தமிழக வரலாற்றில் 'வேளிர்' என்ற குடியினர் பற்றி பல்வேறு வரலாற்று அறிஞர்கள் இதுவரை தெரிவித்த கருத்துக்கள் வேளிர்கள் பற்றிய உண்மையை அறிந்து கொள்வதற்குப் பதிலாக அவர்களின் வரலாற்றை இரட்டடிப்பு செய்து உண்மையில் 'அவர்கள் யார்' என்பதை அறியவிடாமல் செய்யும் முயற்சியாகத்தான் தெரிகிறது. இது வழக்கம் போலவே தமிழ்த்தலைக்குடியின் மாட்சிமை பெற்ற வரலாற்றை மறைப்பதோடு, இந்தியாவின் 'பூர்வகுடிமக்கள் தமிழர்கள்' என்ற அடிப்படை உண்மையையும் சிதைத்து விடுகிறது. இதற்கு ஏதுவாக செய்யப்பட்ட முயற்சியின் தொடர்ச்சியாகத்தான் புறநானூற்றுப் பாடல் 201 பற்றி உரையாசிரியர்கள் கொடுத்த விளக்கம் உள்ளது. ஆம், சங்கப்புலவர் கபிலர் எழுதிய பாடல் 201 லுள்ள 'வடபால் முனிவன் றவின்டோன்றி...' (http://www.tamilvu.org/library/suvadi/s128/images/s1280932.jpg) என்று மூல ஏட்டிலுள்ள அந்த உண்மை வாசகத்தை ஏட்டிலிருந்து முதல் பதிப்பு செய்யும்போது வேளிர் தோற்றம் பற்றி தான்தோன்றித்தனமாகப் பின்னர் பலவாறு விளக்கம் சொல்லிக் கொள்வதற்கு வசதியாக அந்த வாசகத்தை 'வடபால் முனிவன் தடவின்டோன்றி..' என்று மாற்றி எழுதிக் கொண்டதுதான் முதல் முயற்சி. அந்த தவறான செய்தியை வைத்துதான் பின்னர் பல அறிஞர்கள் வேளிர் தோற்றம் பற்றித் தவறான விளக்கம் கொடுக்க நேர்ந்தது. எது எப்படி இருந்தாலும் அந்தப் பாடலில் உள்ள 'வடபால் முனிவன்' என்பதை நாம் மறுக்க முடியாது. அதாவது, வேளிர் என்போர் வடபால் முனிவன் ஒருவரின்வழி சம்பந்தப்பட்டவர்கள் என்று சொல்லப்பட்ட செய்தியை பாடலின் வழி நாம் உணர முடிகிறது. இதை வைத்து கருத்துத் தெரிவித்த பல வரலாற்றார் அது 'அகத்திய முனிவன்' என்று விளக்கம் தந்துள்ளனர். ஆனால், எந்தக் காரணத்திற்காக ஏட்டிலுள்ள மூலசெய்தியை மாற்றி 'தடவு' என்று செய்தி வரும்படி பதிப்பிட முயற்சி செய்யப்பட்டதோ அதன்வழி விளக்கத்தைக் கொடுப்பதற்கு வசதியாக 'வடபால் முனிவன்' என்பதற்கு 'சம்பு முனிவன்' என்ற விளக்கமும் தரப்பட்டுள்ளது. சரி, பெரும்பான்மை வரலாற்றாரின் விளக்கத்தைக் கொண்டும், உரையாசிரியர்கள் கொடுத்த விளக்கத்தைக் கொண்டும் அது 'அகத்திய முனிவன்' என்பதாக எடுத்துக் கொண்டு நாம் வேளிர் பற்றிய உண்மை வரலாற்று செய்தியை தெளிவுபடுத்தலாம்.
முதலாவதாக, மஹாபாரத காலத்தில் கிருஷ்ணன் இறந்த பின்பு, அக்காலத்தில் வாழ்ந்த அகத்தியர் ஒருவர் பதினெண்குடி வேளிரையும் துவாரகையிலிருந்து தமிழ் நாட்டிற்கு அழைத்து வந்ததாக நச்சினார்கினியர் குறிப்பிடுவதாக சிலர் கூறி அதன்மூலம் வேளிர்கள் தமிழர்கள் இல்லை என்றும், அந்த வேளிர் குடியிலிருந்துதான் மூவேந்தர்கள் தோன்றினார்கள். ஆதலால், மூவேந்தர்களும் தமிழர்கள் இல்லை என்றும் வாதிடுகின்றனர். இது ஏற்புடையதா என்பதை ஆய்வு செய்வோம்.
வேளிர் வரலாற்றைப்பற்றித் நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பாயிரவுரையில், அடியில் வருமாறு குறிப்பிடுகின்றார்:-
"தேவரெல்லாங்கூடி 'யாம் சேரவிருத்தலின் மேருத்தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது; இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்குரியர்' என்று அவரை வேண்டிக்கொள்ள, அவரும் தென்றிசைக்கட் போதுகின்றவர்.....
துவராபதிப்போந்து, நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும், பதினெண்குடி வேளிர் உள்ளிட்டாரையும், அருவாளரையுங் கொண்டுபோந்து காடு கெடுத்து நாடாக்கி.......... பொதியிலின்கணிருந்தனர்" எனக்காண்க.
அவர் இவ்வாறு கூறுவதற்க்கு சிலர் மேற்கோல் காட்டும் புறநானூறு பாடல்
நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறப்பேர ண்ணல்
கபிலர் - புறநானூறு, பாடல் 201 வரி 8 - 12
நாம் முன்பே குறிப்பிட்டதுபோல் இந்தப் பாடலின் மூலஏட்டில் 'தடவு' (
http://www.tamilvu.org/library/suvadi/s128/images/s1280932.jpg) என்ற வார்த்தை இல்லை. ஆனால், 'தடவு' என்ற வார்த்தை இருப்பதாகக் கொண்டு அதற்கு சிலர் 'ஒமக்குண்டம்' என்றும், சிலர் 'தண்ணீர் பாத்திரம்' என்றும் வேளிர் பற்றிய அவர்களது ஆராய்ச்சியில் இந்தப் பாடலை சுட்டிக்காட்டி விளக்கமளித்துள்ளனர். இன்னும் சிலர் 'தடவு' என்பதற்கு 'நாற்பக்கமும் மலை சூழ்ந்த இடம்' என்று பகுத்தறிவுக்கு ஒப்ப விளக்க தந்துள்ளனர். இப்படிப் பலரும் பலவித விளக்கங்கள் கொடுப்பதற்குக் காரணம் சம்பந்தமில்லாத வகையில் இந்தப் பாடலில் 'தடவு' என்ற வார்த்தை இடம் பெற்றதுதான். இதன்பொருட்டே புறநானூற்று உரைகாரர் பாடலின் இந்த இடத்தில், 'கதை உரைப்பின் பெருகும்; அது கேட்டுணர்க' என்று கூறிச் சென்றுவிட்டார். இதை வசதியாக மறைத்து விட்டனர். அப்படியெனில்,பாடலின் இந்த இடத்தில் உண்மையான பொருள்தான் என்ன? வேளிர்கள் வடபால் முனிவனாகிய அகத்தியரின் வழிப்பட்டவர்கள்.இதை நாம் மறுப்பதற்கில்லை. இதன்வழி இப்பாடலுக்கான உண்மையான பொருள் காணும்போது அது “வடபால் முனிவனாகிய அகத்திய முனிவன் தென்னாட்டில் இருந்த இடத்தின்கண் தோன்றி நாற்பத்தொன்பது தலைமுறைகள் துவரையை ஆண்ட போர்மறமும் கொடையும் மிகுந்த வேளிர்களுள் ஒருவனே.” என்பதாகும்.
சிலர் குறிப்பிடுவது போல் கண்ணபிரான் வழியினராகிய அரசரையும் வேளிரையும் அகத்தியர் வடநாட்டிலிருந்து கூட்டி வந்து தென்னாட்டிற் குடியேற்றினர் என்ற செய்தி நாம் இங்கு ஆராய்தற்குரியது. ஏனெனில், அகத்தியனார் தென்னாடு புகுந்த வரலாற்றைப் பற்றிப் புராணங்களிற் சொல்லப்பட்டிருப்பதை ஒத்தே மேற்கூறிய செய்திகள் பெரும்பாலும் அமைந்துள்ளனவாயினும், கண்ணன் வழிவந்தோர் பலரை அம்முனிவர் தம்முடன் கொணர்ந்தாரென்பது எப்புராணங்களிலும் கூறப்பட்டிருப்பதாக தெரியவில்லை. மேலும் இங்கு குறிப்பிடப்படும் சிவபெருமானின் திருமணம் மஹாபாரத கிருஷ்ணன் இறந்த பின்புதான் நடந்தது என்று எந்த புராணத்திலும் குறிப்பிடப்படவில்லை.
முதலில் இப் புறனாநூறு பாடல் (201) குறிப்பிடும் வடபால் முனிவனாகிய அகத்தியன் உண்மையில் யார்? என்பது பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
- அகத்தியர்
தனது புண்ணிய கருமங்களால் கொலைத் தொழிலுடைய அசுரரைத் தொலைத்துத் தென் பூமியை
மக்கள் உறைதற்கேற்ற இடமாக மாற்றினார். (ஆரணிய காண்டம். சருக்கம் 11, சுலோகம் 81)
- இராமர் இராவணனைக்
கொன்று சீதையை மீட்டுக்கொண்டு வந்த செயல் அகத்தியர் மக்கள் நுழைய முடியாத
தென் தேசத்தை வென்றதோடு உவமிக்கப்பட்டுள்ளது. (இலங்கா காண்டம் 117 - வது
சருக்கம், 13 - 14
சுலோகம்)
- அவர் தென்
தேசத்தில் திரிந்து தங்கிய இடங்கள் ஆச்சிரமங்கள் எனப்பட்டன. தண்டகாரணியத்துக்குச்
சில மைல் தூரத்திலுள்ள நாசிக் என்னும் இடத்தில் அவர் தங்கி இருந்தாரென்று
இராமாயணம் கூறுகிறது. ஆனால் அவர் அவ்விடத்தில் அமைதியுற்றிருக்க முடியவில்லை.
அங்குமிங்கும் குடியேறியிருந்த அந்தணர்களை அரக்கர் தாக்கினார்கள். அவர்களை
அழிக்கும்பொருட்டு அகத்தியர் தனது தவவலிமையை பயன்படுத்தினார்.
- அகத்தியர், கோத்திரம்
ஒன்று தொடங்கி அக்கோத்திரத்திற் பலர் பெருகினார்கள். அகத்தியர் கோத்திரம்
இன்றும் உள்ளது. அவரிடமிருந்து தோன்றிய புதல்வர்கள் பலரைப்பற்றி மச்ச புராணம்
கூறுகிறது.
- இந்திரன்
அசுரர்களை அழிக்க வரும்போது அவர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர்.
தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும்
குடித்து விட, இந்திரன்
அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார். அகத்தியர்
நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை
பெற்றார்.
- கைலையில்
நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது.
அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.
மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக்
கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில்
பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை
செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை.
- அகத்தியர்
தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை
மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார். தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை
மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “அகத்தியம்” என்னும் நூலை
இயற்றினார். அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட
செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள்.
அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
- வாதாபி, வில்வளவன்
என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும்
வேதியர், முனிவர்
முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறி சமைத்து படைத்து வாதாபியை
திரும்ப அழைக்க; அவன்
அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள்.
முனிவர் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண
சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும்
வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி
இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.
- சித்தராய்
விளங்கிய அகத்தியரை பற்றிய "அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம்"
வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர்
அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு
சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி
கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன்
காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார் அகத்தியர்.
புதுச்சேரிக்கு அருகிலுள்ள 'உழவர்
கரையில்' ஆசிரமம்
அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த
பகுதி 'அகத்தீஸ்வரம்' என்று
அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார்
ஆலயம் என்றும் கூறுகின்றனர்.
- அகத்தியர்
இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார். இராமன் தொழுத அகத்தியரைப்
பற்றி இராமாயணம் குறிப்பிடுகிறது.
- சமணர்களால்
போற்றப்படுபவர்களின் பட்டியலிலும் அகத்தியர் இருக்கிறார். ஜாவா, சுமத்திரா
தீவுகளுக்குச் சென்று சைவ சமயத்தைப் போதித்த சிவகுருவாகவும் அகத்தியர்
இருக்கிறார். - சிலப்பதிகாரம்,
- மணிமேகலை,
- பரிபாடல்களிலும் அகத்தியரைப் பற்றிய குறிப்புகள் இடம்
பெறுகின்றன. வேள்விக்குடி சின்னமனூர்ச் செப்பேட்டில் பாண்டியன் புரோகிதர்
அகத்தியர் என்று குறிப்புள்ளது. சேக்கிழாரின் பெரியபுராணத்தை ஒட்டி அகத்தியர்
"பக்த விலாசம்" எனும் நூலை வடமொழியில் அகத்தியர் எழுதியதாகவும்
கூறப்படுகிறது.
- அகத்தியக்
குடும்பன் என்னும் மள்ளர் ஒருவர் தமிழ் மொழியை நன்றாய்க் கற்று, தன்னுடைய
குலப் பாரம்பரிய அனுபோகத்தில் வந்த வைத்திய முறைகளைக் கூட்டிப் பல பாடல்களால்
வைத்திய நூல் செய்தார். அவர் தம்குடி வழியை – பிரங்கடையை அகத்திய மள்ளர்
என்பர் (துடிசைக்கிழார்,
கா. நமச்சிவாயா முதலியார் – அகத்தியர் ஆராய்ச்சி)
No comments:
Post a Comment