Saturday, 19 May 2018

குற்றமும் தண்டனையும் பகுதி - 5 PandyanMallar




குற்றமும் - தண்டனையும் பகுதி - 5

x---------x----------x-----------x------------x


நாம் இதுவரை பார்த்த சான்றுகளிலிருந்து ஒருவன் கொலை செய்தாலும் அதற்க்கான  தண்டனை பெறுபவர் குடும்ப சூழ்நிலையை ஆய்வு செய்து அவற்றிலிருந்து விளக்கு அளிக்கப்படுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அதேவேளையில் குற்றம் சாற்றப்பட்டவர் பேரையன் போன்ற உயர் பதவியில் இருந்தாலும் குற்றத்திற்க்கான தண்டனையை  பாகுபாடுகள் காட்டாமல் சித்திரமேழி சபை (வேளாண் சபை) வழங்கியுள்ளதையும் கல்வெட்டுகள் சான்று பகர்கிறது.


விக்கிரம சோழன் (கி.பி.1118-1135) 11 -ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, பெண்ணைத் தென்கரை கடம்பூரில் வாழும் வெள்ளாளந கூடல் என்பானுக்கும் இவ்வூரில் உள்ள பிச்சன் பன்மன் கண்டன் என்பானுக்கும் இடையே நடந்த சண்டையில், கூடல் என்பானைப் பிச்சன் குத்திக் கொன்றுவிட்டான். கூடல் குலத்தைச் சார்ந்த, அவன் உறவினர்கள், உடன்பிறந்தார்கள் தொடுத்த வழக்கில் சண்பையிலிருக்கும் திருத்தான்தோன்றி ஈசுவரர் கோயிலுக்கு விளக்கு ஒன்றும், திருநாகீசுவரர்க்கு ஒரு நுந்தாவிளக்கும் எரிக்க 64 பசுக்களைக் கூடலுடையான் குலத்தார் கொடுக்க வேண்டுமென முடிவு செய்யப் பெற்றதைக் குறிக்கிறது .

கல்வெட்டுச் செய்தி:

1 . . . . . . . . . ணரப் புவிமாது வளர நாமாது வி()ங்க ஜயமாது நிலவ தந்திருபதுமலர் மன்நவர் சூட மன்நிய உரிமையால் மணிமுடி சூடி செங்கொல் சென்று திசைதொறு -
2 . . . . . . . . . . க்கி மெய்யற தழைப்ப கலிங்க மிரியக் கடல்மலை நடாத்தி வலங்கொளாழி வரையாழி நடப்ப இரு சுடரளவும் ஒருகுடை நிழற்றி விர ஷிங்ஹா(த)வர்() தி முக்கொக்கிழாநடிகள்ளொடும் வி -
3 .....,,,,. சரிபற்மரான திரிபுவநசக்கரவத்திகள் ஸ்ரீ விக்கிரமசோழசெவற்கு யாண்டு 6-வது வாணகப்பாடி இராஜெதிரவள நாட்டு பெ(ண்)ணை தெந்(க்)கரை கடம்பூரில் லிருக்கும் வெள்ளாளந் கூடலு
4................ நு[ம்] இவ்வூரில் லிருக்கும் பிச்சந் பன்மந் கண்டதும் இவ்விருவரும் தநத நிலவுரத்தாநதரத்து உ[ரு]விக் குத்திநமையில் இக்கூடலுடையான் குலத்தா(ன்) செதத(ன்) குத்திந குத்திலெ பன்மந் கண்டந் மரித்தமை
5 ............. டியிருந்து இக்கண்டந் தமப்பநான பிச்சந் பந்மனையும் இவந் மகந் பெரியானை(யு)ம் இவ தம்பி முனையனையும் இவர்தம்பி அக்களனையும் அழைத்து இக்கூடலுடையார் குலத்தான் செநத(ந்) குத்தி
6 ................. த்துப்பொம் இவநுக்கு சநிதராதித்தவற் செல்வதொரு தந்மம் செ(ய்)யவெணுமென்று சொந்ன (வி ]டத்து இவர்களும் நாட்டுக்கு எறின படி செய்வதெந்று ஸம்மதித்து இந்னாட்டு பெண்ணை வடகரை சண் பையாந வி –
7 . . . . . . . . . . ந்தொந்றிஸ்வரமுடையார்கோயிலிலே ஒரு திரு நுந்தாவிளக்கு முப்பத்திரண்டு பசுப் பொறிப்பதெந்று சொல்ல இவர்களும் இதுக்கு உடந்பட்டு இப் பந்மன் கண்டதுக்கு கூடலுடையார் குலத்தாந் செதந் தந் ப ை
8 . . . . . . . . . . ம் திருநாகிசுவரமுடையார் கொயிலி(ல்) விளக்கொந்றும் சதிராதித்தவற் செல்வதாக பொறித்த பசு முப்பத்திரண்டும் கைக்கொண்டொம் யிக் கொயிலில் சிவப்பிராமணரொம் இது பத்மாயெஸ்வர ரக்ஷை.

(SII XII. Part 1, No. 92 மற்றும் A.R.No. 92 of 1906)

தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா ஜம்பை, ஜம்புநாதக் கோயிலில் உள்ள மூன்றாம் குலோத்துங்க சோழனின் (கி.பி.1135-36) 3 -ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு ஒன்று ராஜராஜ வளநாட்டு, பெண்ணையாற்றின் தென்கரையில் இருக்கும் கொன்றை நாட்டு முடியனுரைச் சேர்ந்தவன் பள்ளிச்சேரியடியநம்பியான கோவலராயப் பேரையன் எய்த அம்பு பெண்ணை வடகரைச் செங்குன்ற நாட்டு வாளை வெட்டியில் இருக்கும் வெள்ளாளன் பொன்பற்றியுடையான் குன்றன் சிருடையான் மீது தவறுதலாக பட்டு இறந்துவிடுகிறான். ஆதலால் எழுபத்தொன்பது நாட்டுச் சித்திரமெழிப்பெரிய நாடுங் கூடி இக்கோவலராயப் பேரையன் மீது பழி சுமத்தி திருத்தான்தோன்றி ஈசுவரர் கோவிலில் திருநுந்தா விளக்கு எரிக்க 64 பசு கொடுக்கும்படி ஆணையிட்டுள்ளனர்.

கல்வெட்டு வாசகம்:

1.ஸ்வஸ்திஸ்ரீ கொ இராஜகேசரி பநராந திரிபுவநச் சக்கரவ
2.த்திகள் ஸ்ரீ குலொத்துங்கசோழதெவற்கு யாண்டு 3- ஆவது
3.வாணகொப்பாடி ராஜராஜவள நாட்டுப் பெண்ணைத் தெந்கரை
4. க்கிழ்கொன்றைநாட்டு முடியனூரிருக்கும் பள்ளிசெரி அடியநம்
5. பியான கொவலராயப்பெரையன் மெற்படி நாட்டுப் பெண்ணை வட
6. கரைச் செங்குன்றநாட்டு வாளை வெட்டியில் இருக்கும் வெள்ளாளன் பொ
7.ன்பற்றியுடையான் குன்றன் சிருடையானைக் கொவலராயர்(யர்) வை-
8. [வ]டையிலெ இவன் செரி அடியநம்பி விருகத்தை எய்ய பி-
9.ழைச்சு இச்சிருடையான்மெலெ அம்புபடப்பட்டமையில் எழு
10. பத்தொன்பது நாட்டுச் சித்திரமெழிப்பெரிய நாடுங் கூடி
11.இருந்து இக்கோவலராயப் பெரையன்மெலெ பழியாக்கி இவந்
12. மெலிந்தப் பழிதிரக் கொண்ட நடையாவது இன் நாட்டுச் ச
13. ண்பையாந விரராஜெந்திரபுரத்து உடையார் திருத்தாந் தொந்
14. றி ஆள்ளுடையார் ஸ்ரீ கொயிலிலெ இரண்டு திருநுந்தாவி
15. ளக்கு வைக்கக்கடவநாக்கி இவந் விட்ட சாவாமுவாப்பசு
16. அறுபத்து நாலு இப்பசு அறுபத்து நாலுங் கைக்கொ
17. ண்டொம் இக்கோயிலில் திருவுண்ணாழிகை ………..யாடி
18. ….த் தவல் இது …………..  ராஷை உ

(SII XII. Part 1, No. 67 மற்றும் A.R.No. 67 of 1906)

மேலே கொடுத்துள்ள கல்வெட்டுச் செய்திகளானது அக்காலத்தில் வேளாண் குடிகளின்  கிராம மற்றும் நகர சபை எவ்வாறு மனுதாபிமானத்துடன் செயல்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது. அதேவேலையில் அக்காலத்தில் ஒருவருடைய சொத்தை அபகரித்தல் திருடுதல், கள்ளக் கையெழுத்திடல் போன்றவை கொலை குற்றத்தைவிட மிகப்பெரிய குற்றமாக கருதியதை கீழ்கண்ட கல்வெட்டுகள் தெளிவுபடுத்துகின்றன.


மூன்றாம் குலோத்துங்கனின் (1213) 35-ஆம் ஆட்சியாண்டில் கொலைக் குற்றத்தைவிடவும் திருட்டுக் குற்றத்திற்கே அதி அளவில் கடுமையான தண்டனை வழங்கப்பட்டதை கல்வெட்டு செய்தி மூலம் அறியலாம். அதுவும் கோயில் சொத்தை திருடியவர்களுக்கு அவர்களது சொத்தைப் பறிமுதல் செய்து கோயில் கருவூலத்தில் சேர்க்கப்பட்டதுடன் "துரோகிஎனும் குற்றமும் சுமத்தப்பட்டது. இவனது பிறிதொரு கல்வெட்டில் கொலைக் குற்றத்திற்கு நொந்தா விளக்கெரிக்க உத்தரவு இட்ட செய்தியும் காணப்படுகிறது.


மூன்றாம் இராசராசன் (1216-1250) காலத்திய கல்வெட்டில் இருசகோதரர்களும் அவர்களது நண்பர் ஒருவரும் கோயில் கனக்கெழுதும் வேலை பார்த்து வந்தனர். அப்போது கோயில் கட்ட வைத்திருந்த செங்கல்லை களவாடி தங்கள் வீடுகளை கட்டிக்கொண்டனர். அது குறித்தறிந்த அரசன் அவர்களது சொத்து முழுவதையும் பறிமுதல் செய்து அதனை விற்று வந்த தொகை 40,000/- காசுகளும் கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டதுடன் அக்கணக்கெழுதும் உரிமையும் வேறு ஒருவருக்கு வழங்கப்ட் செய்தியை திருநாகேஸ்வரம் கோயில் கல்வெட்டால் அறியலாம்.

  

முதலாம் குலோத்துங்கச் சோழனின் காலத்தில் (கி.பி.1080) இடங்கை மற்றும் வலங்கைக்கு நடந்த சண்டையில் ஊரும் கோவிலும் தீவைத்து கொளுத்தப்பட்டது. இச் சண்டையால் இடிபட்ட கோயிலில் இருந்த சிலைகளையும் செல்வங்களையும் கள்ளர்கள் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். கள்ளர்களிடம் இருந்து தப்பிப் பிழைத்த செல்வங்களை ஊர் சபையோர்கள் காத்தார்கள் என்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.


கல்வெட்டுச் செய்தி

கோவிராஜ கேசரி பந்மராந சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 11 ஆவது

நித்தவிநோத வளநாட்டு காந்தார நாட்டு ப்ரம்மதேயம் ஸ்ரீராஜமகேந்தரச் சதுர்வேதிமங்கலத்து பெருங்குறிப் பெருமக்களோம் இவ்வாட்டை கற்கடக நாயற்று அபரபக்ஷத்து பஞ்சதஸியும் நாயிற்றுக்கிழமையும் ஆயில்யமும் பெற்ற இந்று ............... புளிவில்லிவகை ............ நல்லான் பட்டங் குளக்கரையிலே தந்மி செய்து பெருங்குறி கூடியிருந்து விவஸ்தை பண்ணி நம்மூர் திருமேல்கோயிலாந் ஸ்ரீமும்முடி சோழவிண்ணகராழ்வார் நிலங்கள் இறையிலி செய்து குடுத்த பரிசாவது

இத் தேவர் ஸ்ரீபண்டாரத்து யாண்டு உ-ஆவது ஆநித்திங்கள் இடங்கை வலங்கையாய் ஊரும் சுட்டு ஒடுக்கி திருமுற்றங்களும் அழித்து திருவுருக் களும், ஸ்ரீபண்டாரங்களும் கள்ளரெடுத்துக் கொண்டு போய் இருந்த இடத்து கள்ளர்க்கு பிழைத்த திரவ்வியமு(ம்), ஸ்ரீ பண்டாரத்து இரக்ஷிக்க உண்ணாமையாலும் ஊரிருக்க சி(லர் ஊர் )ஏறுமிடத்து ஸபாவிநியோகத் துக்கு த்ரவியம் வேண்டுதலாலும், திருமுற்றங்களழிவு சோரவும் புநப்ர திஷ்டை பண்ணவு மதிள் (கட்டவும்) வேண்டுதலாலும்

இத்தேவர்க் கந்மிகள் பக்கல் நாங்கள் கொண்ட பொந் குடிஞைக்கல்லால் இராஜேந்திரசோழந்மாடைக்கு அரை மாற்றுத் தாழும் பொந் அய்ம்பதிந் கழஞ்சும் இப்பொந்துக்கு பலிசையாக பொலிஞ்ச பொந் இருபத் (தைய்ங்) கழஞ்சும் ஆகப் பொந் எழுபத் (தை)யங்கழஞ்சும் பலிசை பொலிந்த பொந்


இருபத்தைய் கழஞ்சும் ஆகப் பொந் எழுபத்தைய்ங் கழஞ்சில் யாண்டு மூன்றாவது திருமுற்றம் அழிவு சோரவும் புநப்ரதிஷ்டை பண்ணவும் குடுத்த பொந் அய்ங்கழஞ்ச நீக்கிப் பொந்தழு புதிந் கழஞ்சுக்கும். சந்திரா தித்தவற் இறையிலி செய்து குடுத்த நிலங்களாவது.......

(SII. Vol -XXIV, No.53, ARE No. 31 of 1936-37 and Select Inscriptions, Serial No: V : 5, Department of Archaeology Government of Tamil Nadu)


(தொடரும்)

No comments:

Post a Comment