கி.பி. 1159 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், கொங்கூர் பசுபதீசுவரர்
கோயில் மகாமண்டபம் நுழைவாயில் இடது நிலைக்கால் உள்ள முதலாம் குலோத்துங்கன்
கல்வெட்டு ஒன்று முதலிகளில் சுந்தன் அதிய சோழனான வீரசோழ இருங்கோளன் அமுதுபடிக்காக அரிசி
கொடை அளித்தச் செய்தி கூறப்பட்டுள்ளது. இங்கு
குறிப்பிடப்படும் சுந்தன் குடும்பர்
குலத்தைச் சார்ந்தவர் என்று முந்தைய பதிவுகளில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் அவரை
யாழ்வல்லானான குலோதுங்க சோழ பல்லவரையன் என்றும் குறிப்பிடுகிறது.
கல்வெட்டு வாசகம் :
1. ஸ்வஸ்திஸ்ரீ கு
2. லோத்துங்க சோ
3. ழ தேவர்க்கு
4. யாண்டு பத்(து)
5. ஆவது பொங்
6. கலூர்கா நாட்டு கொ
7. ங்கூராந செ(யங்)
8. கொண்டசோழந
9. ல்லூர் ஆளுடை(யா)
10. ர் பசுபதிச்சுவர
11. முடையாற்கு அமு
12. துபடி அரிசி க அ
13. ஞ்சு . . .ாண்டு ஆ
14. க நெல் விடுவ
15. தாகவும் அரிசி
16. வரி அறகாத்
17. தி அளப்பார்கள்
18. ளாக கல்வெட்
19. டி குடுத்தோம்
20. முதலிகளி
21. ல் சுத்தன் அதி
22. ய சோழநா
23. ந வீரசோழ
24. இருங்கோளந்
25. . . . . ஆளவந்
26. தாந் யாழ்வ
27. ல்லாநேன்னான குலோ
28. துங்க சோழ . .
29. ப
30. . . . . . . . .
(திருப்பூர் மாவட்ட கல்வெட்டுகள் – த.நா.அ. தொல்லியல் துறை தொடர் எண் - 73/2010)
கி.பி.1226
-ஆம் ஆண்டு வீரராசேந்திரனின் 19 -ஆம் ஆட்சியாண்டு கடத்தூர் கொங்கவிடங்கிசுவரன் கோயில் கருவறை
வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு வீரராசேந்திர தேவரின் கிரகதோசம் நீங்க,
கரைவழிநாட்டு ஏழுர் தென்குடும்பரில் ஆரியன் உலகுய்ய
வத்தானான வீர ராசேந்திர அணுத்திரப் பல்லவரையன் கண்ணாடிப்புத்துரில் உள்ள தன்
நிலத்தைக் கோயிலுக்கு அளித்து அதன் வருமானத்தில் ஐப்பசி மாதத்தில் சிறப்பு பூசைகள்
நடக்க ஏற்பாடு செய்தது கூறப்பட்டுள்ளது.
குடும்பர் குலத்தவரான இந்த வீரராசேந்திர அணுத்திரப் பல்லவரையர் கொங்குநாட்டு அரசில் பெரும் அதிகாரியாகவும், நாட்டின் ஒரு பகுதியை ஆட்சி செய்பவராகவும் இருக்க வேண்டும். இவருக்கு ஆரியன் உலகுய்ய வந்தான் என்ற பட்டமும் இருந்துள்ளது. இவர் தென்குடும்பர் எனக் கூறப்படுகிறார். தென்குடும்பர் என்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோனாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம். கோனாடும் கொடும்பாளூரும் இருங்கோளர்களின் ஆட்சிப் பகுதியாகும்.
குடும்பர் குலத்தவரான இந்த வீரராசேந்திர அணுத்திரப் பல்லவரையர் கொங்குநாட்டு அரசில் பெரும் அதிகாரியாகவும், நாட்டின் ஒரு பகுதியை ஆட்சி செய்பவராகவும் இருக்க வேண்டும். இவருக்கு ஆரியன் உலகுய்ய வந்தான் என்ற பட்டமும் இருந்துள்ளது. இவர் தென்குடும்பர் எனக் கூறப்படுகிறார். தென்குடும்பர் என்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோனாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம். கோனாடும் கொடும்பாளூரும் இருங்கோளர்களின் ஆட்சிப் பகுதியாகும்.
கல்வெட்டு வாசகம் :
l. ஸ்வஸ்திஸ்ரீ கோவிராசகேசரி
பந்மரான திரிபுவ
2. (னச்) சக்கரவத்திகள் சிரி விரராசேந்திர தேவற்கு திரு
3. வெழுத்திட்டு
செல்லானின்ற திருநல்லியாண்டு இருப(த்)
4. தாறாவது கரை வழி நாட்டு ஏழுர்
தென்குடுமரில் ஆரிய
5. ன் உலகுய்ய
வந்தாநாந வீரராசெந்திர அணுத்திரப்பல்ல
6. வரையன் நேந், கண்ணாடிப்புத்தூரில்
எந்பற்றில் வடக்கெ
7.கல்லை
காரியன் நிலம் கலமும் இதுக்கு நாந்கெல்லை ஆவது அதிய சோழ
8.வரையந் செ(ய்)க்கு மேற்கு, வாணசிந்த
தேவற்கு நாந் ஒற்றிவைச்ச செ(ய்)க்கு வ
9.டக்கும் மே(ல்) பாற்கெல்லை வீரமாந் மாராயன் நிலத்துக்கு (கிழக்கும்)
10.லை திருநாட் பல்லவரையந் செ(ய்)க்கு தெற்கும் இந்நான் கெல்லைக்குட் (பட்)
11.ட நிலம் கலமும் கடற்றுாரில் தெற்கில் வாசலில் நாயநார் சித்திரமேழி
12.
ஈஸ்வரமுடையார் பெரிய நாச்சியாற்கு அமுது படிப்புறமாக வி
13.
ட்ட நிலம் கலமும் அற்பிசை மாதத்தில் நாயநார் வீரராசேந்திர தே
14.
வற்கு கிரகதோஷம் நீங்க வேணும் எந்று செம்பிலும் சிலையிலும்
15.கல் வெட்டி குடுத்தேந் விரராசேந்திர
அணுத்திரப் பல்லவரையநேந் இ
16.
து பன்மாஹேஸ்வரரஷை அணுத்திர பல்லவரையந் எழுத்து
(த. நா. அரசு தொல்லியல் துறை தொடர் எண். 75
/ 2004)
அதே வீரராசேந்திர அணுத்திரப் பல்லவரையன் இக்கல்வெட்டில்
பொங்கலூற்கால் நாட்டுக் கீரனூர் முதலி என்றும் யாழ்வல்லான் பாண்டியன் என்றும் கூறப்படுகின்றான்.
இந்த இரண்டு கல்வெட்டுக்கும் உள்ள கால இடைவெளி ஏழாண்டுகள் ஆகும். இந்தக் கீரனூர் முதலிகளில்
யாழ்வல்லான் பாண்டியனான வீரராசேந்திர அனுத்திரப் பல்லவரையனும், கீரனூர் முதலிகளில்
அட்டாலைச் சேவகன் வாழ்வித்தானான வீரராசேந்திர இருங்கோளனும் கடத்தூரில் உள்ள தங்களின்
ஊராண்மைக் காணிக்குப் பக்கத்தில் ஒரு நிலத்தை கீரனூர் திருகாமக்கோட்ட நாச்சியாருக்கு
அமுதுபடிப் புறமாக விட்டனர் என்பதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
கல்வெட்டு வாசகம்:
l. ஸ்வஸ்திஸ்ரீ வீரராசேந்திர தேவற்கு யாண்டு யரு வ
2. தின் எதிர்நாலாவது
பொங்கலூற்கால் நாட்
3. டுக்கீரனூர் முதலிகளில்
யாழ்வல்லாந் பாண்டிய நா
4. ன வீரராசேந்திர அணுத்திரப்
பல்லவரையனு
5. ம் அட்டாலைச் சேவகந்
வாழ்வித்தானான விரரா
6. சேந்திர இருங்கோளனும் இவ்விருவோம் கீரனூ
7. ர்ஆளுடையார்
திருவாகீசுரமுடையார் திருக்காம
8. க்கோட்ட நாச்சியாற்கு
அமுதுபடிப்புறமாக நாங்
9. கள் நீக்கி குடுத்த நிலமாவது
கரைவழி நாட்டுக்
10. கடற்றுாரில்
அங்கைவயலில் எங்கள் நாட்டு ஊராண்மை
11. க்காணியில் செவ்வரி கவருக்கு
மேற்கும் கன்றான்
12. டான் மன்றாட்டுக் காணிக்கு
வடக்கும் வழவாய்க் கவருக்
13. கு கிழக்கும் தகடராயன்
நிலத்துக்குத் தெற்கும் இன்னான்
14. கெல்லைக்குட்பட்ட நிலம் கலநே
முக்குறுணி இந்நாச்சியாற்கு அமு
15. துபடி புறமாக இட்டுக்
குடுத்தோம் இவ்விருவோம் இது
16. சந்திரராதித்தவரை
செல்வதாக செம்பிலும் சிலையிலும்
17. வெட்டிக் கொள்வதாகவும் இது
பன்மாஹேஸ்வர ரக்ஷை.
(த.
நா. அரசு தொல்லியல் துறை தொடர் எண். 71
/ 2004)
பரகேசரி விக்கிரம சோழன் 8 - ஆம் ஆட்சியாண்டு கோயமுத்தூர் மாவட்டம் அவிநாசி வட்டம் அன்னூர் மன்னீசுவரர் கோயிலின் தெற்குச் சுவர் கல்வெட்டு பெருமாள் முதலிகளில் வல்லங்கிழான் மல்லன் அழகிய சிற்றம்பலமுடையானான முனையதரன் மன்னீசுவரர் கோயிலில் நடைபெறும் உவர் (பெளர்ணமி அல்லது அமாவாசை) சிறப்பு வழிபாட்டிற்கு வேண்டிய அரிசி, காய்கறிகளுக்காக இக்கோயில் பண்டாரத்தில் பழஞ்சலாகை அச்சு (ஒரு வகைக் காசு) செலுத்தியுள்ளார். இக்கல்வெட்டில் மல்லர் சமூகத்தைச் சேர்ந்த வல்லங்கிழான் முனையதரையன் என்பவருக்கு முதலி என்ற சிறப்பு பெயர் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆதலால் அக்காலத்தில் முதலி என்ற பட்டத்தை பல சமூக மக்கள் பயன்படுத்தியுள்ளர் என்பதை தெளிவுபடுத்துகிறது.
கல்வெட்டு வாசகம்:
“ஸ்வஸ்திஸ்ரீ
கோப்பரகேசரிபன்மரான திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீவிக்கிரம சோழ தேவற்கு யாண்டு 8 -
வது வைகாசித் திங்கள் (ள்…ல்) பெருமாள்
முதலிகளில் வல்லங்கிழான் மல்லன் அழகிய சிற்றம்பலமுடையானான முனையதரனேன் செய்த தம்மமாவது. ஆளுடையார் மன்னியூருடையாற்க
உவாப்படி எழுந்தருளுகைக்கு நான் பண்டாரத்தில் ஒடுக்கின பழஞ்சலாகை அச்சி…. ஆறும்
கொண்டு உவா ஒன்றுக்கு அமுதுபடிக்கு காலால்…...ணி அரிசியும் எழுந்தருளுகைக்கு
காலால் நாழி எ…..எழுந்தரு...வேண்டும் விஞ்..சனமும் இ…ட்டு எழுந்தருளுவதாக
இ...ந்திசாதித்தவரை செல்வதாகக் கல்வெட்டி வித்தேன் முனையதரையனேன். இது பன்மாஹேசுவர
ரஷை. “
(
மா.கணேசன், திரு.இரா.ஜெகதீசன்
- கொங்கு நாட்டுக் கல்வெட்டுக்கள் எண்.102)
வீரராசேந்திர தேவர்(கி.பி.1224)
17 – ஆம் ஆட்சியாண்டு உடுமலைப் பேட்டை
வட்டம் கடத்தூர் கொங்கவிடங்கீசுவரன் கோயில் கருவறை மேற்குச் சுவர் கல்வெட்டு குடும்பர் குல கரைவழிநாட்டு கொடிக்
காரைத்தொழுவு முதலிகளில் சோழன் கூத்தனான வீரராசேந்திர இருங்கோளன் அஞ்சாதகண்டப்
பிரமராயன் எழுந்தருளிவித்த சுப்பிரமணியப் பிள்ளையாருக்கு கொடையாக அளித்த நிலம்
பற்றிக் கூறுகிறது. கரைவழி நாட்டிலும் பொங்கலூர்கால் நாட்டிலும் குடும்பர்குல
முதலிகள் இருங்கோளர், அணுத்திரப்பல்லவரையர் என்ற பட்டப் பெயர்களில் பலர் அரசு
அதிகாரிகளாக இருந்ததுள்ளனர். மேலும் சுவாமி சந்தோஷப் பல்லவரையன் உழுதப் பதக்குக்கு என்று குறிப்பிடுவதால் அவர்
ஒரு வேளாண் சமூகத்தவர் என்பது உறுதியாகிறது.
கல்வெட்டு வாசகம்:
1. ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீவீரராஜெந்திர தேவ
1. ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீவீரராஜெந்திர தேவ
2. ற்கு யாண்டு பதிநஞ்சாவது
எதிர் எதிர் க
3. ரை வழி நாட்டுக் கொடிகாரைத்
4. தொழு முதலிகளில் சோழன் கூத்தனான
வீர
5. ராசெந்திர இருங்கொளனென் பெருமாள் வ
6. டுகக் கொத்துக்கு நாயகமாரில்
தொண்ட
7. நாட்டில் ஜெயங்கொண்ட
சோழமண்டலத்துப் ப
8. படுவூர்க் கோட்டத்து தன்
கூற்றுச் சக்கரமுதூர் காஸ்யபன் வ
9. ரந் தருவான் அருளாளப்
பெருமாளான அஞ்சாத கண்ட பிரம
10. ராயர் கடற்றுாரில்
ஆளுடையார் கொங்கவிடங்க ஈஸ்வரமு
11. டையார் கோயிலில் இவர்
எழுந்தருளுவித்த சுப்பிரமணியப் பிள்
12. ளையார்க்கு னான் விட்ட
நிலமாவது என்னூரில் நடுவில் வயக்
கலில்
13. எந்நிலம் விதைகலத்துக்கு னாந்கொல்லையாவது
கீழ்பாற் கெல்
14. லை சுவாமி சந்தோஷப் பல்லவரையந்
உழுதப்பதக்குக்கு
மெ
15. ற்கும் தென்பாற்கெல்லை இன்னாயனார் கோயிலில் வினாயகப் பிள்
16. ளையாற்கு விட்ட
தேவதானத்துக்கு வடக்கும் மெல்பாற்கெ
17. ல்லை பெருவாய்க்காலுக்குக்
கிழக்கும் வடபாற்கெல்லை இருள
18.சுழாமணி உழுத நிலத்துக்குத் தெற்கும் இந்னான்
கெல்லைக்குட்
19.பட்ட தடி ஒன்றினால் விதைகலமும் னாயனார் திருமேனி
கல்லியா
20. ண திருமேனியாக அமுது படிக்கு இந்நிலம் விட்டு
இந்நிலத்
21. தால் வெட்டி விசமுங் காவற்
கூலியும் சந்தியா தீபத்துக்கு விட்ட
22. மையால் இப்படிக்குக் கல்வெட்டிக் குடுத்தேந் வீரராசேந்திர
23. இருங்கொளநெந் சந்திராதித்தவரை இது பன்மா
24.ஹேஸ்வர ரக்ஷை இப்படிக்கு இவை வீரராசெந்திர
இருங்கோளந் எழுத்து . . .
(த.
நா. அரசு தொல்லியல் துறை தொடர் எண். 70 / 2004)
வீரராசேந்திர தேவர்(கி.பி.1221) 14 – ஆம் ஆட்சியாண்டு உடுமலைப் பேட்டை வட்டம் கடத்தூர்
கொங்கவிடங்கீசுவரன் கோயில் கருவறை மேற்குச் சுவர் கல்வெட்டு தென்குடும்பரான கரைவழிநாட்டுக் கடத்தூர்
மன்றாடி(மன்னாடி) காவன் சோரகனான வீரசோழ இருங்கோளர்
கொங்கவிடங்கிசுவர முடையார்க்கு மகுடம் செய்து சாத்தியது பற்றிய கல்வெட்டு.
கல்வெட்டு வாசகம்:
1.ஸ்வஸ்திஸ்ரீ வீரராஜேந்திர தேவர்க்குத் திருவெழுத்திட்டுச்செல்லா
நின்ற திருநல்லிய
2.யாண்டு ய௪ வது பதின்நாலாவது கரைவழி நாட்டுக் கடற்றுராான
இராசராச நல்லூர் ஆளுடை
3.
யார் கொங்கவிடங்க ஈசுரமுடையார்க்கு மேற்படி யூரிலிருக்கும்
மன்றாடிகளில் காவன்சோழ நா
4. ன வீரசோழ இருங்கோளநென் இன்னாயநார்க்கு ம (கெ) குடஞ் சாத்துவித்த . . .
(த.
நா. அரசு தொல்லியல் துறை தொடர் எண். 79 / 2004)
வீரசோழன் என்ற பட்டப் பெயர் கொண்ட முதற் பராந்தகன்
கி.பி. 907-ல் கொங்கு நாட்டைக் கைப்பற்றி கோனாட்டு அரசர்களான
இருக்குவேளிர்களில் ஒரு பிரிவினரை சுய ஆட்சி பெற்ற கொங்குச் சிற்றரசர்களாக
நியமித்தான் என்ற கே.வி. சுப்பிரமணிய அய்யர் அவர்களின்
கூற்றுப்படி கொங்குச் சோழர்கள் தங்களை சுந்தன்
அதிய சோழனான வீரசோழ இருங்கோளன் என்றும் தெங்குடும்பர் என்றும் அழைத்துக்கொள்வதால், கோனாட்டு
இருங்கோளர்கள் குடும்பர் குலத்தைச் சேர்ந்த வேளிர் என்பது உறுதியாகிறது. மேலும் அவர்களுக்கு பெருமாள், முதலி,
வல்லங்கிழான், யாழ்வல்லான் பாண்டியன், வீரராசேந்திர அணுத்திரப் பல்லவரையன், மன்றாடி, முனையதரையன், போன்ற சிறப்பு பட்டங்கள் இருந்ததை மேற்க்கண்ட கல்வெட்டுகள்
செய்திகள் உறுதி செய்கின்றன.
(தொடரும்)
No comments:
Post a Comment