குற்றமும் - தண்டனையும் பகுதி - 6
x---------x----------x-----------x------------x
கள்ளர்கள் திருட்டுத்தொழில் செய்துள்ளார்கள் என்பதை குலோத்துங்கச்
சோழனின் கல்வெட்டுகள் உறுதிசெய்துள்ளதை முந்தைய பதிவில் பார்த்தோம். மேலும் இப்பதிவில்
பாண்டிய நாட்டில் திருட்டுத் தொழிளில் ஈடுபட்ட கள்ளர்களை ஒடுக்கிய ஒரு மறவருக்கு
அப்பகுதியின் தலைவனாக பட்டம் சூட்டி சில உரிமைகளையும் கொடுத்துள்ளனர் என்பதை பாளையப்பட்டுகளின் வம்சாவளி குறிப்பிடுகிறது.
ஆதியார்ப்பியம் யெங்கள் முன்னோர்கள் குத்தாலத் தேவரும்,
மருதப்பதேவரும் கீளுவைக் குண்டையங் கோட்டையிலிருக்குறபோது
மேல்னாடு திறச்சுளீகை பழனிமடஞ்சீற்மை கள்ளர் குண்டையங்கோட்டை னாட்டுக்கு வந்து
சவ்விறியஞ் செய்தார்கள். அப்போது யெங்கள் முன்னோர்கள் குத்தால தேவரும் மருதப்ப
தேவரும் அந்த மேல்னாட்டுக் கள்ளரை அதம் பண்ணி திறச்சுளீகைப் பழனிமடம் மேல்னாடு
வரைக்கும் போய் அதிலிருந்த கள்ளரை இல்லையெனச் செய்விக்கிறவரையில்,
இது செய்தி அப்போதிருந்த பாண்டியறாஜா கேட்டு குத்தாலத்
தேவரையும் மருதப்பதேவரையும் வரவளைத்து, திருச்சுளீபழனி மடஞ்சீற்மை கள்ளறாகிறபேரை நீர்ச்
சின்னாபின்னஞ்செய்து அது நிமித்தியம் உம்முடப் பாசவற்கத்திலும் சிறுது செனம்
சேதமாய்ப் போனபடியினாலே குத்தாலதேவர் மருதப்பதேவர் நீங்களிருபேரும் திருச்சு பளனி
மடசீர்மையை பாளையப் பட்டாக பேர் பாதியாகப் பகுந்துகொள்ளச் சொல்லி உத்திரவாயி
வரகுணராம குத்தாலதேவரென்று பேருங்குடுத்து அஷ்ட கோண பல்லாக்கும் உபயசாமரமும் மகர
கொடியுடன் குடுத்து மருதப்பதேவருக்கும் வேணவெகுமதியுங் குடுத்து பாளை யப்பட்டாக
கோட்டையும் போட்டு பேர்பாதியாக ஆண்டு அனு பவித்துக் கொண்டியிருந்தார்கள்.
(நடுவுக்குறிச்சிப் பாளையக்காரன் வமிசாவளி கைபிது - தமிழ்நாடு அரசு
பாளையப்பட்டுகளின் வம்சாவளி - II)
அழகர் கோயில் இறைவன் திருமுன்னில் வேடர்கள் நுழைந்து அங்கிருந்த தங்கம்,
வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் திருவாபரணங்களைக்
கொள்ளையிட்டுச் சென்றுவிட்டனர். இதனைக் கோயில் தலத்தார் திருமலை நாயக்கரரிடம்
முறையிட்டனர். திருமலை நாயக்கர் வெள்ளியங்குன்றம் பாளையக்காரர் இம்முனி கனகராமயக்
கவுண்டரை அழைத்துக் கள்ளர்களைப் பிடிக்கவும், கொள்ளை போன பொருட்களை மீட்கவும் ஆணையிட்டார். கவுண்டரும் ஆணையை நிறைவேற்றி,
கொள்ளை போன பொருட்களை மீட்டுக் கோயிலில் சேர்த்துக்
கள்ளர்கள் தலையை வெட்டித் திருமலை நாயக்கர் முன் பொதியாகக் கொண்டு சென்றார்.
திருமலை நாயக்கர் மகிழ்ந்து, ஏற்கெனவே இந்தப் பாளையப்பட்டிற்கு விசுவநாத நாயக்கர்
காலத்தில் அளிக்கப்பட்ட பாளையப்பட்டுக் கதிராமங்களுக்காக் பொடுக்க வேண்டிய காட்சி,
கப்பம் முதலியவற்றை நீக்கியதோடு (மாப்பு செய்தல்) சித்திரை
விழா,
ஆடித்திருவிழா, திருமங்கையாழ்வார் திருவிழா ஆகியவற்றில் அவரும் அவரது
சுற்றமும் சிறப்புப் பெறவும் வகை செய்து கொடுத்தார் என்று இச்செப்பேடு
விவரிக்கிறது.
செப்பேட்டின் வாசகம் :
x--------------x-------------x
26."…………..திருமாலிருஞ்சோலை தென்திருப்பதியில் ஆண்டவன் சன்ன
27.தியில் வேடற்களடற்ந்து புகுந்து அனேக திருவாபறணங்களை
28.யும் சொர்ணபாத்திரம் வெள்ளிப்பாத்திரங்கள் முதலான சாமான்
29.களிள கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டதாய் தலத்தார்
30.வந்து கூக்குரல் போட்டதில் தம்மை வறவழைத்துக் கள்ளரை
31.வெட்டிச் செயித்து களவு போன ஆவறணம் பாத்திர
32.முதலானதுகளை வாங்கிக் கொடுக்கும்படி அனுப்பி வை
33.க்க தாமுந் தளசேகறத்துடன் போய்த் துப்புத்துவருடனே
34.களவாளிகளைக் கண்டுபிடித்து அவற்கள் களவில்க் கொண்டு
35.போன சொத்துக்களை ஒன்று தவறாமல் வாங்கி ஆண்டவன்
36.கருவெலப் பொட்டியில் சேற்த்துப் போட்டு அவற்கள்
37.தலைகளை வெட்டிப் பொதிபிடித்து சமூகத்தில் கொண்டு
38.வந்து வைத்து சியப் பிரதாவஞ் சொல்லி கும்பிட்ட முன்னுகு
39.சந்தோஷமாகி அந்த சந்தோஷத்தில் சாதனம் யெளுதிக்
40.கொடுத்தோம்"
(வெள்ளியங்குன்றம் செப்பேடு - திருமலை நாயக்கர் செப்பேடுகள்,
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,
சென்னை. 1)
இராமநாதபுரத்தை தலமை இடமாகக் கொண்டு பிற்க்காலத்தில் ஆட்சி செய்த சேதுபதிகளின்
தோற்றமே அக்காலத்தில் களவு தொழிளில் ஈடுபட்ட கள்ளர்களை ஒடுக்கியதற்க்காக மன்னர்
திருமலை நாயக்கர் கொடுத்த பரிசு என்றும் கூறுகின்றனர்.
இராமேஸ்வரம் செல்லும் பயணிகளுக்குக் கள்வர்களால் ஏற்படும் அபாயம் பற்றித்
திருச்சியை ஆட்சி புரிந்த திருமலை நாயக்க மன்னருக்கு முறையீடுகள் வரப்பெற்றதாகவும்
அதனை அடுத்து அவர் தமது பணியாளர்களில் ஒருவராகிய உடையாத் தேவர் என்பவரை
இராமேஸ்வரம் வழித்தடத்தில் உள்ள கள்வர் பயத்தை நீக்கச் செய்தார் என்றும்,
அந்த உடையாத் தேவர் வழியினரே சேதுபதிகள் என்பது ஒரு செய்தி
" (கீழ்த்திசை சுவடிநிலையம், சென்னை - சேதுபதிகள் உண்டான விதம் (MSS)
, எஸ். எம். கமால் - சேதுபதி மன்னர்
வரலாறு பக். 14)
இராமேசுவரம் பாதையில் கள்ளர் தொல்லையைக் களைந்து மன்னர் மனநிறைவு கொள்ளும்
வகையில் பணியாற்றிய இளமனுார் சோளகை சேர்வைக்காரனுக்கு மலங்கரை என்ற கிராமத்தை
ரெகுநாத சேதுபதி தானமாக வழங்கப்பட்டுள்ளதாக செப்பேடு தெரிவிக்கின்றது.
(எஸ்.எம். கமால் சேதுபதி மன்னர் செப்பேடு பக் – 305)
தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி இராமேசுவரம் இராமனாத பண்டாரத்திற்கு எழுதிக்கொடுத்த
செப்பேட்டில் கோவிலுக்குச் சொந்தமான பசுமாடு, எருமைமாடு போன்றவற்றை திருடும் கள்ளர்களை கோவில் பண்டாரமே
தண்டனை கொடுக்கவும், அவதாரம் வாங்கிக் கொள்ளவும் உரிமை வழங்கியார்.
செப்பேட்டுச் செய்தி
x------------x------------x
23)கோயில் நந்தவனம் கோயில்வகை வாழைத் தோப்புத் தென்னந்தோப்பு இலுப்பைத்
தோப்புப் பனைந் தோ
24.ப்பு இது முதலான தோப்புக்களிலே அன்னிதாக இருக்கிற மானிடர் போய்த்
திருடினார்களேயானாலந்தக் கள்ளனைப் பண்
25.டாரமே தெண்டினை பண்ணி அவராதம் வாங்கிக் கொள்ளச் சொல்லிக் கட்டளையிட்டோம்
பண்டாரத்தின வகை
26.ப்பிராமணப்பிள்ளையள் தவசிப்பிள்ளையன் அவரைச்சார்ந்த சனங்களுக்கும் பாம்பன்
துறைக்குப் பண்
27.டாரத்தின் சீட்டின்படிக்கு தோணிவிடச் சொல்லிக் கட்டளை யிட்டோம் யாதாமொரு
கள்ளரைப் பண்டாரங்
28.காவல்ப்பண்ண வேணுமென்று கொல்லன் தச்சனை யழைக்கச் சொன்னால் அந்தப்படிக்குக்
கேள்க்கச் சொல்
29.லிக் கட்டளையிட்டோம் கோவில் வகையாகயிருக்கிற பசுமாடு எருமைமாடு மடத்துப்பசு
எருமைமாடு உ
30.ண்டானதுகளை யாதாமொரு கள்ளர் திருட்டுபிரட்டு நடப் பிச்சால் பண்டாரமே
தெண்டினைபண்ணி
31.அவராதம் வாங்கிக்கொள்ளவும் பாம்பனாற்று வழியாகவும் கல்லடிசாலை அக்கினி
தீர்த்தக் கரை புளியடி
32.த்துறை புங்கடித்துறை இந்தத் துறைமுகங்களிலே கோயில் வகை மாட்டை யாதாமொருதர்
தோணி யேற்றி
33.க்கொண்டுபோனால் பண்டாரம் அவர்கள் தலத்து மணியக்காரனுடனே சொல்லி மணியக்காரன்
அந்தக் கள்ள
34.னைத் தெண்டினை பண்ணாதே போனால் நம்முடனே சொல்ல அவர்களை நாமே தெண்டினை
பண்ணிக் கோ
35.விலுடமை வாங்கித் தருவோமாகவும் இந்தப்படிக்கு ராமீசுர கோவில் ராமனாத
பண்டாரமவர்
36.களுக்குத் தாம்புர சாதன பட்டையங் குடுத்தோம் அந்தப் படிக்கு நடப்பிச்சுக்
கொள்வாராகவும்
-------------
(எஸ்.எம். கமால் சேதுபதி மன்னர் செப்பேடு பக் – 124)
இதேபோல் கள்ளர்களுக்கு தண்டனை கொடுத்தும் அவர்களது மனவிகளை
இழிவுபடுத்தியதையும் பிற்க்கால சேதுபதி வரலாறுகள் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
"விசய ரகுநாத சேதுபதியின் ஆட்சியின்போது கள்ளர் குழு ஒன்று இராமநாதபுரம்
மாவட்டத்தில் புகுந்து சூறையாடி அரசரின் உடமையான இரண்டாயிரம் காளைகளைக் கவர்ந்து
சென்றுவிட்டது. இதனால் பெரிதும் எரிச்சலுற்ற மன்னர் இராமநாதபுரம்,
சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் வெவ்வேறு இடங்களில் ஐந்து
கோட்டைகளைக் கட்டுவித்து அந்த நாட்டின் முதன்மையானவர்களோடு தான் நல்லெண்ண
முடையவராக நட்புக் கொள்ளப் போவதாகக் கூறி அழைப்புவிடுத்து வருவித்து அவர்கள்
மனத்தில் நம்பிக்கை வளரும்படியாகப் பல சிறப்புக்களைச் செய்து இறுதியில் பெரும்
எண்ணிக்கையிலான அவர்களைக் குத்திக் கொல்ல ஏற்பாடு செய்தார். அவ்வாறு
கொலையுண்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை இராமேசுவரத்திற்குக் கடத்திக்
கொண்டுபோய் அங்கு அவர்களுக்குக் கோயில் முத்திரையிட்டு அவர்களைக் கோயிலுக்குரிய
தேவ தாசிகளாகவும், அடிமை மகளிராகவும் ஆக்கினார். புகழ்பெற்ற அந்தத் தீவில் தற்போது உள்ள ஆடல்
மகளிர் அந்தக் கள்ளர் சாதியின் வழிவந்தவர்கள் எனக் கூறப்படுகிறது."
(எட்கர் தர்ஸ்டன் – தென்னிந்திய குலங்களும் குடிகளும் தொகுதி -3,
பக். 80)
மதுரையில் திருமலை நாயக்கன் அரண்மனையில் மன்னன் நித்திரை செய்யும் கட்டில்
சங்கிலியால் பிணைக்கப்பட்டு அரண்மனை முகப்பில் கட்டப்பட்டிருந்தது. மன்னன்
அயர்ந்து தூக்கத்தில் இருக்கும் போது கள்ளன் அரண்மனை முகப்பின் மீது ஏறி அதன் மேல்
இருந்த துவாரத்தின் வழியாக அரண்மனை உட்புறம் சங்கிலி வழியாக கீழே இறங்கி மன்னனின்
விலை உயர்ந்த நகைகளைக் கவர்ந்து சென்று விட்டான். திருமலை நாயக்கன் திருடன் நேரில்
வந்து திருட்டை ஒப்புக் கொண்டால் அவனுக்குச் சன்மானம் வழங்குவதாக நாட்டில் பறை
மூலம் விளம்பரம் செய்தான். நகைகளைத் திருடிய கள்ளன் தைரியமாய் மன்னனிடம் நேரில்
வந்து திருட்டுக் குற்றத்தை ஒப்புக் கொண்டான். மன்னன் வாக்களித்தபடி சன்மானமாகக்
கள்ளனுக்கு நிலம் வழங்கினான். ஆனால் அவனது குற்றத்திற்குத் தண்டனையாக அவனைச்
சிரச்சேதம் செய்ய ஆணையிட்டான்.
(எட்கர் தர்ஸ்டன் – தென்னிந்திய குலங்களும் குடிகளும் தொகுதி -3,
பக். 81).
இச்சான்றுகளை நாம் பார்க்கும்பொழுது மூவேந்தர் காலம் தொட்டு சேதுபதிகள்
காலத்திலும் அடுத்தவர் உடமையை திருடுதல்
என்பது கொலை குற்றத்தைவிட மிகப்பெரிய குற்றமாக கருதி அவற்றில் ஈடுபட்ட
கள்ளர்களுக்கு மரணதண்டனைகள் கொடுக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.
(தொடரும்)