Tuesday, 15 May 2018

குற்றமும் தண்டனையும் பகுதி -2 PandyanMallar


குற்றமும் - தண்டனையும் பகுதி -2 
x---------x----------x-----------x------------x



சில நாட்களுக்கு முன்பு Tamil creators என்ற ஒரு சாதிய அமைப்பு தன் சாதியை உயர்வாக காட்டவேண்டுமானால் மள்ளர் சமூகத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற ஒரு தவறான நோக்கத்தில் தீண்டாமையின் கொடூரம் என குறிப்பிடப்பட்டு காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தது. நான் அந்த காணொலியில் இடம்பெற்றுள்ளவைகள் அனைத்தும் தவறாக சித்தரிக்கப்பட்டவை என்று அதற்க்கு தகுந்த சான்றுகளுடன் குற்றமும் தண்டனையும் பகுதி-1 என்ற தலைப்பில் விளக்கம் கொடுத்திருந்தேன். அவர்கள்  உடனே அந்த காணொலியை நீக்கிவிட்டனர். ஆனால் வேறு ஒருவர்  இதுபோன்ற கீழ்தரமான வேலையில் மீண்டும் அந்த காணொலியை இனைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.


சில வருடங்களாக பல வரலாற்று அறிஞர்கள் மூவேந்தர்கள் மட்டும் அல்லாது பாண்டவர்களின் இன்றைய வாரிசுகள் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்கள் என உறுதியாக கூறுவதால், அதை ஏற்றுக்கொள்ள மனபக்குவம் இல்லாத சிலர் தேவேந்திரகுல மள்ளர் சமூகத்தின் வரலாற்றைக் கொச்சைப் படுத்துவதற்காக கல்வெட்டில் இடம்பெற்றுள்ள சில சொற்க்களை தவறாக பொருள் கொண்டு இதுபோன்ற காணொலிகளை வெளியிட்டு  அற்ப்ப சந்தோசம் அடைகின்றனர். ஆனால் உண்மையில் சங்க காலம் தொட்டு பிற்க்கால மன்னர்கள் வரை ஒருவரோ அல்லது அவர் சார்ந்த சமூகமோ செய்த குற்றத்திற்கு எந்தவகையான தண்டனைகள் கொடுக்கப்பட்டது என்பதை செப்பேடு, கல்வெட்டுகள் மிகத்தெளிவாக குறிப்பிடுகிறது. அவற்றை ஆய்வு செய்வதே இந்த தலைப்பின் நோக்கமாகும்.


சங்க காலம் தொட்டு மூவேந்தர்களின் பொற்க்கால ஆட்சி முடியும்வரை  நீதி வழங்கும் பொறுப்பானது ஊர்ச் சபையினரிடமும், ஊர் குடும்பர் என்ற நாட்டார்கள், பிரமதேயக் கிழவர்கள், குலப் பெரியதனக்காரரிடமும்  ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர்கள் நடந்திய அமைப்பிற்கு  கிராம சபைகள், நாட்டார் சபை,, குடும்பர் சபைசித்திரமேழி சபை என்று பெயர். அவர்கள் நடத்தும் நிற்வாகத்திற்கு குடும்பு முறை என்று பெயர். இங்கு வழக்குகளை விசாரிக்கவும், தீர்ப்புகள் வழங்கவும் விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருந்தன. அறவொழுக்கம் புண்ணிய பாவம் அடிப்படையிலேயே சட்டங்களும், விதிகளும் வகுக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் கிராம நீதிமன்றங்கள் குற்றங்களைப் விசாரித்துத் கூறும் தீர்ப்புகளில் பாகுபாடுகள் காட்டுவதில்லை. அக்கால கல்வெட்டுக்களையும் செப்பேடுகளையும் பொதுக்கண்ணோட்டத்தில் படித்தால் இச்செய்தியை நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம். இனி அக்காலத்தில் நடந்த சில குற்றங்களையும் அதற்க்கான தண்டனைகளையும் ஆய்வு செய்வோம்.


ஒருவன் ஒரு பிராமணனைக் கொன்றுவிட்டான். அக்குற்றத்துக்காக அவனைச் சிலர் எருமைக் கடாவின் காலில் பிணித்து விட்டனர். கடாவினால் அங்கும் இங்கும் இழுப்புண்டு அவன் மாண்டு போனான். அவனை அவ்வாறு கொன்றவர்கள் தம் குற்றத்துக்குக் கழுவாயாகத் திருத்தொண்டத் தொகை என்ற மடத்தில் சிறப்பு வழிபாடு ஒன்று நிறுவ வேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறிற்று.  (Ep. Rep. 104/1909.)


முதலாம் இராசராசன் காலத்தில் (985-1014) திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் கல்வெட்டில், வேட்டைக்குச் சென்ற இருவரில் ஒருவன் (சீயமுத்தரையன்) விட்ட அம்பால் மற்றொருவன் (பந்தலு) இறந்துவிட்டான் இச்செயல் கொலைக்குற்றமாக கருதப்படாமல் மரணத்தை விளைவிக்கும் குற்றமாக கருதப்பட்டு வேதபுரீஸ்வரர் கோயிலில் நொந்தாவிளக்கெரிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.


இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் பரிவேட்டைக்குப்போன குடிப்பள்ளி அம்முனியநான செல்வப் பேரரையன் என்பவனை குடிப்பள்ளி சிங்கநான தொண்டைமான் சோழப் பெரியரையர் மகன்  தேவன் என்பவன் கைப்பிழையால் அம்பெய்து கொன்றுவிட்டான். இவன் அறியாமல் செய்த குற்றத்தின் பாவம் போக இக்கோயிலில் அரை நந்தா விளக்கு எரிக்க 15 பசுக்களைக் கொடுக்க வேண்டுமென்று உத்தரமேரூர் சபையார்  தீர்ப்புக் கூறினர்.

கல்வெட்டு வாசகம்:

5. …………………………….. ஸ்ரீகுலொத்துங்க சொழ தெவற்கு யாண்டு ஒன்பதாவது
6. ஜயங்க்கொண்ட சொழமண்டலத்துக் காலியூர்க்கொட்டத்து தநியூர் ஸ்ரீராஜரஜ சொழச் சதுற்வ்வெதிமங்கலத்து ஆளுடையார் திருப்புவிவலமுடைய மஹாதெவற்க்கு வெண்குந்றக்கொட்ட
7. த்து இருப்பெருநாட்டுப் பெருநல்லூர்க் குடிப்பள்ளி அம்முனியநான செல்வப்
பெரரையந் பரிவேட்டை பொநவனை ஒய்மா நாட்டு ஆழ்ச்சி பாக்கத்துக் குடிப்பள்ளி சிங்கநாந தொண்டை
8. மாந் சொழப் பெரியரையர் மகன் தெவன் இவனைக் கைய்பிழையால் எய்தமையால் இவனுக்கு நன்றாக அரைத் திருநொந்தா விளக்கு(க்கு) விட்ட பசு பதினைஞ்சு

(SII VI. No. 327 மற்றும் A.R.No. 44 of 1898)



(தொடரும்)


No comments:

Post a Comment