Wednesday, 13 June 2018

குற்றமும் தண்டனையும் பகுதி - 11 PandyanMallar


குற்றமும் - தண்டனையும் பகுதி - 11

x---------x----------x-----------x------------x



மூவேந்தர்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்தவுடன் அவர்களின் உயிர்நாடியான பெரும்பான்மை விளைநிலங்கள் அன்னியர்களால் எவ்வாறு அபகரிப்பட்டது என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம். மேலும் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில்கூட கள்ளர்கள் ஒரு நாகரிகமற்ற இனக்குழக்களாக வாழ்ந்து வந்ததை கள்ளர் சபை விதிகளும் அவர்கள் அதை நிறைவேற்றிய விதமும் நமக்கு தெளிவாக காட்டுகிறது. ஆனால் மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் மள்ளர் இனக்குழு ஒரு சிறந்த பண்பட்ட வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளனர் என்பதை பல கல்வெட்டுகள் நமக்கு சான்று பகர்கிறது.


மருத நில உழவர் இடைக்காலத்தில் வேளாளர், வெள்ளான் குடி என வழங்கியதாகக் கண்டோம். இக்காலத்தில் வெள்ளாளர் குடும்பும் புரவுஞ் செய்தனர்(ARE 98 /1897 and SII Vol. VI No.98) என்றும், சமூகத்தில் உயர்நிலையில் இருந்ததாகவும் (ARE. 104 / 1908 and ARE 200 / 1929) இவரை சிறை பிடிக்கக் கூடாது என்றும் (SII Vol. IV. No. 48 and ARE 96 /1897), இம் மரபு பெண்டிர் அம்பலம் ஏறக் கூடாதென்றும் (SII Vol. XIII No. 312) கொலைக் குற்றங்களுக்கு இம்மரபினர் மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டனர் என்றும் ARE 200 / 1929) கல்வெட்டுகள் சான்று குறிப்பிடுகின்றது. இக்கருத்தைக் அறிஞர்கள் பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.


சங்க காலம் தொட்டு மூவேந்தர்களின் பொற்க்கால ஆட்சி முடியும்வரை நீதி வழங்கும் பொறுப்பானது ஊர்ச் சபையினரிடமும், ஊர் குடும்பர் என்ற நாட்டார்கள், பிரமதேயக் கிழவர்கள், குலப் பெரியதனக்காரரிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர்கள் நடந்திய அமைப்பிற்கு கிராம சபைகள், நாட்டார் சபை, குடும்பர் சபை, சித்திரமேழி சபை என்று பெயர். அவர்கள் நடத்தும் நிர்வாகத்திற்கு குடும்பு முறை என்றும் நாம் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் சிலர் சதுர்வேதி மங்களத்தில் வாழ்ந்த பிரமதேயக் கிழவர்கள் இன்றைய பிராமணர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றும், அந்த சதுர்வேதி மங்களத்து ஸபையில் குடும்பு பார்த்தவர்கள் பிராமணர்கள் என்றும் ஒரு பொய்யான செய்தியை திரும்ப, திரும்ப சொல்லிவந்தனர். இந்த வாதம் பொய் என்பதை கீழ்காணும் குடும்பர் சபை கல்வெட்டு உறுதி செய்கிறது.

மூன்றாம் குலோத்துங்க சோழன். (பொ. ஆ. 1178-1218) காலத்தில் வளநாட்டில் உள்ள வேளாநாட்டில் அமைந்துள்ள பிரம்மதேயம் ஸ்ரீ இராசேந்திர சோழச் சதுர்வேதிமங்கலத்து சபையார்களும், பட்டர்களும், மகாஜனங்களும் உலக முழுதுடையச் சதுர்வேதி மங்கலத்தில் நகரீஸ்வர முடையார் திருக்கோயிலின் திருமண்டபத்தில் கூடி தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர். இதன்படி கூரை கட்டணங்கள், நிலையாள் முதலியவை முன்னர் நடைமுறையில் உள்ளபடியே செய்யவும் நெல், மஞ்சள், காசு முதலியவை தவிர்த்தும், வெள்ளாளர், தச்சர், கொல்லர் அரிப்பேறு மாற்று கொல்ல வேண்டாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவற்றுடன் குடும்பர்களுக்கு பரிசட்டம் இட்டு காரியத்திற்கு கடவ வேண்டும் என்றும் குடும்பர்கள் இல்லாமல் மற்றொருத்தருக்கும் பரிசட்டம் சூடக்கடவ வேண்டாம் என்றும் குடும்பர்களின் சபையில் ஒரு வருடம் குடும்பு செய்துக் கொள்ளலாம் என்றும் தீர்மானித்துள்ளனர்.

கல்வெட்டுச் செய்தி:
x-------x--------x--------x

1. திரிபுவனச்சக்கரவத்திகள் மதுரையும் ஈழமும் கருவூரும் பாண்டியன் முடித்தலையும் கொண்டு வீரா அபிஷேகமும் விசையா அபிஷேகமும் பண்ணி ... திரையோ தெசியும் செவ்வாக் கிழமையும் பெற்ற

2.புணர்பூசத்து நாள் குலோத்துங்க சோழ வளநாட்டு வெளாநாட்டு ப்ரஹம்தேயம் ஸ்ரீராஜெந்தர சொழச்சதுர்வேதி மங்களத்து ஸபையாரும் பட்டர்களும் மஹாஜனங்களும் இந்தை நாளால் இந்நாட்டு உலகமுழுதுடைச் சதுர்வெ

3.தி மங்கலத்து உடையார் நகரீஸ்வரமுடையார் கோயில் திருமண்டபத்திலே சபையாரும் பட்டர்களும் மஹாஜனமும் நடந்திருந்து க்ரம்.... மாயிருப்பு...பயங்கரன் தோப்பு பண்டாடு பழநடை செய்து வரும்

4.கூரைகட்டணங்கள் முன்பிலாண்டுகள் செய்துவரும்படியே செய்யக்கடவர்களாகவும் நிலையாளும் முன்பிலாண்டுகள் செய்து வரும் படியே செய்யக் கடவர்கள்...ற வறுப்புக்கு ஒக்கும் அரிசியும் பயறும் பண்டாடு... ப...

5.ழநடை தாங்களெ எடுக்கக்கடவர்களாகவும் அரிசிக்கு முன்பு எழுதின நியோகப்படியெ... வின்மெல்பட்ட அரிசிக்கு இரட்டி நெல்லுக் கைக்கொண்டு... கொள்ளக் கடவதல்லாதுதாகவும் மஞ்சணைக்கு

6.சில தேவர்களுக்கு ப்ரஸாதஞ் செய்தருளின திருமுகப்படி ஒடுக்கக் கடவ காசு நீக்கி ஆயமென்று வெள்ளாளரை தண்ட கடவதல்லாதுதாகவும் தேவர்கன்மிகள் தேவைக்கு... படிக்கொள்ளக் கடவதன்று என்று பிள்ளை-

7.ஒலை வருகையால் மாவிஞ்சு காசும் நெல்லும் தண்டக்கடவ தல்லாது தாகவும் தைச்சர் கொல்லர் அறிபெரும் கொள்ளக் கடவதல்லதுதாகவும் நிச்சயித்து எழுதின நியோகப்படி ஆளி இடக்கடவதாகவும்

8.குடும்பற்குப் பரிசட்டம் இட்டுதாகில் காரியத்துக்கு கடவ குடும்பர் ஒழிய மற்றொருத்தரும் பரிசட்டம் சூடக்கடவதல்லாது தாகவும் குடும்பர் ஸ்பையில் ..... ஒராண்டு குடும்பு செய்யக் கடவர்களாகவும் குடும்பரும், ... ,

(முற்றுப் பெறவில்லை )

(அய்யம்பேட்டை குடும்பர்சபைக் கல்வெட்டு -  ஆவணம் இதழ் 27 / 2016, தமிழகத் தொல்லியல் துறை - தஞ்சாவூர்).


சோழர் ஆட்சிக் காலத்தில் குடும்பர்கள் எவ்வாறு மதிக்கப்பட்டார்கள் என்பதைக் இந்த குடும்பர் சபை கல்வெட்டு உலகிற்க்கு  பறை சாட்டுகிறது.


(தொடரும்)

Tuesday, 12 June 2018

குற்றமும் தண்டனையும் பகுதி - 10 PandyanMallar


குற்றமும் - தண்டனையும் பகுதி - 10

x---------x----------x-----------x------------x


கி.பி.1178-1230 ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டு ‘வேளாளக் குடிக்கு மட்டுமே இந்த தண்டனையிலிருந்து விலக்கு’ (மரண தண்டனையில்) என்ற ஒரு கல்வெட்டுக் குறிப்பு தெரிகின்றது (ARE 200/1929). இது வேளாண் குடிக்கு பெரும் சிறப்பை ஏற்படுத்தியதாக கருதலாம்.


கி.பி.997 இல் பொறிக்கப்பட்ட ராஜராஜனின் 12 ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு, திருவாண்டார் கோயிலுக்காக இறையிலியாக (வரிவிலக்கு) விடப்பட்ட நிலத்துக்காக, அந்த ஊர் சபையினரான திருபுவனமாதேவி சதுர்வேதிமங்கலம் அந்த நிலத்து வேளாண் இடம் வரியை வசூலித்துக் கட்டி விடுகின்றனர். இதை எதிர்த்து அந்த நிலத்து வேளாண் கோயிலில் முறையிட, கோயில் நிர்வாகி (தேவகண்மி) தர்மாசனத்தை நாடுகிறார். தர்மாசனம் ஊர் சபையினரைக் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் பொதுப்பணத்திலிருந்து 25 கழஞ்சு பொன் கோயிலுக்கு தண்டனையாகச் செலுத்த வேண்டும் என்றும், அப்படி வரி வசூல் செய்தவரிடம் ‘வெட்டி’ யாக வசூல் செய்யப்பட்டு, இந்த தீர்ப்பை எதிர்ப்பவர் ஒவ்வொருவரும் 15 கழஞ்சு பொன் தர்மாசனத்துக்குக் கொடுக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.(ARE 362/1919). (திவாகர் - சோழர் காலத்துச் சட்டம் ஒழுங்கு, தண்டனைகள்)


இவ்வாறு ஆதிவேளாண்குடியான மள்ளர் சமூகத்திற்க்கு சில சிறப்பு சலுகைகள் மூவேந்தர் ஆட்சி காலத்தில் இருந்துள்ளது. அதேவேளையில் கொலை, களவு, பொய், கள்ளுண்ணல் போன்ற  மாபாதகங்களைச் செய்தவர்களுக்கு மிகப் பெரிய தண்டனைகள் கொடுத்துள்ளனர்.  கிராம சபை, நாட்டார் சபை போன்றவற்றில் பதவி வகித்தபின் கணக்குக் காட்டாதிருந்தவர் மற்றும், இவர்களின் உறவினர்களும், தாயாதியினர்களும் கூட தகுதியற்றவர்கள் எனக்  கி.பி 920 ஆண்டில் முதலாம் பராந்தக சோழர் காலத்தில் உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோயிலில் வெட்டப்பட்டிருந்த கல்வெட்டுகள் குறிப்பிடுகிறது.                                           

இவ்வாறு களவு, பொய் போன்ற மாபாதகங்களைச்  செய்த நபர்களுக்கு தண்டனைகள் கொடுத்ததுடன் அவர்களும் அவர்களின் உறவினர்களும் கிராம சபை, நாட்டார் சபை போன்றவற்றில் அங்கத்தினராக இருக்க அனுமதியில்லை என்பதால் களவு, வழிப்பறி போன்றவற்றை குலத்தொழிலாக கொண்டவர்கள் மிகவும் மனவேதனை அடைந்திருப்பர் என்பது உண்மையே.

மூவேந்தர் காலத்தில் கள்ளர்கள் களவு போன்ற கீழ்தரமாக தொழிலைச் செய்ததால் அவர்கள் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டதாக மேலே கண்ட சான்றுகள் நமக்கு உணர்த்துகின்றன. மூவேந்தர்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்தவுடன் இவர்களின் உயிர்நாடியான பெரும்பான்மை விளைநிலங்கள் அன்னியர்களால் அபகரிப்பட்டது என்பது வரலாறு கூறும் உண்மையாகும். இவ்வாறு மூவேந்தர்களால் பாதிக்கப்பட்ட அந்த கள்ளர்கள் சமூகத்தினர்கள் மூவேந்தர் வம்சாவழியான மள்ளர் சமூகத்தின் விளைநிலங்களை எவ்வாறு அபகரித்தனர் என்பதை கள்ளர் சபை தெளிவாக கூறுகிறது.


"மேலூர் நாடு முதலில் வேளாளர்களுக்குரியதாக அவர்கள் தங்கி வாழ்ந்து பயிர்த்தொழில் நடத்தி வந்த பகுதியாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் காஞ்சிவரம் மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ள நாட்டைச் சேர்ந்த கள்ளர் சிலர் அப்பகுதியிலிருந்து கைவேல், குறுந்தடி, குண்டாந்தட, வளரி ஆகியன ஏந்தி வேட்டை நாய்கள் தொடர வேட்டைக்குப் புறப்பட்டனர், அவர்கள் தங்கள் வேட்டையினிடையே ஒரு மயிலானது தங்கள் வேட்டை நாய் ஒன்றினை எதிர்த்து நிற்பதைக் கண்டனர். இதனைக் கண்டு மிகுந்த வியப்புக்கு உள்ளான அவர்கள் அந்த நாட்டில் வாழ்பவர்களும், அங்கு உறையும் உயிரினங்களும் மிக்க வீரமுள்ளனவாக இருத்தலால் அது நற்பேறு சேர்க்கும் நாடாதல் வேண்டும் என எண்ணினர். காஞ்சிவரம் பகுதியில் உள்ள தங்கள் நாட்டைவிட இந்த நாட்டில் வந்து குடியேறிப் பயிர்த்தொழில் செய்ய அவர்கள் விரும்பினர்.

அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் தங்களை வேளாளர் நற்கருத்தில் இடம் பெறும்படியாக ஆக்கிக் கொண்டனர். வேளாளர்களின் பணியாளர்களாகச் சேர்ந்த இவர்களை வேளாளர் அங்குத் தங்கி வாழ அனுமதித்தனர், காலப்போக்கில் அவ்வாறு தங்கியவர்கள் தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் தங்களோடு அழைத்து வைத்துக் கொண்டனர். புறத்தே வேளாளருக்கு நன்றியுள்ளவர்கள் போலவும் கீழ்ப்பணிந்து நடப்பவர்கள் போலவும் நடித்துவந்த இவர்கள் அதற்குரிய பயனைப் பெறும் காலம் கிட்டியது.

சிறிது காலம் சென்றபின் வேளாளர்கள் கள்ளர்கள் மேல் தங்கள் விருப்பம் போல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிக் கள்ளர்கள் அவர்கள் பணியின்போது செய்யும் தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் உரிய தண்டனைகளை விதிக்கத் தொடங்கினர். இதனால் கள்ளர்கள் ஆத்திரம் கொண்டனர். படிப்படியாக அவர்கள் தங்கள் பண்ணையார்கள் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி அவர்களைப் பலவந்தத்திற்கு உட்படுத்திப் பின்வரும் விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்றி நடக்கச் செய்யும்படியாக உடன் படிக்கை செய்து கொண்டனர்.

அவ் விதிகளாவன:-
x-------x------x-------x

1. ஒரு கள்ளனுடைய பல் உடையும்படியாக அவனுடைய ஆண்டை அவனை அடிப்பானாயின் அக் குற்றத்திற்கு ஈடாக அவர் பத்துச் சல்லிச் சக்கரம் செலுத்த வேண்டும்.

2. கள்ளனின் ஒரு காது மடல் அறுபட நேருமானால் வேளாளன் அவனுக்கு ஆறு சக்கரம் தண்டமாகத் தரவேண்டும்.

3. கள்ளனின் மண்டை உடைபடுமானால் வேளாளன் அதற்குப் பதிலாகத் தன் மண்டையை உடைத்துக் கொள்ளாவிடில் முப்பது சக்கரம் தண்டமாகக் கள்ளனுக்குச் செலுத்த வேண்டும்.

4. ஒரு கள்ளனின் காலோ கையோ முறிந்து போகுமாயின் அவனை அரை மனிதனாகக் கருத வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் குற்றம் இழைத்தவன் ஒரு கலம் விதைக்கான நஞ்சை நிலத்தையோ, இரண்டு கூர்கும் (Koorkums) புஞ்சை நிலத்தையோ கள்ளனுக்குத் தனி உரிமை உடையதாக ஆக்கி வைப்பதோடு மேலும் அந்தக் கள்ளனுக்கு ஒரு துப்பட்டியும் அவன் மனைவிக்குச் சேலையும் தருதல் வேண்டும். அத்தோடு இருபது கலம் நெல்லோ வேறு தானியங்களோ கொடுத்துக் கைச்செலவுக்கு இருபது சக்கரங்களும் தரக் கடமைப்பட்டவனாவான்.

5. ஒரு கள்ளன் கொலைக்கு ஆளாவானாயின் குற்றம் இழைத்தவன் நூறு சக்கரம் தண்டத் தொகை செலுத்துதல் வேண்டும். அல்லது கொலைக்கு ஆளானவன் பக்கத்தைச் சேர்ந்தவர்களால் அவனது உயிர் போக்கப்பட உடன்படல் வேண்டும். இந்த இரண்டில் ஒன்றுக்குக் குற்றம் இழைத்தவன் உடன்படும்வரை குற்றம் இழைக்கப்பட்டவன் கூட்டாளிகள் குற்றம் புரிந்தவன் உடமைகளைச் சூறையாடுவதோடு தங்களுடையதாகக் கொள்ளவும் உரிமை உடையவர்களாவர்.


தங்கள் ஆண்டைகளின் மீது இத்தகைய உடன்பாட்டுக்கு ஒவ்வாதனவாகிய விதிகளைச் சுமத்தி அடாத வகையில் மிகுதியான பொருளைத் தரும்படி வற்புறுத்தி வேளாளர்களைக் கள்ளருக்கு அஞ்சும்படியாகவும், கள்ளரின் தயவை நாடி நிற்பவர்களாகவும், கள்ளர்கள் விருப்பம்போல் ஆடுபவர்களாகவும் மடக்கிப்போட்டு அவர்களை ஏழ்மையில் வீழ்த்தி, அவர்கள் தங்கள் ஊர்களையும், உடமைகளையும் ஒருங்கே கைவிட்டு வேறு நாடுகளில் சென்று குடியேறும்படியாகச் செய்துவிட்டனர். நன்றி உணர்வும், பணிவுடமையும் உள்ளவர்களாக இருப்போம் எனக் கூறிய உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டு வேளாளர் பலரைக் கொலைக்கும் ஆட்படுத்தினர். இப்படியாகத் தங்கள் முந்தைய ஆண்டைகளைக் கொஞ்சமும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அற்றவர்களாக அவர்களுக்கு உரிய நாட்டை விட்டுத் துரத்திவிட்டுக் கள்ளர்கள் அப்பகுதியினை உரியவர்கள் மட்டும் அறிந்த காட்டுப் பகுதி என்ற பொருளில் துன் அர்ரச நாடு எனப் பெயரிட்டு ஆளத் தொடங்கினர். (இது தாங்களே ஆளும் நாடு எனவும் பொருள்படும் என மதுரை மாவட்ட விவரக் குறிப்பு விளக்கம் தந்துள்ளது.)

(எட்கர் தர்ஸ்டன் – தென்னிந்திய குலங்களும் குடிகளும் தொகுதி -3, பக். 76 - 78)

இங்கு வேளாளர் என்று சுட்டப்படுபவர் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களை குறிக்கும். ஏனெனில் கி.பி. 16- ஆம் நூற்றாண்டில் அரியநாயகம் மதுரை நாயக்கனிடம் அமைச்சனாக இருந்த போது, தமது உறவு முறையாரை தஞ்சை, திருச்சி, மதுரை முதலிய மாவட்டங்களில் ஊர்கள், நகரங்கள், கோட்டைகள் அமைத்து அவற்றில் குடியேற்றி, நில புலன்கள் வழங்கி ஆதரித்தான் என்பது வரலாறு கூறும் உண்மை. ஆதலால் அதற்க்குமுன் இங்கு குடியிருந்த அந்த வேளாண்குடி யாராக இருக்கும் என்பதை நான் விளக்க வேண்டியதில்லை.

(தொடரும்)