Saturday, 27 January 2018

க்ஷத்திரியர் என்பது ஒரு ஜாதியா? பகுதி - 6 - Pandyan Mallar


இங்கு தொல்காப்பியத்தில் அந்தனர், அரசர், வணிகர், வேளாளர் என்று குறிப்பிடப்படுவதை வட இந்திய "நால்வர்ணம்" அதாவது "பிராமணர்", "க்ஷத்திரியர்", "வைசியர்", "சூத்திரர்" கோட்பாட்டை தமிழகத்தில் பொருத்திப்பார்ப்பது தவறான செயல் என்று பல வரலாற்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.


ஒரே குடும்பத்தில், ஒருவன் அந்தணனாகவும், ஒருவன் அரசனாகவும், ஒருவன் வணிகனாகவும், ஒருவன் வேளாளனாகவும், ஒருவன் கைத்தொழிலாளியாகவும், ஒருவன் கூலிக்காரனாகவும் பிறக்கலாம்.
(தேவநேய பாவாணர் - மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை பக். 102 )


சமஸ்கிருதத்தில் வழங்கும் ஒரு முக்கியப் பழமொழி, ‘பிறப்பால் அனைவரும், சூத்திரரே, குணத்தினால்தான் பிராம்மணன், க்ஷத்திரியன், வைஸ்யன் என்றாகின்றனர்’ என்கிறது.


மூவேந்தர் ஆட்சி காலத்தில் க்ஷத்திரியர் என்ற சொல் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளதற்க்கு இவ்வாறு வரலாற்று அறிஞர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். இதை எல்லாம் கருத்தில்கொள்ளாமல் சிலர் சோழர்கள் க்ஷத்திரியர் சாதியை சேர்ந்தவர்கள் என மீண்டும், மீண்டும் ஒரு பொய்யை சொல்லி வரலாற்றை திருத்தி எழுதுகின்றனர்.  அதை அச்சமூகத்தை சேர்ந்தவர்களும், அப்பாவி மக்களும் நம்புவது வேடிக்கையாக இருக்கிறது.


கி. மு. 321 முதல் 297 வரையில் மெளரிய சந்திர குப்தன் வட இந்தியாவில் ஆட்சி புரிந்தான். இவர் காலத்தில் இந்தியாவிற்க்கு வந்த கிரேக்க அறிஞர் மெகஸ்தீன் இந்தியாவையும், இந்திய மக்களையும் பற்றி எழுதியுள்ளார். அவர் எழுதிய நூலில் அக்காலத்தில் வாழ்ந்த மக்களிடம் வர்ணாசிர முறை இல்லை என்பதை மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அக்காலத்தில் வாழ்ந்த மக்களில் இரண்டாம் படிநிலையில் இருந்தவர்கள் உழவர்கள் (ஏர்த் தொழில்) என குறிப்பிடுகிறார். இவர்கள் போர் காலங்களில் போரிலும் மற்ற நேரங்களில் வேளான் தொழிலிலும் ஈடுபட்டனர் என குறிப்பிடுகிறார். அக்காலத்தில் அரசர்க்கு என்று ஒரு தனி குலமோ அல்லது க்ஷத்திரியர் என்ற தனி குலமோ இருந்ததாக அவர் எங்குமே குறிப்பிடவில்லை. இந்திய மக்களின் ஏழு பிரிவு பற்றி அவர் எழுதியுள்ளதை கீழே கொடுத்துள்ளோம்.


இந்தியர் ஏழு வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். தத்துவஞானத்தில் தேர்ந்த ஒரு கூட்டத்தினர் முதற் சாதி யாராகக் கொள்ளப்பட்டனர். மற்றைக் கூட்டத்தினரை விட இவர்களின் தொகை குறைவாயிருந்தது. இவர்கள் எசமானராகவோ வேலைக்காரராகவோ இருக்கவில்லை. மறு உலகத்துக்குரிய கருமங்களை எல்லாம் இவர்கள் நன்கு அறிந்திருந்தார்களென்று மக்கள் நம்பினார்கள். ஆகவே, மக்கள் இவர்களை மரணச் சடங்குகள் புரிவதற்கும், உரிய காலங்களிற் கடவுட் பலியைச் செலுத்துதற்கும் அழைத்தார்கள். இவ்வகைக் கிரியைகளைச் செய்வதற்குப் பதில் உபகாரமாக இவர்கள் மிகுந்த பொருளைப் பெற்றார்கள்.  பொது மக்கள் இவர்களால் பெரிய நன்மைகளை அடைந்தனர். ஆண்டின் ஆரம்ப காலத்தே மக்கள் கூடியிருப்பார்கள். அப்போது இவர்கள் அவ்வாண்டில் நிகழ இருக்கும் பிணி, பஞ்சம், காற்று, மழை ஆகியவற்றை அறிவிப்பார்கள். இவற்றை அறிந்துகொண்ட மக்களும், அரசனும் நிகழவிருக்கும் துன்பங்களைத் தாங்க ஆயத்தமாக இருந்தார்கள். தாம் கூறிய வருங்காலப் பலன்களிற் பொய்த்த தத்துவஞானிகள் தமது ஆயுளின் மீதிக் காலத்தை நிகழ்காலப் பலன்களைக் கூறாது மெளனமாகக் கழித்தனர். (தமிழ் நூல்களில் மூன்று காலமும் உணர்ந்தோர் எனக் கூறப்படும் அறிவர் என்னும் குழுவினரே இவராதல் கூடும்.)



இவர்களுக்கு அடுத்தபடியிலுள்ளளோர் ஏர்த் தொழிலுக் குரியோராவர். இவர்கள் மற்றவர்களிலும் கூடிய தொகையினரா கவிருக்கின்றனர். இவர் போர் முதலிய பொதுக் கருமங்களுக்குரிய காலத்தைத் தவிர மீதி நேரம் முழுவதையும் நிலத்தைப் பண்படுத்திப் பயிரிடுவதிற் செலவிடுகின்றனர். நாட்டின் மீது படையெடுத்து வருவோர் இவர்களேத் துன்புறுத்துவதில்லை. பொது நன்மைக்குரியவர்கள் என்னும் எண்ணத்தினுல் இவர்கள் எல்லா அபாயங்களில் நின்றும் காப்பாற்றப்படுகின்றனர். பகைவரால் அழிக்கப்படாதனவும். மிக்க விளைவைக் கொடுப்பனவுமாகிய நிலங்களின் பயன் நாட்டுமக்களின் உணவுக்குப் போதுமானதாகவிருந்தது. இவர்கள் குடும்பங்களோடு நாட்டையே தமக்கு உறைவிடமாகக் கொள்வர். நகர வாழ்க்கையை இவர்கள் விரும்புவதில்லை. இந்திய நாடு முழுமையிலுமுள்ள நிலம் அரசனுக்குச் சொந்தமானது. மக்கள் எவரேனும் சொந்தமாக நிலம் வைத்திருக்க அனுமதிக்கப்படுவதில்லை. நில வரியைத் தவிர விளைவின் நாலி லொன்றும் அரசனுக் குரியதாயிருந்தது.



மூன்றாவது படியிலுள்ளோர் இடையர். இவர்கள் பெரும்பாலும் ஆடுமாடுகளை மேய்ப்பவர். இவர்கள் காட்டிலாவது நகரங்களிலாவது நிலையாக வாழாது, கட்டாரங்களின் கீழ்த்தங்கினர்; வேட்டையாடியும், பொறிவைத்தும் துட்ட விலங்குகளைப் பிடிக்கின்றனர்.


நாலாவது படியிலுள்ளோர் சிற்பிகள். இவர்களிற் சிலர் போர் ஆயுதங்களேச் செய்தனர். சிலர் பயிரிடுவோருக்கும் பிறருக்கும் வேண்டிய கருவிகளைச் செய்து கொடுத்து அவர்களுக்குத் துணையாக இருந்தனர்.


ஐந்தாவது படியிலுள்ளோர் போர்வீரர்கள்(படைப்பிரிவினர்) இவர்கள் போர் செய்யும் முறைகளிற் பயின்றிருந்தனர். தொகையளவில் இவர்கள் இரண்டாவதாக இருந்தனர். போரில்லாத காலங்களில் இவர்கள் பொழுது போக்குகளிலும், சோம்பித்திரிதலிலும் காலத்தைப் போக்கினர்.


ஆறாவது படியிலுள்ளோர் கண்காணிமார். நாட்டில் நடப்பவற்றை எல்லாம் அறிந்து, அரசனுக்குச் சொல்வது இவர்களுக்கு வேலையாகவிருந்தது. இவர்கள் அரசன் இல்லாத இடங்களில் நியாயம் வழங்கும் அதிகாரிகளிடத்து தாம் கண்டறிந்தவற்றை அறிவிப்பர்.


ஏழாவது படியிலுள்ளோர் பொதுக் கருமங்களில் ஆலோசனை கூறும் கூட்டத்தினராவர். மற்றவர்கள் எல்லோரையும்விட இவர்கள் சிறு கூட்டத்தினர். உயர்ந்த ஒழுக்கத்துக்கும், அறிவுக்குமாக இவர்கள் மதிக்கப்படுகிறார்கள். அரசனது பொருள் அறைகாப்பு வேலைக்கும், அரசனுக்கு ஆலோசனை கூறுவதற்கும் இக் கூட்டத்தினின்று தான் சிலர் தெரிந்தெடுக்கப் படுகின்றனர். படைத்தலைவனும், தலைமை நீதிபதியும் இவ்வகுப்பைச் சேர்ந்தவர்களே. இந்திய அரசாங்கம் இவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கின்றது.

( கிரேக்க அறிஞர் மெகஸ்தீனும் இந்தியாவும் – நாசி. கந்தையா பிள்ளை - தமிழர் சரித்திரம் பக். 94 - 96  )



க்ஷத்திரியர் என்பது ஒரு ஜாதி என்றால் இந்தியாவில் இன்று க்ஷத்திரியர் என ஜாதி சான்றிதல் வைத்திருக்ககூடியவர்கள் அனைவரும் ஒரே சமூகமாக இருக்கவேண்டும். அல்லது அவர்கள் அனைவருடைய குலத்தொழிலும் ஒரேமாதிரியாக இருக்கவேண்டும். அல்லது குறைந்த பச்சம் ஒரே மாநிலத்திற்க்குல் க்ஷத்திரியர் என ஜாதி சான்றிதல் வைத்திருக்ககூடியவர்கள் அனைவரும் ஒரே இனக்குழுக்களாக இருக்கவேண்டும்.  ஆனால் மேலே குறிப்பிட்ட எதுவுமே பொருந்தவில்லை என்பதுதான் உண்மை.


மேலும் திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் தாழ்ந்த ஜாதிகள் பட்டியலில் சாணான் என்ற நாடார் இனம் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால் 19 - 20 ம் நூற்றாண்டில் மாவட்டவாரியாக மேனுவல் தொகுத்தனர். அதில் திவான் ஆர். நாகமையா என்பவரால் தொகுக்கப்பட்ட திருவாங்கூர் 'மாவட்ட மேனுவல்' சாணார்கள் பற்றிக் குறிப்பிடுகையில் மிகத் தெளிவாக, 'வலங்கை உய்யக்கொண்ட இரவி குல   க்ஷத்திரியர்கள்'    என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.   இவர்கள் மன்னர் பரம்பரை கிடையாது ஆனால் இவர்கள் சமூகத்தைச்சார்ந்த ஏனாதி என்பவர் படை பயிற்றுவிப்பவராக இருந்துள்ளார். ஆதலால் இவர்களுக்கும் க்ஷத்திரியர்கள் என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.


அதேபோல் இந்தியாவில் க்ஷத்திரியர் என்று அறியப்பட்ட சமூகங்கள் அனைத்தும் ஒரே குடியை சேர்ந்தவை இல்லை என்பதை தெளிவு படுத்தலாம். ஏனெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சமூகங்களின் குலத்தொழில் வெவ்வேறானது என்பது குறிப்பிடத்தக்கது.


1. தேவேந்திர குல மள்ளர் (குடும்பர், க்ஷத்திரிய குடும்பி, க்ஷத்திரிய குடுமி, க்ஷத்திரிய குர்மி, வர்மன், கடையர், பட்டேல், மல்லர், மள்ளர், காலாடி, மண்ணாடி, பன்னாடி, பள்ளி, தேவேந்திர குலத்தான், மூப்பன், வொக்கலிக்கா (கெளடா), கடம்பர் ………………………………………….)

2. வன்னிய குல க்ஷத்திரியர் (காடவர், காமுண்டர்)

3.காகத்தியர்கள்

4.இரஜபுத்திரர்கள்

5.ஜாட்

6.குச்ஜார்

7.மெளரியர்

8.சாக்கியர்

9. மராட்டியர்கள்.

10. க்ஷத்திரிய நாயக்கர்

11. க்ஷத்திரிய ராஜூக்கள்

12. செளக்கான்

13. Balinese Kshatriya

14. Jhetty Kshatriya

15. Javanese Kshatriya

16. Koliya Kshatriya

17. Manipuri Kshatriya

18. Samantha Kshatriya

19. Tripuri Kshatriya

20. Khandayat Kshatriya

என்று இந்தியாவில் பல சமூக மக்களும் தங்களை க்ஷத்திரியர் என பெருமையாக அழைத்துக்கொள்கின்றனர்.


அதேபோல் மள்ளர்கள் சமூகத்திற்க்கு க்ஷத்திரியர் பட்டமும் அதற்க்கு மேலான சக்கரவர்த்தி, பட்டமும் உண்டு என்பதற்கு ஆதாரமான பல கல்வெட்டுச் சான்றுகளை இனைத்துள்ளோம். மேலும் அரசப் பள்ளர், அரசக் குடும்பன் என செப்பேடுகளும், ஓலைச்சுவடிகளும் நேரிடையாகவே மள்ளர் சமூகத்தை குறிப்பிடுகிறது. மேலும் தேவனாம்பெட்டி செப்பேடு குடும்பர்களை அரசகுலத்தவர் என்றே குறிப்பிடுகிறது.  இதற்க்கு இன்று க்ஷத்திரியர் சமூகத்தவர்கள்தான் மூவேந்தர்கள் என உரிமைகோருபவர்கள் பதில் கூறுங்கள் பார்க்கலாம்.

1. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் இருவப்பபுரம் பெரும்படைச் சாத்தன் கோயில் கல்வெட்டு. (கி.பி.1815) (பழங்காசு காலாண்டிதழ் ஏப்ரல் 2003.1/385, சீதக்காதி தெரு காட்டூர், திருச்சி) 

கல்வெட்டுச் செய்தி:

கோயில் பூசாரி பாறை சுப்பக்குடும்பன் மகன் கரை அடி ஊர் கோடாங்கி, 'ஸத்திரிய ஆழ்வார்' இருளக் குடும்பன்.

2. கல்வெட்டு வாசகம் (வரி 57- 64)

--------(வரி 57 – 60) கோப்பரகேரிபன்மரான உடையார் ஶ்ரீராஜேந்திர தேவற்கு 30- அவது -------------------
 ------------(வரி 64) இத்தேவற்கு ஶ்ரீ காரியம் பார்க்கின்ற சந்திரன் தாநதொங்கனான கடாரங்கொண்ட சோழ மாயிலாட்டி ………………….. கின்ற “சத்திரிய மல்லத்(ர்) தெரிந்த வலங்கை வேளைக்காறறில் பெருமான் சென்னியும் திருக்குடக்கில் மூலபருடையர்க்காக (ஶ்ரீகோயில்) வாரியம் செய்கின்ற கவிணியன் வாசுதேவன் சேத்தனும் காசயவன் இராமதேவநாராயணனும்”……………………..
 தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி - 6 எண் – 33

3. க்ஷத்ரிய சிங்க மூவேந்த வேளாரும், (A.R.E. 1916 Intro P.119)

செங்கள்பட்டு மாவட்டம், திருமுக்கூடலில் உள்ள வீரராஜேந்திர சோழனின் 5 – ஆம் ஆண்டு கல்வெட்டு (கி.பி. 1068) ஒன்று "க்ஷத்ரிய சிங்க மூவேந்த வேளாரும்" என்று குறிப்பிடுகிறது (Selected Inscriptions of Tamil Nadu, Serial No. V : 3, page - 143).


4.பழனி தெவஸ்தான வரலாற்றில் “பால ராச என்னும் க்ஷத்திரிய ராசாக்கள் ஆண்டுவரும் நாளையில்” என்று வாசகம் இடம்பெறும் இது ஜான் மெக்கன்சியின் தொகுப்பில் உள்ளது. (பழனி வரலாற்று ஆவணங்கள் என்ற நூலில் புலவர் ராசு வெளியிட்டுள்ளார்)

5.கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் எடக்கல் மலை குகைக் கல்வெட்டு. (இந்திய தொல்லியல் துறை ஆய்வறிக்கை 1897 எண் 120-123, E. HULTSCZH) 

"விஸ்ணுவர்ம்ம குடும்பிய குல வர்த்த நஸ்ய லிகித" (விஸ்ணு வர்மனின் குடும்பர் குலம் வளர எழுதியது) இங்கு 'வர்மன்' என்பது "சத்ரியன்" என்பதைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும்.

(இந்தியாவில் OBC List – ல் உள்ள சாதிகளில் க்ஷத்திரியர் பிரிவில் உள்ள சாதியான க்ஷத்திரிய குருமி (குடும்பன்) உட்பிரிவுகள் க்ஷத்திரிய குருமி, க்ஷத்திரிய குடுமி, வர்மன், பட்டேல், கடையர்)

6. சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கல்வெட்டு (தெ.க. 8/178, கி.பி. 1098) நிலம் விலை முடுக்கப்பட்ட செய்தியை கூறுகையில்.

கீழக்கோட்டையாளன் கலங்காத கண்ட நல்லூர் தேவன் தொங்கனான மாளவ தேவேந்திரப்ப அரையன் – சக்கரவர்த்தி மல்லனான அஞ்சாத கங்கராயன் எழுத்து.


7. உத்திரமேரூர் கல்வெட்டு - 1

தேவேந்திரன் சக்ரவர்த்தி
 ஸ்ரீ வீரநாராயண ஸ்ரீ பாரந்தக சோழர் காலம்

இவ்வாண்டு முதல் சந்திராதித்தவத் என்றும் குடவோலை வாரியமேய இடுவதாக “தேவேந்திரன் சக்ரவர்த்தி ஸ்ரீவீரநாராயண ஸ்ரீ பராந்தக தேவர்” ஆகிய பரகேசரி வர்மர் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக்காட்ட

8. உத்திரமேரூர் கல்வெட்டு - 2

இவ்வாண்டு முதல் சந்த்ராதித்யவத் என்றும் குடவோலை வாரியமே இடுவதாக “தேவேந்திரன் சக்ரவர்த்தி” பட்டிதவச்சவன் குஞ்சர மல்லன் சூரா சூளாமணி கல்பகசரிதை ஸ்ரீ பரகேசரிபன்மர்கள் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக் காட்ட ஸ்ரீ ஆளஞயா

9. பழனி செப்புப் பட்டயத்தின்
 பள்ளு சாதியின் உட்பிரிவுகள்

வரி 174 - 180
அரச பள்ளற்
தேவேந்திர பள்ளன்,
சோழியப் பள்ளன்,
பாண்டியப் பள்ளன்,

வரி 187 – 191
அரச பள்ளற்,

10. நத்தம் கோயில் செப்பு பட்டயம்

பள்ளு சாதியின் உட்பிரிவுகள்
அரச பள்ளற்
தேவேந்திர பள்ளன்,
சோழியப் பள்ளன்,
பாண்டியப் பள்ளன்,
வன்னியப் பள்ளன்,

11. மானூர் மள்ளர், ஆசாரிமார் செப்பேடு

திருப்பாசத்தி அரச குடும்பன்
தேவேந்திர குடும்பன்
பாண்டிய பள்ளு
சோழிய பள்ளு

12. மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர் வம்சத்து திருமண வாழ்த்துப் பாடல் (ஓலைச்சுவடி)

அரசக்குடும்பன் மகன் சின்னபாப்பான் குடும்பன்

என்று கூறுகிறது.



மேலே கொடுக்கப்பட்ட பல சான்றுகள் இந்தியாவில் க்ஷத்திரியர் என்ற பட்டத்தை பல சமூகத்தவர்களும் இன்றும் பயன்படுத்துகின்றனர் என்பது தெளிவாகிறது. கிரேக்க அறிஞர் மெகஸ்தனீஸ் குறிப்பிலிருந்து சங்க காலத்தில் க்ஷத்திரியர் என்ற இனக்குழு தமிழகத்தில் இல்லை என்பது உறுதியாகிறது. மேலும் கல்வெட்டு மற்றும் செப்பேட்டுகள் மள்ளர் சமூகத்தை அரச குலத்தவர்கள் என யாரும் மறுக்க முடியாத ஆதாரபூர்வமா சான்றுகளை தெரிவிக்கிறது.




(தொடரும்)

No comments:

Post a Comment