வேட்டுவர்
என்ற பட்டம் இன்றைய வேட்டுவ கவுண்டர்களுக்கு மட்டும் இல்லை என்பது அனைவரும் அறிந்த
ஒன்றுதான். குறிஞ்சி நில வேளாளர் என்று சொல்லக்கூடிய வேட்டுவ மக்கள், காடழித்து நாடாக்கும்
கடுமையான உழைப்பிற்குச் சொத்தக்காரர்கள். காடு
திருத்தி கழனியாக்குமுன், வரகும் திணையும், சாமையும், எள்ளும், கொள்ளும் விதைப்பவர்கள்
வேடர், வேட்டுவர், காவலுவர், மாவலுவர் மற்றும் பூவலுவர் என்ற பூர்வீக மக்களாம். இவர்கள் கானநெல்
என்ற புதியனவாகப் போட்டு நெல் உற்பத்தியைச் செய்யத் தொடங்குபவர். வேட்டுவ பள்ளர் என்ற
குடிவழியினர் 240 பேரை அடையாளங்காட்டி புலவர் கி.ஆ. குப்புராசு சரோசினி அவர்களால் கதிரவன்
என்ற திங்கள் இதழில் ஒரு கட்டுரை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கான நெல்லை கண்டு விளைவித்தவர்
வேட்டுவ பள்ளராவார்.
வேட்டுவத்தொழில்
குறிஞ்சி நில மக்களுக்கு குலத்தொழிலாக இருந்த போதிலும் மருத நில மக்களும் வேட்டைத்தொழிலில்
ஈடுபட்டுள்ளனர். இதற்க்கு சான்றாக மருதநில வேந்தன் முருகன் மான் வேட்டைக்குச் சென்ற
இடத்தில் வள்ளியைச் சந்தித்து அவளை விவாகம் செய்த செய்தியும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்
இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர் பல பட்டப்
பெயர்களால் அழைக்கப்பெறுகின்றனர். இவற்றுல், குடும்பன், குடுமி, தென்குடும்பர், குடும்பனார்,
குடுமர், குடும்பிகள், குடும்பிச்சி, குடிம்பர், தகைமாண் குடுமி, குடுமி கோமான், விறன்மாண்
குடுமி, மல்லர், மல்லச்சியர், மல்லாரி, மல்லி, மள்ளர், மள்ளன், மள்ளனார், மள்ளியர், மள்ளி, ஆகியன மிகவும் குறிப்பிட த்தக்கதாகும்.
(அணுத்திரப் பல்லவரைசி - வரலாற்று வித்தகர் பேராசிரியர் ம.இராசசேகர தங்கமணி.)
கி.பி. 12, 13 - ஆம் நூற்றாண்டுகளில்) மள்ளர் சமுதாயத்தார் பல ஊர்களில் வாழ்ந்துள்ளனர் என அறியலாம்.
அவர்களில் பலர் அரசு அதிகாரிகளாகவும்,
படைவீரர்களாகவும், நில உடைமையாளராகவும்
விளங்கினர். மள்ளர்களைக் கொங்குக் கல்வெட்டுகள்
குடும்பர் என்று அழைத்துள்ளன. ஒரு கல்வெட்டு தென்குடும்பன் என அழைப்பதால் மதுரைப்
பகுதியிலிருந்து கொங்கு நாட்டிற்கு இவர்கள் குடிபெயர்ந்து வந்திருக்கலாம்.
குடும்பர்கள் ஒவ்வொரு ஊரிலும் கூட்டம்
கூட்டமாகவும் வாழ்ந்துள்ளனர். இவர்கள்
கோவிலுக்குக் கொடை நல்கும் அளவிற்கு வசதி படைத்தவர்கள். படைவீரராக வாழ்ந்த குடும்பர்கள் கலைகளிலும் ஈடுபாடு மிக்கவர்களாகத்
திகழ்ந்தனர்.
கொங்குக் கல்வெட்டுகள் வழி
அனுத்திரப் பல்லவரையன் என்று பட்டம் பெற்ற சிங்கன் சோழன், இருங்கோளர் என்று பட்டம்
பெற்ற சுதன் அதிசயசோழன் என்ற இரு குடும்பரும் போற்றுதற்கு உரியவர்கள். இருவருமே
நிலக்கொடை அளித்துச் சிறந்தவர்கள்!
(வரலாற்றில் மள்ளர் –
முனைவர் இரா. ப. கருணானந்தன் கல்வெட்டாய்வாளர் - தொல்லியல் துறை)
கொங்குச்
சோழ மன்னன் வீரசோழதேவன் காலத்தில் அப்பகுதியில் உயர் அலுவலராகத் திகழ்ந்த தென் குடும்பரில்
சிங்கண் சோழனான அணுத்திரப் பல்லவரையன் என்பவர் கண்ணாடிப்புத்தூர். அனந்தீஸ்வரமுடையார்
கோயிலில் அம்மன் திரிபுவன சுந்தர நாச்சியார்க்கு நாள்தோறும் இருநாழி அரிசி அமுது செய்தருளுவதற்காக
நிலம் கொடையாக அளித்தார். அவர் அளித்த கொடை நிலம் இருதூணிக் குறுணி விதைநெல் விதைக்கும்
அளவுடையது. நிலத்திற்கு நாற்பாங்கு எல்லைகள் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
குடும்பர்
என்பது மள்ளர் (பள்ளர்) சமுதாயத்திற்குரிய சிறப்புப் பெயர்களில் வந்துள்ளது. இலக்கிய
வழக்கும் உண்டு. இன்றைய தழிழ்நாடு அரசு சாதிப் பட்டியலிலும் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியில் குடும்பன்
பள்ளர் தலைவன் என்று பொருள் கூறி உள்ளார். தென்குடும்பர் என்ற பெயரால் வடகுடும்பர்
என்ற பெயர் வழக்கொன்றும் இருந்ததாக நாம் யூகிக்கலாம். அல்லது தென் திசைக்கு உரியவராக
அப்பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம். வடகரை - தென்கரை என்பது அமராவதி ஆற்றை மையமாகக்
கொண்டு பெயர் வந்திருக்கக் கூடும்.
"வாளோடு கேடயமும் கைகளில் பிடித்த வலிமை மிக்க மள்ளர்கள், தோளோடு உள்ள அம்புக்கூடுகளில் வில்லம்புகள் நிறைந்த மள்ளர்கள், நல்ல நாட்களில் வீரக் கதைகள் பேசும் மல்லர்களுக்கு உழைப்போடும் போர்ப்பயிற்சிகள் கற்றுத் தரும் பாடசாலைகள் பல இருந்தன" என்பதை மேற்கண்ட செய்யுளடிகள் உணர்த்துகின்றன
(தென்
குடும்பர் தலைவர் – புலவர் செ. இராசு – கொங்கு ஆய்வுமையம்) கச்சியப்ப
முனிவர் இயற்றிய பேரூர் புராணம் திருநகரப்படலம் - 2 செய்யுள் 12 - ல் மள்ளர்கள் வில்லம்பு,
கேடையம் போன்றவற்றை பயன்படுத்துவதில் திறமையுடையவர்கள் என்று கூறுகிறார்.
வில்லம்பு கொண்ட மள்ளர்
"வாளொடு பரிசைகை வாங்கு மீளிகள்
தோளொடு தூணிவிற் றுதைந்த மள்ளர்கள்
நாளொடு வேல்கதை நயக்கும் வீரர்கள்
தாளொடு போர் பயில் சாலை யெண்ணில"
தோளொடு தூணிவிற் றுதைந்த மள்ளர்கள்
நாளொடு வேல்கதை நயக்கும் வீரர்கள்
தாளொடு போர் பயில் சாலை யெண்ணில"
"வாளோடு கேடயமும் கைகளில் பிடித்த வலிமை மிக்க மள்ளர்கள், தோளோடு உள்ள அம்புக்கூடுகளில் வில்லம்புகள் நிறைந்த மள்ளர்கள், நல்ல நாட்களில் வீரக் கதைகள் பேசும் மல்லர்களுக்கு உழைப்போடும் போர்ப்பயிற்சிகள் கற்றுத் தரும் பாடசாலைகள் பல இருந்தன" என்பதை மேற்கண்ட செய்யுளடிகள் உணர்த்துகின்றன
இதேபோல்,
மள்ளர் குலத்தைச் சேர்ந்தவர் குடும்பர் இருங்கோளன் என்று கல்வெட்டுகளும்,
இலக்கியங்களும் குறிப்பிடுவதாக நாம் முன்பே பல சான்றுகளை பார்த்தோம். அவன் அரசனாக இருப்பதால்
பொழுது போக்கிற்காக வேட்டைத்தொழிலில் ஈடுபட்டிருத்தல் வேண்டும். ஆதலால், இருங்கோவேள் வேட்டைக்காரன்
என்ற சிறப்பு பட்டம் பெற்றதாக சில கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
1.
கி.பி.1281 ஆம் ஆண்டில் சோழர் ஆட்சி வலிமையிழந்து, பாண்டியர் ஜம்பைப் பகுதியைக் கைப்பற்றிய போது அப்பகுதி குறுநிலத் தலைவர்கள், பாண்டியர் மேலாதிக்கத்தை
ஏற்றனர். மாறவர்மன் விக்கிரம பாண்டியனின் நான்காம்
ஆட்சியாண்டு ஜம்பையில் உள்ள ஒரு துண்டுக் கல்வெட்டு நரலோக
ஈசுவர முடையார்க்கு அப்பகுதி குறுநிலத் தலைவன் முதலியான
முனயதரையன்
வேட்டுவன் ஆளவந்தான் இருங்கோளன் என்பான்
திருவமுதுபடிக்குச் செய்த ஏற்பாட்டைக் குறிப்பதாகத் தெரிகிறது A.R.E. No.436 of 1937 - 38)
- "மலையதரையன் வேட்டுவன் ஆளவந்தான் இருங்கோளன் (A.R.E. No.79 of 1922).
- "சேந்தமங்கலத்து வேட்டைக்காறன் மாணியான் கலக்கியான கரிகால சோழ இருங்கோளப்பாடி நாடாழ்வாந்" (A.R.E. No. 359 of 1902).
- இந்நாட்டுப்புன்னத்துப்
பூவாணியவேட்டுவரில் வெளான் கரியானான மருதங்க வெளான். (SII Vol. III ,No. 24,
Part I & II, Page 45)
(வேளான் என்பது வேளாண் சமுகத்து
அரசியல் தலைவர்களை குறிக்கும்)
- வேட்டைக்காறன் அத்திமல்லன் விளக்கநேன் களமிருதூர்ப் பள்ளி பெருமான் தொண்டநைச் சாத்தி வைத்த விளக்கு" (A.R.E. No. 365 of 1902)
இவ்வாறு
மேலே கண்ட தொல்லியல் துறை மற்றும் வரலாற்று அறிஞர்களின் கருத்துப்படி குடும்பன், குடுமி,
தென்குடும்பர், குடும்பனார், குடுமர், குடும்பிகள், குடும்பிச்சி, குடிம்பர், தகைமாண்
குடுமி, குடுமி கோமான், விறன்மாண் குடுமி, குடும, பூலுவ குடும, மல்லர், மல்லச்சியர்,
மல்லாரி, மல்லி, மள்ளர், மள்ளன், மள்ளனார், மள்ளியர், மள்ளி, வேட்டைக்காரன், வேட்டுவன்
போற்ற பெயர்கள் மள்ளர் இனத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் இருந்துள்ளது என்பது
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்க்குச் சான்றாக சில கல்வெட்டுகளை காணலாம்.
- பல்லடம் பொங்கலூரிலுள்ள கல்வெட்டு “பூலுவ தெங்குடும” என கூறுகிறது. (பூலுவ மரபைச் சார்ந்த தென் குடும்பர்)
- தஞ்சை மாவட்டம் திருக்கோடிக்காவல் நிருபதுங்கப் பல்லவனின் கல்வெட்டு ஒன்று மல்லன் வேங்கடவனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இவனுடைய முழுபெயர் வேட்டுவதி அரையன் ஆன மல்லன் வேங்கடவன். இவன் திருக்கோடிக்காவல் சிவன்கோவிலில் நந்தா விளக்கு எரிப்பதற்காக 15 கழஞ்சு பொன் கொடையளித்தான் (78 / 12) ( SII Vol. 12, No, No. 78 )
- ஈரோடு
மாவட்டம் வெள்ளோடு கல்வெட்டு “அறைச்சலூரில் கரைய வேட்டுவரில் குன்றியடவர் எழுத்து”
என கூறுகிறது.
( தமிழ் நாடு அரசு தொல்லியல்
துறை – தொடர் எண். 1223 / 2003)
- ஈரோடு
மாவட்டம் திங்களூர் கல்வெட்டு “திங்களூரிற் கறைய வேட்டுவந் சமைய மந்திரி” என கூறுகிறது.
( தமிழ் நாடு அரசு தொல்லியல்
துறை – தொடர் எண். 1149 / 2003)
இந்த திங்களூரில் வாழ்ந்தவர்கள்
அனைவரும் மள்ளர் இனத்தவர் என திங்களூர் செப்பேடு கூறுகிறது. கரையாளர் என்பது கரைய என திரிந்துள்ளது.
கரையாளர் என்பது மள்ளர் இனத்தின் ஒரு உட்பிரிவு.
- 1982-ம் ஆண்டு சென்னை பலகலைக்கழகம் வெளியிட்டதமிழ் - லெக்சிகன், ஆங்கிலத் தமிழ் அகராதி பக்கம் 346 -ல் பள்ளரின் கிளைச் சாதியாக பட்டினக் கரையார் உள்ளது.
- தி. நடராஜன் எழுதிய கட்டபொம்மன் கும்மிப் பாடல்கள் என்ற வரலாற்று நூல் , பக்கம் 8 மற்றும் பக்கம் 82 - 83-ல் பள்ளக் குடும்பன் கரையாளன் பாயம் புலி போல சிங்கங்களும் என்றும், பள்ளக்குடும்பன் கரையாளன் பாதனுக்கு ஒரு கையோலை என்றும் பள்ளரின் உட்பிரிவாக கரையாளரைக் குறிப்பிடப்பட்டுள்ளது. (பார்வை,11/95 மள்ளர் மலர்)
- விருதுநகர் மாவட்டம், மானூர் மள்ளர் -ஆசாரிமார் செப்பேட்டில் அக்கசாளைக் குடும்பர்களில் "அஞ்ஞப் பள்ளு, அச்சைப் பள்ளு, மங்கல நாட்டுப் பள்ளு, கோத்திரப் பள்ளு, என்ற பள்ளர்களின் பட்டியலில் பட்டனக்கரைப் பள்ளு" என்று பள்ளர் பிரிவில் கரையார் இடம்பெறக் காணலாம். தவிர, அணைக்கரையார், காலான்கரையார், அக்கரைகண்டார், பாலக்கரைநாட்டார் உள்ளிட்ட பள்ளர் சாதி வகைகளும் இவ்விடத்தே நினைத்தற்கு உரியனவாகும்.
- சுப்பிரமணிய நாவலரால் இயற்றப்பட்ட திருவேட்டைநல்லூர்
அய்யனார் பள்ளு செய்யுள் 44 இல் இடம் பெற்றுள்ள மலைக்குரிய தெய்வமான வானவனை -
இந்திரனை மீனவன் எனக் குறிக்கும் அடிகள் வருமாறு:
"மீனவன்செந் திருவேட்டை வானவன் நல்லூர்செழிக்க
வேணமழை பெய்யும் நாளை காணும் பள்ளீரே"
- திருநெல்வேலி மாவட்டம், நாஞ்சான்குளத்தில் பள்ளர்கள் தங்களின் குல தெய்வமாக 'மாசானக் கரையான்' என்னும் தெய்வத்தை வழிபட்டு வருகின்றனர்.
- தமிழ் நாடு அரசு பட்டியல் சாதியில் கடையர் என்ற பள்ளர் இனத்தின் உட்பிரிவு கொடுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று இன்றைய நடைமுறையில்
வேடன், வேட்டுவன், வேட்டையன் என்ற பெயரில் பள்ளர்கள் இருக்கிறார்கள் என்பதை கீழ்கண்ட
சான்றுகள் உறுதி செய்கிறது.
1. நீலம்பூரில் உள்ள பாண்டிய வம்ச தேவேந்திர குல வேளாளர்களில் பாரம்பரிய உரிமை பெற்ற வேட்டையன் கோயிலில் பூசாரியாக இன்றும் திரு. சுப்பிரமணிய பண்ணாடி அவர்கள் குடும்பத்தவர்களே இருந்துவருகின்றனர்.
2. மல்லாண்டார் கோவில் போன்று வெட்டுவான் கோவில் இன்றும் மள்ளர்களின் குலதெய்வ கோவிலாக உள்ளது. அம்பு விடும் திருவிழா இன்றும் குடும்பர்களால் நடந்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
3. தமிழ் நாடு அரசு சாதி பட்டியலில் கீழ்கண்ட பள்ளர்களின் உட்பிரிவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
1. நீலம்பூரில் உள்ள பாண்டிய வம்ச தேவேந்திர குல வேளாளர்களில் பாரம்பரிய உரிமை பெற்ற வேட்டையன் கோயிலில் பூசாரியாக இன்றும் திரு. சுப்பிரமணிய பண்ணாடி அவர்கள் குடும்பத்தவர்களே இருந்துவருகின்றனர்.
2. மல்லாண்டார் கோவில் போன்று வெட்டுவான் கோவில் இன்றும் மள்ளர்களின் குலதெய்வ கோவிலாக உள்ளது. அம்பு விடும் திருவிழா இன்றும் குடும்பர்களால் நடந்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
3. தமிழ் நாடு அரசு சாதி பட்டியலில் கீழ்கண்ட பள்ளர்களின் உட்பிரிவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
வேடன்
(SC – 74)
வேட்டுவர்
( SC - 76)
மலை வேடன் (ST – 22)
இவர்களுக்கும் வேட்டுவ கவுண்டர்
இன மக்களுக்கும் யாதும் தொடர்பு இல்லை என்பதை தேவேந்திர குல மள்ளர்களின் பழனி முருகன்
கோவில் செப்பேடு மற்றும் நந்தம் செப்பேடு தெளிவுபடுத்துகிறது.
பழனிப்பட்டயம் வ.எண் 9 - வேட்டைப் பள்ளன்
நத்தம்
பட்டயம் வ.எண் 12 - வேட்டைப் பள்ளன்
தமிழ்
நாடு பட்டியல் இனம் எண் 74 – ல் உள்ள வேடன் என்ற பெயரும், எண். 76 – ல் உள்ள வேட்டுவர்
என்ற பெயரும், மற்றும் பழங்குடியினர் பட்டியல் எண்
22
ல் உள்ள மலை வேடன் என்ற பெயரும் பழனிப்பட்டயம் வ.எண் 9 – ல்
உள்ள வேட்டைப் பள்ளன் என்ற பெயரும், நத்தம் பட்டயம் வ.எண் 12 – ல் உள்ள வேட்டைப் பள்ளன்
என்ற பெயரும், பட்டையங்களின் படி மள்ளர் குலத்தின் உட்பிரிவாகும்.
மேலே கண்ட வரலாற்றுச் சான்று
மற்றும் இன்றைய நடைமுறை நிகழ்வுகளில் இருந்து வேடன், வேட்டுவன், வேட்டையன் என்ற பட்டங்கள்
மள்ளர் இன மக்களுக்கும் உள்ளது என்பது நிறுபிக்கபடுவதால், வேட்டுவன்
ஆளவந்தான் என்ற பட்டங்கொண்ட இருங்கோளர்க்கும் இன்றை வேட்டுவக்
கவுண்டர்களுக்கும் யாதும் தொடர்பு இல்லை என்பதை உறுதியாக கூறலாம்.
(தொடரும்)