குற்றமும் - தண்டனையும் பகுதி - 4
x---------x----------x-----------x------------x
மருத நிலத்தைச்
சேர்ந்த மள்ளர் சமூகத்தவர்கள் நடந்திவந்த கிராம சபையில் நடத்த வழக்குகளயும் அதன்
தீர்ப்புகள் சிலவற்றையும் முந்தைய பதிவில் கண்டோம். மேலும்
சில சான்றுகளை இந்த பதிவிலும் கொடுத்துள்ளேன்.
இரண்டாம்
குலோத்துங்க சோழனின் (133-115O) ஆட்சி காலத்தில்
உள்ள கல்வெட்டின் மூலம் பள்ளிச் செட்டி பெருங்காடனும், மாறன் ஆட வல்லானும் வேட்டைக்கு சென்றவிடத்தே பெருங்காடன் எய்த அம்பு
தவறுதலாக மாறன் ஆடவல்லான் மேல்பட்டு அவன் இறந்தமையால் அதனை கொலைக்குற்றமாக
கருதாமல் மரணத்தை விளைவிக்கும் குற்றமாக கருதப்பட்டது.
தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா எலவானாசூர் சிவன் கோயிலில் ( Gramardhanatha
Temple) உள்ள சோழ மன்னன் இரண்டாம் இராசாதிராசன் காலத்திய (கி.பி.1173) எலவானசூர் கல்வெட்டு ஒன்று தன்
மகள் மீது கோபம் கொண்ட தாய் கையில் வைத்திருந்த (அருவாள்மனை) அரைமணங்கோலிட்டெறிய
அது தவறுதலாக வேறொரு பெண் மீது பட்டு, 20 நாள் கழித்து அவள் இறந்துவிட ஊர்ச் (நாட்டவர்) சபையோர்
கூடி இது கைப்பிழையெனக் கருதி அதற்கு தண்டமாக 32
பசுக்களை கொணர்ந்து நொந்தா விளக்கெரிக்க ஆணையிட்டனர்.
கல்வெட்டு வாசகம்:
1.திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீராஜாதியிராஜதெவற்கு யாண்டு ப
2. த்தா(ஆ)வது ஆநி மாதத்து மிலாடான ஜன நாதவள நாட்டு
3. ப் பானூர்க் கூற்றத்து மாடுரில்லிருக்கும் கொச்சாத்தந் காமந் அ –
4. கமுடையாள் (தந்] மகளை ஒரு (அரை) மணங்கொலிட்டெறிய இவளைத் தப் –
5. பி மிண்டந் காமந் மகள்மெலெ பட்டு இப்பெண் இருபதா நாளால் மரித்திது இ
6 து கை பிழைப்பாடெந மடம் நாட்டுக்கெறி நாட்டவ(ர்) ஊர்பாகங் கொண்டருளிந நா -
7 யநார் கொ(யி)லிலெ ஒரு திருநந்தா விளக்கு வை யெந்று
சொல்லி இப்படிக்கு இரண்டு
8 திறவரு மிசைந்து திட்டிட்டு இக்கொச்சாத்தந் காமந் இவ்வாநிமா தத்திலே
முப்பத்திரண்
9.டு பசுப் பொறித்துக் கொடுவந்து விட்டாந் இவ்விளக்கு ஒந்றும் ஸந்திராதித்தவற்
செவதா
10. க யிது மாஹேஸ்வர ராஷை.
தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா ஜம்பை,
ஜம்புநாதக் கோயிலில் உள்ள முதலாம் இராஜராஜனின் (கி.பி.1012-13)
28 -ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்றில் பிராட்டி சீராளன் என்பவன் அங்காடி
பொற்றாமனின் வீடுபுகுந்து அவனது மனைவியை பிடித்து இழுத்த செயலை பொறுக்காத
பொற்றமான் சீராளனை குத்திக்கொலை செய்தான். இச்செயலை கொலைக் குற்றமாக கருதாமல்,
அத்துமீறி நுழைதல் மற்றும் தாக்குதல் (Tress
pass and assault) ஆக கருதி 15
கழஞ்சு பொன் தண்டமாக பெற்று கோயில் விளக்கெரிக்க
ஆணையிடப்பட்டது.
கல்வெட்டு வாசகம்:
4……………………ஸ்ரீகொவிராச ராச ராச கெசரி ப
5.ந ரான ஸ்ரீராசராச தெவற் கியாண்டு உ ௰அ-ஆவது இவ்வூர் வியாபாரி
அங்காடி பொற்றாமன் வைச்சுக் கொ(ண்)டிருதெ பெண்டாட்டி
6. (சி மா)தெவி பெற்றியை முனைப்பாடி நாவலூரிலிருக்கும்
பிராட்டி சி[ரா]ளன் இராத்திரி [சி]மாதெவி பெற்றியை வலியப்புக்கு பிடி –
7.
....... அங்காடி பொற்றாமன் என் மணவாட்டியை நானிருக்கவெ வலிய
பிடிச்சானென்று புக்கு படக் குத்தின மையில் அங்காடி
8.(பொ)ற்றாமன்மெல் வழக்கழிவு இலா(மை)யில் பிராட்டி
சிராள மாடைத் தொடொருங்கி பிராட்டி சிராளனுக்காக ஒரு நொநாவிளக்கு
9.
...... த்தான் தொன்றியாள்வார்க்கு சதிராதித்தவற் நிசத முழக்கு எண்ணை
யட்டி விளக்கெரிக்க அங்காடி பொற்றாமன் குடுத்த பொ
10.
(ன் ப)தின் கழஞ்சும் கொண்டு நிசத முழக்கெண்ணை
யட்டுவொமானொமிந் நாட்டு பெண்ணைத் தெந்கரை பாலைப்பதெலூ
11.
[ரொம்) சதிராதித்தவற் பநஹெஸ்வர ரஷை.
கி.பி. 1057 ஆம்
ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், தாமரைப்பாக்கம் அக்னீசுவரர் கோயில் முன் மண்டபக் கிழக்குக்
குமுதத்தில் உள்ள ஒரு கல்வெட்டு. இரு சகோதரர்களுக்கிடையே வாய்ச்சண்டை முற்றி
ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டதில் அண்ணன் இறந்துவிட்டான். அண்ணனைக் கொன்ற தம்பிக்கு மரணதண்டனை
வழங்குவதற்க்கு பதிலாக, வயதடைந்த பெற்றோரைக் காப்பாற்றுவதற்காக மரண தண்டனையை ரத்து
செய்து அரை நுந்தாவிளக்கு வைக்க அவ்வூர் சபையால் ஆணையிடப்பட்டுள்ளது.
கல்வெட்டுச் செய்தி:
ஸ்வஸ்திஸ்ரீ இலங்கையும் யிரட்டபாடியுங் கொண்டு பேராற்றங்கரைக்
கொப்பத்தாஹவல்லனை புறங்கண்டவன் ஆனையுங் குதிரையும் பெண்டிர் பண்டாரமுங் கொண்டு
விஜையாபிஷேகஞ் செய்து ஸிம்ஹாஸனத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பன்மரான உடையார்
ஸ்ரீராஜேந்திர தேவர்க்கு யாண்டு அஞ்சாவது
ஸ்ரீமத் பூதேவி புத்ராநாம் சாதுர்வண்ண ஸநோத்பவ ஸர்வலோக ஹிதார்த்தாய
சித்ரமேளஸ்ய ஸாஸநம்
ஸ்ரீபூமிதேவிக்கு மக்கள்ளாகி யறம்(வ)ளர புகழ்க்(க)கலிமெலியச் செங்கோலே
தெய்வமாகத் திசையனைத்துஞ் செவிடு படாமைச் சித்திர மேழி தம்மம் இனிது நடாத்துகின்ற
ஸ்ரீராஜேந்திர சித்ரமேளிப் பெருக்காளரோம்
பங்களநாட்டுத் தெற்கில் வகை செளுறூர் நாடான புதநலப்பாடி நாட்டுக்
கங்கபுரத்திருக்கும் வெள்ளா(ள)*ன்(ன்)
தருப்பேறுடையான் தாழிகோனன் வந்து, “என் மகன் சங்கரத்தடியளும் என் மகன் பெரியானும்
சூடுபடு(க்)கிறடத்துத்,தம்பியை தமையன் அரிசப்பட்டு அடித்தான்; அடிக்க, தம்பியும் தமையனை யெதிரேயடித்தான்;
தம்பிய(டி)பிச்ச அடியிலே தமையன் பட்டான்,”
என்று வந்து சொல்ல, உனக்கு இவ்விரு வருமல்லாது மக்களுள்ளரோ வென்று கேட்க,
மற்று மக்களாருமில்லை இவர்கள் தாயுநானுமேயுள்ளோ மென்று
சொன்னான். சொல்ல, அர்த்தந்தானுண்டோ வென்று கேட்க, 'அர்த்தமுமில்லை என்றான்; என்ன,
ஒரு குடிக்கேடானமையிலும் இவர்களை ரஷிப்பாரிலாமையிலும் அர்த்தம் இலாமை(யி)லுந்
திருத்தாமரைப்பாக்கத்துத் திருவக்நீஸ்வரமுடைய மஹாதேவர்க்குத் திருனந்தாவிளக்காக
அரைவிளக்கு வைத்து வயஸ்பரிணதை சென்ற தாயையுந் தமப்பனையும் ரஷிப்பானாக;
தம்ம நோக்க இவனிதற்குப்பட வேண்டா” வெந்று பெருக்காளர்
விதித்தமையில்,
இது சுத்தப(ட்)டிகையாகவும், இது நோக்கிநிவனுக்கு தேவை புகுந்தாத தாக(க)வும் விதித்தோம்
பெருக்காளரோம். இதினை அன்றெ(ன்)று எடுத்துக் காட்டுவான்,
பெரிய நாட்டுக்குப் பிழைத்தான்.
மேழிநாட்டுப் பட்டனே(ன்) என்னெழுத்து. இப்படியறிவேன் மண்டை குளநாட்டுக்
குராப்பாக்கத்து வெள்ளாளன் பிரம்பலூர் கிழவன் கேசவபடியன்னேன்;
இப்படியறிவேன் இலத்தூர்ச் சேக்கிழான் அத்திமல்லன்
சீராளன்னேன்; இப்படி
அறிவேன் தாமரைப் பாக்கிழான் சூற்றி ஆடவல்லான்னேன்; இப்படியறிவேன்வயல்லாமூர் வெள்ளாளன் இலங்காடு உடையான்
குட்டேறன் பொற்காளியேன்; இப்படி அறிவேன் கீரனூர்ச் சாவல் காடாடி மணிகண்டனேன்;
இப்படி அறிவேன் பாடாநாட்டு கங்க(க) நல்லூர் மாதெட்டன்
இருங்கோளனேன்; இப்படி
அறிவேன் தச்சூழான்பாடி வெள்ளாளன் பாரந்துளர் உடையான் நக்கன் பெரியானேன்;
இப்படி அறிவேன் களிக்கொற்றப்பாடி சாத்தமுழான் குந்றேறனேன்;
இப்படி அறிவேன் சோமாசிபாடி வெள்ளாள(ன்) தந்தை பிருதிவலி
கருமானிக்கனேன்; இப்படி
அறிவேன் பரமண்டலத்து பள்ளிகள் நாடுசெ(ய்)வான் சித்திரமேழினாடு உடையானேன்;
இவ்வகை பட்டாங்கு சொல்ல எழுதினேன்,
தச்சுஊர் ப்ராஹ்மணன் பாரத்வாஜி திருவழுதி நாடனேன் இவை
என்னெழுத்து.
(தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை தொடர் எண் 29
/ 1998 தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள்,
பதிப்பாசிரியர்கள் – முனைவர் சு. இராசகோபால், முனைவர்
ஆ. பத்மாவதி, ஆர். வசந்த கல்யாணி, தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுதுறை வெளியீடு எண் 141
–பக்கம் 53
– 54, 1999. மற்றும் Select Inscriptions
Serial No: IV :6. )
நாம் மேலே பார்த்த சான்றுகளிலிருந்து ஒருவன் கொலை செய்தாலும்
அதற்க்கான காரணம் என்வென்று ஆய்வு செய்து தண்டனை கொடுத்ததும், தண்டனை பெறுபவர் குடும்ப சூழ்நிலையை ஆய்வு செய்து அவற்றிலிருந்து விளக்கு அளிக்கப்படுள்ளதும்
தெளிவாகத் தெரிகிறது.
(தொடரும்)
No comments:
Post a Comment