குற்றமும் - தண்டனையும் பகுதி -3
x---------x----------x-----------x------------x
மருத நிலத்தைச் சேர்ந்த மள்ளர் சமூகத்தவர்கள் நடந்திவந்த கிராம சபையில் நடத்த வழக்குகளயும் அதன் தீர்ப்புகள் சிலவற்றையும் கீழே காண்போம்.
மேலே கொடுத்துள்ள கல்வெட்டு வேளாண்குடியின் கிராம சபைத் தலைவரான ஒரு நாட்டர், அப்பகுதியில் இருந்த குருநில மன்னன் சம்புவராயருடன் இனைத்து தீர்ப்பு கொடுக்கும் அளவுக்கு உயர்வான நிலையில் இருந்துள்ளார் என்பதை நமக்கு காட்டுகிறது.
மருத நிலத்தைச் சேர்ந்த மள்ளர் சமூகத்தவர்கள் நடந்திவந்த கிராம சபையில் நடத்த வழக்குகளயும் அதன் தீர்ப்புகள் சிலவற்றையும் கீழே காண்போம்.
இரண்டாம் குலோத்துங்க சோழனின் (கி.பி. 1139) திருவோத்தூர் கல்வெட்டில் செல்வமுத்தரையன் என்பவன் மிருக
வேட்டையின் போது எதிர்பாராதவிதமாக புலியினைக் கொன்றுவிட செல்வ முத்தரையன்
என்பவனுக்கு தண்டமாக 16 பசுக்களை
இறைவனுக்கு வழங்கிட ஊர்ச் சபையினர் தண்டனை வழங்கினர்.
இதே மன்னனின் திருக்கழுக்குன்றத்துக் கல்வெட்டின் மூலம் (1133-1150) வேட்டைக்கு சென்ற எழுவன் வஞ்சி முத்தரையன்
எனும் வேடன் ஒருவன் நக்கம்பிபட்டாள இளவரையன் என்பானை மிருகம் என எண்ணி அம்பு
பட்டெறிந்து கொன்றான். இந்நிகழ்ச்சி மிருகம் என எண்ணி நண்பனை கொன்ற இக்குற்றம்
தவறுதலாக நிகழ்ந்ததாக கருதி நொந்தா விளக்கெரிக்க உத்தரவிடப்பட்டது.
இரண்டாம் இராசாதிராசன் கல்வெட்டில் (1166-1180) முத்தரைய நண்பர் இருவர் வேட்டைக்கு சென்ற போது ஒருவர்
மற்றவரை தவறுதலாக கொன்று விடவே அதற்குரிய தண்டனையாக நொந்தா விளக்கெரிக்க உத்தரவு
இட்டனர்.
சில கோயில் கல்வெட்டுக்களின் வழியாக அறியப்படும் பிற செய்திகள்:
ஆறு வயது
பையன் ஒருவன் மரம் வெட்டிக் கொண்டிருக்கும் போது அந்த அரிவாள் கைத்தவறி பக்கத்தில்
இருந்த வேறொரு பையன் மீது பட்டு தெறிக்க அதனால் அப்பையன் இறந்துபடவே அதுக் கொலைக்
குற்றமாக கருதப்படாமல் கொலைக்கான குற்றமாக அல்லது மரணத்தைக் விளைவிக்கும் குற்றமாக
கருதப்பட்டது. அதற்கு தண்டனையாக கோயில் விளக்கெரிக்க ஆகும் செலவில் பாதியைத்
தண்டனையாக ஏற்க உத்தரவிடப்பட்டது.
மேலும் மற்றொரு கல்வெட்டில் ஒரு படை வீரனைக் கொன்ற மற்றொரு படைவீரனின்
உறவினர்களோடு சமாதானம் செய்து கொண்டு கருந்தட்டாங்குடியில் உள்ள ஒரு கோயிலில்
விளக்கெரிக்க நிவந்தம் ஏற்படுத்தியுள்ளான்.
(வெ. இராமமூர்த்தி - மண்டல உதவி இயக்குநர், கோயம்புத்தூர் கல்வெட்டு காலாண்டிதழ்-92 )
குலோத்துங்க சோழன் காலத்தில்
சம்புபுரத்திருக்கும் பள்ளி செல்வன் அவ்வூரிருக்கும் பள்ளி வெணாட்டரையனைக்
கைப்பிழையால் எய்து செத்தமையில் நாட்டாரும் சம்புவராயரும் கூடி இவன் வெணாட்டு
அரையனுக்காகச் சாகவேண்டாம். அதற்க்கு தண்டனையாக தூணாண்டார் கோயிலிலெ அரைவிளக்கு
வைக்கச் பசு பதினாறு கொடுக்கும்படி கூறினர்.
கல்வெட்டு வாசகம்:
8. திரிபுவனச்சக்கரவத்திகள்
ஸ்ரீகுலோத்துங்கசோழ
9.தெவர்க்கு யாண்டு முன்றாவது செயங்கொண்டசோழமண்டலத்து
(பலகுன்றக்)-
10.கொட்டத்துத் (தென்நாற்(று)ச நாட்டுச் சியமங்கலத்து
ஆளுடையார்(தந்)-
11. மிஸ்வரமுடையார் கொயிலிலெ சம்புபுரத்திருக்கும் பள்ளி
செல்வன்
12. இவ்வூரிருக்கும் பள்ளி வெணாட்டரையனைக் கை(ப்)பிழையா லெ
13. ய்து செத்தமையில் நாட்டவரும் சம்புவராயரும் கூடி இவ னி
14 வெணாட்டரையனுக்காகச் சாவவெண்டாம் கைப்பிழை புகுதுது இ
15. துக்குத் தூணாண்டார் கொயிலிலெ அரைவிளக்கு வைக்கச்
16. சொல்ல அரைவிளக்கு (க்) கு பசு பதினாறுவும் பொறித்து (வி)ஸி
17. (ய)ன் செல்வனென் சந்திராதித்தவரை செல்வதா . .
18. வ்வறம் இறங்காமற்க் காத்தார் சரிபாத(ம்) தலை ..
19 . (ன) இ(து) சிரிமாயெ(சு)வார் தன்மம்
(SII VII. No. 69 மற்றும் A.R.No. 65 of 1900)
இரண்டாம் இராசேந்திரன் காலத்தில் (1052-1064) நாடாள்வான் ஒருவன், ஒரு விற் படையின் தலைவனைக் குத்திக் கொலை செய்துவிட்டான். இதற்கு தண்டனையாக
அருகில் உள்ள கோயிலுக்கு விளக்கெரிப்பதற்கு 96 ஆடுகளை நிவந்தமாக வழங்க உத்திரவிடப்பட்டது.
தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா எலவானாசூர் சிவன் கோயிலில் ( Gramardhanatha
Temple) உள்ள சோழ மன்னன் மூன்றாம்
இராசராசன் காலத்திய (கி.பி.1226) கல்வெட்டு ஒன்று
பன்றி வேட்டைக்கு போன இடத்தில் வீரபாலன் எய்த அம்பு தவறுதலாக அவனது நண்பன்
தில்லையாந ஆறாயிர போயன் மேல் பாய்ந்து அவன் இறந்து விடவே அதற்குரிய தண்டனையாக
நொந்தா விளக்கெரிக்க 32 பசுக்களை தானமாக
தந்தான். இது கொலைக் குற்றமாக கருதப்படாமல் மரணத்தை விளைவிக்கும் குற்றமாக
கருதப்பட்டது.
கல்வெட்டு வாசகம்:
1.திரிபுவண சக்ரவத்திகள் ஸ்ரீ ராஜராஜ தெவற்கு யாண்டு ய- ஆவது
ஆடிமாஷத்து மலாடாந ஜநநாய வளநாட்டுப் பாநூற் கூற்றத்து
2. பிரம தெயம் இறையா நரையூராந ஸ்ரீ சொழகெரள அது வெஷிமங்கலத்து
ஊர் பாகங் கொண்டருளின மஹா
3.தெவற்கு இந்நாட்டு வடந்நரையூற் கூற்றத்து
வாணபிராட்டியிலிருக்கும் (அந்த) குளத்தூருடையான் முடிகொண் –
4.டான் காரியாந விரபாலநென் இந்நாட்டு இக் கூற்றத்து
இலச்சியத்திருக்கும் (முக்தி)யார் பள்ளி படியன் த-நா -
5.ந புஞ்சநூற்பொயன் மகன் தில்லையாந ஆறாயிரப்பொயநுக்காக நான் திருநுந்தா விளக்கு
வைத்த பரிசாவது
6.நான் பன்றி கொண்டு இராப்பார்வை வெட்டை பொந இடத்துப் பன்றியெ
எய்யாநிற்கப் பிழைத்து இத
7.தில்லையாந ஆறாயிரப்பொயனை அம்புபட்டுப் பட்டெமையில் இவநுக்கு
நன்றாக இஷெவர் கொயிலில் நா -
8.ன் வைத்த திருநுந்தா விளக்கு ஒன்று ஒன்றுக்கும்
முப்பத்திரண்டு பசு ஸ்ரீபண்டாரத்திலெ ஒடுக்கிநமையில்
9. இவநொடுக்கிந யிப்பசு முப்பத்திரண்டு மொடுக்குவித்துக்
கொண்டு இத் திருநுந்தவிளக் கொன்றும் மாசி தவற்
10. செல்லக்கடவிதாகக் கல்வெட்டிவித்தது இது மஹேஸ்வர ரஷை உ.
(SII XII. Part 1, No. 138 மற்றும் A.R.No. 138 of 1906)
(தொடரும்)
No comments:
Post a Comment