Tuesday, 5 June 2018

குற்றமும் தண்டனையும் பகுதி - 8 PandyanMallar

குற்றமும் - தண்டனையும் பகுதி - 8

x---------x----------x-----------x------------x


கிராம மற்றும் நாட்டார் சபையில் குடும்பு (வாரியம்) தலைவர்களுக்கு கொடுக்கப்பட்ட கூலிக்கு குடும்பு கூலி அல்லது குடும்பு காசு என்று அழைக்கப்பட்டதை திருவாரூர் மாவட்டம் பெரிய கொத்தூரில் உள்ள மூன்றாம் இராஜராஜன் காலத்து கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது.

ஊரங்குடி சனங்களும் இன்னும் சிலரும் ஊரை விட்டுப் போய் (புறம் சாய்ந்து) மாற்றார் பக்கம் சாய்ந்து விட்டனர். ஆகையால், தாங்கள் போன காரணத்தைச் சொல்லிக் கொண்டு மீண்டும் வரக் கூடாது. அவர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த குடும்பக்காசு வசூலிக்கப்படக்கூடாது என்றும் சேர்வையாளரைக் காணுகின்ற போது வசூலை வாங்கிக்கொள் என்று அவர்கள் கூறக் கூடாது என்றும் ஆணையிடப்பட்டிருந்தது. மேலும் குற்றம் செய்தவர்களிடம் தண்டம் பெறுகின்றபோது வெள்ளாளரிடம் தண்டப்பணமாகிய அசலை கொடுக்கக் கூடாதென்று சபையாரும் உடையாரும்(?) பிள்ளைக்கு. (அப்பகுதி அரசு அதிகாரிகள்) விண்ணப்பம் செய்திருந்தனர். அவ்விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு சபையார்க்கும் உடையார்க்கும் வெள்ளாளர்க்கும் பிடிபாடு ஓலை வந்துவிட்ட காரணத்தினால் இந்த ஓலை பத்து குடும்பர்களுக்கும் ஊரவர்க்கும் வாசித்துக் காட்டப்பட்டது.

கல்வெட்டுச் செய்தி:
x---------x----------x-----------x

13. ஊரங்குடி சனங்களும் ஊரைவிட்டுப்
14. புறம் சாய்ந்து இருக்கையாலே (போ
15. தளை போந) காரணம் சொல்ல வரக் (கூடா),
16. தென்று உடையார் தீட்டும் எங்களின் (நியோ)
17. கமும் போக(ப்)பட்ட இடத்து குடு ...
18. காத்தைக்கில் தரிப்பி … என்றும்
19. குடும்புக்கூலி கொண்டும் (இ)க்குடும்பு ஓ
20. ன்றுக்கு இருபது மாவிலும் தேவை 
21. பைறு . வும் குடும்புக் காசென்று (கொ)
22. ள்ளா தொழியவும் சேர்வை (ய)
23. ளாரை காணத் தண்டி . ..
24. என்று கொள்ளாதொழிய
25. வும் குற்றஞ் செய்தாரைத் தண்டம்
26. கொள்ளுமிடத்து வெள்ளாழன்
27. கை அசலிடாதொழியவும் பெற
28. வேணுமென்றும் சொல்லலிர கே
29. ட்டு கையிலே இப்படியை உடை
30. யாரும் னாங்களும் பிள்ளைக்கு விண்ண
31. ப்பஞ் செய்து போக விட்ட இடத்து
32 குடும்பு காசு தவின்தபடிக்கு உடையா!
33. ர் (க்)கும் எங்களுக்கும் வெள்ளாளர் தங்களு
34. க்கும் பிடிபாடு ஓலை வன்தமையில் இவ்ஓலை
35. களை கொண்டு பேர்ய குடும்பர்க்கும் ஊரவர்(க்)
36. கும் வாசித்து காட்டி குடுப்பதாக தவிர்ந்த
37. ...... கொ(ள்)ளென்று சொன்னமைக்
38. கு இப்ப(டி) காசு தவிந்த படிக்கும் சேர்வை
39. யான் வரக்கானா தண்ட
40. ம் என்று கொள்ள(க்) கடவதல்
 41. லாததாகவும் குற்றம் செய்தா
42. ரை தண்டம் கொள்ளு மிடத்
43. து வெள்ளாழ்[ரை] அசலிடா
-------------------
68. ... இப்
69, படியே நியோகமெழுதி குடும்
70. புக்கு பதக்கு நெல் கொண்டு முழுத
71. குடும்புக்கு இருபதுமாவாக இந்த ம
72. டக்கிலே தேவை செய்யக் கடவதா
73. கவும் குடும்பு எ.. கொள்ளக் கட
74. வ தல்லாததாகவும்

(த. நா. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 187 / 1986)

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், திருமூலத்தான முடையார் கோயில் கருவறை மேற்கு குமுதத்தில் உள்ள கி.பி.11 - ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டு இக்கோயிலில் உவச்சன் கூத்தாடி ஆன முன்னூற்றுவர்க்கு நிவந்தமாக நிலம் அளித்தச் செய்தியைத் தெரிவிக்கின்றது. அக் கல்வெட்டு குடும்பு செய்தவர்களுக்கு வெள்ளாளர், உடையார் போன்ற பட்டங்கள் இருந்துள்ளதை தெளிவாக குறிப்பிடுகிறது.

கல்வெட்டு செய்தி:
x----------x------------x

1. க்கும் நெல்லுக்குமாக ஸ்ரீகோயிலில் உவச்சன் முன்னூற்றுவன் , , , உவச்சன்

2. உவச்சன் கிழணரி கூத்தாடி ஆன முந்நூற்றுவர்க்கு நிவெந்தமாக குடுத்த நிலமாவது வெள்ளான் நாநூற்றுவர்க்கு குடும்பில்

3, மூவெலியும் வெள்ளான் எயினத்தம்பாடி உடையான் குடும்பில் ஆறுமாவும் …………

(தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி -5, த. நா. அ. தொல்லியல் துறை தொடர் எண் : 128/2013)

அதேபோல் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், திருமூலத்தானத்தில் உள்ள இரண்டாம் ஆதித்ய சோழன் (கி.பி.964) காலத்திய கல்வெட்டில் ஒரு உவச்சன் அளித்த நிலக் கொடையை பற்றி தெரிவிக்கிறது. அக் கல்வெட்டில்

வெள்ளாள னானதுதம்பாடி உடையான் குடும்பில் எழுமாவரை யாழ ஸ்ரீ கோயில் சிவப் பிராஹமணர்க்கு நிபந்தமாக குடுத்த நிலம்”


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள பூலாங்குறிச்சி என்ற ஊரில் உள்ள கண்மாய் மதகை ஒட்டியுள்ள குன்றின் சரிவுப் பகுதியில் உள்ள பெரும் பாறயில் கி.பி. 3 – 5 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு பச்செறிச்சில் மலைமேல் செய்வித்த தேவகுலத்துக்கு குழலூர்த்துஞ்சிய உடையாரால் வேள்கூரில் பெறப்பட்ட குடும்பியர் பரம்பரையல்லாது வேற்றார் தவிர்க்கப்பட வேண்டும் என அரசு ஆணையிடப்பட்டுள்ள வாசகங்கள் பொறிக்கப்பட்டள்ளன. 

கல்வெட்டு வாசகம்:
x-------x--------x--------x

8. …………………. பச்செறிச்சில் மலைமேற் செஇவித்த் தேவகுலத்துக்குக் குடும்பியராவாரு குழ

9.லூருத் துஞ்சிய உடையாரால் வேள்கூருப் பெயப்பட்ட குடும்பியர் வழியல்லது வேறொரு குடும்பாடப் பெறாமையும்

10.மத் தேவகுலத்துக் குற்றது செய்து வல்லக்குற்றந் தொழில் செய…களுடஞ் செயவும் மெழுதி வைக்கென் றருள்ளித்தாரு

11.கேட்டாருலவியப் பெருந்திணை நல்லங்கிழானேஇ னங்குமானும் முலவியப் பெருந்திணை ப... ஆறு கிழான் கீரங்காரி

12.யு முலவியப் பெருந்திணை அம்பருகிழான் குமாரம் போந்தையுங் கேட்டு வந்து கூறின னோலை எழுதுவான் றமன்காரி

13.கண்ணன் இது கடைப்பி ஓலை காற் கண்டெழுதிக் கொடுத்தேன் வேண்ணாட்டான் நரி நாரியங்காரி”.

(ஆவணம் இதழ் -1, பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் -  தமிழகத் தொல்லியல் கழகம் தஞ்சாவூர்)

மேலே கொடுத்துள்ள கல்வெட்டு (தேவகுலத்துக்குக்)கோவில் நிற்வாகம் உட்பட  கிராம சபையின் அனைத்து காரியங்களையும் குடும்பியர் பரம்பரையல்லாது வேற்றார் குடும்பாடக் கூடாது என மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது. 


இவ்வாறு குடும்பர்கள் கிராம சபை, நாட்டார் சபை, சித்திரமேழி சபை போன்றவற்றை நிர்வகித்து அதற்க்கான ஊதியமாக குடும்பு காசு பெற்றுக்கொண்டுள்ளனர். அதேவேளையில் கோயில் நிற்வாகத்தில் குடும்பர்களைத் தவிர மற்றவர்கள் தலையிடக்கூடாது எனப் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் குறிப்பிடுவது அக்காலத்தில் குடும்பர்களின் நிலை எத்தகையது என்பதற்க்கு இதுவும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கச் சான்றாகும்.

(தொடரும்)

No comments:

Post a Comment