குற்றமும் - தண்டனையும் பகுதி - 11
x---------x----------x-----------x------------x
மூவேந்தர்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்தவுடன் அவர்களின் உயிர்நாடியான பெரும்பான்மை
விளைநிலங்கள் அன்னியர்களால் எவ்வாறு அபகரிப்பட்டது என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம். மேலும் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில்கூட கள்ளர்கள் ஒரு நாகரிகமற்ற இனக்குழக்களாக வாழ்ந்து வந்ததை கள்ளர் சபை விதிகளும் அவர்கள் அதை நிறைவேற்றிய விதமும் நமக்கு தெளிவாக காட்டுகிறது. ஆனால் மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் மள்ளர் இனக்குழு ஒரு சிறந்த பண்பட்ட வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளனர் என்பதை பல கல்வெட்டுகள் நமக்கு சான்று பகர்கிறது.
மருத நில உழவர் இடைக்காலத்தில் வேளாளர், வெள்ளான்
குடி என வழங்கியதாகக் கண்டோம். இக்காலத்தில் வெள்ளாளர் குடும்பும் புரவுஞ்
செய்தனர்(ARE 98 /1897 and SII Vol. VI No.98) என்றும், சமூகத்தில் உயர்நிலையில் இருந்ததாகவும் (ARE. 104 / 1908 and ARE 200 / 1929) இவரை சிறை பிடிக்கக் கூடாது என்றும் (SII Vol. IV. No. 48 and ARE 96 /1897), இம் மரபு பெண்டிர் அம்பலம் ஏறக் கூடாதென்றும் (SII Vol. XIII No. 312) கொலைக் குற்றங்களுக்கு இம்மரபினர் மரண தண்டனையிலிருந்து விலக்கு
அளிக்கப்பட்டனர் என்றும் ARE 200 / 1929) கல்வெட்டுகள் சான்று குறிப்பிடுகின்றது. இக்கருத்தைக் அறிஞர்கள் பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
சங்க காலம் தொட்டு மூவேந்தர்களின் பொற்க்கால ஆட்சி
முடியும்வரை நீதி வழங்கும் பொறுப்பானது ஊர்ச் சபையினரிடமும், ஊர்
குடும்பர் என்ற நாட்டார்கள், பிரமதேயக் கிழவர்கள், குலப்
பெரியதனக்காரரிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர்கள் நடந்திய அமைப்பிற்கு கிராம
சபைகள், நாட்டார்
சபை, குடும்பர்
சபை, சித்திரமேழி
சபை என்று பெயர். அவர்கள் நடத்தும் நிர்வாகத்திற்கு குடும்பு முறை என்றும் நாம் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் சிலர் சதுர்வேதி மங்களத்தில்
வாழ்ந்த பிரமதேயக் கிழவர்கள் இன்றைய பிராமணர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றும்,
அந்த சதுர்வேதி மங்களத்து ஸபையில் குடும்பு பார்த்தவர்கள் பிராமணர்கள்
என்றும் ஒரு பொய்யான செய்தியை திரும்ப, திரும்ப சொல்லிவந்தனர்.
இந்த வாதம் பொய் என்பதை கீழ்காணும் குடும்பர் சபை கல்வெட்டு உறுதி செய்கிறது.
மூன்றாம் குலோத்துங்க சோழன். (பொ. ஆ. 1178-1218) காலத்தில் வளநாட்டில் உள்ள வேளாநாட்டில் அமைந்துள்ள பிரம்மதேயம் ஸ்ரீ
இராசேந்திர சோழச் சதுர்வேதிமங்கலத்து சபையார்களும், பட்டர்களும், மகாஜனங்களும் உலக முழுதுடையச் சதுர்வேதி
மங்கலத்தில் நகரீஸ்வர முடையார் திருக்கோயிலின் திருமண்டபத்தில் கூடி தீர்மானங்கள்
நிறைவேற்றியுள்ளனர். இதன்படி கூரை கட்டணங்கள், நிலையாள் முதலியவை முன்னர் நடைமுறையில்
உள்ளபடியே செய்யவும் நெல், மஞ்சள், காசு முதலியவை தவிர்த்தும், வெள்ளாளர், தச்சர், கொல்லர்
அரிப்பேறு மாற்று கொல்ல வேண்டாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவற்றுடன்
குடும்பர்களுக்கு பரிசட்டம் இட்டு காரியத்திற்கு கடவ வேண்டும் என்றும்
குடும்பர்கள் இல்லாமல் மற்றொருத்தருக்கும் பரிசட்டம் சூடக்கடவ வேண்டாம் என்றும்
குடும்பர்களின் சபையில் ஒரு வருடம் குடும்பு செய்துக் கொள்ளலாம் என்றும்
தீர்மானித்துள்ளனர்.
கல்வெட்டுச் செய்தி:
x-------x--------x--------x
1. திரிபுவனச்சக்கரவத்திகள் மதுரையும் ஈழமும்
கருவூரும் பாண்டியன் முடித்தலையும் கொண்டு வீரா அபிஷேகமும் விசையா அபிஷேகமும்
பண்ணி ... திரையோ தெசியும் செவ்வாக் கிழமையும் பெற்ற
2.புணர்பூசத்து நாள் குலோத்துங்க சோழ வளநாட்டு
வெளாநாட்டு ப்ரஹம்தேயம் ஸ்ரீராஜெந்தர சொழச்சதுர்வேதி மங்களத்து ஸபையாரும்
பட்டர்களும் மஹாஜனங்களும் இந்தை நாளால் இந்நாட்டு உலகமுழுதுடைச் சதுர்வெ
3.தி மங்கலத்து உடையார் நகரீஸ்வரமுடையார் கோயில்
திருமண்டபத்திலே சபையாரும் பட்டர்களும் மஹாஜனமும் நடந்திருந்து க்ரம்....
மாயிருப்பு...பயங்கரன் தோப்பு பண்டாடு பழநடை செய்து வரும்
4.கூரைகட்டணங்கள் முன்பிலாண்டுகள்
செய்துவரும்படியே செய்யக்கடவர்களாகவும் நிலையாளும் முன்பிலாண்டுகள் செய்து வரும்
படியே செய்யக் கடவர்கள்...ற வறுப்புக்கு ஒக்கும் அரிசியும் பயறும் பண்டாடு... ப...
5.ழநடை தாங்களெ எடுக்கக்கடவர்களாகவும் அரிசிக்கு
முன்பு எழுதின நியோகப்படியெ... வின்மெல்பட்ட அரிசிக்கு இரட்டி நெல்லுக்
கைக்கொண்டு... கொள்ளக் கடவதல்லாதுதாகவும் மஞ்சணைக்கு
6.சில தேவர்களுக்கு ப்ரஸாதஞ் செய்தருளின
திருமுகப்படி ஒடுக்கக் கடவ காசு நீக்கி ஆயமென்று வெள்ளாளரை தண்ட கடவதல்லாதுதாகவும்
தேவர்கன்மிகள் தேவைக்கு... படிக்கொள்ளக் கடவதன்று என்று பிள்ளை-
7.ஒலை வருகையால் மாவிஞ்சு காசும் நெல்லும்
தண்டக்கடவ தல்லாது தாகவும் தைச்சர் கொல்லர் அறிபெரும் கொள்ளக் கடவதல்லதுதாகவும்
நிச்சயித்து எழுதின நியோகப்படி ஆளி இடக்கடவதாகவும்
8.குடும்பற்குப் பரிசட்டம் இட்டுதாகில்
காரியத்துக்கு கடவ குடும்பர் ஒழிய மற்றொருத்தரும் பரிசட்டம் சூடக்கடவதல்லாது
தாகவும் குடும்பர் ஸ்பையில் ..... ஒராண்டு குடும்பு செய்யக் கடவர்களாகவும்
குடும்பரும், ... ,
(முற்றுப் பெறவில்லை )
(அய்யம்பேட்டை குடும்பர்சபைக் கல்வெட்டு - ஆவணம் இதழ் 27 /
2016, தமிழகத் தொல்லியல்
துறை - தஞ்சாவூர்).
சோழர் ஆட்சிக் காலத்தில் குடும்பர்கள் எவ்வாறு மதிக்கப்பட்டார்கள் என்பதைக் இந்த குடும்பர் சபை கல்வெட்டு உலகிற்க்கு பறை சாட்டுகிறது.
(தொடரும்)