானே நம்
கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவார்கள் என்று அவர்கள் கண்டரிந்தனர். அதன்படி பொன்,
குதிரை, தேர், ஆபரணம், என்னும் அசையும் சொத்துகளுடன் அசையா சொத்தாகிய தமிழர்
பூமியையும் அவர்கள் தானமாகக் கேட்டுப் பெற்றனர்.
(சமஸ்கிருதத்தின்
தாய்மொழி தமிழே பக். 229 – இரா. வீரமணி)
முதன்முதலில் பிராமணர்கள்தான்
கோத்திரத்தைக் கூறிக் கொண்டார்கள். தாங்கள் பிறரைவிட உயர்ந்தவர் என்று காட்டிக்கொள்ள
கோத்திரத்தை பயன்படுத்தினர். இதைத் தொடர்ந்து இடைக்கால அரசர்கள் தாங்கள் பிராமணக் குலத்தில்
தோன்றியவர் என்றும், மேலும் தங்கள் புரோகிதர்களின் கோத்திரத்தைத் தங்கள் கோத்திரங்களாகக்
கூறிப் பெருமைகொண்டனர்.
கி.பி. 886 ஆம் ஆண்டு பல்லவ
மன்னன் கம்பவர்மனின் 17 ஆம் ஆட்சி ஆண்டைச் சார்ந்த தமிழ் கல்வெட்டு மணையில் கோட்டத்து
மணையில் ஊரைச் சார்ந்த சீயசர்மன் எங்கிற கம்ப பட்டன் என்னும் அந்தணரின் மனைவி வசந்தனார்
என்ற பெண் 16 கழஞ்சுப்பொன் திருவிழிச்சில் சுப்பிரமணியர் கோவிலுக்கு விளக்கு எரிக்கவும்
பிற செலவினங்களுக்கும் கொடையாக அளித்துள்ளார். சீயசர்மன் சாண்டில்ய கோத்திரத்தைச் சார்ந்தவர்
என கல்வெட்டு கூறுகிறது.
(முனைவர் சு. இராசவேலு உதவிப்
பேராசிரியர், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சை – தொல்லியல் சுவடுகள் – பக்.32)
பாண்டிய வேந்தன் நின்ற சீர் நெடுமாறனின் "இளையான்புத்தூர்ச் செப்பேடு”, பாண்டிய
நாட்டில் இருந்த ஆசிநாட்டில் ஆதிக்கம் செலுத்திவந்த கம்பலை என்னும் மறக்குடித் (மறவர்) தலைவனை வென்று அவனுக்குரிய காணியை பாரத்துவாஜ
கோத்திரத்தைச் சார்ந்த சோழநாட்டுப் பிராமணன் நாராயணபட்ட சோமயாஜி என்பவருக்கு
"இளையான்புத்தூர்" என்று பெயரிட்டு காராண்மை மீயாட்சி உரிமைகளோடு
பிரமதேயமாக அளித்தார் என்று செப்பேடு குறிப்பிடுகிறது.
(முனைவர் எ. சுப்பராயலு, முனைவர் வெ. வேதாசலம் - இளையான்புத்தூர்ச் செப்பேடு – பாண்டியர் செப்பேடு)
உடையார் பாளையம் அரசர்கள் தங்களை "கங்கநூஜா வம்சத்தை சேர்ந்த பார்கவ
கோத்திரத்தார்கள்” என்றும் “பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்றும் ஆவணங்களில்
குறிப்பிடுகிறார்கள். மேலும் இன்றைய சுரிதிமான், மலையமான், நத்தமான் சமூகத்தவர்களும் தங்களை பார்கவ கோத்திரத்தார்கள்
என்று ஆவணங்களில் பதிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஈரான் நாட்டைச் சேர்ந்த கங்கர்களும்,
சாதவாகனர்களும் தாங்கள் பிராமணக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துக் கொண்டனர்.
கதம்ப மன்னன் மயூரவர்மன் சிலநேரங்களில் சர்மன் என்றும், சிலநேரங்களில் வர்மன் என்றும்
தன்னை அழைத்துக்கொண்ட போதிலும் அவன் பிராமணிய கோத்திரத்தை கையாண்டான்.
( நடன. காசிநாதன் - வன்னியர் மாட்சி பக். )
"மச்சபுராணத்திலே, 195-வது அத்தியாயத்திலே, அங்கிரஸுவின் கோத்திரத்திலுதித்த அரசர்களின் சந்ததிகளைக்
கூறுமிடத்து அக்கினி என்னும் அரசனைக் கூறி, அதன்பின்னர் பாண்டு என்னும் அரசனையும் கூறப்பட்டிருக்கின்றது.
(Rev.
William Tailor, Pandiya History vol. 2)
கி.பி.
1294 ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அருளாளப்பெருமாள் கோயில் அபிஷேகமண்டபத் மேற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு தெலுங்குச் சோழர் (பல்லவகுல சிற்றரசன்)
வீரகண்டகோபாலன் பாரத்துவாசிக் கோத்திரத்தைச் சார்ந்தவன் என்றும்
பல்லவர் குலத்தைச் சார்ந்தவன் என்பதையும் தெரிவிக்கிறது.
கல்வெட்டு :
1.ஸ்வஸ்திஸ்ரீ
பார்த்தியர் தம்மிற் பாரத்துவாரக் கோத்திரம் விளக்க
(மி)
. . . . . . . .
2. லைமகள் வயிற்றில் நிலைபெறத் தோன்றி மெய்ம்மொழி நாள் முத………
3. ணன்
மாமகன்துய்ய மாதவத்தின் தராதலங்கு காக்கந்தன்மையனாகி…
4. (ப்)பல்லவர் திருக்குலத் திசைதோறும் விளக்கும்
விசையபூபதி கா…………
……………………………….
(த.நா.அ.தொல்லியல்துறை தொடர் எண் :- 174)
துறையூர் பகுதியை ஆட்சி செய்த பாளையக்காரர் பெத்து ரெட்டியார் "சித்தபால
கோத்திரத்து" வல்லகோல் எறம ரெட்டியாரின் பேரன் என்றும் இம்மடி ரெட்டியாரின்
மகன் என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அது :-
"ஸித்திபால கோத்திரத்து வல்ல
கோல் எறம இரட்டியார் குமரன்
இம்மடி இரட்டியார் புத்திரன்
பெத்து இரட்டியார்"
(ஆவணம்-25, 2012, பக்கம்-177), (திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கி.பி.1576).
திண்டுக்கல்
மாவட்டம் வடமதுரைப் பகுதியிலுள்ள பெரும்புள்ளிக்கு அருகிலுள்ள பழைய கரட்டுப்பட்டியிலுள்ள
நடுக்கல் பள்ளி நாட்டில் பகைவர் ஆநிரையைக் கவர்ந்து சென்றபோது தடுத்தி நிறுத்தி வீரமரணம்
அடைந்த மதுராந்தகப் பள்ளியைச் சேர்ந்த வேளாண் ஒருவனை அரையரெள்ளி கோய்த்திரம் உடையவன்
என்று குறிப்பிடுகிறது.
"ஸ்ரீ அரையரெள்ளி கோய்த்திரனான
பள்ளி நாட்டு நிரை போகயில்
பட்டான்"
(ஆவணம் , இதழ் – 18, ஜூலை 2007, பக். 21 மற்றும் கல்வெட்டு காலாண்டிதழ்-65, பக்கம் 39-40).
மைசூர், குடகு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சங்காள்வர், கொங்காள்வர் ஆவர். மணிஜா என்னும் இயர்பெயர் கொண்ட இவன் வீரத்திற்காக ஷத்திரிய சிகாமணி கொங்காள்வன் என்னும் பட்டத்தை இராஜராஜனிடமிருந்து பெற்றான். மைசூர் மாவட்டத்திலுள்ள கங்க நாடு, வடகுடகிலுள்ள ஏழு பகுதிகளை ஆட்சி செய்த சங்காள்வார்களும், சோழ மன்னர்க்குக் கப்பம் செலுத்தி வந்தனர். சில காலத்திற்கு பின்னர், கொங்காள்வார்கள் தம்மைச் சோழர் வழியினர் என்று கூறிக்கொண்டதோடு, தம்மைக் கரிகாலச் சோழன் மரபினர், சூரிய மரபினர் என்றெல்லாம் சிறபித்துக்கொண்ட தெலுங்கு, கன்னடச் சோழ வம்சங்களைப் போல் பழம்பெருமை பாடத்தொடங்கினர்.
( இ.சி. i , முன்னுரை 12 -13 ; v, முன்னுரை vii. )
பேராசிரியர் K.A. நீலகண்ட சாஸ்திரி - சோழர்கள் – பக். 303.
கி.பி.578 ஆம்
ஆண்டை சேர்ந்த பாதாமிக் கல்வெட்டு ஒன்றில் சாளுக்கியர்களின் தோற்றம் பற்றி
குறிப்பிடுகிறது. கார்த்திகேயன் என்னும்
கடவுளை வழிப்படுபவர்கள் என்றும் மாள்வ்ய கோத்திரத்தைச் சேர்ந்த ஹாரீதி என்பவரின்
பிள்ளைகள் என்றும் பன்றிக் கொடியை உடையவர்கள் என்றும் குறிப்பிடுகிறது.
முதற் பராந்தகனின் சிற்றரசனாக இருந்த கங்க
மன்னன் பாணர்களை வெல்லத் துணைபுரிந்து,
"பாணாதிராஜன்'
என்ற பட்டத்தை தன் மேல் அரசனால் தரப்பெற்றவன். அவனை
வட ஆர்க்காடு மாவட்டம் சோழபுரத்திலுள்ள சகம் 871-ஐச் சேர்ந்த கல்வெட்டு அத்திமல்லனான கன்னரதேவ பிரிதிவி
கங்கரையன் என சுட்டுகிறது.
கங்கர்கள் பெரும் வேந்தர்களான சோழர்கள், பல்லவர்கள், சாளுக்கியர்கள் மற்றும் இராஷ்டிரகூடர்களுக்கு குறுநிலமன்னர்களாக
இருந்துள்ளனர். ஆதலால் இவர்கள் மேலைச்
சாளுக்கியர், கீழைச் சாளுக்கியர், பல்லவர், சோழர் போன்ற
அரசமரபினர்களுடன் திருமண உறவைக் மேற்கொண்டிருந்தனர். இவர்களில்
பலர் தன் பெயருடன் சோழர் என்று இனைத்துக்கொண்டுள்ளதை கல்வெட்டுகளில்
காணலாம்.
"உத்தமச் சோழ கங்கன்"
"வேதுமாற பாணனான உத்தமச் சோழ கங்கன்"
"வீர சோழ கங்கனான உத்தமச் சோழ கங்கன்"
கர்நாடக மாநிலம் சித்தலகட்டா தாலுக்காவில் உள்ள கி.பி. 1278
ஆம் ஆண்டின் தமிழ் கல்வெட்டு ஒன்று (Epigraphia
Carnatica, Vol-X, No.110) கங்க
மன்னனை "பிரம்ம க்ஷத்ரிய கங்கப் பெருமாள்
தேவன்" என்று தெரிவிக்கிறது.
கங்கர்கள், தேவேந்திர குல
மள்ளர் சமூகத்து மன்னர்களுடன் திருமண உறவைக் மேற்கொண்டிருந்ததால்
இவர்கள் பெரும்பாலும் அத்திமல்லன், திரிபுவன மல்லன், மல்லர் பூர்வாதி
ராஜன், என்ற சொல்லை தன்பெயருடன் சேர்த்து பயன்படுத்தினர்
என்பதை கல்வெட்டு உறுதிசெய்கிறது.
“திரிபுவன மல்ல பூராதிராயன் அத்திம
ல்லன் முதலிகளில்
தாமந்ததே
வற்கடியார் மகன் மாராழ்
வான் நரசிங்க தேவநுக்
கு படைத்துணை போய்பட்டான்.” என்றும் மற்றொரு கல்வெட்டு
- முரசர் காமுண்ட……
- செல்வ நாயகன் அ
- த்தி மல்லன் பட்ட
- ப் பூசலில் பட்டான்
என்றும்
முதலாம் பராந்தகன் காலத்தில் இருந்த கங்க மன்னன் இரண்டாம் பிரிதிவிபதியை சுட்டுகிறது.
தருமபுரி மாவட்டம் ஒசூர் சந்திர குடேஸ்வரர் கோயில்
கல்வெட்டு
" ஸ்வஸ்திஸ்ரீ சகரை ஆண்டு ஆயிரத்து ஒருநூற்று
எண்பத்துமூன்று சென்ற மன்மத சம்வத்ஸரத்து ஆநி
மாசம் திருபுவனமல்ல பூர்வாதிராஜர் அத்திஆழ்வார்
மகனார் தாமத்தாழ்வார் செவுடை நாயனார்க்கு நம்பி
ராட்டியாரையும் எழுந்தருளுவித்து பூஜையையும்,
கொத்த காமிண்டன் பள்ளியையும் குடுத்து . . . . . ! 3
என வருகிறது. இக்கல்வெட்டிலும் மன்னன் பெயர், திருபுவன மல்லபூர்வாதிராஜர் அத்திஆழ்வார் என்று
குறிக்கப்படுகிறது. இவனது மகன் தாமத்தாழ்வான் எனப்படுகின்றான். இவனது அடியான் மகனே
சின்னக்குத்தூர் நடுகல் குறிக்கும் மாராழ்வான் ஆவான். இக்கல்வெட்டில் சகம் 1183
தெளிவாகவுள்ளது. எனவே இத்தனை கல்வெட்டுக்களும் ஒரே
பூராதிராயனைச் சார்ந்தது ஆதல் வேண்டும். நடுகல்லின் குறிக்கப்படும் நரசிங்கதேவன்
அதே காலத்தில் இருந்த கங்கமன்னன் முதலாம் நரசிங்க தேவனே ஆவான்.
இவர்கள்
வர்மன், தேவேந்திர வர்மன், இந்திர
வர்மன் என்றும் அழைத்துகொண்டனர். மேலும் இவர்களிடம் உயர் அதிகாரிகளாக குடும்பிகள் இருந்தார்கள்
என்பதையும் கீழ்கண்ட செப்பேட்டுச் செய்தி உறுதி செய்கிறது.
1. C.P. No. 155 of Mr. Sewell's List. -
(Graham's Plate No. I, discovered at Chicacole, now in Madras Museum.) This is
an inscription of Nandaprabhanjanavarma, a king of
Kalinga. "It is not dated, but it is decidedly ancient, and is
probably pre Chalukyan. The order is issued from
the city of Sarapalli, to the Kutumbis at the
village of Adeyavata or Adeyavata, and records an agrahara grant of that
village," to the Charanas or branches of the Devarata gotra, for the
benefit of a Brahman named Haris chandrasvami. See Tam. and Sans. Ins., pp. l59
- 161, where it is edited. Also Ind. Antq., XIII, p. 48, and Vol. X, p. 243, where Dr. Fleet has summarised it. ·
(Inscriptions of the
Madras Presidency Vol. I – pp. 666)
2. C.P. No. 156 of Mr. Sewell's List - (Graham's
Plate
No. II, now in the
Madras Museum) Records an
inscription of Indravarman king of Kalinga, of
the
Ganga family. " It is
dated
in numerical symbols, in
the one
hundred and twenty-eighth year of
the victorious reign
(of
his
dynasty), on the fifteenth
day
of the month Chaitra; the
Saka
year is not
given.
The order is issued
from
the city of Kalinganagara, and records a grant
of the village of Tamaracheruvu, in the district
of Varahavartani,
on the occasion
of an eclipse of
the
moon on the day
of the full moon
of the month Margasira." See Ind. Antq., X,p.243; Tam. and
Sans. Ins. and Ind. Antq., XIII, p. 122.
(Inscriptions of the
Madras Presidency Vol. I – pp. 667)
3. C.P. No. 157 of Mr. Sewell's List. -
(Graham's Plate No. III, now in the Madras Museum.) This is another record of Indravarman, of the Ganga family. "It is dated in
numerical symbols, in the one hundred and forty-sixth year of the victorious
reign of his dynasty on the twelfth day of the month Magha; the Saka year is
not given. The order is issued from the city of Kalinganagara, to the Kutumbis at the village of Talamula, in the
Korosotaka Panchali and records a grant of that village on the seventh day of
the month Magha." Ind., Antq., X,
p. 243, No. 3; Tam. and Sans. Ins., pp. 164 --66, and Ind. Antq., XIII, p. 122.
(Inscriptions of the
Madras Presidency Vol. I – pp. 667)
4. C.P.No. 158 of Mr. Sewell's List. -(
Graham' s Plate No. IV.) This is an inscription in Sanskrit, of Devendravarma, son of Ananta varma of the Ganga family. "It is dated, in words, in the
fifty first year of the victorious reign of the Ganga vamsa. The order is issued from the city of
Kalinganagara, to the Kutumbis at the village of
Tamarachcheruvu, in the district of Varahavartani, and records the grant of that
village on the occasion of an eclipse of the Sun." See Ind.
Antq., Vol. X, p. 243, .No. 4 ;
Ibid., Vol. XIII, p. 27 3 ; and Tam. and
Sans. Ins., pp. 167-70.
(Inscriptions of the
Madras Presidency Vol. I– pp. 667)
5
.
C.P. No. 159 of Mr. Sewell's List.
- (Graham's Plate No. V, now in the Madras Museum.) This is an inscription of Satyavarma, son of Devendravarma, of the Ganga family,
and king of Kalinga. "It is dated,
in words, in the fifty-first year of the centuries of years of Gangeya vamsa ;
the Saka year is not given. The order is
issued from the city of Kalinganagara, to the Kutumbis at
the village of Tarugrama in the district of Galela and records the grant of
that village on the occasion of an eclipse of the sun." See Ind. Antq., Vol.
X, p. 243, No. 5; Tam. and
Sans. Ins., p. 168.
(Inscriptions of the
Madras Presidency Vol. I – pp. 667)
6. "The Chicacole Plates of Devendravarman." These plates which were
discovered at Chicacole by Graham with the previous five plates and which were
long missing, form a record which is not very correct Sanskrit. They record the
grant of the village of Poppangika in Saraumantamba, a sub division of
Kroshtukavartani as an agrahara to six
Brahman teachers who resided at
Kalinganagara and who belonged to the Chhandogya school. The grant was made by Devendravarman, son of Gunarnava, on the eighth tithi
of the bright fortnight of Magha, during the Sun's progress to the north (in
the one hundred and eighty-third year of the dynasty). Another date is given as
the twentieth day of the month of Sravana, which is subsequent to the first by
several months. Owing to the uncertainty in which the Ganga era is still
involved, nothing can at present be said about Devendravarman,
the son of Gunarnava, but that he must be distinct from Devendravarman, the son of Anantavarman, and that the
name Gunarnava occurs twice in the list of the ancestors of Chodaganga of
Kalinga. See Ep. Ind., Vol. III, pp.
130-34,,
(Inscriptions
of the Madras Presidency Vol. I – pp. 667)
PARLAKIMEDI TALUK.
422. A
C.P. grant of the reign of a Ganga king,
Vajrahasta (similar to the grants of the Ganga kings
Indravarman, Devendravarman and Satyavarman). Records
that while he
was residing at Kalinganagara, his minister (?) Daraparaja,
son of Chola Kamadhiraja and regent of " the five districts
(Panchavishaya), issued an order to the cultivators and householders (kutumbis) of Lanka-kona to the effect that, on the
occasion of his daughter's marriage, he
gave away the village of Hossandi to a soldier who is said to be an ornament of
the Naggari Saluki family. [Dr.
Kielhorn would assign
the inscription on palaeo graphical
grounds to the eleventh
century, to Vajrahasta V (Circa 1035-70), " the grandfather
of Anantavarman Choda Ganga who was anointed
king on the 17th February A.D. I078."
See Ep. Ind., Vol. III, pp. 220-224 and Gj. 143 - A
above.
(Inscriptions
of the Madras Presidency Vol. I– pp. 709)
கி.பி. 1098 - ல்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் நிலம் விலை
முடுக்கப்பட்ட செய்தியை கூறுகையில்.
கீழக்கோட்டையாளன் கலங்காத கண்ட நல்லூர் தேவன் தொங்கனான மாளவ தேவேந்திரப்ப
அரையன் – சக்கரவர்த்தி மல்லனான அஞ்சாத கங்கராயன் எழுத்து என்ற அதிகாரி பெயர் இடம்பெற்றுள்ளது. (தெ.க. 8/178)
இன்று கோவா மாநிலத்தில் வாழக்கூடிய
க்ஷத்திரிய குர்மி(குடும்பர்) மக்கள் கங்கர்களின் வாரிசுகள் என்று தங்களை அழைத்துக்கொள்வது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment