Wednesday, 28 September 2016

பகுதி 4 'வேளிர் என்போர் உண்மையில் யார்?' என்பது பற்றிய வரலாற்றுத் தேடல் - Pandyan Mallar

இனி துவராபுரியில் இருந்த குடும்பர்கள் ஆட்சி செய்தார்களா? என்பதை ஆய்வு செய்வோம்.



அன்னியர் படையெடுப்பால் ஆட்சி அதிகாரத்தை இழந்த பாண்டியர்கள் மதுரையைவிட்டு வேறுசில பகுதியில் ஆட்சி செய்து வந்தனர். ஒரு காலத்தில் பாண்டியருக்குத் திறை செழுத்தி குறுநில மன்னரான ஆட்சி செய்த மாவலிவாணராயர்கள்   அக்காலத்தில் அன்னியர்களுக்கு துணைநின்றனர். அப்பொழுது மதுரையில் நடந்த குழப்பத்தை போக்குவதற்க்காக  பாண்டிய மன்னனுடைய வைப்பாட்டி, காளையார் கோவில் தாசி அபிராமி என்பவளின் மக்களாகிய சுந்தரத்தோள் மாவலிவாணாதிராயர், காளையார்சோமனார், அஞ்சாத பெருமாள், முத்தரசர் இவர்களை மதுரைக்கு அழைத்து வந்து பாண்டியனுக்குப் பிறந்த பிள்ளைகள் என்று பட்டம் கட்டி மதுரையை ஆண்டு வரச் செய்தனர்.  பழைய பாண்டியர் வழி வந்தோர் இக்காலத்தில் மதுரையை விட்டுத் தெற்கே சென்றனர். 

அப்போது மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னன்(வாணதிய ராயர்) -க்கும் தட்சணஞ் சீர்மையில் ஆட்சி செய்த பழைய பாண்டியன் மரபில் வந்த   சுண்டன் பள்ளனுக்கும்  கருத்து வேறுபாடு காரணத்தால் சுண்டன் பள்ளன் மதுரை வாணதிய ராயருக்கு விரோதமான செயலில் ஈடுபட்டான். அவன் செயலை கட்டுப்படுத்தும் பொறுப்பை காடவர் தலைவனிடம் வாணதிய ராயர் கொடுத்தான்.  அச்செயலை திறம்பட செய்த காடவர் தலைவனுக்கு பள்ளன் சுண்டன் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை வாணதியராயர்  தானமாக வழங்கினான். அப்பகுதியை ஆட்சி செய்த காடவர் தலைவர்கள் பாண்டிய வன்னியனார்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டனர். இச்செய்தியை சிவகிரி, அளகாபுரி, சிதம்பரம் போன்ற பகுதியை ஆட்சி செய்த பிற்கால பாளையக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமிழக அரசு தொல்லியல் துறை பாளையப்பட்டுக்களின் வம்சாவளி என்ற நூலில் இச்செய்தியை தொகுத்துள்ளது. அவற்றை கீழே காண்போம்.



அப்போதிருந்த பட்டக்காரன் அம்பைத் தறைக்குடி யாண்டு கொண்டாரை பாண்டியராசா ஆனவர் வரவளைத்து தட்சணஞ் சீர்மையில் சுண்ட னென்ரொறு பள்ளன் சிறிது துஷ்ட்டாளையுஞ் சேகரித்துக் கொண்டு வெகு சல்லியங்கள் செய்து வருகுரான். ஆன படியினாலே நீரவடத்துக்குப் போயி அந்த துஷ்ட்டாளை நிற்கிரகத்துப் போட்டு வரவேணுமென்று சொல்லி யனுப்பிவிச்சார்கள். அந்தப் பிரகாரமே பிறப்பட்டு வந்து சுண்டனென்று சொல்லப்பட்ட பள்ளனையும் அவனுடனே சேந்த துஷ்ட்டாளையுஞ் செயம் பண்ணிவிச்சுப் போட்டு மறுபடியும் பாண்டிய ராசாவிநிடத்துக்குப் போயிக் கண்டு சமாசாரம் பேசிக் கொண்டதில் வெகு சந்தோஷமாயி அனேக வரிசயளும் விருதுகளுங் கொடுத்து யின்னும் அந்த தெட்சணஞ் சீர்மையில் சில துஷ்ட்டாளிருந்து கொண்டு சல்லியங்கள் செய்து கொண்டு யிருப்பதுனாலே அந்தத் தெட்சணத்தில் உமக்கு சிறுது சீர்மை விட்டுக்குடுக்குரோம். அதுலேயிறுந்து கொண்டு துஷ்டாளையும் ஒடிக்கி சல்லியம் யில்லாமல் செய்து கொண்டு யிறுமென்று உத்திரவு செயிது அந்தப் பிரகாரம் சீர்மையுஞ் சுதாவாக விட்டுக் குடுத்து அனுப்பிவிச்சார்கள்.
…………………………………………………………......................................................

தென்காசியில் ராசரிக்கமாயிறுக்கப்பட்ட ராமவர்ம்ம குலசேகர பாண்டிய ராசாவுக்கு பிறுதி வாதியாயி வந்த தாயாதிக்காரறா செய்த யிடைக்கூறினாலே விபத்து வந்ததில் அந்த விபத்துக்கு ராமவர்மகுலசேகர பாண்டிய ராசா ஆனவர் சகத்துரை ஆண்டு கொண்டாரை வரவளைத்து யிந்த விபத்தைத் தீற்க வேணுமென்று சொன்னபடிக்கி அந்த வேளை முன்னின்று ஆரம்ப ... தத்துவத்தினாலே உத்திரவாதஞ் செயிது சல்லியத்தைத் தீற்துக் கொடுத்தப்படியினாலே ராமவர்ம குலசேகரப் பாண்டிய ராசாவுக்குப் பிறுதி யுண்டாயி ராமவர்ம்மகுல சேகர ஆண்டு கொண்டாரென்று பேறுங்கொடுத்து தென் காசி மூப்புக்கூறும் விட்டுக்கொடுத்து அதற்குப் புலியூர் மேட்டில்க் கல்நாட்டி மால் வைத்து அது முதல் நான்கெல்லை யிலும் சிறிது சீற்மையும் விட்டு சந்திராதித்தாளுள்ள மட்டும் ஆண்டனுபவித்துக் கொண்டு வரச்சொல்லி உத்திரவு செயிது அனுப்பிவிச்சார்கள்.

 (தமிழக அரசு தொல்லியல் துறை  - பாளையப்பட்டுக்களின் வம்சாவளி -     சிதம்பர வன்னியன் வமிசாவளி   D. 2841)



துவாபர யுகத்தில் யெங்கள் முன்னோர்கள் ரிஷி சாபத்தாலேப் பன்றி வயற்றில் பிறந்து மீனாட்சியம்மன் திருமுலைப்பால் கொடுத்து அந்தப் பன்றிச்சன்மம் விமோசனமாயி அவர்களுக்கு அப்போது மதுரையிலிருந்த பாண்டிய ராசாக்கள் தெய்வ கடாட்சம் பெற்றவர்க ளென்றறிந்து அபிமானித்துச் சிறுது சீற்மையும் விட்டுக்கொடுத்து சிறுதுகாலம் நடந்து வந்திருந்ததில் அவர்கள் வங்கிஷத்தில் வரகுண ராமனென்று ஒருதன் சென்மித்திருந்ததில் அப்போது மதுரையிலிறுந்து பாண்டிய தேசாதிபத்தியம் பண்ணிக்கொண்டிருந்த பாண்டிய ராசாக்களுக்கு ஒரு இடுக்கம்வந்து யிவராலே அந்த யிடுக்கம்ந் தீர்க்கப்பட்ட படியினாலே சயதுங்க வரகுணராம பாண்டிய வன்னியனென்று பேருங்கொடுத்து திருப்பூவனத்தில் மேற்படி சீர்மையுங் காவலும் விட்டுக்கொடுத்து பாண்டிய தேசத்துக்கு அதிபதியாகிய சயசிங்க...  பாண்டிய ராஜா வரகுணராம பாண்டிய வன்னியனாரை வரவளைத்து  சொன்ன
:……………………………………………………...........................................................
 
வன்னியனார் சீமையை ஆண்டு வருகுரபோது பாண்டிய ராசா மதுராபுரிக்கி வரவழைத்து உத்திரவான செய்தியென்ன வென்றால் : சோள ராசாவுக்கும் நமக்கும் பகை வந்து அவர் நம்மிட பேரில் சண்டைக்கு வருகுர படியினாலே நீயும் உன் சனமும் குமுக்குடனே பிரப்பிட்டு வந்து அவர் படையுடனே யெதிர்த்து சண்டை செய்து செயங் கொண்டு வரவேணுமென்று உத்திரவானபடிக்கி தன் சனச் சேகரத்துடனே, சோளன் படைக்கி யெதிரே போய், அவர்களையும் அபசயப்படுத்தி, பாண்டிய ராசாவுக்கு சயமுங் கொண்டு வத்து பாண்டிய ராசாவைக் கண்டதில் அவருக்கு மிகவும் சந்துஷ்ட்டி வந்து, கன்னடி காத்தா னாடு னுாத்தி எட்டு கிராமம் காவலாய்க் குடுத்து அனேக வெகுமதியும் பண்ணி திருப்பூவனத்துக்கு அனுப்பிவிச்சார்கள்.
 ………………………………………………………………………...................................

மதுரைப் பாண்டிய ராசா தாஷ்ட்டீக சவுந்திர பாண்டிய வன்னியனாரை வரவளைத்து இராசா உத்திரவு குடுத்தது என்னவென்ரால், தட்சண சீமையில் சுண்ட னென்றொறு பள்ளன் சிறுது சனச்சேகரத்துடனே அந்தச் சீமையை அனேக விதமாக நிபாதப்படுத்தியிருக்குகுரபடியினாலே நீயும் உன்னுடைய புத்திராள் முதல் சகல தனத்தையுஞ் சேகரித்துக்கொண்டு தட்சண சீர்மைக்கிப்போய் அந்த சுண்டனையுஞ் சங்காரம் பண்ணி சீர்மையிலுஞ் சல்லிய மில்லாமல் ஒடிக்கிவிச்சுத்திரும்ம மதுரைக்கிப்போயி பாண்டிய ராசாவைக்கண்டு நடந்த வரலாரெல்லாஞ் சொல்ல ரெம்பவுஞ் சதுஷ்ட்டியாயி யிப்படி பராக்கிரமமுள்ள நீங்கள் தெட்சிணத்தில்த்தானே யிருங்களென்று அனேக விருதுகளும் அனேக வெகுமதியுங்குடுத்து தெட்சிணஞ் சீர்மையில்த்தானே யிருங்களென்று பட்டமும் கட்டி அனுப்பி விச்சார்கள்.


(தமிழக அரசு தொல்லியல் துறை - பாளையப்பட்டுக்களின் வம்சாவளி    - அளகாபுரி ஜமீன்தார் வமிசாவளி - D. 2849)


இவ்வாறு சோழ மன்னனுக்கு எதிராகவும், சுண்டன் பள்ளனுக்கு (பாண்டியன்) எதிராகவும் போரில் ஈடுபட்டதற்க்கு கூலியாக காடவர் தலைவன் வாணதிய ராயரிடம் தானமாக பெற்ற சில பகுதிகளுக்கு அரசு அதிகாரியாக நியமிக்கப்பட்டனர். அவ்வாறு அரசு அதிகாரியாக செயல்பட்ட காடவர்கள் பிற்க்காலத்தில் நாயக்க மன்னருக்கு கீழ் கட்டுப்பட்ட பாளையக்காரர்களாக இருந்து ஆட்சி செய்தனர். இவ்வாறு தோன்றியதில் ஒன்றுதான் சிதம்பரம் பிச்சாவரம் பாளையம். இப்பாளையக்காரர்களுக்கும் மூவேந்தர் பரம்பரையான மள்ளர் குலத்திற்க்கும் யாதும் தொடர்பு இல்லை.



காடவர் வென்ற பள்ளன் சுண்டனின் முன்னோர்கள் பற்றி நாம் இனி ஆய்வு செய்வோம்.



இராமநாதபுரம் கோட்டத்துச் சிவபுரியை ஆண்ட சுண்டன் கங்கை கொண்டான் ஒருவன். இவனுக்குத் துவராபதி வேளான் என்ற பெயரும் இருந்தது. இவனிடம் சிறந்த வாள்வீரர் இருந்தனர் (ARE 47 of 1929)

( டாக்டர். மா. இராசமாணிக்கனார்  -   சோழர் வரலாறு  - பக். 281)




இராமநாதபுரம் சில்லா, திருப்பத்தூர் தாலுகா, சிவபுரியில் உள்ள சுயம்பிரகாசர் கோயில் சாசனம், திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரம சோழ தேவருடைய 7-வது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், சுந்தன் கங்கை கொண்டான் என்னும் பெயருடைய துவராபதி வேளான் என்பவன், தனது வாளிலார் (வாள் வீரர் ?) போர்க்களத்தில் இறந்ததற்காக அவ்வீரர்களின் சுற்றத்தார்க்கு உதிரப்பட்டியாக நிலம் கொடுக்க வாக்குறுதி செய்ததைக் கூறுகிறது. (ARE 47 of 1928.)

(மயிலை சீனி. வேங்கடசாமி - தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் 193 )




(A. R. No.  47 of 1928 - 29.)
Sivapuri, Tiruppattur Taluk, Ramanathapuram District.

Tribhuvana chakravarthi  vikrama chola deva 7th year. This record States that Sundan Gangaikondan alias Tuvarapativeln promised to give some land as   udirappatti to the dependents of those swordsmen (talilar) who died fighting on the field.




No. 218.
(A. R. No.  66 of 1929.)
Sivapuri, Tiruppattur Taluk, Ramanathapuram District.
On the belt of the verandah in the first prakara, Svayamprakasa temple.
This record dated in the 8th year of Tribhuvanachakravartin Srivallabhadeva has to be assigned to this king Jatavarman Srivallabha.  It registers that Danadan Pagaivenra-kandan alias Tuvarapativelan made a gift of land by name Anjadakanda-Navalkulam by purchase, for the kitchen expenses of the temple at Tiruttandonrisvaram-Udaiyar at Nripasekhara-chaturvedimangalam, a brahmadeya in Keralasinga-valanadu.

  1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் சிவல்லதெவற்கு யாண்டு ஆ – வது கெரளகிங்க வளநாட்டு …………. … நிருபசெகர சதுபெதி மங்களத்து திருத்தான்தொன்றிசுரமுடையாற்கு
  2. தனதந் பகைவென்றகண்டநாந துவராபதி வெளாநெந் இத்தெவற்கு திருமடை(ப்)பள்ளி புறமாக இறைகழித்து குடுத்த நிலமாவது சுரவிநாட்டு வெள்ளா(ர்களில்) சிறைகண்டன் பெற்றா
  3. னுள்ளிட்டார் பக்கலும் உய்யநின்றாடுவார் பக்கலும் இத்தெவர் ஆதிசண்டேஸ்பர் திருநாமத்தான விலைகொண்ட அஞ்சாதகண்ட நாவல்குளம் வளையில் சுற்று முற்றிலும் உள்ள புஞ்செ நஞ்செயு மற்றும் எற்ப்பெற்பட்டநவு மிறை கழித்து குடுத்தெந் தனதந் பகைவென்ற கண்டநாந துவராபதி வெளாந் இது பந்ம்மாகெஸ்வர ரஷை. 

     (தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி – 14, எண்.218,  மற்றும் A. R. No.  66 of         1929.)


No. 242.
(A. R. No.  37 of 1929.)
Sivapuri, Tiruppattur Taluk, Ramanathapuram District.
On the south wall of the second prakara in the Svayamprakasa temple.
This inscription dated in the 18th year of the king relates to the gift of one ma of land in Aruviyur as measured by kuditangi by Arumunaigandar which was purchased from the officials of Devar Duvarapativelar, for the expenses of the temple of god Pillaiyar Desinayaka at Aruviyur alias Desi-Uyyavanadapattanam in Keralasinga-valanadu.  It is not known why this record was engraved in this temple.


  1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீவல்லவதெவற்கு யாண்டு யஅ பதிநெட்டாவது பாண்டிமண்டலத்து கெரளகிங்க வளநாட்டு அரு
  2. வியூரான தெசி உய்யவந்த பட்டணத்துப் பிள்ளையார் தெசிநாயகற்கு தெவர் துவராபதி வெளார் கந்மிகள் பக்கல் அருமுனைகண்டர் கொண்
  3. டு குடுத்த நிலமாவது அருவியூர் வயலில் வடக்கில் மடைக்கு வாய்க்காலுக்கு வடக்கு சங்காண்டி வய்க்கலும் இதன் கீழை ஐய்யநம்பி வயக்க
  4. லும் இதற்கெல்லை கீழெல்லை நொந்றிவயக்கலுக்கு மெற்கும் வடவெல்லை தெற்கும் மெலெல்லை கரைக்குக் கிழக்கும் வாய்
  5. க்காலுக்கு வடக்கும் இந்நாங்கெல்லைய்க்குள்பட்ட நிலங் குடிதாங்கியால் ஒருமாவும் திருமடைப் பள்ளிப்புறமாகச் சந்திராதிச்ச
  6. வற் செல்வுதாக தெசிநாயகற்கு பன்மாஹேஸ்வர இரஷை.

     (தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி – 14, எண்.242, மற்றும் A. R. No.  37            of  1929.)      




No. 243.
(A. R. No.  39 of 1929.)
Sivapuri, Tiruppattur Taluk, Ramanathapuram District.
On the south Wall of the second prakara in the Svayamprakasa temple.
This record of the 18th year relates to the founding of an agaram called Seyyamangalam with the new name of Ambalattadi-chaturvedimangalam, by Kanda-Sundan alias Duvarapativelan, for the merit of Sundan-Kandan alias Duvarapativelan, who was presumably his father.  The lands in the village were divided into twenty shares and granted to 20 brahmanas who colonized therein.  A tax of one diramam per ma of cultivated land, and no other tax was ordered to be levied on these colonies.  The document was caused to be engraved in the temple by Sundan Pagaivenra-Kandan alias Duvarapativelan.


  1. ஸ்வஸ்திஸ்ரீ திருமடந்தையும் ஜயமடந்தையும் திருப்புயங்களி லினிதிருப்ப இருநிலமும் பெருமை எய்த எண்டிசையுங் குடை நிழற்ற மன்னரெல்லாம் வந்திறைஞ்ச வருமரபில் மணிமுடிசூடி தெங்குமரியும் வடகங்கையுந் திரைக்கடலெ எல்லையாகப் பார்முழுதுங்கயலா(ணை)
  2. பரந்து செங்கொல் உடன் மன்னிய …………. உலகமுழுதுடையாளொடும் விற்றிருந்தருளிய மாமுதல் மதிக்குலம் விளங்கிய கொமுதல் கொச்சடையபற்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீவல்லவதெவற்கு யாண்டு   பதினெட்டாவது சித்திரை(த்) திங்கள் பாண்டி(மண்)
  3. டலத்துக் கெரளகிங்க வளநாட்டு அகர ………… செய்யாமங்கலமான அம்பலத்தாடக் சதுப்பெதிமங்கல மென்னும் பெரால் இருபது …………….. கிழெல்லை முதத்த குளத்து மெலெல்லை(க்)கு மேற்கும் தெங்கிழெல்லை தெற்றியூர் குளத்துளவாய பெ…. ஆலிக்கு வடக்கும் தெனநெல்லை காட்டுருண்ணிக்கு வடக்(கும்)
  4. தென்மெலெல்லை மலையாழ்வான் தொட்ட மகப்பட மெலெ(ல்)லை திருநாடுடையான் தொட்டத்தும் வடவாயூருணிக்கு தெற்கும் இதன் வடகரை கொண்டிசொவ்வை மச்சிறுப்(பா)ள் மெல் வரப்பு முட்ட அவ்வரப்புக்கு கிளக்கும் சிறுச்செய்யாமங்களத்துலைக்கு தெற்கும் இதன் கீழெல்லைக்கு கிழக்கு (ம் இ)
  5. தன் வடவெல்லைக்கு வடக்கும் இக்குளத்து (வு)டகடை கொண்டிசொவை அமர்தாங்கி பொயன் ஊருண்ணிக்கு கிழக்கும் சிற்றுச்சத்துருகாலன் வசக்கல் நீர்கொவையாக வட எல்லை அஞ்சாத கண்டன் ஊருண்ணிக்கு தெற்கும் வடகிழெல்லை அருவியூர் சிறுகுழத்து சிறுகுழத்து மெலெல்லைக்கு மெற்க்கும் இச்சுற்று முற்றும் உள்படு
  6. குடுகாடுகளும் உண்ணில மொழிவின்றி ……………………………. குரித்தாமண்ணம் இருபது கூற்றெலையும் குடுத்து அக்கூறெ …………. நம் பண்ணிக்குடுத்து இதுக்கு ……………………. மாக இந்நாட்டு …………  ……….. செகரச்சதுப்பெதிமங்கலத்து மகாதெவர் திருத்தான் தொன்றீஸ்வரத்து தருணெ……வரர் கொ
  7. விலில் ஆண்டா(ர்)களும் பலமண்டலத்து பன்மாஹெஸ்வரரும் பட்டு கெட்டும் இட்டு அட்டியும் இ(வ்)வகரத்துக்கு அழிவுசெய்வாரை காத்தும் கா(ப்)விச்சும் இவகரம் விளை நிலத்துக்கு விளைஞ்ச நிலத்தால் கொல் அருள்நிதியால் ஒருமா(ச) செய்க்கு ஆட்டொரு திரமம் இத்தெவற்க்கு ஸ்ரீ
  8. பண்டார(த்)தெ ஒடுக்கிவிச்சு(க்) கொண்டு இ……….ணரை மற்றெப்பெர்பட்டுது கொள்ள(ப்) பெறாதாராகவும் இப்படி சுந்தன் கண்டனான துவராபதி வெளான் பெயரால் அவனுக்கு நன்றாக கண்டன் சுந்தனான துவராபதி வெளான் செய்த  …..த்தை இவ்விருபது  ……………..ணர் னம்ம
  9. உத்தொடும் இக்கோயிலிலெ இப்படி கல்வெட்டி குடுத்த சுந்தன் பகைவென்ற கண்டனான துவராபதி வெளாநென்.

(தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி – 14, எண்.243, மற்றும் A. R. No.  39 of 1929.)




No. 249.
(A. R. No.  38 of 1929.)
Sivapuri, Tiruppattur Taluk, Ramanathapuram District.
On the south wall of the second prakara in the Svayamprakasa temple.
This record states that Velan Uyyaniraduvan of Pandangudi in Sura-nadu made a gift of a field called Anjada gadan for the kitchen expenses in the temple of Tiruttandonir-Isvaramudaiyar at Nripasekhara-chaturvedi mangalam in the 20th year of the reign of Srivallabhadeva.

1.    ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீவல்லவதெவற்கு யாண்டு உய இருபதாவது கெரளகிங்க வளநாட்டு  ….
2. ஷெயம் நிருபசெகர சதுபெதி மங்களத்து திருத்தாந்தொன்றி ஸ்வரமுடையாற்கு சுரநாட்டுப்
3. பாண்டங்குடி வெளாந் உய்யநின்றாடுவாந் (பலர்) பக்கலும் விலைகொண்ட அஞ்சாத கண்டன் வழை(யி)ல் சுற்று முற்றும் இ
4.    தெவ(ர்)க்குத் திருமடை(ப்) பள்ளிப்புறமாகக் கொண்டு விட்டா(ன்)


( தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி – 14, எண்.249,  மற்றும் A. R. No.  38 of 1929.)



மேலே கொடுக்கப்பட்ட கல்வெட்டுச் சான்றுகளில் இருந்து பள்ளன் சுன்டன் என்பவன் துவராபதி வேளான் என்றும் தேவர் துவராபதி வேளார் என்றும் அழைக்கப்பட்டுள்ளான். மேலும், அவன் சுந்தன் கண்டனான துவராபதி வேளான் என்றும், சுந்தன் பகைவென்ற கண்டனான துவராபதி வேளாநென் என்றும் குறிப்பிடப்படுகிறார். அவரது மகன் கண்டன் சுந்தனான துவராபதி வேளான் என்றும் அழைக்கப்படுகிறார்.



இந்த சுந்தன் சந்ததியரைத்தான் காடவர் தலைவன் பிற்காலத்தில் வென்றதாகவும், அதற்காக அளகாபுரி, சிதம்பரம், சிவகிரி போன்ற பகுதியில் ஆட்சி செய்யும்படி பொறுப்பு கொடுத்ததாகவும் கூறிக்கொள்கின்றனர். மேலும் பாண்டியனுக்கும், சோழனுக்கும் நடந்த சண்டையில், பாண்டியர் பக்கம் நின்று சோழருக்கு எதிராக போர் செய்த காடவருக்கு கானாடு பகுதியில் மள்ளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நூற்றியெட்டு கிராமங்களில் சிலவற்றை பாண்டிய மன்னன் தானமாக கொடுத்ததாகவும் இதே பாளையக்காரர்கள் பெருமையாக கூறிக்கொள்கின்றனர்.

                                                                                                                   (தொடரும்)



Monday, 26 September 2016

பகுதி 3 'வேளிர் என்போர் உண்மையில் யார்?' என்பது பற்றிய வரலாற்றுத் தேடல் - Pandyan Mallar

இனி புறநானூறு பாடல் ( 201 ) குறிப்பிடும் துவரை எது என்பதை ஆய்வு செய்வோம்.

நீயே வட பால் முனிவன் றவின்டோன்றி
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறப்பேர ண்ணல்

           ( புறநானூறு, கபிலர், பாடல் 201 வரி 8 – 12)



           ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்

          ( புறநானூறு, கபிலர்,பாடல் 201 வரி 15,)


இருங்கோவேளை வடபால் முனிவன் றவின்டோன்றி துவரையை ஆண்ட வேளிருள் 49 - வது வழிவந்த வேளிருள் வேளே என சங்கப்பாடல் கூறுகிறது. இதிலிருந்து இவ்வேளிர் வடபால் முனிவனுடனான தொடர்பு சங்ககாலத்திலேயே குறிக்கப்பட்டது என்பதை காணலாம். இதே குலத்தில் வந்தவர்கள் பின்னர் கொடும்பாளூரைத் தலை நகராகக் கொண்டு சீரும் சிறப்புமாக ஆண்டிருக்கிறார்கள். சோழப் பெருமன்னர்களிடம் பெண் கொடுத்தும், கொண்டும் பெரும் புகழ் பெற்றவர்கள். இருக்குவேள் எனப்பெயர்பெற்ற இவர்களது கல்வெட்டுகள் இவர்களை 'யாதவர்கள்' எனக் குறிக்கின்றன. விக்கிரகேசரியாகிய பூதியை கொடும்பாளூர்க் கல்வெட்டு யாதவன் என்று குறிக்கிறது.


கல்வெட்டு இவர்களை யாதவன் என்று குறிப்பிடுவதன் பொருள் என்னவென்றால் இவர்கள் யது குலத்தவர்கள் (சந்திர குலத்தவர்கள்) என்பதாகும்.


'துவரை' என்று குறிப்பிடப்படுவது கண்ணன் வாழ்ந்ததாக சொல்லப்படும் கூச்சரத்திற்கு அருகிலுள்ள கடல் கொண்ட துவாரகை என்று சிலர் கதை சொல்கிறார்கள். சிலர் அது இன்றைய 'காஸ்மீர்' என்கின்றனர். சிலர் கர்நாடகத்தின் 'ஹலபேடு' என்கின்றனர். இன்னும் சிலர் அதை தமிழ் நாட்டின் 'துவரங்குறிச்சி' என்று விளக்குகின்றனர். இவை அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு துவரை பற்றி உண்மை கண்டறியும்பொருட்டு ஆய்ந்த வரலாற்றார் சங்க பாடலில் 'தடவு' என்ற வார்த்தைக்கு கீழ்கண்ட விளக்கத்தை அளித்துள்ளனர்.


நாற்பக்கமும் மலைகள் சூழ்ந்த இடைநிலத்தைத் 'தடவு' என்றோ 'கோட்டம்'  என்றோ குறிப்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் மக்களின் வழக்கமாக இருந்தது.

(புறநானூறு 201 - 400 ஒளவை. சு. துரைச்சாமி பிள்ளை திருநெல்வேலி தென்னிந்திய சிந்தாந்த கழகப்பதிப்பு,1951, பக்கம் 4)


"செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
 உவரா வீகைத் துவரை யாண்டு"                 (புறம். 201)


என்று கபிலரும் பாடியிருப்பதால், இலங்கையிலும் துவார சமுத்திரம் என்னும் துவரை நகரிலும்  இஞ்சியரண் இருந்தமை அறியப்படும். செப்புக்கோட்டை என்பது இராவணன் கோட்டைப் பெயராக இன்றும் ஈழத்தில் வழங்குகின்றது. செப்புப் புரிசையிருந்த நகர் துவரையெனப் பெயர் பெற்றது கவனிக்கத் தக்கது. துவர் - சிவப்பு துவரை யென்னும் பயற்றின் பெயரும் இக்காரணம் பற்றியதே. துவர் - துவரை

(ஞா. தேவநேயப்பாவானர் )


இவ்வாறு ஞா. தேவநேயப்பாவானர் அவர்கள் துவரை என்ற ஒரு இடம் இலங்கையிலும் இருந்தது என்று குறிப்பிடுகிறார்.  ஆதலால் அக்காலத்தில் துவரை என்ற பகுதி பல இடங்களில் இருந்துள்ளன என நாம் முடிவு செய்யலாம். மேலும் துவரை என்ற சொல் வேளாண் வித்து ( ஒருவகை பயற் – தானியம்)  என்றும் கூறுகிறார்.

மேலும், இலங்காபுரி என்பதை மலைகளால் சூழப்பட்ட நகரம் என்றும் சிலர் குறிப்பிடுவர்.


அதுமட்டுமல்ல 'துவரை' என்பதற்கு இரு பாதிகளைக் கொண்ட 'அரையம்' என்பதே விளக்கம். இதை பாடல் 202 தெளிவாக்குகிறது. துவரை பற்றி பேசும்போது 'வடபால் முனிவன் தடவு' என்று வரக்கூடிய பாடல் 201 ஐ மட்டும் வைத்து கதை சொல்வார்கள். ஆனால், அந்த துவரையின் அர்த்தத்தை தெளிவுபடுத்தும் பாடல் 202 ல் உள்ள "இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்" என்ற வார்த்தையை வசதியாக மறைத்து விடுவார்கள்.

(திருசுந்தரலிங்க குடும்பன்)



துவரங்குறிச்சி பற்றி கள ஆய்வு செய்த திரு. இராமமூர்த்தி மகாலிங்கம் கூறுவதாவது:

வடபான் முனிவன் ஒருவர் நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டதும் நடுவே பள்ளமான பள்ளத்தாக்கு பகுதியில் தனது வாரிசுகளுடன் வாழ்ந்து வந்தார். வடபான் முனிவன் தமிழ் நாட்டின் தெற்கிலிருந்து சென்று மேற்கு தொடர்ச்சி மலையில் வாழ்ந்தவர் அல்லது பண்டைய புலம்பெயர் தமிழர்களான சிந்து சமவெளியில் இருந்து கூட வந்திருக்க வாய்ப்புள்ளது. லாடமுனி கூட லாட தேசமாகிய இன்றைய குஜராத் பகுதியில் இருந்து வந்தவர் தான். லாட முனி மற்றும் அகத்தியர் குடும்பர்களின் கோவில்களில் காணப்படுகிறார்கள். 

மலை பிரதேசத்தின் பள்ளமான பகுதிகள் புஞ்சை மற்றும் நன்செய் பயிர் செய்வதற்க்கு கந்த பகுதியாகும். நன்செய் பயிர்களான நெல் மற்றும் வாழையை தமிழ் நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் தேவேந்திரக் குடும்பர்கள் என்று சங்கரன் கோவில் கல்வெட்டு கூறுகிறது. ஆதியில் அவர்கள்   துவரை போன்ற புஞ்சை பயற் வகைகளை பயிர் செய்திருக்க கூடும். 

மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து புலம்பெயர்ந்து சிவகங்கை வடபகுதி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள துவரையில் ஆட்சி செய்தவர்கள் இருங்கோவேள் வழிவந்த வேளிர்கள் ஆகும்.  அப்பகுதியில் குடும்பர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள். பாண்டியரின் மருதை@மதுரை என்ற பெயரை போன்று இருங்கோவேள் வழிவந்த குடும்பர்கள் துவரை என்ற பெயரையும் கொண்டு வந்திருக்க கூடும். அந்த வகையில் உருவானது தான் சிங்கம்புணரி அருகே உள்ள துவரை @ துவார் @ துவாரபுரி பட்டணம்.

நெல் வயல்களுக்கு உரிமையாளராய், மறவர் சமூகத்தவர்கள் இன்று வரை இருங்கோவேள் வழி வந்த குடும்பருக்கு பரிவட்டம் மற்றும் முதல் மரியாதை கொடுப்பதும் தொடர்கிறது. கொண்டையன் கோட்டை மறவர் இறப்பு நிகழ்விலும் இருங்கோவேள் வழிவந்த குடும்பர் தான் புதுத்துணி கொடுக்கிறார்.

(திரு. இராமமூர்த்தி மகாலிங்கம் - துவாரபுரி பட்டணம்)


இங்கு குறிப்பிடப்படும் துவரை என்பது கண்ணபிரான் ஆட்சி செய்த துவாரகை இல்லை என்பது ஏற்கனவே குறிப்பிட்டது போல் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது.  ஆதலால் இனி, இவ்வேளிர் யாவர்? இவர் குலம் யாது? இவர் தமிழ்நாட்டின் பழைய மக்களா? ல்லது இடையில் வந்தேறியவரா? அல்லது இங்கு குறிப்பிடப்படும் துவரையில் யார் இருந்தார்கள் என்பதை ஆய்வு செய்வோம்.

தொன்முதிர் வேளிர்” (அகம் - 258; புறம் - 24)

எவ்விதொல்குடி” (புறம் - 202)

 “இருங்கோவேள் மருங்கு” (பட்டினப்பாலை)

என நூல்களில் காணப்படுவதால், வர்கள் பண்டைக்கால முதலே தமிழ்நாட்டில் வாழ்ந்த தொல்குடி என்பதும் தெளியப்படுகின்றது.


வேளிர் பதினெட்டுக் குடியைச் சேர்ந்தவர் என்றும் பதினெண் வகைக் குடியைச் சேர்ந்தவர் என்றும் நச்சினார்க்கினியார் குறிக்கிறார். இவர்களின் அந்த 18 குடிகள் எவை என நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை.


அதியமான், மலையமான், திரையன், பாணன் கங்கர் முதலிய குறுநில மன்னர்களும் ஆண்டிருக்கின்றனர். இவர்கள் வேளிர் குலத்தவரா என்று சொல்லத் தகுந்த சான்றுகள் இல்லை. பொதுப்படையாகக் குறுநில மன்னர் என்ற பொருளில் 'வேளிர்' என்னும் சொல் வழங்கப்பட்டது. அவ்வடிப்படையில் இவர்களை வேளிர் எனலாமே தவிர இவர்கள் வேளிர் குடியைச் சேர்ந்தவர் எனக் கூற இயலாது. அதியமான் உதியர்களாகிய சேரரின் வழிவந்தவன். திரையன், சோழரின் வழிவந்தவன். பாணர் என்ற சிறந்த குறுநில மன்னர்கள் மஹா பலியின் வழிவந்தோர் எனக் கூறிக் கொண்டனர். இவர்கள் பலருக்கு 'மாவலிவாணராஜன்' என்று பெயர் உண்டு. மகாபலியின் வழியில் வந்தவர் என இவரை மணிமேகலை கூறுகிறது. கங்கர் என்பவர் கங்க வம்சத்தில் பிறந்தோர் எனக் கூறிக் கொண்டனர். ஆதலின் இவர்கள் வேளிர் குலத்தைச் சார்ந்தவர் ஆகார்.

(Dr. இரா. நாகசாமி - யாவரும் கேளிர்)


நச்சினார்க்கினியர், "பல்லொளியர் பணிபொடுங்க" என்ற பட்டினப் பாலையடியின் உரையில், "ஒளியராவார், மற்றை மண்டலத்திற்கு அரசராதற்குரிய வேளாளர்" என எழுதல் ஆராயத்தக்கது.

(இராகவ ஐயங்கார் - வேளிர்  பக். 16)


தமிழ் நாட்டிற்றம் பழைய மதிப்புடன் பல்கிப்பெருத்த யாதவர் உழுதுண்டு வாழ்ந்த வேளாளராவர். ஆசிரியர் - நச்சினார்க்கினியர் தொல்காப்பிய வுரையில் (பொருளதி. 30) அடியில் வருமாறு எழுதுகின்றார்:- "வேளாளர் இருவகையர்; உழுதுண்போரும் உழுவித்துண்போரும் என. இவருள் உழுவித்துண்போர் மண்டிலமாக்களுந் தண்டத்தலைவருமாய்ச் சோழ நாட்டுப் பிடவூரும்,அழுந்தூரும்,நாங்கூரும்,நாவூரும்,ஆலஞ்சேரியும், பெருஞ்சிக்கலும்,வல்லமுங் கிழாரும் முதலிய பதியிற்றோன்றி, 'வேள்' எனவும், 'அரசு' எனவும் உரிமை-யெய்தினோரும்,

( இராகவ ஐயங்கார் - வேளிர்)



பாண்டிய நாட்டுக் 'காவிதிப்' பட்டமெய்தினோரும், குறுமுடி குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடைவேந்தர்க்கு மகட் கொடைக்குரிய வேளாளராம். உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி அழுந்தூர் வேளிடை மகட்கோடலும், அவன் மகனாகிய கரிகாற்பெருவளத்தான் நாங்கூர் வேளிடை மகட்கோடலும் கூறுவர்" எனவும், "வேளாளர் பகைவர் மேலும், நாடுகாத்தன் மேலும், சந்து செய்வித்தான் மேலும் அரசரேவற்படி செல்லுதற்குரியர்" எனவும் காண்க. இவற்றால், வேளாளருட் பலரைத் தமிழ்ப் பெருவேந்தர் தம் அரசியலில் உயர்நிலையில் வைத்து மதித்துவந்ததோடு, அவரினத்துச் சிற்றரசரான வேளிருடைய பெண்களை அவ்வேந்தர் விரும்பி மணம்புரிந்து வந்தனரென்பதும் அறியலாம். சேரன் - செங்குட்டுவன் மனைவி 'இளங்கோ -வேண்மாள்' என்று சிலப்பதிகாரங் கூறுதலுங் (காதை - 25- அடி -5) காண்க. பதிற்றுப்பத்தில் இத்தொடர்பு பலவாகக் கூறப்பட்டுள்ளது.

( இராகவ ஐயங்கார் - வேளிர்)



இக்காலத்து அங்கங்கே அகப்படும் சிலா, தாமிர சாஸனங்களிலும் "வேணாட்டரசர், வேள்குலச் சளுக்கி" எனவும் "வராக வெல்கொடி, சூகரக்கொடி" எனவும், சளுக்கியரது நாடு, குலம், கொடி முதலியவை கூறப்படுகின்றன.

(ஸ்ரீ.து.அ. கோபிநாதராயரவர் - சோழ வமிச சரித்திரம், அநுபந்தம் II)



தென்னாடாடண்ட சளுக்கியரைப் பண்டைத் தமிழ் நிகண்டுகள் வேள் புலவரசர் என்று கூறுகின்றன: இதனை " வேள்புல அரசர் சளுக்குவேந்தர்"  எனத் திவாகரத்தும், பிங்கலத்தும் வரும் சூத்திரத்தால் அறியலாம். இவற்றுள், திவாகரத்தில், அச்சளுக்கரது கொடி வராகமென்பதைக் "கேழல்வேள்புல வரசர்கொடியே" என்ற சூத்திரங் கூறுகிறது. இத்திவாகரம் பாடுவித்த அம்பர்கிழான் சேந்தனார், கடைச் சங்கத்தவரான ஔவையாராற் பாடப்பெற்றவர் என்பது, அந்நிகண்டின் தொகுதியிறுதிக்கட்டுரைகளாளே நன்கு விளங்குதலின், அத் திவாகரமும் அச் சங்ககாலத்தது என்பது சொல்லாதே அமையும்.


சசி குலத்தவர்கள் என்றால் இந்திராணியின் வழிவந்தவர்கள் என்று பெயர். ஏனெனில் சசி, கடைச்சியர் என்பது தேவேந்திரரின் மனைவியான இந்திராணி மள்ளத்தியரின் மற்ற  பெயர்கள் ஆகும்.  சாளுக்கியர்கள் சோழர்களின் பெண்வழி வாரிசுதாரர்கள், லால்தான் சாளுக்கியர்கள் தங்களை சசி குல சாளுக்கி என்றும், மல்லர் என்றும் குறிப்பிட்டுக் கொண்டார்கள். இதை கீழ்கண்ட கல்வெட்டு சான்று உறுதி செய்கின்றன.


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளகஸ்தியில் உள்ள காளகஸ்தீஸ்வரர் கோயில் சமையலனறச் சுவரில உள்ள கல்வெட்டு ராஜராஜதேவரின் எட்டாவது ஆண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஆகும்.

1.கல்வெட்டு வாசகம்      
"ஸ்வத்ஸ்ஸ்ரீ ராஜராஜதேவற்கு யாண்டு 8 வது சசிகுல சாளுக்கி தனி நின்று வென்ற வீ'ரநரசிங்கதேவன் ஆன யாதவராயனேன் நாயனார் திருக்காளத்தி உடைய நாயனார்க்கு பெரும் பூண்டிநாட்டுப் பாலைச்சூர் நாற்பாற்கெல்லைக்கும் உட்பட்ட நஞ்சை புன்சை நிலம் கடமையும் பாடிக்காவலும் சாகையும்.,..,,."
(தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 4, எண் 648)

 2. கல்வெட்டு வாசகம் 
"ஸ்வத்ஸ்ஸ்ரீ ராஜராஜதேவற்கு யாண்டு 8 வது சசிகுல சாளுக்கி தனி நின்று வென்ற வீ'ரநரசிங்கதேவனான யாதவராயனேன் நாச்சியார் திரக்காளத்தி உடைய நாயனார்க்கு, கருப்பாற்றூர் நாட்டு எக்கோமலப்பூண்டி நால்பால் எல்லைக்கும் உட்பட்ட நஞ்சை புஞ்சை நிலம் கடமையும் பாடிகாவலும் சாரிகையும் .... ..”
(தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 4, எண் 648 A)


மேலும்,

  1. தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி  8 எண்கள் 469 மற்றும்   482  சசிகுல சளுக்கி வீரநரசிங்க தேவன் பற்றியும்
  2. தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 8, எண் 380 சசிகுல சாளுக்கி யாதவராஐன் பற்றியும் கூறுகின்றன.


சங்க காலத்திலிருந்தே வேளிர்களில் பலர் வடநாட்டுத் தொடர்பு உள்ளவர்களாகத் தங்களைக் கூறிக் கொண்டனர். அதற்காக அவர்கள் வடநாட்டிலிருந்து வந்தவர்கள் என்ற பொருளல்ல. ஏனெனில், குமரி கண்டம் கடல்கோலால் பாதிக்கப்பட்டதால் அக்குள்ள மக்கள் புலம் பெயர்ந்து பல இடங்களில் குடியேரினர். அவர்கள் இந்தியா மட்டும் அல்ல உலக நாடுகள் பல இடங்களில் குடியேரினர். இக் கருத்தை கடலியல் ஆய்வாளர் திரு. ஒரிசா பாலு அவர்கள் தன் ஆய்வின்மூலம் நிருபித்துள்ளார். Dr. அம்பேத்ர் அவர்கள் ஒரு காலத்தில் தமிழர்கள் இந்தியா முழுவதும் இருந்தார்கள் என்று குறிப்பிடுகிறார். மா.சொ. விக்டர் அவர்கள் உலக முழுவதும் மள்ளர்கள் ஆட்சி செய்ததை தமிழர் நில மேளான்மை என்ற நூலில் விளக்கியுள்ளார்.


இக்கருத்துக்களை உறுதி படுத்தும் விதமாக இந்தியாவில் பல மாநிலங்களில் வாழும் சத்திரிய குர்மி (சத்திரிய குடும்பி, கும்பி, குடும்பர், பட்டேல், வர்மன்) மக்கள் நாங்கள் தமிழகத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் என்றும், எங்கள் முன்னோர் தமிழகத்தில் இன்று வாழும் 'குடும்பர்கள்' என்றும் குறிப்பிடுகின்றனர்.



பழனி முருகன் கோவில் செப்பேட்டில் ( வரி 191 - 195) தெய்வேந்திர பள்ளர் விருது பற்றி குறிப்பிடும்பொழுது


இப்படி பள்ளனெனப்பட்ட சாதி காசிக்கும் தெற்கு, கண்ணியாமுரிக்கும் வடக்கு, மாந்தைக்கும்  கிழக்கு, மானொளிக்கும் மேற்கு, இந்த நான்கு தேஷத்திற்க்குண்டாகிய பள்ளனெனப்பட்ட சாதி அனைவோர்களுக்கும் தரும்ம விளக்கம் செய்கின்ற பழனி மட சிவாலயம் தெய்வேந்திர பள்ளன் விருது என்று கூறுகிறது.


ஆதிநித்த குடும்பன் ஆட்சி செய்த, அதாவது, உலகின் முதல் மாந்தன் தோன்றியதாக சொல்லப்படும் ஆதிச்ச நல்லூரில் இன்றும் ஆதிநித்த குடும்பனின் சந்ததிகள் மஹாபாரத போர் நிகழ்வை ஒரு விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் வேறு எங்கும் இது போன்ற விழா எடுக்காதபோது, ஆதிநித்த குடும்பனின் சந்ததிகள் மட்டும் ஏன் இது போன்ற விழா எடுக்க வேண்டும் என்பதை சற்று சிந்திக்கவேண்டும்.


மேலும், ஒரு வரலாற்றுச் சான்றாக தேவேந்திர சமுகத்தின் ஆதின குருக்கள் நியமனம் பற்றி குறிப்பிடும் நத்தம் செப்பு பட்டையத்தில் பல நாட்டு குடும்பர்கள் பற்றி குறிப்பிடுகையில் துவாரபுரி நாட்டுக் குடும்பர்கள் பற்றியும் குறிப்பிடுகிறது. ஆதலால் புறநானூறு (201) குறிப்பிடும் துவரையில் குடும்பர்கள் இருந்தார்கள் என்பது உறுதியாகிறது.



                                                                         
                                                                                                           (தொடரும்)