Friday, 26 January 2018

க்ஷத்திரியர் என்பது ஒரு ஜாதியா? பகுதி - 5 - Pandyan Mallar


சூத்திரன் யார்?

கி.மு. 3 – ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்து, வட இந்தியா, தென்னிந்தியா முழுவதும் சுற்றிப்பார்த்த கிரேக்கத் தூதர் மெகஸ்தனீஸ் அவர்கள் இந்தியாவில் அடிமைகளே இல்லை, மனிதனை அடிமையாக நடத்தும் செயலை எங்கும் தான் பார்க்கவில்லை என்று எழுதி இருக்கிறார்.


ஆனால் வேதத்தில் சூத்திரன் என்ற சொல் சில இடங்களில் இடம்பெற்றுள்ளது. மேலும் சுதாஸ் என்ற அரசனைப் பற்றி மஹாபாரதத்தில், சாந்தி பர்வம் 60 ஸ்லோகம் 38 முதல் 40 வரை பகுதியில் வருகிறது. அதில் இவன் ஒரு சூத்திரன் என்றும், இவன் இந்திராக்கினி என்னும் ஹோமத்தைச் செய்தான் என்றும், அதில் நூறாயிரம் கோடிப் பொன்னை தக்‌ஷிணையாகக் கொடுத்தான் என்றும் சொல்லப்பட்டுள்ளது.


ஹோமம் செய்தவன் சுதாஸ் என்னும் சூத்திரன் என்றால், அவன் பூணூல் அணியாமல் ஹோமம் செய்திருக்க முடியுமா? இந்த தஸ்யூ பூணூல் அணிந்தது மட்டுமல்லாமல், ஹோமம் செய்யத் துணை புரிந்த பிராம்மணர்களுக்கு நூறாயிரம் கோடிப் பொன் கொடுக்கத்தக்க அந்தஸ்துடன் இருந்திருக்கிறானே, இதற்கு என்ன அர்த்தம்? சூத்திரர்கள் ஆரிய மரபில் தாழ்த்தப்பட்டவர்கள் என்றால், எப்படி இது சாத்தியமாகும்?


சுதாஸ் என்னும் பெயருள்ள அரசன் யார் என்று புராண, இதிஹாசங்களைத் தேடினால், இரண்டு இடங்களில் சுதாஸ் என்னும் மன்னனைப் பற்றி விவரம் வருகிறது. ஒன்று ராமன் பிறந்த சூரிய குலம், மற்றொன்று புரு வம்சத்தில் வரும் சந்தர குலம். ராமனுக்கு முன்பும், ஆனால், கங்கையை பூமிக்குக் கொண்டுவந்த பாகீரதனுக்குப் பின்னும் இந்த மன்னன் பெயர் வருகிறது. இது விஷ்ணு புராணத்தில் காணப்படுகிறது.


அதே விஷ்ணு புராணத்தில் சந்திர வம்சாவளியினர் பெயர் வருகிறது. அதில் முத்கலனுக்கு மௌத்கல்ய பிராம்மணன் பிறந்தான் என்றும், முத்கலனது பேரன் திவோதாஸன், அவனது பேரன் சுதாஸ் என்றும் வருகிறது.


சந்திர வம்ச்சாவளி என்று கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் எல்லாம்  அரசர்கள் பெயர்கள். சந்திர வம்சாவளியில் வரும் விளக்கத்தில், க்ஷத்திரிய அரசனுக்குப் ப்ராம்மணனும் பிறக்கிறான். பேரனாக சுதாஸ் என்னும் சூத்திரனும் பிறக்கிறான் என்று வருவது கவனிக்கத்தக்கது.
(Jayasree பதிவுகள் - சூத்திரன் யார்?)


கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் என்னும் ஓலைச்சுவடியில் 'சூத்திரர் என்போர் யார்?' என்பதற்கு தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இது டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய 'Who are Sudras ?' என்ற புத்தகத்தில் கொடுத்துள்ள விளக்கத்துடன் ஒத்துப்போகிறது என்பது ஆச்சரியமான ஒன்று. அவற்றை கீழே காண்போம்.

சூத்திரர்கள் ஆரியப் பிரிவுகளில் ஒன்றான சூரிய குலத்தைச் சேர்ந்தவர்கள். இந்தோ ஆரிய சமூகத்தில் சூத்திரர்கள் சத்திரிய வர்ணமாக இருந்தார்கள்.

ஆரிய சமுதாயம் பார்ப்பனன், சத்திரியன்,வைசியன் என்ற மூன்று வர்ணங்களாக மட்டுமே இருந்தது. சூத்திரர் தனி வர்ணமாக இல்லாமல் சத்திரியரில் ஒரு பகுதியாக இருந்தன.

சூத்திர மன்னர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் இடையில் இடையறாத தகராறுகள் இருந்தன. அதனால் பார்ப்பனர்கள் பல கொடுமைகளுக்கும் அவமரியாதைகளுக்கும் ஆளானார்கள். இதனால் வெறுப்புற்ற பார்ப்பனர்கள் சூத்திரர்களுக்கு உபநயம்(பூணூல்) செய்து வைக்க மறுத்துவிட்டனர்.

இப்புனித நூல் மறுக்கப்பட்டதால் சூத்திரர் தங்கள் சமூகப் படித்தரத்தை இழந்து வைசியருக்கும் கீழாக நாங்காவது வர்ணமாகக் கருதப்பட்டனர்.
(டாக்டர் அம்பேத்கர் - சூத்திரன் யார் – தமிழ். பக்.30)

அதுமட்டுமல்ல, ஆரியர் என்போர் யார்? என்பதற்கும் தெளிவாக விளக்கத்தைத் தருகிறது. இதில், பிராமணர், சத்ரியர், வைசியர் மற்றும் சூத்திரர் ஆகிய நால்வர்ணத்தை சார்ந்தவரை மட்டும் அர்த்தசாஸ்திரம் 'ஆரியர்' என்கிறது. இதில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது நான்காவது வர்ணத்தவராக வைக்கப்பட்ட சூத்திரரும்கூட ஆரியரே ஆவார்( Kaveri - Studies in Epigraphy, Archaelogy and History, page 213 note 13 ).

இந்த விசயம் சத்ரியர் மற்றும் சூத்திரர் என்று தமிழர் வரலாற்றில் கதை சொல்லி எழுதுபவர்களுக்கு தெரியுமா?. நால்வண்ணத்தவர்களான ஆரியர்களின் பிள்ளைகளை அடிமையாக்கி விற்கவோ, ஒத்தி வைக்கவோ யாருக்கும் எந்தவித உரிமையும் இல்லையென்பதே அர்த்தசாஸ்திரத்தின் மிக அழுத்தமான நிலைப்பாடு (Kaveri - Studies in Epigraphy, Archaelogy and History, page 194). அடிமை வகைகளின்கீழ் ஓர் ஆரியனை என்றுமே அடிமைப்படுத்தக் கூடாது என்று அது மிகத் தெளிவாகக் கூறுகிறது(Kaveri - Studies in Epigraphy, Archaelogy and History, page 213 note 13). இதுதான் ஆரியரின் நால்வர்ணக்கோட்பாடு.

இது தமிழர்களாகிய நமக்குப் பொருந்தாது. அப்படி இருப்பினும் சிலர் தமிழ் நாட்டில் தம்மை க்ஷத்திரியர் ஜாதி மற்றும் சூத்திரர் ஜாதி என்று கூறிக்கொண்டால் நிச்சயம் அவர்கள் தமிழகத்தில் நுழைந்த வந்தேரிகளாகத்தான் இருக்க வேண்டும். இதைத்தான் கீழ்கண்ட ஆங்கிலேய ஆட்சி காலத்திய குறிப்பும் தெளிவுபடுத்துகிறது.

  1. The Brahmin
  2. The Sudra, Vellala, Reddi, Nayak, Razu & etc
  3. The Chetty
  4. The Idayer or Shepherd
  5. The Maraver
  6. The Komaty
  7. The Artisan, with various sub – divisions
  8. The Shanar
  9. The Pulla
  10. The Pariah
  11. The Chukler
(MANUAL OF THE TINNAVELLY DISTRICT PAGE NO. 34)

இதில் தெளிவான விசயம் என்னவெனில் அந்நியர் ஆட்சியில் பூர்வீகத் தமிழ்குடிகளுக்கு நிலமில்லை. ஆனால், வந்தேரிகளான 'சூத்திரர்கள்' அதிகப்படியான நிலங்களைக் கொண்டிருந்தனர். அதாவது, ஆங்கிலேயருக்கு சூத்திரர்கள் காட்டிக் கொடுத்து தமிழர்களின் நிலங்களைப் பெற்று ஜமீந்தாரிகளானார்கள். ஆனால், உண்மையான நிலத்திற்குறியவன் அவன் நிலத்தில் கூலி வேலை பார்த்தான். இதுதான் சூத்திரர்கள் ஜமீன்களான முறை. இப்போது சூத்திரர் என்போர் யார்? என்று சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்களா?


சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும் 1. யுத்தத்தில் புறங்காட்டி ஒடுபவன் 2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன் 3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன் 4. விபசாரி மகன் 5. விலைக்கு வாங்கப்பட்டவன் 6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன் 7. தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன்     ( அத்தியாயம். 8 – சு.415)


உத்தர காமிக ஆகமம் :

      எங்கும் நிறைந்த பரம்பொருளான ஈஸ்வரன் எல்லா ஆன்மாக்களும் உய்ய வேண்டி கருணையினாலே இருபத்தெட்டு (28)              சிவாகமங்களை அருளிச் செய்தார். இந்த இருபத்தெட்டு மூலாகமங்களில் காமிகாகமம் என்பது முதலாவது ஆகும். அந்த மூலாகமம் பூர்வபாகம், உத்தரபாகம் என்று இரு பிரிவாக இருக்கின்றது. உத்தர காமிக ஆகமத்தில் 98 படலங்கள், 7128 ஸ்லோகங்கள் உள்ளன. உத்தர காமிக ஆகமம் த்வார பூஜையை ஆரம்பித்து, உத்ஸவ விதி, பாதபூஜா விதி, தீக்ஷா விதி, பிராயஸ்சித்த விதி, பீடபிரதிஷ்டை, பாணலிங்க பிரதிஷ்டை, காம்யலிங்க பிரதிஷ்டை, ஸகல தேவதா பிரதிஷ்டைகள், ரதாதி ஸ்தாபனங்கள், பிரதிஷ்டை படலங்கள், சகலவிதமான தானங்கள், விவரமாக கூறி திருக்கோயில்களில் செயல்பட வேண்டிய காரியங்களை வலியுறுத்தி கூறப்பட்டிருக்கிறது. பல சுலோகங்களுக்கு ஆழ்ந்த கருத்துக்களை வலியுறுத்தி விவரமாக கூறப்பட்டிருக்கிறது.

உத்தர காமிக ஆகமம் 25 – வது படலம்  கோத்திர நிர்ணய விதியில் 6 – வது ஸ்லோகம் கோத்திரங்கள் இல்லாதவர்களே சூத்திரர்கள் என்று கூறும்.

ஸ்லோகம்(6). க்ஷத்திரியர்களுக்கும் வைசியர்களுக்கும் கோத்திரம் ஆசார்யர்களிடமிருந்து தோன்றியதாகும். அவ்வாறு சூத்திரர்களுக்கு கோத்திரம் அமையவில்லை. இவ்வாறு கோத்திரத்தின் விதிகள் கூறப்படுகிறது.

(வி. விசவநாத சிவாச்சாரியார் – உத்தர காமிக ஆகமம் – இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை – தமிழ்நாடு)


ஆனால் வேந்தர் குல மள்ளர்கள் ண்ணிரண்டாராயிரம் கோத்திரமுடையவர்கள் என பழனி முருகன் கோவில் செப்பேடு குறிப்பிடுகிறது.

 காணி காலாடி மர்ருமுண்டாகிய குடும்ப(னார்)கள், பன்னாடிகள், காலாடிகள், மூப்பன், பலகானென்கிற அய்ந்து வகுப்பும், பன்னீராயிரம கோத்திரமுடைத்தாகிய தெய்வேந்திர வமிஷத்தாரானவோர்களும்
(பழனி முருகன் கோவில் செப்பேடு - வரி 246 – 251)

மேலும் இதை உறுதிப்படுத்தும் விதமாக மூவேந்தர் ஆட்சிக்காலத்தில் மள்ளர்கள் உயர்ந்த குடியாக மதிக்கப்பட்டார்கள் என கல்வெட்டு சான்று கூறுகிறது.

“பிற்காலப் பாண்டியர்களின் தொடக்கக்காலம் முடிய பெரும் செல்வாக்கில் பள்ளர் இனம் இருந்திருக்கிறது. ஆதலால்தான் கி.பி. 1258 – ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானத்தைக் குறிக்கும் கல்வெட்டில் (Inscription of Chengam in Tiruvannamalai District) மன்றாடி, உவச்சர், பெரும்வேடர், பாணர், பறையர், பறைமுதலி, சக்கிலி, இருளர் ஆகிய பல்வகைக் குடிகளின் பெயர்கள் காணப்பெறுகையில் மள்ளர் அல்லது பள்ளர் அல்லது மல்லர் பெயர் காணப்படவில்லை. ஆதலால் இவர்கள் உயர் குடியாகப் கருதப்பட்டிருக்கின்றனர். (முனைவர். நடன. காசிநாதன் – வரலாற்றில் தேவேந்திரர்கள் பக். 91)

அதேபோல் திருவிதாங்கூர் சமஸ்தானம் அன்றை காலத்தில் நிலவிய சூழ்நிலையை கருத்தில்கொண்டு 18 சாதிகளை கொண்ட தாழ்த்தப்பட்ட (தீண்டத்தகாத) சாதிகள் பட்டியலை வெளியிட்டது. மள்ளர் அல்லது பள்ளர் அல்லது தேவேந்திர குல மள்ளர் சமூகத்தின் உட்பிரிவுகள் எதும் அதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அச்செய்தி வருமாறு

“சாணார் இடையர் சாதி வணிகருடன்
நாணாத காவேரி நல்ல துலுக்கப்பட்டர் முதல்
சூத்திரர் பிரமார் தொல் வாணியர் பறையர்
கம்மாளர் ஈழவர் கருமறவர் பரவர்
வெம்மா நசுராணி, வேகாவண்டர் இடலையர்
சக்கிலியரோடு சாதி பதினெட்டும்.”
                  
                       (திருவிதாங்கூர் நிர்வாக ஏடுகள்)

என்று அரசனும், நம்பூதிரிகளும் தாழ்த்தப்பட்டவர்களாக ஒதிக்கி வைத்த 18 ஜாதிகளைப் பட்டியல் இடுகிறது.


தோற்ற மன்னர்கள் வென்ற மன்னர்களின் அடிமைகள் என ஆள் ஓலையாக எழுதப்பட்டதை ஒரு பாடல் கல்வெட்டு காட்டுகிறது. இது மூன்றாம் குலோத்துங்கன் காலப் பாண மன்னன் கல்வெட்டு. தென்னார்காடு மாவட்டம் திருப்பாலப் பந்தலில் உள்ளது.

கல்வெட்டு வாசகம்
  1. ஸ்வஸ்திஸ்ரீ தாரு முடியு முரசுந் தமக்குரிய பாருமுடன் பார்வேந்தர் வீரப்பெருமா
  2. ள் மகதேவன் பேரெழுதித் தத்தந் திருமார்பில் ஆளோலை செய்து வன் மதுரை விட்டெ
  3. கடலான மால் வழுதி தென் மதுரை விட்டினறு தென் கடலான் நன்நுதலாய் ம(ல்)
  4. லார் தொள் மாகதர் கொமான்
(தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி – 17, எண்.177)

அதேபோல் சோழ மன்னன் காலத்தில் (வன்னியர்கள்) வில்லிகள் அடிமைகளாக கோயிலில் விற்க்கப்பட்டதற்க்கான ஒரு கல்வெட்டு சான்று கொடுக்கப்பட்டுள்ளது.

கி.பி. 1119 – ல் பாண புரத்து வில்லிகளில் ஒருவன் தன் குடும்பத்துப் பெண்கள் சிலரை தேவரடியார்களாக அர்பணித்து அவர்களுக்கு திருசூல முத்திரையிட்டான். 230 / 1921.
(கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி – சோழர்கள் புத்தகம்  (தமிழ்) – 2, பக்கம் 729, 730)
இக்கல்வெட்டுச் சான்றுகளை வைத்துக்கொண்டு பாண மன்னர்களான வாணதிராயர் வம்சத்தினர், வன்னியர்கள்  அடிமைகள் (சூத்திரர்கள்) என கூறமுடியுமா?

அக்காலத்தில் ஒருவர் அரச அதிகாரத்தில் உள்ள முக்கியமான பதவியான மந்திரியாக இருந்தபோதிலும் அவர் சூத்திரர்கள் செய்யகூடிய செயல்களில் ஈடுபடுவாராயின், அவர் சூத்திரர் என மற்றவர்களால் அழைக்கப்பட்டுள்ளார் என்பதை கீழ்கண்ட கல்வெட்டு சான்று கூறுகிறது. அல்லது முதலாம் குலோதுங்கனால் வெற்றிகொள்ளப்பட்ட எதிரி நாட்டு மன்னரின் மந்திரிகளின் ஒருவராகவும் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.  எதுவாயினும் வைஸ்ணவன் ஒருவன் சூத்திரர் என அழைக்கப்படுவதிலிருந்து அக்காலத்தில் வர்ணாசார முறையில் மக்கள் பிறந்து வாழவில்லை என்பது உறுதியாகிறது.


முதலாம் குலோதுங்கன் காலத்திய கி.பி 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றில் "பூவளூர் தலைவனும், வைஸ்ணவனுமான நல்ல சூத்திரரில் முதன்மையான சோழன் மந்திரி மாவிருஞ்சோலை" என்று கண்டிருக்கிறது (ARE 271/1929). இதில் குறிப்பிடக்கூடிய மந்திரி வைஸ்ணவன் என்றும் சூத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார்.


அன்றைய காலகட்டத்தில் தாழ்ந்த சாதியாக அரிப்பன் என்ற சாதியே கல்வெட்டில் காட்டப்பட்டுள்ளது. இதை

"அந்தணன் முதல் அரிப்பன் கடையாக அனைத்துச் சாதியினரும்" என வாலிகண்டபுரம் கல்வெட்டு வரிகளும்(218 of 1921),

 "அந்தணன் தலைப்பாக அரிப்பன் கடையாக அனைத்துச் சாதிகளும்" என செங்கம் கல்வெட்டு வரிகளும் (379 of 1922) விளக்குகின்றன.

கி.பி. 1748 ஆம் ஆண்டு மன்னன் ஸ்ரீ வீர இரவி பால மார்த்தாண்ட வர்மா அவர்களால் வெளியிடப்பெற்றது நாகர்கோயில் திருவிதாங்கோடு செப்பேடு ஆகும். அதில் மன்னன் ஸ்ரீ வீர இரவி பால மார்த்தாண்ட வர்மா அவர்கள்  "பிரம்ம குல க்ஷத்திரியரான அனந்த பத்மநாபனுக்கு" நிலத்தை தானமாக கொடுத்துள்ளார் என்று கூறுகிறது.  நிலம் இல்லாத ஏழை விவசாயிக்குத்தான் அக்காலத்தில் நிலம் தானமாக கொடுப்பது நடைமுறையில் இருந்துள்ளது. இந்த ஏழை விவசாயி ஒரு போர் வீரன் (க்ஷத்திரியர்) என்பது குறிப்பிடத்தக்கது.




மேலே குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டு இரண்டு மன்னர்களை ஐய்யர் என குறிப்பிடுகிறது. ஆதலால் அவர்களை இன்றைய பிராமண சமூகத்தவர்கள் என்று கூறமுடியுமா? 


மேலே குறிப்பிட்ட சான்றுகளில் இருந்து அக்காலத்தில் பலதரப்பட்ட சமூக மக்கள் இருந்தார்கள் என்பதும் அவர்களிடம் வர்ண கோட்பாடு இல்லை என்பது தெளிவு பெறுகிறது.


(தொடரும்)

No comments:

Post a Comment