Thursday, 22 September 2016

பகுதி 2 'வேளிர் என்போர் உண்மையில் யார்?' என்பது பற்றிய வரலாற்றுத் தேடல் - Pandyan Mallar

இவ்வாறு அகத்தியர் பற்றிய வரலாற்று குறிப்பு முன்னுக்குப்பின் முரன்பட்டதாக உள்ளது. மேலும் இராமனும், கண்ணபிரானும்(கிருஷ்ணன்) வாழ்ந்த காலம் வெவ்வேறு யுகம். ஒவ்வொரு யுகத்திற்க்கும் 1,00,000 வருடம் இருக்கலாம் என சில புராணங்கள் கூறுகின்றன. வரலாற்று ஆய்வாளர்கள் குறைந்த பட்சம் 5000 முதல் 10000 வருடம் வரை இடைவெளி இருக்கலாம் என கூறுகின்றனர். இவ்வாறு இராமன் காலத்தில் வாழ்ந்த அகத்தியரும் கிருஷ்ணன் காலத்தில் வாழ்ந்த அகத்தியரும் ஒருவர்தான் என்பது ஏற்புடையதன்று.

அகத்தியர் பதினெண்குடி வேளிரையும் சிந்து சமவெளியில் உள்ள துவாரகையிலிருந்து தமிழ் நாட்டிற்கு அழைத்து வந்ததாக நச்சினார்கினியர் குறிப்பிடுவது ஏற்புடையதுதானா என்பதை சற்று ஆய்வு செய்வோம்.

சிந்து சமவெளி நாகரிகம் என்பதே இராம அவதாரம் முடிந்து கிருஷ்ணாவதாரத்துக்குப் பின், அதாவது மஹாபாரத்த்துக்குப் பின் எழுந்த நாகரிகமாகும் என்பதற்கு மொகஞ்சதாரோவே ஒரு சாட்சி.

சிவபெருமான் திருமணத்தின் போது தென் திசை சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லவில்லை என்பதற்கு சாட்சியாக விந்திய மலையும் இன்னும் உயரவில்லை. பின்பு எப்படி இராமாயண காலத்தில் தமிழகம் வந்து இங்கேயே தங்கிவிட்ட அகத்தியர் மஹாபாரத காலத்தின் இறுதியில் வாழ்ந்த கண்ணபிரனின் குடியினரை குஜராத்தில் உள்ள துவரையிலிருந்து தமிழகம் அழைத்துவந்திருக்க முடியும்.

மேலும் நச்சினார்க்கினியர் - "இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து அவனை ஆண்டு வாராமை விலக்கி" என்ற செய்தியையும் உடன் கூறுகின்றார். இச்செய்தி, மதுரைக் காஞ்சியுரையிலும் அவ்வுரைகாரராற் குறிக்கப்பட்டுள்ளது. இவ் இராவணன் இராமபிரானோடு பொருது வீழ்ந்தவனாயின், கண்ணபிரான் காலத்துக்குப் பின்னிகழ்ந்த செய்தியுடன் இராவணன் விஷயம் கூறப்படுதற்குக் காரணம் புலப்படவில்லை.

அதில் இன்னும் ஒரு வரலாற்றுச் சான்று உள்ளது. மஹாபாரத போர் நடந்து கண்ணபிரான் இறந்த பின்பு தமிழகம் வந்த வேளிர்களில் இருந்துதான் மூவேந்தர்கள் தோண்றினார்கள் என்று குறிப்பிடுவது வேடிக்கையிலும் வேடிக்கையான ஒன்று. ஏனெனில், அந்த மஹாபாரதபோரில் பாண்டியனும், சோழனும் நேரிடையாக கலந்துகொண்டார்கள் என்றும், ஹாபாரம் குறிப்பிடுகிறது. மேலும் பாண்டிய வேந்தனுக்கும், அர்சுனனுக்கும் உள்ள தொடர்பையும் விளக்குகிறது. ஒரு பாண்டிய மன்னன் அசோத்மனுடன் போரிட்டான் என்றும் குறிப்பிடுகிறது.

மஹாபாரதத்தில் மூவேந்தர் தொடர்பு:

1. அதாவது மஹாபாரதப் போரில் சோழர், சேரர், பாண்டியர் என்று தனித்தனியாகச் சொல்லப்பட்ட மக்கள் அனைவருமே கலந்து கொண்டார்கள் (மஹாபாரதம் 8 - 12).

2. மஹாபாரதத்தில் பாண்டிய மன்னன் ஒருவனைப் பற்றி விவரங்கள் உள்ளன. அவன் பெயர் சாரங்கத்துவஜன். (மஹாபாரதம் 7 - 23). அவனுக்கு கிருஷ்ணனுடன் முன்பகை இருந்தது. ஒருமுறை கிருஷ்ணன் அவனது நாட்டின் மீது படையெடுத்து அவன் தந்தையைப் போரில் கொன்று வென்றான். அதனால், சாரங்கத்துவஜனுக்கு கிருஷ்ணனைப் பழி வாங்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. அதன் காரணமாக கிருஷ்ணன் ஆண்ட துவாரகை மீது படையெடுக்க விரும்பினான். ஆனால், மதியூகிகளான அவனது நண்பர்கள் அவனைத் தடுத்தனர். அவர்கள் ஆலோசனையின்படி இந்தப் பாண்டிய மன்னன் கிருஷ்ணனுடன் நட்புறவு கொண்டு பாண்டவர்களுடன் சேர்ந்து போரிட்டான் என்று மஹாபாரதம் தெரிவிக்கிறது.

3. ஒப்பற்ற பீஷ்மகனும், அனைத்து நற்குறிகளும் கொண்ட மன்னன் பாண்டியனும், மன்னர்களில் முதன்மையான ருக்மியும், ஏகலயவனும், மத்ர மன்னன் சல்யனும் இங்கிருக்கும் போது, ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா} நீ ஏன் கிருஷ்ணனுக்கு முதல் வழிபாட்டைச் செலுத்தினாய்? (மஹாபாரதம்  -  சபாபர்வம் பகுதி  - 36)

4. இறையனார் அகப்பொருள் உரையிலும், கடல் கொண்டுவிட்ட கபாடபுரத்தில் நடந்த இரண்டாம் சங்கத்துக்குத் துவரைக் கோமான் வந்திருந்தான் என்று குறிக்கப்பட்டுள்ளது. 'துவரை' என்பது துவாரகையாகும், அதை நிர்மாணித்து ஆட்சி செய்தவன் கிருஷ்ணன். எனவே, இரண்டாம் தமிழ்ச் சங்கத்துக்கு வந்த துவரைக் கோமான் என்பவன் கிருஷ்ணன் என்று சிலர் கூறுவர்.

5.  மலையத்துவஜ பாண்டியனின் மகளை அர்ஜுனன் மணந்ததாக கர்ண பரம்பரைக் கதை கூறுகிறது.

6. சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள், தங்கப்பாத்திரங்களில் நிரப்பப்பட்ட மலைய {Malaya} மலைகளில் மட்டுமே விளையும் சந்தனச் சாறையும், பெரும் அளவிலான சந்தனத்தையும், தர்துரா {Dardduras hills} மலைகளிலிருந்து கற்றாழைக் கட்டைகளையும், அதிக பிரகாசமுடைய ரத்தினங்களையும், தங்கத்தால் பிண்ணபட்ட அற்புதமான ஆடைகளையும் கொண்டு வந்தும், அவர்களுக்கு {சோழ மற்றும் பாண்டிய மன்னர்களுக்கு} உள்ளே நுழைய அனுமதி கிடைக்கவில்லை. கடலில் விளையும் சிறந்த ரத்தினங்களையும் கொண்டு வந்த சிங்கள மன்னன், கூடவே குவியல் குவியலாக முத்துகளையும், யானைகளுக்கான நூற்றுக்கணக்கான விரிப்புகளையும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடைகள் உடுத்தி, கண்களின் ஓரம் தாமிரம் போலச் சிவந்த எண்ணிலடங்கா கருநிற மனிதர்களையும் கொண்டு வந்து அந்தக் காணிக்கைகளுடன் வாயிலில் காத்திருந்தான். (மஹாபாரதம்  -  சபாபர்வம் பகுதி  - 51

7. கடல் அருகே கரையோர நிலத்தில் வசித்த பாண்டியன், மன்னர்களின் மன்னனான யுதிஷ்டிரனுக்காகப் பல்வேறு வகையான துருப்புகளுடன் வந்தான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, இந்தத் துருப்புகளெல்லாம் கூடிய போது, நன்கு உடுத்தி அதீத பலத்துடன் இருந்த அவனது {பாண்டியனின்} படை கண்ணுக்கு இனிய தோற்றத்தை அடைந்தது. (மஹாபாரதம் -  உத்யோக பர்வம் பகுதி  - 19)

8. இந்திரனுக்குச் சற்றும் குறையாதவனும், போரிடும்போது வீரமிக்க எண்ணற்ற வீரர்களால் தொடரப்படுபவனுமான பாண்டியனும் அங்கே வந்திருக்கிறான். குறிப்பிடத்தக்க வீரம் கொண்டவனும், பராக்கிரமமிக்கவனும், ஒப்பற்ற சக்திமிக்கவனுமான அவன் {பாண்டியன்}, பாண்டவர்களின் காரியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்திருக்கிறான். (மஹாபாரதம் -  உத்யோக பர்வம் பகுதி  -22)

9. மேலும் சேரன் போரில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகிர்த்தான் என்றும், அப்போரில் ஈடுபடுபவர்களுக்கு உணவு அழித்தான் என்றும் குறிப்பு உள்ளது. இதை சுட்டும் புறநானூறு 2 - வது பாடல்  இன்றும் சான்றாக அமைகிறது.

புறநானூறு - 2, பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகனார், பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், திணை: பாடாண், துறை: செவியறிவுறூஉ, வாழ்த்தியல்

…………………………………………………………………………..நீயோ பெரும
அலங்கு உளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம் பூந்தும்பை
ஈரைம்பதின்மரும் பொருது களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்


இராமாயண காலத்தில் பாண்டியன் மற்றும் சோழன்:

1. வேளிர்கள் தமிழகம் வந்ததாக சொல்லப்படும் காலத்திற்க்கு 100000 வருடத்திற்க்கு முன்பு வாழ்ந்ததாக சொல்லப்படும் இராமாயணம் காலத்திலும் பாண்டியர் கபாடபுரத்தில் ஆட்சி செலுத்தினார்கள் என்பதற்க்கு வாழ்மிகி இராமாயனம் சான்று பகிற்கிறது.

வால்மீகி இயற்றிய இராமாயணம் வடமொழியில் ஆதிகாவியம் என்று புகழ் பெறுவது. மேலும், அதே இராமாயணம் கிட்கிந்தா காண்டத்தில் இலங்கை நோக்கிச்செல்ல இருந்த அனுமனுக்கு சில அறிவுரைகளைக் கூறும் போது பாண்டிய மன்னனும் அவனது தலைநகரம் கபாடபுரமும் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை,

               பொன்னிறைந்ததாயும் அழகுடையதாயும், முத்து 
               மயமான மணிகளால் அலங்கரிக்கப் பெற்றதாயும்     
               பாண்டியர்க்குரியதுமாகிய கவாடத்தைப் பார்க்கக் கடவீர்.

                                                                                                        -வால்மீகி
                     
            ‘ததோ ஹேமமயம் திவ்யம் முக்தாமணி விபூஸ்யதம்
             முக்தா கபாடம் பாண்ட்யானாம் கதா திருக்யசவானரா’
                                                                                                             -வால்மீகி
என்று கூறுகிறார்.

 நீ செல்லும்போது முதலில் ஒரு ஊர்(கபாடபுரம்) வரும். அங்கு நீ இறங்கி விடாதே. இறங்கி விட்டால் அந்த ஊரை விட்டு நீ இலங்கைசெல்ல உன் மனம் விரும்பாது. ஏனெனில் அங்குள்ள நாகரீகமும்; பண்பாடும் உன்னை இழுக்கும் எனவே அங்குநிற்காமல் தொடர்ந்து போ அதற்கு அடுத்தாற்போல இலங்கைவரும்’

எனவே, இராமாயணக் காலத்தில் கபாடபுரம் இருந்தது என்பதும்  அங்கு பாண்டியன் ஆட்சி செய்தான் என்பதும் உறுதியாகிறது.

2. கபாடபுரத்தில் பாண்டியன் ஆட்சி புரிந்தான் என்பதற்கு இறையனார் அகப்பொருள் சான்றாக அமைகிறது.

அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்து கடல் கொள்ளப்பட்ட மதுரையும்
கபாடபுரமும் என்ப.’ (இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம்)


3. தமிழர் குமரிக்கண்டப் பழங்குடி மக்கள் என்பதற்குப் பண்டைத் தமிழிலக்கியச் சான்றுகள்:

(1) (தென்)மதுரை தலைக்கழகம் இருந்த இடம் தென்மதுரை யென்னும் தொன் மதுரையாகும்.

"தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கமென மூவகைப் பட்ட சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள். அவருள் தலைச் சங்க மிருந்தார் ........தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை யென்ப" என்பது இறையனாரகப்பொருளுரை (ப.6).

இதில் ‘தமிழ்வளர்த்தது‘ என்றிராது ‘தமிழாராய்ந்தது’ என்றிருப்பது ஊன்றிக் கவனிக்கத்தக்கது. "இடைச்சங்கமிருந்தார்....... தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப "கடைச் சங்கமிருந்து தமிழாராய்ந்தார்.... நாற்பத்தொன்பதின்மர் என்ப... அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரையென்ப" என்று, இடை கடைக் கழகங்கள் போன்றே தலைக்கழகமும் தமிழாராய்ந்ததாகச் சொல்லப்பட்டிருப்பதால், தலைக் கழகத்திற்கு முன்பே தமிழிலக்கிய விலக்கணங்கள் பேரளவு தோன்றி யிருந்தமை பெறப்படும்.

ஞா.தேவநேயப் பாவாணர் - தமிழ் வரலாறு – பக். 6 – 7

இவ்வாறு இராமாயண காலத்தில் குறிப்பிடப்படும் கபாடபுரத்திற்க்கு முன்பே பாண்டியன் குமரிகண்டத்திலுள்ள தென் மதுரையில் ஆட்சி செய்தான் என்பதை யாரும் மறுக்கமுடியாத வரலாற்றுச் சான்றாக அமைகிறது.

4. இராவணனுக்கும் அகஸ்தியருக்கும் வீணை இசைப்பதில் போட்டி நிகழ்ந்துள்ளதாயும் அந்தப் போட்டியில் இராவணன் தோற்றுவிட்டதால் அவன் தமிழ்நாட்டை விட்டு இலங்கைக்குச் சென்றுவிட்டதாகவும் ஒரு கதை உண்டு. சங்க இலக்கியமான மதுரைக் காஞ்சிக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையில் இக்கதையைக் குறிப்பிட்டுள்ளார்.

5. வால்மீகி இராமாயணத்தில் இராமனுடைய முன்னோர்களில் ஒருவனாக கல்மாஷ பாதன் என்ற மன்னன் பெயர் குறிப்பிடப்படுகிறது. தஞ்சைக்கு அருகில் உள்ள வல்லம் சிவன் கோவில் தலபுராணத்தில், த்ரேதாயுகத்தில் கல்மாஷ பாதன் என்ற சூரிய குலச் சோழன் கட்டிய கோயில் என்ற விவரம் உள்ளது. ( எஸ். இராமச்சந்திரன் - தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)

6. இராமனைப்பற்றி அகநானுறு (70), மணிமேகலையில் குறிப்பிடுவதால் இராமன் என்பவன் ஒரு கற்ப்பனை கதாபாத்திரம் என்று ஒதிக்கிவிடவும் முடியாது.

கி.பி. 6ஆம் நூற்றாண்டுக் காப்பியமான மணிமேகலையில், 
"குரங்கு செய்கடல் குமரியம் 
பெருந்துறை" 

- என்ற வரி இடம் பெற்றுள்ளது. குமரித் துறையில் அல்லது குமரி முதல் இலங்கை வரை வானரங்களால் பாலம் அமைக்கப்பட்டது என்பது இதன் பொருள்.

7. வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த 15
                                                             (அகநானுறு – 70 ) 

என்று அகநானுறு பாடல் இராமன் ஒருவன் வாழ்ந்ததாக  குறிப்பிடுகிறது.

இதன்மூலம் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், மஹாபாரதக் இறுதிக்காலத்தில் கண்ணபிரான் குடிவழியினர் வந்துதான் தமிழகத்தில் அரசு உருவாக்கினார்கள் என்று கூறுவது பொய் என நிரூபிக்கப்படுகிறது.


                                                                                                        
                                                                                                    (தொடரும்)




No comments:

Post a Comment