Sunday, 3 June 2018

குற்றமும் தண்டனையும் பகுதி - 7 PandyanMallar


குற்றமும் - தண்டனையும் பகுதி - 7

x---------x----------x-----------x------------x


உத்திரமேரூர் கல்வெட்டுகளை ஆய்வு செய்த முன்னால் தொல்பொருள் ஆய்வு துறை  இயக்குநர் டாக்டர் இரா. நாகசாமி அவர்கள் மூவேந்தர் ஆட்சி காலத்தில் நடைமுறையில் இருந்த கிராம சபையில் அங்கத்தினராக இருக்க தகுதியுடையவர்கள் யார்?, தகுதியற்றவர்கள் யார்? என்பதை கீழ்கண்டவாறு பட்டியல் இடுகிறார்.

தகுதியுடையார்:
x---------x---------x

1.கால் நிலத்துக்கு மேல் அரை நிலமுடையான்,
2.தன் மனையிலே அகம் எடுத்துக் கொண்டு இருப்பான்,
3.எழுபது பிராயத்தின் கீழ் முப்பத்தைந்து பிராயத்தின் மேற்பட்டான்,
4.மந்திர பிராம்மணம் வல்லான்,
5.ஓதுவித்தறிவான், அல்லது
6.அரைக்கால் நிலமே உடையான் ஆயினும் ஒரு வேதம் வல்லானாய், நாலு பாஷ்யத்திலும் ஒரு பாஷ்யம் வக்கணித்து அறிவான்,
7. அவர்களிலும் கார்யத்தில் நிபுணன்,
8. ஆசாரம் (ஒழுக்கசீலம்) உடையான்,
9.அர்த்த செளசமும் (பொருள் சுத்தம்) ஆன்ம செளசமும் (மனச் சுத்தம்) உடையான்,
10.மூவாட்டன் இப்புறம் வாரியம் செய்திலான், பெயர் தீட்டி குடம் புக இடுவதாகவும்.

தகுதியற்றோர்:
x--------x---------x

1.எப்பேர்ப்பட்ட வாரியங்களும் செய்து கணக்குக் காட்டாது இருந்தான்,
2.இவர்களுக்கு சிற்றவை பேரவை மக்கள்,
3.இவர்களுக்கு அத்தை மாமன் மக்கள்,
4.இவர்களுக்கு தாயோடு உடன் பிறந்தான்,
5.இவர்கள் தகப்பனோடு உடன் பிறந்தான்
6.தன்னோடு உடன் பிறந்தான்,
7.இவர்களுக்குப் பிள்ளை கொடுத்த மாமன்,
8.இவர்கள் பிராம்மணியோடு உடன் பிறந்தாளை வேட்டான்,
9.உடன் பிறந்தான் மக்கள்,
10.தன் மகள் வேட்ட மருமகன்,
11.தன் தமப்பன்,
12. தன் மகன்,
13.அகம்யாகமனத்திலும் மகாபாதகங்களில் முன்படைந்த நாலு மகாபாதகத்திலும் எழுதப்பட்டான்,
14.சம்ஸர்க்கப்பதிதரை பிராயச்சித்தம் செய்யும் ஆள்,
15.சாஹஸியராய் இருப்பான்,
16.பர திரவ்யம் அபகரித்தான்,
17.அப்பேர்ப்பட்ட கையூட்டும் கொண்டான்,
18.கிருத பிராயசித்தம் செய்து சுத்தன் ஆனான்,
19.பாதகம் செய்து பிராயச்சித்தம் செய்து சுத்தன் ஆனான்,
20.கிராம கண்டகராய் பிராயச்சித்தம் செய்து சுத்தன் ஆனான்,
21.அகம்யாகமனம் செய்து பிராயச்சித்தம் செய்து சுத்தம் ஆனான்

(உத்திரமேரூர் கல்வெட்டுகள்) - டாக்டர் இரா. நாகசாமி முன்னால் இயக்குநர் தொல்பொருள் ஆய்வு துறை)

உத்திரமேரூர் கல்வெட்டுகள் குறிப்பிடும் செய்திகளை நாம் உற்று நோக்கும்போது அக்காலத்தில் திருட்டு என்பது மிகப்பெரிய குற்றமாக எல்லோறும் ஏற்றுக்கொண்டுள்ளனர் எனக் நாம் கருதலாம். அவ்வாறு திருட்டு தொழில் ஈடுபட்ட நபர் மற்றும் அவரது உறவினர்கள் யாருமே சபையில் அங்கத்தினராக இருக்க தகுதியற்றவர்கள் என விதிமுறை இருக்கும் பொழுது திருடுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் கண்டிப்பாக மருதநிலத்தில் அரசை தோற்றுவித்திருக்க முடியாது என நுணிந்து கூறலாம். மேலும்  சோழ மன்னர் தேவேந்திரன் சக்ரவர்த்தி  ஸ்ரீ வீரநாராயணன் ஸ்ரீ பாரந்தக சோழர் காலத்தில் எழுதப்பட்ட  உத்திரமேரூர் கல்வெட்டுகள் மேலே கூறிய செய்திகளை உறுதி செய்வதுடன் அந்த சபையின் உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர்கள் யார்? என்பதை குறிப்பிடுகிறது.

உத்திரமேரூர் கல்வெட்டு - 1
 x---------x-----------x----------x
                                                                                                                                                            
அ) ஸ்வஸ்திஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரிவன்மர்க்குயாண்டு பனிரெண்டாவது   உத்திரமேருச் சதுர்வேதி மங்கலத்துச் சபையோம். இவாண்டு முதல் எங்கள் ஊர் ஸ்ரீ முகப்படி ஆணை

ஆ) இதனால் தத்தனூர் மூவேந்தர் வேளாண் இருந்து வாரியம் ஆக ஆட்டொருக் காலம் சம்வத்சர வாரியமும், தோட்ட வாரியமும், ஏரி வாரியமும் இடுவதற்கு வியவஸ்தை செய்

இ) பரிசாவது குடும்பு முப்பதாய் முப்பது குடும்பிலும் அவ்வக் குடும்பிலாரேய் கூடி
----------------------------------
ஓ) வாரியங்கள் ஒரு கால் செய்தாரை பிள்ளை அவ்வாரியத்துக்கு குடவோலை இடப் பெராததாகவும் இப்பரிசேய் இவ்வாண்டு முதல் சந்திராதித்தவத் என்றும் குடவோலை வாரியமேய இடுவதாக தேவேந்திரன் சக்ரவர்த்தி ஸ்ரீ வீரநாராயண ஸ்ரீ பராந்தக தேவர் ஆகிய பரகேசரி வர்மர் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக்காட்ட

ஓள) ஸ்ரீ ஆக்ஞையினால் தத்தனூர் மூவேந்த வேளாண் உடன் இருக்க நம் கிராமத்து துஷ்டர் கேட்டு கிஷ்டர் வர்த்த்திதிடுவாராக வியவஸ்தை  செய்தோம் உத்திர மேரு சதுர்வேதி மங்கலத்துச் சபையோம்.

( Archaeological Survey of lndia (ASI) - Annual Report, 1904 - 1905 pp 136 - 138)

 உத்திரமேரூர் கல்வெட்டு - 2
x---------x-----------x----------x
அ ) ஸ்வஸ்திஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரி வன்மர்க்கு யாண்டு பதினாலாவது நாள் பதினாறு காலியூர் கோட்டத்து தன கூற்று உத்திரமேரு சதுர்வேதி மங்கலத்து சபையோம். இவ்வாண்டு முதல் எங்களுக்கு பெருமானடிகள் எம்பெருமான் ஸ்ரீ வீர நாராயணன் ஸ்ரீ பராந்தக தேவன் ஸ்ரீ பரகேசரிவன் மருடைய ஸ்ரீ முகம் வரக்காட்ட ஸ்ரீ முப்படி ஆ

ஆ) ஞஞையினால் சோழ நாட்டுப்புறங் கரம்பை நாட்டு ஸ்ரீ வாங்க நகரக்கரஞ் செய்கை கெண்ட யக்ரமவித்த பட்டனாகிய சோமாசி பெருமாள் இருந்து வாரியமாக ஆட்டொ ருக்காலும்  சம்வத்சர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரி வாரியமும், இடுவதற்கு வியவஸ்தை செய் பரிசாவது குடும்பு முப்பதா முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலா

இ) ரே கூடிக் 

---------------

ஓ) த குடும்பன்றிக்கே நின்ற குடும்பிலே கரை பறித்துக் கொள்வதாகவும் கழுதை ஏறினாரையும் கூடலேகை செய்தானையும் குடவோலை எழுதிப்புக இடப் பெருததாகவும் மத்தியஸ்தரும் அர்த்த சௌசமுடையானே கணக்கெழுது வானாகவும் கணக்கெழுதினான் கணக்குப் பெருங்குறிப் பெருமக்களோடு கூடக் கணக்குக் காட்டி சுத்தன் ஆச்சிதின் பின்னன்றி மற்றுக் கண

ஓள) க்குப் புகல் பெருதானாகவும் தான் எழுதின கணக்குத் தானே காட்டுவானாகவும் மற்றுக் கணக்கர் புக்கு ஒடுக்கப் பெருதாராகவும் இப்பரிசே இவ்வாண்டு முதல் சந்த்ராதித்யவத் என்றும் குடவோலை வாரியமே இடுவதாக தேவேந்த்ரன் சக்ரவர்த்தி பட்டிதவச்சவன் குஞ்சர மல்லன் சூர சூளாமணி கல்பகசரிதை ஸ்ரீ பரகேசரிபன்மர்கள் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக் காட்ட ஸ்ரீ ஆஞையா

---------
அ) காடாடிப் போத்தன் சிவகுறி இராஜமல்ல மங்கலப்பிரியனேன்.


(Archaeological Survey of lndia - Annual Report 1904 - 1905 pp 139 - 142._)

இவ்வாறு அக்காலத்தில் கிராமசபை ஏரி வாரியம்தோட்டம் வாரியம் போன்ற பல குடும்புகளாகப் பிறித்து அதற்க்குத் தலைவர்களை குடவோலை முறையில் தேர்வுசெய்து செயல் பட்டதுடன் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனைகளும் வழங்கி கிராம சபையை தத்தனூர் மூவேந்த வேளான் போன்ற வேளாண் குடி தலைவர்கள் திறம்பட நடத்திவந்துள்ளதை உத்திரமேரூர் கல்வெட்டுகள் தெளிவு படுத்துகின்றன. 


(தொடரும்)

No comments:

Post a Comment