Friday, 8 June 2018

குற்றமும் தண்டனையும் பகுதி - 9 PandyanMallar

குற்றமும் - தண்டனையும் பகுதி - 9

x---------x----------x-----------x------------x

கோயில் நிற்வாகத்தில் குடும்பர்களைத் தவிர மற்றவர்கள் தலையிடக்கூடாது எனப் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கச் செய்தியை குறிப்பிடுவதை முந்தைய பதிவில் பார்த்தோம். அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள நாகேசுவரசாமி கோயில் கருவறையின் தெற்குச் சுவரில் உள்ள முதற் பராந்தக சோழனின் 40 - ஆம் ஆட்சியாண்டைச் (கி.பி.947) சேர்ந்த கல்வெட்டு குடும்பு காட்டுக்காற்க் குடும்பி என்று குறிப்பிடுகிறது.



கல்வெட்டு வாசகம்:
x-------x--------x-------x

ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட கோப்பரகேசரி பன்மற்கு யாண்டு 40 நாற்பதாவது இ… வடகரைப் பாம்பூர் நாட்டுத் தேவதானந் திருக்குடமூக்கில் திருக்கீழ் கோட்டத்துப் பெருமானடிகளுக்கு வெள்ளி மக…. திருநொந்த விளக்கும் சூர்யதேவர்க்கு ..... மாடிலன் பட்டன் மகாதேவன் நாராயணன்னேன் வைத்தடி…... நின்ற குடும்பு காட்டுக்காற்க் குடும்பி …. காட்டுக்காற்தலை நெற்றிக் காலும் கண்ணிவிளாகத்து இருமாவும் ஆக நிலம் பெதினொரு மாவும் இந்நிலத்துக்கு. மூலபரடைப் பெருமக்களுக்கு நான் இறைகாவல் குடுத்துடைய பொன்னில் இந்நிலத்தாலுடைய ஒபாதியும் நான் தலைக்கலத்தாலுடைய பொன்னில் நிலவோபாதியால் வந்த பொன்னும் ஆக பொன் 30 மஞ்சாடி பொன்னாலு வந்த நிலம் பதினொருமாவும் கொண்டு சந்திராதித்தவல் சிதாரிக்கும் கற்பூர விளக்குக்கும் ஆக கடுத்தேன் மாடிலன் பட்டன் மகாதேவ நாராயணனேன்.

தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறை  தொடர் எண் 35 / 1979 (குடந்தைக் கல்வெட்டுக்கள் முதற் தொகுதி)



இதேபோல் நாகபட்டினம் நாகநாதர் கோயில் கருவறைப் பின்பக்கச் சுவரில் தனியாகச் சாய்த்து வைக்கப்பட்டுள்ள கற்பலகையில் உள்ள கி.பி. 8 - 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கிராம சபையில் அக்கசாலை, ஓடும்பில்லை போன்று பெருந்தட்டான் என்ற பதவியில் மள்ளர் குடியை சேர்ந்த துட்ட மல்லன் என்பவர் இருந்துள்ளார் என கல்வெட்டு குறிப்பிடுகிறது.


கல்வெட்டுச் செய்தி:
x-------x--------x-------x

1. ... வான் அறுபத்[தெ]
2. ... ஞ்சும் ஏற்றிப் பொன் அறுபது
3. ல் ஆ... கழஞ்சின் வாய் ஒன்றேய் க...
4.. த்த... நிசதி உரிய் நெய் முட்டாமைக் குடுத்தட்டு
5. வோமானோம் பெருங்கடம்பூர் ஸபையோம் (முட்டில்) த,
6. ர்மாஸநத்து முன்பு நிற்கிலு நில்லாவிடிலும் எட்டரை
7. முதலாக தண்ட (ம்) ஒட்டினோம் பெருங்கடம்பூர் ஸபையோ
8. ம் இவகளேவ எழுதினேன் நாகைப் பெருந்தட்டானாகிய
9 .... வரச்சிதன் துட்ட மல்லனேன்.

(நாகைக் கல்வெட்டு – ஆவணம் 1 அக்டோப்பர் 1991, தமிழகத் தொல்லியல் துறை தஞ்சாவூர்).


மூவேந்தர் ஆட்சி காலத்தில் வேளாண்குடிகள் நடத்திய கிராம சபை அல்லது நாட்டார் சபையின் தலைவர்களாக மள்ளர் சமூகத்தின் உட்பிறிவுகளான குடும்பர் மற்றும் கரையார்(கரையாளர்) இருந்ததாக மூன்றாம் ராஜராஜ சோழன் கல்வெட்டு குறிப்பிடுகிறது.


Tirubhuvanachakravartin Rajaraja (III) A.D. 1232.

States that on the representation made by the Nattavar of three nadus, the Kudumbar and the Karaiyar, the great assembly met in the Pugalabharana-Vinayakap-pillaiyar temple at Rajasikhamani-chaturvedimangalam, a village in Tiruvindalurnadu, a subdivsion of Rajadhiraja-valanadu and fixed the payments to be made in cases of tenancy cultivation. Refers to the previous hardships and to the nadu of Kopperunjingadeva.

(South Indian Inscriptions 12 (No. 536 of 1921)


பிற்கால இலக்கியமான முக்கூடற்பள்ளு, அதன் கதாநாயகன் வடிவழகக் குடும்பன் குடும்பு செய்து ஊருக்கு உழைத்தான் எனக் கூறுகிறது. மேலும் சென்னை மாகாண மற்றும் சார் நீதி மன்றங்களின் தீர்ப்புகள் நவம்பர் 1851 என்ற நூலில் எண் 2 / 1851 எண்ணாக்க கொடுக்கப்பட்டுள்ள வழக்கு விவரம் :

அசல் வழக்கு 27 / 1850 கதிர் அமீன் கோர்ட்டு ( நீதிபதி மகமது தாஜுதின் ஹுசைன்கான் ) தேதி. 25.9.1850, திருநெல்வேலி, அப்பீல் எண் 1 / 1851 மாவட்ட சிவில் நீதிபதி, திருநெல்வேலி. குடும்பர்களுக்கிடையே குடும்பு காணியாட்சி உரிமை பற்றிய வழக்கு பற்றி விசாரித்துத் தீர்ப்புக் கூறியுள்ளது.

(Dr. குருசாமி சித்தர் - மள்ளர் மலர்)


நாம் இதுவரை பார்த்த கல்வெட்டு, செப்பேடு சான்றுகளிலிருந்து சங்க காலம் முதல் கி.பி. 1850 வரையிலும் கிராம சபையின் குடும்பு முறை குடும்பர்களிடையே இருந்துள்ளது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் வாழ்வியல் நடைமுறையில் இன்றும் கூட சில கிராமங்களில் குடும்புமுறை உள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை.


இவ்வாறு கிராம சபை, நாட்டார் சபை, குடும்பர் சபை, சித்திரமேழி சபை போற்றவற்றை நடத்தி மன்னனின் நேரடி கண்கானிப்பில் குடும்பு முறையை சீரும் சிறப்புடனும் நிர்வகித்து வந்த வேணாங்குடி தலைவர்கள் வேளான், வேளார், மூவேந்த வேளான், மூவேந்த வேளார், என்று சிறப்பு பெயர்கொண்டு அழைத்தனர். இவர்களில் சிலர்  சோழேந்திரசிங்க மூவேந்த வேளான், நெறியுடைச் சோழ மூவேந்த வேளான், உதயமார்த்தாண்ட மூவேந்த வேளான், வீரசோழ இருங்கோ வேள், குலோத்துங்க மூவேந்த வேளான், பரகேசரி மூவேந்த வேளான், சோழன் மூவேந்த வேளான், பாண்டியன் மூவேந்த வேளான், இராசேந்திரசிங்க மூவேந்த வேளான் என்று பெயர் சூட்டி பெரிய ஆட்சிப் பொறுப்புகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். இவர்களின் பெருமையை

“மாடுகட்டி போரடித்தால் மாளாதென்று
யானைகட்டி போரடித்த மரபில் வந்த பாண்டியன் நீ”

என்று தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் சுப நிகழ்வுகளில் இன்றும் பாடுவதைக் காணலாம். மூவேந்தர்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்தவுடன் இவர்களின் பெரும்பான்மையான விளைநிலங்கள் அன்னியர்களால் அபகரிப்பட்டது என்பது வரலாறு கூறும் உண்மையாகும்.

(தொடரும்)

No comments:

Post a Comment