Tuesday, 12 June 2018

குற்றமும் தண்டனையும் பகுதி - 10 PandyanMallar


குற்றமும் - தண்டனையும் பகுதி - 10

x---------x----------x-----------x------------x


கி.பி.1178-1230 ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டு ‘வேளாளக் குடிக்கு மட்டுமே இந்த தண்டனையிலிருந்து விலக்கு’ (மரண தண்டனையில்) என்ற ஒரு கல்வெட்டுக் குறிப்பு தெரிகின்றது (ARE 200/1929). இது வேளாண் குடிக்கு பெரும் சிறப்பை ஏற்படுத்தியதாக கருதலாம்.


கி.பி.997 இல் பொறிக்கப்பட்ட ராஜராஜனின் 12 ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு, திருவாண்டார் கோயிலுக்காக இறையிலியாக (வரிவிலக்கு) விடப்பட்ட நிலத்துக்காக, அந்த ஊர் சபையினரான திருபுவனமாதேவி சதுர்வேதிமங்கலம் அந்த நிலத்து வேளாண் இடம் வரியை வசூலித்துக் கட்டி விடுகின்றனர். இதை எதிர்த்து அந்த நிலத்து வேளாண் கோயிலில் முறையிட, கோயில் நிர்வாகி (தேவகண்மி) தர்மாசனத்தை நாடுகிறார். தர்மாசனம் ஊர் சபையினரைக் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் பொதுப்பணத்திலிருந்து 25 கழஞ்சு பொன் கோயிலுக்கு தண்டனையாகச் செலுத்த வேண்டும் என்றும், அப்படி வரி வசூல் செய்தவரிடம் ‘வெட்டி’ யாக வசூல் செய்யப்பட்டு, இந்த தீர்ப்பை எதிர்ப்பவர் ஒவ்வொருவரும் 15 கழஞ்சு பொன் தர்மாசனத்துக்குக் கொடுக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.(ARE 362/1919). (திவாகர் - சோழர் காலத்துச் சட்டம் ஒழுங்கு, தண்டனைகள்)


இவ்வாறு ஆதிவேளாண்குடியான மள்ளர் சமூகத்திற்க்கு சில சிறப்பு சலுகைகள் மூவேந்தர் ஆட்சி காலத்தில் இருந்துள்ளது. அதேவேளையில் கொலை, களவு, பொய், கள்ளுண்ணல் போன்ற  மாபாதகங்களைச் செய்தவர்களுக்கு மிகப் பெரிய தண்டனைகள் கொடுத்துள்ளனர்.  கிராம சபை, நாட்டார் சபை போன்றவற்றில் பதவி வகித்தபின் கணக்குக் காட்டாதிருந்தவர் மற்றும், இவர்களின் உறவினர்களும், தாயாதியினர்களும் கூட தகுதியற்றவர்கள் எனக்  கி.பி 920 ஆண்டில் முதலாம் பராந்தக சோழர் காலத்தில் உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோயிலில் வெட்டப்பட்டிருந்த கல்வெட்டுகள் குறிப்பிடுகிறது.                                           

இவ்வாறு களவு, பொய் போன்ற மாபாதகங்களைச்  செய்த நபர்களுக்கு தண்டனைகள் கொடுத்ததுடன் அவர்களும் அவர்களின் உறவினர்களும் கிராம சபை, நாட்டார் சபை போன்றவற்றில் அங்கத்தினராக இருக்க அனுமதியில்லை என்பதால் களவு, வழிப்பறி போன்றவற்றை குலத்தொழிலாக கொண்டவர்கள் மிகவும் மனவேதனை அடைந்திருப்பர் என்பது உண்மையே.

மூவேந்தர் காலத்தில் கள்ளர்கள் களவு போன்ற கீழ்தரமாக தொழிலைச் செய்ததால் அவர்கள் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டதாக மேலே கண்ட சான்றுகள் நமக்கு உணர்த்துகின்றன. மூவேந்தர்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்தவுடன் இவர்களின் உயிர்நாடியான பெரும்பான்மை விளைநிலங்கள் அன்னியர்களால் அபகரிப்பட்டது என்பது வரலாறு கூறும் உண்மையாகும். இவ்வாறு மூவேந்தர்களால் பாதிக்கப்பட்ட அந்த கள்ளர்கள் சமூகத்தினர்கள் மூவேந்தர் வம்சாவழியான மள்ளர் சமூகத்தின் விளைநிலங்களை எவ்வாறு அபகரித்தனர் என்பதை கள்ளர் சபை தெளிவாக கூறுகிறது.


"மேலூர் நாடு முதலில் வேளாளர்களுக்குரியதாக அவர்கள் தங்கி வாழ்ந்து பயிர்த்தொழில் நடத்தி வந்த பகுதியாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் காஞ்சிவரம் மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ள நாட்டைச் சேர்ந்த கள்ளர் சிலர் அப்பகுதியிலிருந்து கைவேல், குறுந்தடி, குண்டாந்தட, வளரி ஆகியன ஏந்தி வேட்டை நாய்கள் தொடர வேட்டைக்குப் புறப்பட்டனர், அவர்கள் தங்கள் வேட்டையினிடையே ஒரு மயிலானது தங்கள் வேட்டை நாய் ஒன்றினை எதிர்த்து நிற்பதைக் கண்டனர். இதனைக் கண்டு மிகுந்த வியப்புக்கு உள்ளான அவர்கள் அந்த நாட்டில் வாழ்பவர்களும், அங்கு உறையும் உயிரினங்களும் மிக்க வீரமுள்ளனவாக இருத்தலால் அது நற்பேறு சேர்க்கும் நாடாதல் வேண்டும் என எண்ணினர். காஞ்சிவரம் பகுதியில் உள்ள தங்கள் நாட்டைவிட இந்த நாட்டில் வந்து குடியேறிப் பயிர்த்தொழில் செய்ய அவர்கள் விரும்பினர்.

அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் தங்களை வேளாளர் நற்கருத்தில் இடம் பெறும்படியாக ஆக்கிக் கொண்டனர். வேளாளர்களின் பணியாளர்களாகச் சேர்ந்த இவர்களை வேளாளர் அங்குத் தங்கி வாழ அனுமதித்தனர், காலப்போக்கில் அவ்வாறு தங்கியவர்கள் தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் தங்களோடு அழைத்து வைத்துக் கொண்டனர். புறத்தே வேளாளருக்கு நன்றியுள்ளவர்கள் போலவும் கீழ்ப்பணிந்து நடப்பவர்கள் போலவும் நடித்துவந்த இவர்கள் அதற்குரிய பயனைப் பெறும் காலம் கிட்டியது.

சிறிது காலம் சென்றபின் வேளாளர்கள் கள்ளர்கள் மேல் தங்கள் விருப்பம் போல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிக் கள்ளர்கள் அவர்கள் பணியின்போது செய்யும் தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் உரிய தண்டனைகளை விதிக்கத் தொடங்கினர். இதனால் கள்ளர்கள் ஆத்திரம் கொண்டனர். படிப்படியாக அவர்கள் தங்கள் பண்ணையார்கள் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி அவர்களைப் பலவந்தத்திற்கு உட்படுத்திப் பின்வரும் விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்றி நடக்கச் செய்யும்படியாக உடன் படிக்கை செய்து கொண்டனர்.

அவ் விதிகளாவன:-
x-------x------x-------x

1. ஒரு கள்ளனுடைய பல் உடையும்படியாக அவனுடைய ஆண்டை அவனை அடிப்பானாயின் அக் குற்றத்திற்கு ஈடாக அவர் பத்துச் சல்லிச் சக்கரம் செலுத்த வேண்டும்.

2. கள்ளனின் ஒரு காது மடல் அறுபட நேருமானால் வேளாளன் அவனுக்கு ஆறு சக்கரம் தண்டமாகத் தரவேண்டும்.

3. கள்ளனின் மண்டை உடைபடுமானால் வேளாளன் அதற்குப் பதிலாகத் தன் மண்டையை உடைத்துக் கொள்ளாவிடில் முப்பது சக்கரம் தண்டமாகக் கள்ளனுக்குச் செலுத்த வேண்டும்.

4. ஒரு கள்ளனின் காலோ கையோ முறிந்து போகுமாயின் அவனை அரை மனிதனாகக் கருத வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் குற்றம் இழைத்தவன் ஒரு கலம் விதைக்கான நஞ்சை நிலத்தையோ, இரண்டு கூர்கும் (Koorkums) புஞ்சை நிலத்தையோ கள்ளனுக்குத் தனி உரிமை உடையதாக ஆக்கி வைப்பதோடு மேலும் அந்தக் கள்ளனுக்கு ஒரு துப்பட்டியும் அவன் மனைவிக்குச் சேலையும் தருதல் வேண்டும். அத்தோடு இருபது கலம் நெல்லோ வேறு தானியங்களோ கொடுத்துக் கைச்செலவுக்கு இருபது சக்கரங்களும் தரக் கடமைப்பட்டவனாவான்.

5. ஒரு கள்ளன் கொலைக்கு ஆளாவானாயின் குற்றம் இழைத்தவன் நூறு சக்கரம் தண்டத் தொகை செலுத்துதல் வேண்டும். அல்லது கொலைக்கு ஆளானவன் பக்கத்தைச் சேர்ந்தவர்களால் அவனது உயிர் போக்கப்பட உடன்படல் வேண்டும். இந்த இரண்டில் ஒன்றுக்குக் குற்றம் இழைத்தவன் உடன்படும்வரை குற்றம் இழைக்கப்பட்டவன் கூட்டாளிகள் குற்றம் புரிந்தவன் உடமைகளைச் சூறையாடுவதோடு தங்களுடையதாகக் கொள்ளவும் உரிமை உடையவர்களாவர்.


தங்கள் ஆண்டைகளின் மீது இத்தகைய உடன்பாட்டுக்கு ஒவ்வாதனவாகிய விதிகளைச் சுமத்தி அடாத வகையில் மிகுதியான பொருளைத் தரும்படி வற்புறுத்தி வேளாளர்களைக் கள்ளருக்கு அஞ்சும்படியாகவும், கள்ளரின் தயவை நாடி நிற்பவர்களாகவும், கள்ளர்கள் விருப்பம்போல் ஆடுபவர்களாகவும் மடக்கிப்போட்டு அவர்களை ஏழ்மையில் வீழ்த்தி, அவர்கள் தங்கள் ஊர்களையும், உடமைகளையும் ஒருங்கே கைவிட்டு வேறு நாடுகளில் சென்று குடியேறும்படியாகச் செய்துவிட்டனர். நன்றி உணர்வும், பணிவுடமையும் உள்ளவர்களாக இருப்போம் எனக் கூறிய உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டு வேளாளர் பலரைக் கொலைக்கும் ஆட்படுத்தினர். இப்படியாகத் தங்கள் முந்தைய ஆண்டைகளைக் கொஞ்சமும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அற்றவர்களாக அவர்களுக்கு உரிய நாட்டை விட்டுத் துரத்திவிட்டுக் கள்ளர்கள் அப்பகுதியினை உரியவர்கள் மட்டும் அறிந்த காட்டுப் பகுதி என்ற பொருளில் துன் அர்ரச நாடு எனப் பெயரிட்டு ஆளத் தொடங்கினர். (இது தாங்களே ஆளும் நாடு எனவும் பொருள்படும் என மதுரை மாவட்ட விவரக் குறிப்பு விளக்கம் தந்துள்ளது.)

(எட்கர் தர்ஸ்டன் – தென்னிந்திய குலங்களும் குடிகளும் தொகுதி -3, பக். 76 - 78)

இங்கு வேளாளர் என்று சுட்டப்படுபவர் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களை குறிக்கும். ஏனெனில் கி.பி. 16- ஆம் நூற்றாண்டில் அரியநாயகம் மதுரை நாயக்கனிடம் அமைச்சனாக இருந்த போது, தமது உறவு முறையாரை தஞ்சை, திருச்சி, மதுரை முதலிய மாவட்டங்களில் ஊர்கள், நகரங்கள், கோட்டைகள் அமைத்து அவற்றில் குடியேற்றி, நில புலன்கள் வழங்கி ஆதரித்தான் என்பது வரலாறு கூறும் உண்மை. ஆதலால் அதற்க்குமுன் இங்கு குடியிருந்த அந்த வேளாண்குடி யாராக இருக்கும் என்பதை நான் விளக்க வேண்டியதில்லை.

(தொடரும்)

No comments:

Post a Comment