Thursday, 13 October 2016

பகுதி 7 'வேளிர் என்போர் உண்மையில் யார்?' என்பது பற்றிய வரலாற்றுத் தேடல் - Pandyan Mallar


கி.பி.1200 ஆம் ஆண்டு கோவை பேரூர் பட்டீசுவர மள்ளருக்கு நிலம் கொடையளித்த  தென்வழிநாட்டு ஏழுர் ஊராளி தென் குடும்பரில் சிங்கன் சோழன் அணுத்திரப் பல்லவரையன் பற்றிய கல்வெட்டு குறிப்பிடுகிறது. (தெ.க.தொகுதி 5, எண் 240). இது கொங்கு பகுதியில் குடும்பர்  குலத்தவரின் ஆட்சி அதிகாரத்தை எடுத்துக் காட்டுகின்றன.

அதே கோவை பேரூரில் நடைபெறும் இந்திரவிழா எனும் பொன் ஏர் பூட்டும் விழாவில் மள்ளர் சமூகத்தைச் சேர்ந்த பட்டக்காரர்களான செல்வபுரத்தைத் தலைமையாக கொண்ட பட்டக்காரர், மற்றும் நாட்டுப்பண்ணாடி, வெள்ளலூரைத் தலைமையாக கொண்ட பட்டக்காரர், கோதவாடியைக் தலைமையாக கொண்ட பட்டக்காரர், இருகூரைத் தலைமையாக கொண்ட பட்டக்காரர் ஆகிய நான்கு பட்டக்காரர்களும் சிறப்பிக்கபடுவர். இப்பேரூர் பட்டீஸ்வரர் கோயில்  கரிகாற்  சோழனால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடைபெறுகின்ற ஆனி உற்சவம் என்னும் இந்திரவிழா கரிகாற் சோழன் காலத்தில் இருந்து மருத நிலத்து மள்ளர்களான தேவேந்திர குல வேளாளர்களுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை முக்கியதுவமும் இவர்கள்தான் சோழ அரசின் பிரதிநிதிகள் என்பதை உறுதிப்படுத்தும்.

மேலும் கோயமுத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் கடத்தூர் திருமருதுடையார் கோயிலில் உள்ள கோமாறவன்மரான திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீவீரநாராயண தேவரின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி.13 - 14 நூற்றாண்டு) கரைவழி நாட்டு ஊராளி தென்குடும்பரில் சிங்கன் சோழனான இராஜராஜதேவன் செங்கழுநீர் ஓடை வெட்டவும் அமுதுபடிக்கும் விஞ்சனத்திற்கும் நிலம் தானமாகக் கொடுத்தது பற்றிக் கூறப்படுகிறது. 

கல்வெட்டு வாசகம் :

"ஸ்வஸ்திஸ்ரீ கோமாறபன்மரான திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ வீரநாராயண தேவற்கு யாண்டு 7 - வது கரைவழிநாட்டுக் கடற்றூரான இராஜராஜநல்லூரில் ஆளுடையார் திருமருதுடைய நாயனாற்கு …...க்கும் திருச்செங்கழனி ஒடை செய்கைக்கும் நிமந்தப்புறமும் இந்நாயனார் கவய ..........எழுன்தருளி திருவேட்டை எழுந்தருளுகைக்கு வேண்டும் வெஞ்சனத்துக்கும் அமுதுபடி ..... பகல் மகேஸ்வரர் அமுது செய்தருள திருமடத்துக்கு வேண்டும் விஞ்சனத்து……. கரைவழி நாட்டு ஊராளி தென்குடுமரில் (தென்குடும்பரில்) சிங்கன் சோழனான இராஜராஜதேவன் ……த்திரான் விட்ட நிலமாவன ---------- ".
( மா.கணேசன், திரு.இரா.ஜெகதீசன்  - கொங்கு நாட்டுக் கல்வெட்டுக்கள் எண்.169)

அதே போன்று மள்ளர் வீரராசேந்திர தேவர் (கி.பி. 1217) 10 – ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு கரைவழிநாட்டு கொடிக்காரைத்தொழு குடும்பர் குலத்தினன், ஊராளி பெருமாள் பெருமாளான வீரசோழ இருங்கோளன் திருமருதுடையாற்கும் திருமாளிகைப் பிள்ளையார்க்கும் நெய்வேத்திய அமுதுபடிக்கும் மற்ற காரியத்துக்கும் நிலம் தானம் கொடுத்தான்.

கல்வெட்டு வாசகம் :

ஸ்வஸ்திஸ்ரீ வீரராஜேந்திர தேவற்கு யாண்டு பத்தாவது கரைவழிநாட்டுக் கடற்றூரான இராசராசனல்லூர் ஆளுடையாற்கு கரைவழிநாட்டுக் கொடிக்காரைத் தொழு ஊராளி பெருமாள் பெருமாளான வீரசோழ இருங்கோளனேன் திருமருதுடை சாற்றுக்கு திருவக்கிகாரித்துக்கும் திருமாளிகை பிள்ளையார்க்கும் அமுதுபடிக்கும் விட்ட நிலம் ஆவது மத்த மன்னறையில் விட்ட நிலம் விதை கலனே முக்குறுணிக்கு. நான்கெல்லையாவது வளவாய்க் கவருக்கு மேற்கும் அணுக்க பல்லவரையன் மன்றாட்டு காணிக்கு வடக்கும் கொங்காண்டாஞ் தேவதானத்துக்கு கிழக்கும் குலோத்துங்க சோழ சிலை செட்டி காணிக்கு தெற்கும் இன்னாகெல்லையுள்பட்ட …...ல உதக குறைவாருக்கு மன்னறையில் விட்ட நிலம் முக்குறுணி முக்குறுணி நிலம் ஆக நிலம் கலனே தூணிபதக்கும் விட்டேன் வீரசோழ இருங்கோளனேன். சந்திராதித்தவற் செல்வதாக பன்மாஹேகர ரஷை.”

( மா.கணேசன், திரு.இரா.ஜெகதீசன்  - கொங்கு நாட்டுக் கல்வெட்டுக்கள் எண்.165)

மள்ளர் வீரராசேந்திர தேவரின்  11 – ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு கொடிக்காரைத்தொழு ஊராளி பெருமாள் பெருமாளான வீரசோழ இருங்கோளன் ஈரோடு மாவட்டம் தாராபுரம் வட்டம் குண்டடத்தில் உள்ள வடுகநாதசுவாமி சிவாலயம் முன்பு உள்ள குளத்தில் வைத்த சிங்கக் கால் பற்றி குறிப்பிடுகிறது. ஊராளி என்பது குடும்பர்களின் ஒரு பட்டம் என்பது பல கல்வெட்டுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் வீரசோழ இருங்கோளனேன் பெருமாள் என்று தங்களை அழைத்துக்கொண்டது இக்கல்வெட்டுகள் வாயிலாக தெரியவருகிறது.

பெருமாள் என்றால் பெருமைமிக்க மள்ளர், தலைவர் எனப் பொருள்படும். பெருமாள் பெருமாளான என்றால் மள்ளர் குலத்தலைவர், குறுநில மன்னன் என இங்கு பொருள்படும். கொங்கு சோழரான வீரராசேந்திரன் காலத்தில்  இவர் குறுநில மன்னனாக இருந்திருக்கலாம்.

கல்வெட்டு வாசகம்:
1. ஸ்வஸ்திஸ்ரீ
2. வீரராஜேந்திரதே
3 வர்க்கு யாண்டு
4. பதிந் ஒந்றாவது
5. கொடிக்காரை
6. த்தொழு ஊராளி
7. களில் பெருமா
8. ள் பெருமாளாந வீ
9. ரசோழ இருங்
10. கோளநேந்
11. ட்ட சிங்கக் கால்.

வீரராசேந்திரன் கி.பி.1223 – 24 ஆட்சியாண்டு கோயமுத்தூர் மாவட்டம் அவிநாசி வட்டம் அவிநாசியில் அம்மன் கோயில் வடக்குச் சுவர் குமுதவரி, பொங்கலுர்கா நாட்டு கானூர் முதலிகளில் வீரராசேந்திர இருங்கோளரும் அவரது மனைவி சடைமேலிருந்தாளும் பெருங்கருணாலயச் செல்விக்கு அமுதுபடிப்புறமாக கொழுஞ்சிப்பாடியான உடையபிராட்டிச் சதுர்வேதிமங்கலத்தில் ஒரு மா நன்செய் நிலம் தானம் செய்து கல்வெட்டிக் கொடுத்தது பற்றிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வெட்டு வாசகம்:
வீரராஜேந்திர தேவற்கு யாண்டு பதினைஞ்சாவதற்கெதிராவது பொங்கலூர்கா நாட்டு, காநூர் முதலிகளில் அட்டாலைக் சேவகன் வளத்து வாழ்வித்தானான வீரராசேந்திர இருங்கோளனான வீரராசேந்திர இருங்கோளர் மனைக்கிழத்தி சடைமேலிருந்தாளும் இவ்விருவோம் ஆளுடையாரவிநாசி யாளுடையார் திருக்காமகோட்ட நாச்சியார் பெருங்கருணாலயச் செல்வி அமுதுபடிப்புறமாவது கொழுஞ்சிபாடியான உடைய பிராட்டிச் சதுர்வேதிமங்களத்து ஊர்க்கு தெற்கு குலோத்துங்க சோழ மன்னறையில் எங்கள் ஊராண்மைக் காணி நிலத்தில் பிரா….வக்கில் கதவில மடையிலே ஒரு மா செய் கல்வெட்டிக் குடுத்தோம். இந்நிலம் ஒரு மாவும் இந்நாச்சியாற்கு சந்திராதித்தவரை அமுதுபடி செல்வதாக செம்பிலுஞ் சிலையிலும் வெட்டிக் குடுத்தோம். இது பத்மாஹேஸ்வர ரட்சை இவை சிங்களராய னெழுத்து இவை வானவன் மூவேந்த வேளானெழுத்து இவை வாணராய தேவனெழுத்து”
( மா.கணேசன், திரு.இரா.ஜெகதீசன்  - கொங்கு நாட்டுக் கல்வெட்டுக்கள் எண் 8)


கி.பி. 1057 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், தாமரைப்பாக்கம் அக்னீசுவரர் கோயில் முன் மண்டபக் கிழக்குக் குமுதத்தில் உள்ள ஒரு கல்வெட்டு வாய்ச்சண்டையில் அண்ணனைக் கொன்ற தம்பிக்கு மரணதண்டனை வழங்குவதற்க்கு பதிலாக, வயதடைந்த பெற்றோரைக் காப்பாற்றுவதற்காக மரண தண்டனையை ரத்து செய்து அரை நந்தாவிளக்கு வைக்க அவ்வூர் சபையால் ஆணையிடப்படுகிறது. அதில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் வேளாண்குடி மக்கள். இந்த தீர்ப்பில் கையேழுத்திட்ட பத்துப் பேர்களில் இலத்தூர் சேக்கிழான் அத்திமல்லன் சிராளனும், பாடா நாட்டு கங்கநல்லூர் மாதெட்டன் இருங்கோளன் என்பவறும் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.  மேலும் அக்கல்வெட்டு இரண்டாம் இராஜேந்திர சோழனை சித்திரமேழி தம்மம் இனிது நடத்துகின்ற ஸ்ரீராஜேந்திர சித்ரமேளிப் பெருக்காளர் என்று தெளிவாக குறிப்பிடுகிறது.

Summary:

This is a case, which deals with the Crime that occured in a family. The father namely Tarupperudaiyan Talikkon who, brought the case to the assembly of agricultural community (chitramelipperukkalar) said that while engaged in agricultural work, his elder son had beaten his younger in anger and the younger also repeated the same. In that incident the elder son collapsed and died. In this background, the proceedings of the assembly was recorded in a graphic manner in the inscription. Members of the assembly asked the father whether he has any more children and he answered 'nay; myself with their mother are alive'. Again they asked whether he owned any property, for which also he said 'nay'.

If he awarded with capital punishment, the family line would be broken and nobody would take care of the age old parents. On the above mentioned circumstances the assembly decided to make him offer a perpetual lamp.

This is a fine specimen for the proceedings carried out in the village courts of law and also the humane and judicious act of the local administrative committees as judges. Many members of the committee, who belonged to agricultural community signed the document and it was specifically mentioned as Suddhapattigai’ i.e. purificatory deed.


 கல்வெட்டுச் செய்தி:

ஸ்வஸ்திஸ்ரீ இலங்கையும் யிரட்டபாடியுங் கொண்டு பேராற்றங்கரைக் கொப்பத்தாஹவல்லனை புறங்கண்டவன் ஆனையுங் குதிரையும் பெண்டிர் பண்டாரமுங் கொண்டு விஜையாபிஷேகஞ் செய்து ஸிம்ஹாஸனத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பன்மரான உடையார் ஸ்ரீராஜேந்திர தேவர்க்கு யாண்டு அஞ்சாவது

ஸ்ரீமத் பூதேவி புத்ராநாம் சாதுர்வண்ண ஸநோத்பவ ஸர்வலோக ஹிதார்த்தாய சித்ரமேளஸ்ய ஸாஸநம்

ஸ்ரீபூமிதேவிக்கு மக்கள்ளாகி யறம்(வ)ளர புகழ்க்(க)கலிமெலியச் செங்கோலே தெய்வமாகத் திசையனைத்துஞ் செவிடு படாமைச் சித்திர மேழி தம்மம் இனிது நடாத்துகின்ற ஸ்ரீராஜேந்திர சித்ரமேளிப் பெருக்காளரோம்

பங்களநாட்டுத் தெற்கில் வகை செளுறூர் நாடான புதநலப்பாடி நாட்டுக் கங்கபுரத்திருக்கும் வெள்ளா(ள)*ன்(ன்)

தருப்பேறுடையான் தாழிகோனன் வந்து, “என் மகன் சங்கரத்தடியளும் என் மகன் பெரியானும் சூடுபடு(க்)கிறடத்துத், தம்பியை தமையன் அரிசப்பட்டு அடித்தான்; அடிக்க, தம்பியும் தமையனை யெதிரேயடித்தான்; தம்பிய(டி)பிச்ச அடியிலே தமையன் பட்டான்,” என்று வந்து சொல்ல, உனக்கு இவ்விரு வருமல்லாது மக்களுள்ளரோ வென்று கேட்க, மற்று மக்களாருமில்லை இவர்கள் தாயுநானுமேயுள்ளோ மென்று சொன்னான். சொல்ல, அர்த்தந்தானுண்டோ வென்று கேட்க, 'அர்த்தமுமில்லை என்றான்; என்ன,

ஒரு குடிக்கேடானமையிலும் இவர்களை ரஷிப்பாரிலாமையிலும் அர்த்தம் இலாமை(யி)லுந் திருத்தாமரைப்பாக்கத்துத் திருவக்நீஸ்வரமுடைய மஹாதேவர்க்குத் திருனந்தாவிளக்காக அரைவிளக்கு வைத்து வயஸ்பரிணதை சென்ற தாயையுந் தமப்பனையும் ரஷிப்பானாக; தம்ம நோக்க இவனிதற்குப்பட வேண்டா” வெந்று பெருக்காளர் விதித்தமையில்,


இது சுத்தப(ட்)டிகையாகவும், இது நோக்கிநிவனுக்கு தேவை புகுந்தாத தாக(க)வும் விதித்தோம் பெருக்காளரோம். இதினை அன்றெ(ன்)று எடுத்துக் காட்டுவான், பெரிய நாட்டுக்குப் பிழைத்தான்.


மேழிநாட்டுப் பட்டனே(ன்) என்னெழுத்து. இப்படியறிவேன் மண்டை குளநாட்டுக் குராப்பாக்கத்து வெள்ளாளன் பிரம்பலூர் கிழவன் கேசவபடியன்னேன்இப்படியறிவேன் இலத்தூர்ச் சேக்கிழான் அத்திமல்லன் சீராளன்னேன்; இப்படி அறிவேன் தாமரைப் பாக்கிழான் சூற்றி ஆடவல்லான்னேன்இப்படியறிவேன் வயல்லாமூர் வெள்ளாளன் இலங்காடு உடையான் குட்டேறன் பொற்காளியேன்இப்படி அறிவேன் கீரனூர்ச் சாவல் காடாடி மணிகண்டனேன்இப்படி அறிவேன் பாடாநாட்டு கங்க(க) நல்லூர் மாதெட்டன் இருங்கோளனேன்; இப்படி அறிவேன் தச்சூழான்பாடி வெள்ளாளன் பாரந்துளர் உடையான் நக்கன் பெரியானேன்; இப்படி அறிவேன் களிக்கொற்றப்பாடி சாத்தமுழான் குந்றேறனேன்இப்படி அறிவேன் சோமாசிபாடி வெள்ளாள(ன்) தந்தை பிருதிவலி கருமானிக்கனேன்; இப்படி அறிவேன் பரமண்டலத்து பள்ளிகள் நாடுசெ(ய்)வான் சித்திரமேழினாடு உடையானேன்இவ்வகை பட்டாங்கு சொல்ல எழுதினேன், தச்சுஊர் ப்ராஹ்மணன் பாரத்வாஜி திருவழுதி நாடனேன் இவை என்னெழுத்து.



(தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை தொடர் எண் 29 / 1998 தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள், பதிப்பாசிரியர்கள்  –          முனைவர்              சு. இராசகோபால், முனைவர் ஆ. பத்மாவதி, ஆர். வசந்த கல்யாணி, தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுதுறை வெளியீடு எண் 141 – பக்கம் 53 – 54, 1999. மற்றும்   Select  Inscriptions  Serial No:  IV :6. )



திரிபுவனச் சக்ரவத்திகள் ஸ்ரீ வீரராஜேந்திர தேவறின் எட்டாவது ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று பொங்கலூற்கால் நாட்டுக் கீரனூர் வெள்ளாளன் கழஞ்சிய தேவனான கொங்கு இளங்கோனேன் என்று இருங்கோவேள் வம்சத்தவரை (வெள்ளாளர்)  வேளாண் சமூகம் என குறிப்பிடுகிறது.

கல்வெட்டு வாசகம்:
1. ஸ்வத்ஸிஸ்ரீ கொவிராசகெசரிபந்மரான திரிபுவனச் சக்ரவத்திகள் ஸ்ரீவீர ராஜேந்திர தெவற்கு யாண்டு எட்டாவது பொங்கலூற்கால் நாட்டுக் கிரநூர் வெள்ளாளன் கழஞ்சிய
2. தெவநான கொங்கிளங்கொநெந் ஆளுடையார் திருவாகிஸ்வரமுடைய நாயநாற்கு சந்தியாதிப மொந்றுக்கு நாந் ஒடுக்கிந பொந் நகரக் கற்றளை

(தென்னிந்தியக் கல்வெட்டுகள் (S.I.I) தொகுதி 5, எண் 280, மற்றும் A.R.No. 604 of 1893)

மேலே கண்ட கல்வெட்டுச் சான்றுகளிலிருந்து இருங்கோவேள் வம்சத்தவர்கள் ஆதி வேளாண்குடியை சேர்ந்தவர்கள் என்பதை  உறுதியாக கூறலாம்.




                                                                                                             (தொடரும்)




No comments:

Post a Comment